திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் குணாகுகை, மோயர் பாயிண்ட், பேரிஜம் ஏரி, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். […]
Tag: சுற்றுலா பயணிகள் கூட்டம்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அங்கு குளுகுளு சீசன் தொடங்கி விட்டதால் நீரார் அணை, கூழாங்கல் ஆறு பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா தலங்களில் அத்துமீறி நடப்பவர்களை கண்காணிக்க போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. மேலும் செண்பகனூர், புலிச்சோலை, பெருமாள் மலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் சுற்றுலா பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு தாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்தை சீரமைக்க கொடைக்கானலில் கூடுதல் போலீசாரை நியமிக்க […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு சென்று சினிபால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடைகளில் வியாபாரம் களை கட்டியது. மேலும் போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மாண்டஸ் புயல் காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சுற்றுலா இடங்களுக்கு செல்ல 2 நாட்களுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். பின்னர் புயல் கரையை கடந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. விடுமுறை தினமான நேற்று ஏராளமான பக்தர்கள் கொடைக்கானலுக்கு படை எடுத்தனர். இந்நிலையில் வட்டக்கானல் அருவி, பிரயண்ட் பூங்கா, மோயர் பாயிண்ட் ,பில்லர் ராக்ஸ் உள்ளிட்ட பல்வேறு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான திற்பரப்பு அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் படகு சவாரி செய்து கோதை ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தந்ததால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இதற்கு தீர்வு காண போலீசாரும், […]
கோடநாடு காட்சி முனைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று இயற்கை அழகை கண்டு ரசிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் இருக்கும் கோடநாடு காட்சி முனை முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். கொடநாடு காட்சி மழை கோத்தகிரியில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், கடல் மட்டத்திலிருந்து 6500 அடி உயரத்திலும் இருக்கிறது. இங்கு தொலைநோக்கி மூலமாக தாழ்வான பகுதியில் இருக்கும் மேட்டுப்பாளையம், பவானிசாகர் அணைக்கட்டு, தெங்குமரஹாடா, மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கண்டு ரசிக்கலாம். கடந்த […]