தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் பராமரிப்பு பணிகள் மாதம் தோறும் நடைபெற்று வருகிறது. இதனால் மின் தடை ஏற்படுவது வழக்கம். இந்த மின் பராமரிப்பு பணி நடைபெறும் போது மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை செய்யப்படும். இதற்கான அறிவிப்பு முன்னதாகவே அறிவிக்கப்பட்டு விடும். மின் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின்வினியோகம் மீண்டும் இருக்கும். இந்த நிலையில் சீர்காழி பொறையார் பகுதிகளில் இன்று முதல் சுழற்சி முறையில் மின் […]
Tag: சுழற்சி முறை
மலைப்பகுதிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் தயக்கம் காட்டுவதால் அனைத்து ஆசிரியர்களும் குறைந்தது ஓராண்டு காலம் மலைப் பகுதியில் சுழற்சி முறையில் பணிபுரிய அனுமதிக்க வேண்டுமென்பது உள்ளிட்ட மலை சுழற்சி வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்கக் கல்வி இயக்குனரகம் அரசாணையாக வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து ஆசிரியர்களும் குறைந்தது ஓராண்டு காலம் மலைப் பகுதியில் சுழற்சி முறையில் பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும். அவர்கள் மலைப் பகுதியில் உள்ள அதே பள்ளியிலேயே தொடர்ந்து பணிபுரிய விருப்பம் தெரிவித்தால் எழுத்துப்பூர்வமான கடிதம் பெற்று அதே பள்ளியில் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் தொடங்கப்பட்டது. இதற்கிடையில் வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த […]
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் உருமாறிய ஒமைக்ரான் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வரும் 15 ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் மற்றும் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை பத்து முப்பது மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் தளர்வுகளுடனான […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்தும் முடிவு எடுக்க இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக்கு பின்னர், தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1 […]
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததையடுத்து தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததனால் பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. ஆனால் கேரளாவில் மட்டும் தொற்று குறைந்தபாடில்லை. முதல் அலையை மிகச் சிறப்பாகக் கையாண்ட கேரள அரசு இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இவ்வாறு கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்திலும் பரவ வாய்ப்புள்ளதால், ஒருசில இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கூடுதல் […]
இந்தியாவுக்கு எதிராக எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீரர்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டு வந்ததால் அவர்களில் 90% பேர் சுழற்சி முறையில் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி சீன மற்றும் இந்திய ராணுவத்தினருக்கிடையே லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சீன தரப்பில் எந்தவித தகவலும் […]
ஆன்லைன் வகுப்பு முறைகளை ஒழுங்குபடுத்த பள்ளிக்கல்வித்துறையின் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்பு பற்றிய மத்திய அரசின் கருத்துக்கள் வந்தவுடன் அதைப்பற்றி பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். சுழற்சி முறை வகுப்புகள் பற்றி இன்னும் யோசிக்கவில்லை எனவும், இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்லை கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், 6 முதல் 9ம் என […]