தூய்மையான சிங்காரச் சென்னை உருவாக்குவதை கருத்தில்கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி சுவரொட்டிகளை அகற்றும் பணியை தொடங்கியுள்ளது. மக்கள் தங்கள் பகுதியில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளை அகற்ற வேண்டும் என்றால் 1913 என்ற உதவி எண்ணை அழைத்தாள் மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக சுவரொட்டிகளை அகற்றுவார்கள் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Tag: சுவரொட்டிகள்
வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழகத்தில் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது, தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது 50,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை எடுத்து சென்றால் அதற்கு உரிய ஆவணங்களைக் காட்ட வேண்டும் என்றும், பணம் பட்டுவாடா புகார் வந்தால் உடனே அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
ஒ. பன்னிர் செல்வம் தான் நிரந்தர முதல்வர் என்று தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற மோதல் தீவிரம் அடைந்து இருக்கும் நிலையில், இந்த சுவரொட்டிகள் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்ததில் இருந்த சர்ச்சை தொடங்கியது. அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர். பி. உதயகுமார், பாண்டியராஜன், ஜெயக்குமார் […]