மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியரான டாக்டர். சுர்பியோ குமார் சாது, சுற்றுச்சூழல் மீதும் அதிக ஆர்வம் உடையவர் ஆவார். கடந்த 35 ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதால், இவருக்கு பைக் ஓட்டத் தெரிந்தாலும், பள்ளிக்கு சைக்கிளில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரது சைக்கில் “பிளாஸ்டிக்கைக் கைவிடுங்கள்”, “மரங்களை நடவும்” மற்றும் “சுற்றுச்சூழலைக் காப்போம்” என்ற வாசகப் பலகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பதாகைகளை பயன்படுத்துவதற்கான காரணம் என்ன என்று கேட்டதற்கு, “எனது சைக்கிளில் எழுதப்பட்டிருப்பதை மக்கள் சில […]
Tag: சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்பாக திமுக சுற்றுச்சூழல் பிரிவு போட்ட ட்விட்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திமுக சுற்றுச்சூழல் பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டது. சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து எத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அது மக்களிடையே இன்னும் முழுமையாக வரவில்லை. காலநிலை மாற்றத்தால் பேரழிவுகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். அடுத்த 100 ஆண்டுகளில் புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் […]
சுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர். இந்த தேர்தலில் பல கட்சிகள் தனித்து போட்டியிட்டது, சில கட்சிகள் கூட்டணியாக போட்டியிட்டது. இந்த தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியான பாமக தேர்தலை சந்தித்தது. தற்போது அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தற்போது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். […]
டெல்லியில் கொரோனா ஊரடங்கின் போது சீரடைந்து மாசு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. இன்றும் அதிகாலை முதல் பல இடங்களில் மாசு அடர்ந்து காணப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நாட்டின் தலைநகரான டெல்லியில் வாகனப் பெருக்கம் மற்றும் அதிக அளவிலான சிறு தொழிற்சாலைகள் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்தது. குறிப்பாக காற்றில் மாசு அளவு அதிகமாகி இயல்பு வாழ்க்கையை நடத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமானது. கடந்த […]
சுற்றுச்சூழல் தாக்கம் வரைவு குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020 பெரும் விவாதத்தை உருவாக்கி இருக்கிறது. சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இந்த வரைவு அறிவிக்கையை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த வரைவு அறிவிக்கை பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முறைகளைக் கொண்டு உள்ளது. இதற்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் சுற்றுச்சூழல் தாக்க வரைவு […]
சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு வரைவு அறிக்கையை தடை கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020ஐ வெளியீட்டு இருக்கும் மத்திய அரசு, அது தொடர்பான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் கே.ஆர் செல்வராஜ்குமார், தியாகராஜன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு வரைவு அறிக்கையின் மொழிபெயர்ப்பை பிராந்திய மொழிகளில் வெளியிடாமல் வரைவு குறித்த கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க கோருவது […]
பள்ளிக்கூடத்தில் வகுப்பு பாடல்களோடு சுற்றுச்சூழல் பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறது சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று. கூட்டம் கூட்டமாக வட்டமடித்துக் கொண்டி இருக்கும் புறாக்கள். கூண்டுகளில் இருந்து வெளியே வரும் சிட்டுக்குருவிகள். சிட்டுக்குருவிகள் புறாக்கள் சாப்பிடுவதற்காக வளர்க்கப்படும் திணை பயிர்கள். திணை பயிர்களை சாப்பிட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் புள்ளினங்கள். இத்தனை காட்சிகளும் பள்ளிக்கூடத்தில் நாள்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது என்று சொன்னாள் நம்ப முடிகிறதா? திருவெற்றியூர் காலடி கோட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று மாணவர்களுக்கு கல்வி […]
மத்திய அரசு கொண்டுவரவுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு நடிகர் கார்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவரது அண்ணனும் நடிகருமான சூர்யாவும் தனது எதிர்ப்பை பதிவு செய்து உள்ளார். நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சுற்றுச் சூழலைக் காக்க மௌனம் கழிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் கார்த்தி நேற்று வெளியிட்ட அறிக்கையை பகிர்த்துள்ள சூர்யா பேசிய வார்த்தைகளைவிட பேசாத மௌனம் ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ளார். காக்க காக்க சுற்றுச்சூழல் […]