Categories
உலகசெய்திகள்

பெற்றோரை விட கல்வியில் சிறந்து விளங்கும் பிள்ளைகள்…. சுவிஸ் ஆய்வில் வெளியான தகவல்….!!!!!!!!

சுவீஸ் ஊடகம் ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் 24 ஆயிரம் புலம் பெயர்ந்தவர்களின் கல்வித்தரம் அவர்களுடைய பிள்ளைகளின் கல்வி தரத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, போச்சுகல், ஸ்பெயின், துருக்கி, செர்பியா, மாசிடோனியா மற்றும் கோசோவா போன்ற நாடுகளில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தவர்களின் தரவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது பிள்ளைகள்  பெற்றோரை விட கல்வியில் மேம்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உதாரணமாக புலம்பெயர்ந்த பெற்றோர்கள்  15 அல்லது 16 வயதில் பள்ளி படிப்பை கைவிட்டிருந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பெடரல் கவுன்சிலின் புதிய திட்டம்…. மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதாக எதிர்ப்பு….!!!

பயணிகளின் விவரங்களை ஆய்வு செய்வதற்கு சிறப்பு குழு அமைப்பதற்கான திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இரட்டை கோபுரத்தின் மீது கடந்த 2001-ம் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் அனைத்து பயணிகளின் பாஸ்போர்ட், பிறந்த தேதி மற்றும் பணம் செலுத்தும் விதம் உள்ளிட்ட விவரங்கள் சோதனை செய்யப்படும். இந்த சோதனைகள் மூலம் பயணிகளின் மீதான சந்தேகத்தை நீக்கிக் கொள்ள முடியும். இந்த திட்டத்தை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலும் வரவேற்றுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் பின்பற்றப்படும் நடைமுறையை […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே சமந்தாவா இது….! செமயா இருக்காங்களே….. வைரலாகும் போட்டோ….!!

நடிகை சமந்தா தனது தோழி ஷில்பா ரெட்டியோடு ஐரோப்பாவில் பனிச்சறுக்கு செய்து விடுமுறையை கொண்டாடினார். தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை சமந்தா. கடந்த வருடம் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து செய்வதாக சமூக வலைதளங்களில்  பதிவிட்டிர்ந்தார்கள். மேலும் அவர் தன்னுடைய விடுமுறையை ரிஷிகேஷில் கொண்டாடினார். தற்பொழுது ஐரோப்பியாவில் நடிகை சமந்தா தன் தோழியுடன் விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கிறார். https://www.instagram.com/p/CY9P9F9oiN3/?utm_source=ig_web_copy_link நடிகை சமந்தா சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது பனிச்சறுக்கு உடையோடு  மற்றும் பனிச்சறுக்கு செய்யும் […]

Categories
உலக செய்திகள்

மத்திய குழுவை மதிக்காத மாகாணங்கள்… ஹோட்டலை விரைவில் திறக்க கோரிக்கை…!

சுவிட்சர்லாந்தில் ஹோட்டல்களை விரைவில் திறக்க வேண்டும் என்று மாகாணங்கள் தெரிவித்து வருவது மத்திய குழுவிற்கு அதிருப்தி அளித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் முதற்கட்டமாக சில கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக மத்திய குழு தெரிவித்திருந்தது. அதன்படி வெளிப்புற நிகழ்வுகளில் 17 பேர் வரை பங்கேற்கலாம் என்றும், கடைகள், அருங்காட்சியங்கள், நூலகங்கள், உயிரியல் மற்றும் தாவரவியல் பூங்காக்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் உணவகங்கள் மட்டும் மூடப்பட்டு இருக்கும் என்றும், வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம் […]

Categories
உலக செய்திகள்

பணக்கார நாடாக திகழும் “சுவிஸ்”… ஏழைகளின் எண்ணிக்கை அதிகமான ஆச்சரியம்…!வெளியான புள்ளி விவரம்…!

பணக்கார நாடாகத் திகழும் சுவிட்சர்லாந்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகமே அன்னாந்து பார்க்கும் அளவிற்கு பணக்கார நாடாக திகழும் சுவிட்சர்லாந்தில் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது. நேற்று வெளியான இந்த புள்ளிவிவரங்களில் 8.7 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. 8.5 மில்லியன் மக்கள் வாழும் சுவிட்சர்லாந்தில் 2019 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 735,000 பேர் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா சாதாரண வைரஸ் தான்… மக்கள் பயப்படவே இப்படி செய்யப்பட்டது… டிவிட் செய்த மருத்துவர், பணியிடை நீக்கம்…!

கொரோனா குறித்த வித்தியாச தகவலை வெளியிட்ட மருத்துவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் டிசினோ மருத்துவர் ராபர்டோ ஒஸ்டினெல்லி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா குறித்த வித்தியாசமான கருத்தை வெளியீட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டார். அவர் இதற்கு முன்பாக வெளியிட்ட அறிக்கை குறித்து சுவிஸ் மருத்துவ சங்கம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. இந்நிலையில் அவர் கொரோனா சாதாரண வைரஸ் தான் என்றும் மக்களை பயன்படுத்தவே இப்படி செய்யப்பட்டது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். […]

Categories
உலக செய்திகள்

பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா? பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர்…!

