உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் அந்நாட்டு சுற்றுலா பயணிகளின் அனுமதிக்கு தடை விதிப்பதற்கு வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் ஆறு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. எனவே, ஐரோப்பிய ஒன்றியமானது ரஷ்ய நாட்டை செய்த சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பதற்கு வலியுறுத்தியுள்ளது. எனினும் இந்த திட்டத்திற்கு ஜெர்மன் நாட்டின் சேன்ஸலராக இருக்கும் ஓலாஃப் ஷோல்ஸ், தன் ஆதரவை தெரிவிக்க மறுத்துள்ளார். மேலும், இது ரஷ்ய நாட்டு மக்களுடன் நடக்கும் போர் […]
Tag: சுற்றுலாப்பயணிகள்
ஈரோடு மாவட்டம் கடத்தூர் கோபி அருகில் உள்ள கொடிவேரி தடுப்பு அணைக்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள். அது மட்டுமில்லாமல் தங்கள் கொண்டு வரும் உணவுகளையும், அங்கு விற்கப்படும் மீன் வருவல்களையும் ருசித்து உற்சாகம் அடைவார்கள். அதனைத் தொடர்ந்து கொடிவேரி அணையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் அதிக மழை பெய்து வருவதால் கடந்த 1ஆம் தேதி சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. […]
மிகச்சிறந்த சுற்றுலா தளமாக விளங்கும் சிங்கப்பூருக்கு அதிகம் செல்லும் சுற்றுலா பயணிகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலகின் பல நாடுகளில் அழகிய சுற்றுலா தளங்கள் பல இருக்கின்றது. எனினும், சிங்கப்பூர் தான் பெரும்பாலான மக்களை கவரும் வண்ணம் சுற்றுலாவிற்கு என்றே படைக்கப்பட்ட சொர்க்க பூமியாகவே பார்க்கப்படுகிறது. அங்கு மனதிற்கு புத்துணர்ச்சி தரக்கூடிய வகையில் அழகான பல இடங்கள் அமைந்திருக்கின்றன. எனவே, பிற நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு நாளும் சிங்கப்பூரில் குவிந்து வருகிறார்கள். […]
வால்பாறையில் கோடை கால சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை கால சீசன் தொடங்கியுள்ளது.இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர். வால்பாறையில் கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில் நுங்கு, தர்பூசணி வியாபாரம் தற்பொழுது அதிகரித்துள்ளது. இந்தக் கோடை மழை சில நேரங்களில் கன மழையாகவும், மிதமான மழையாகவும் மாறி […]
எட்டு மாதங்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக 8 மாதங்களாக குமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த வருத்தத்தில் இருந்த நிலையில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட கலெக்டர் அரவின் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து நேற்று அருவியில் குளிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பாசி பிடித்த இடங்கள் மற்றும் சுற்றுப்புற […]
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர் வரத்து 20,000 கன அடியாக குறைந்துள்ள நிலையில் அருவியில் நீராடவும் பரிசலில் சவாரி செய்யவும் சுற்றுலாப்பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே சுற்றுலா மையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் திருமதி. எஸ். மலர்விழி தெரிவித்துள்ளார்.