சுவிட்சர்லாந்தில் பொதுமுடக்கம் மீண்டும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார் அயர்லாந்தில் வரும் பிப்ரவரி 28 கொரோனா பொது ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்ற கேள்விக்கு சுகாதார துறை அமைச்சர் அலைன் பெர்செட் பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களில் தெரிவித்ததாவது, ஊரடங்கு விதிகளில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என பெடரல் கவுன்சில் திட்டமிடவுள்ளது. மாகாணங்கள் உடன் ஆலோசனை செய்த பிறகே இதுகுறித்த அறிவிப்புகள் அடுத்த வாரம் வெளியிடப்படும். ஆனால் அனைத்துக் […]

Categories
உலக செய்திகள்

ஒரு வருஷத்தில் இவ்வளவு செலவா… !அதுவும் உணவுக்காக மட்டுமா..!சுவிஸ் வெளியிட்டுள்ள தகவல்…!

சுவிட்சர்லாந்து பொதுமக்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும்  உணவுக்காக அதிக பணத்தை  செலவிட்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் சில்லறை வர்த்தக நிறுவனங்களில் உணவு மற்றும் பானங்கள்காக மட்டும் பொது மக்கள் அதிக அளவு செலவை செய்துள்ளனர். 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது அதைவிட இது 11.3 சதவீதம் அதிகம் உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது. சுவிசில் வசிக்கும் ஒரு குடும்பம் உணவுக்காக 7,650 பிராங்குகள் செலவிட்டுள்ளனர். இதில் இணையம் வழியாக ஆடர் […]

Categories
உலக செய்திகள்

அதுல போனா எங்களுக்கு கொரோனா வந்துரும்…இதுதான் சேஃப்டி… பொதுமக்களின் முடிவால் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட சைக்கிள் பஞ்சம்…!

சுவிட்சர்லாந்தில் திடீரென சைக்கிள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு தற்போது சைக்கிள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சைக்கிள்களை வாங்க நினைப்பவர்கள் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏனென்றால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணம் செய்தால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் சைக்கிள்களை வாங்கி தாங்கள் நினைத்த இடத்திற்கு சென்று வருகின்றனர். இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது. கொரோனா காலகட்டம் என்பதால் சைக்கிளை இறக்குமதி செய்வதற்கான செலவும் அதிகரித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

நீங்க வந்தாலும் கட்டுப்பாடுகள் நிச்சயம்… புதிதாக இணைக்கப்பட்ட நாடுகள்… சுவிட்சர்லாந்து அறிவிப்பு…!

கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் பகுதிகளின் பட்டியலில் மீண்டும் மூன்று பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்து உலக நாடுகளும் புதிதாக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் கொரோனா அதிகம் இருக்கும் பகுதிகளின் பட்டியலை சுவிட்சர்லாந்து வெளியிட்டது. அதன்பின் அந்தப் பகுதியிலிருந்து வரும் நபர்கள் தனிமைப்படுத்திய பின்னரே வெளியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பட்டியலில் மேலும் மூன்று பகுதிகள் இணைக்கப்பட்டு உள்ளது. அவைகள், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகும். இந்த […]

Categories
உலக செய்திகள்

தடுப்பு மருந்து தாமதமானால்… கலவரம் ஏற்படும்… சுவிஸ் நிபுணர் எச்சரிக்கை…!

சுவிட்சர்லாந்தில் தடுப்பு மருந்து தாமதம் ஆவதால் பொது மக்கள் கலவரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று உளவுத்துறையின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார். நெதர்லாந்தில் கடந்த வாரம் சுமார் 10 நகரங்களில் கொரோனா ஊரடங்கிற்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் அது கலவரமாக வெடித்தது. இதனைக் கட்டுப்படுத்த உள்ளூர் காவல் துறையினரும் பெடரல் போலீசார் களமிறங்கினர். அதே போன்ற சூழ்நிலை சுவிட்சர்லாந்தில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று பெடரல் உளவுத்துறையின் முன்னாள் தலைவர் பீற்றர் ரெக்லி தெரிவித்தார். மேலும் இது […]

Categories
உலக செய்திகள்

“அம்மாவிடமிருந்து பரவிய வியாதி” சிறுவனின் உயிருக்கு 3 வருடம் கெடு…. பெற்றோரின் பாசப் போராட்டம்…!!

பெற்றோர் ஒருவர் பராபரை வியாதி பாதித்த தங்கள் மகனை காப்பாற்ற போராடும் செயல் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் லூசர்ன் மண்டலத்தில் வசிப்பவர்கள் Zrary குடும்பம். இவர்களுடைய மகன்  Danyar(5) என்பவர் பரம்பரை வியாதியுடன் உயிருக்கு போராடி வருபவர். வெறும் மூன்று வருடங்கள் மட்டுமே இனி danyarஆல் உயிர் வாழ முடியும் என்று மருத்துவர்கள் பெற்றோரிடம் அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து சிறுவனின் உடல் நிலையில் இந்த திடீர் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக […]

Categories

Tech |