ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் விமான நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளதால் அங்கு உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு புறப்பட தயாராக இருந்த விமானத்தை சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து அங்கிருக்கும் வெளிநாட்டவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்புவதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளார்கள். இதனால் காபூல் விமான நிலையத்தில் மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. […]
Tag: சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா மாகாணத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, சுவிட்சர்லாந்திலேயே ஜெனிவா மாகாணத்தில் தான் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அங்கு 1,00,000 நபர்களில் 401 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சராசரியாக, தொற்று விகிதம் 265 ஆக இருக்கிறது. மேலும் நாட்டிலேயே குறைவான பாதிப்பு Uri மாகாணத்தில் பதிவாகியுள்ளது. அங்கு தொற்று விகிதம் 166 ஆக உள்ளது. கொரோனாவின் முதல் அலையை விட தற்போது பலி எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று சுகாதாரத் துறை தலைவர்களில் […]
ஆப்கானிலிருந்து வரும் அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என SP தேசிய கவுன்சிலர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா படைகள் வெளியேறுதை அடுத்து தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இதனை அடுத்து தலீபான்களால் நாட்டின் முழு அதிகாரமும் கைப்பற்றப்பட்டது. மேலும் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் மறுபடியும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வானது உலக அளவில் பெரும் வீழ்ச்சியாகவே கருதப்படுகிறது. மேலும் 2001ல் அமெரிக்காவின் பொறுப்பற்ற வெளிநடப்பு நடந்தது. அதே போன்று தற்பொழுதும் அமெரிக்கா படைகள் […]
சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒரு சிறுமியின் அனுமதியுடன் உறவு வைத்த ஆப்கானிஸ்தான் இளைஞர், தற்போது நாட்டை விட்டு வெளியேற்றப்படவுள்ளார். சுவிட்சர்லாந்தின் துர்காவ் பகுதியில் வசிக்கும், 13 வயதுடைய ஒரு சிறுமி, ஆப்கானிஸ்தானை சேர்ந்த 22 வயது இளைஞருடன், கடந்த 2019-ஆம் வருடத்தில் இணையத்தளத்தில் நட்பாகியுள்ளார். எனவே, இருவரும் ஒரு நாள் நேரில் சந்திக்க முடிவெடுத்துள்ளனர். அப்போது, அந்த இளைஞர், சிறுமியிடம், தனக்கு 19 வயது என்று கூறியிருக்கிறார். அதன்பின்பு, St. Gallen பகுதியில் சந்திக்க இருவரும் முடிவெடுத்துள்ளனர். அப்போது […]
சுவிட்சர்லாந்து அரசு, ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் தூதரகத்தில் பணிபுரியும் 40 பணியாளர்கள் உட்பட 200 நபர்களை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க தீர்மானித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு நாளும் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரிக்கிறது. பல்வேறு முக்கிய மாகாணங்களை கைப்பற்றி வருகிறார்கள். தற்போது தலைநகருக்கு அருகில் இருக்கும் முக்கிய நகரை கைப்பற்றி இருக்கிறார்கள். இந்நிலையில் இன்னும் சில தினங்களில் காபூல் நகரையும் கைப்பற்றலாம் என்ற பதற்றம் பொது மக்களிடையே நிலவுகிறது. இதனால் மக்கள் அந்நகரை விட்டே வெளியேறி வருகிறார்கள். காபூல் […]
தந்தையும் மகளும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு 25 மாடுகளை தீவிபத்திலிருந்து பத்திரமாக மீட்டுள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டின் Fribourg மாநிலத்தில் Châtel-St-Denis என்ற நகராட்சி பகுதி அமைந்துள்ளது. அந்த நகராட்சி பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று மாட்டுக்கொட்டகை ஒன்று தீடிரென தீப்பிடித்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுக்குறித்து கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீவிபத்து குறித்து […]
ஆப்கானிஸ்தானில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான்களால் அந்நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை முன்னிட்டு தங்களது ஊழியர்களை திரும்பப்பெற சுவிட்சர்லாந்து அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை மீண்டும் அந்நாட்டில் செலுத்தி வருகிறார்கள். மேலும் இவர்கள் அந்நாட்டிலுள்ள பல பகுதிகளையும் கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளார்கள். இதனால் ஸ்விட்சர்லாந்து அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை முன்னிட்டு அந்நாட்டில் பணிபுரியும் தங்களது பணியாளர்களை […]
சுவிட்சர்லாந்தை சேர்ந்த இளம்பெண், குடியுரிமை கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படக்கூடிய அபாயத்தில் இருக்கும் தன் காதலனுக்காக போராடிக்கொண்டிருக்கிறார். 26 வயதான சோமாலிய இளைஞர், 6 ஆண்டுகளுக்கு முன் சுவிட்சர்லாந்திற்கு அகதியாக வந்திருக்கிறார். அதன்பின்பு, சில மாதங்கள் கடந்த நிலையில் சூரிச் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழகி, இருவரும் காதலிக்கத்தொடங்கினர். அதன் பின்பு திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்துள்ளனர். எனவே, கடந்த 2015 ஆம் வருடத்தில் அந்த இளைஞர் குடியுரிமை கோரியுள்ளார். எனினும் ஒரு வருடம் கழித்து அவரது […]
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். அதிலும் கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரியாவில் தடுப்பூசி பெறாதவர்கள் நாட்டுக்குள்ளேயே வரக்கூடாது என்றும், ஜெர்மனியில் இலவச பரிசோதனை கொண்டு வர வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். ஆனால் சுவிட்சர்லாந்து நாட்டில் தடுப்பூசி பெறாதவர்கள் கூட மிக சுதந்திரமாக சுற்றி வருகின்றனர் . இருப்பினும் இரவு விடுதிகள் மற்றும் […]
இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த இருவருக்கு சார்பாக நீதிபதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை 17 மற்றும் 32 வயதுடைய போர்ச்சுக்கீசியர்கள் இருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 32 வயதுடைய நபருக்கு 51 மாதகாலம் சிறை தண்டனை விதித்து தீர்பளித்துள்ளார். ஆனால் அவர் இதனை மறுத்து மேல்முறையீடு செய்ததில் அவருக்கு தண்டனை […]
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் சுவிட்சர்லாந்து வீரர்கள் 13 பதக்கங்களை வென்றுள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் சுவிட்சர்லாந்து வீரர் மற்றும் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 13 பதக்கங்களைப் பெற்றுள்ளனர். அதில் மூன்று தங்கப்பதக்கங்கள் ஆகும். முதலில் Mount Bike Race பந்தயத்தில் சிறப்பாக விளையாடி அதில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் பதக்கங்கள் பெற்றனர். இதனை அடுத்து […]
சுவிட்சர்லாந்திலிருந்து, தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற பெண் பயணி பாதி ஆடையின்றி, நீரோடைக்கு அருகே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாடு கடந்த மாதம் தான், தடுப்பூசி செலுத்திய பிற நாட்டு சுற்றுலா பயணிகளை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க தொடங்கியது. எனவே, சுவிட்சர்லாந்திலிருந்து ஒரு பெண் கடந்த மாதம் 13 ஆம் தேதி அன்று தாய்லாந்திற்கு வந்துள்ளார். அதன்பின்பு இரு வாரங்கள் கழித்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, அவர் கடற்கரைக்குச் சென்றதை ஒரு நபர் பார்த்திருக்கிறார். […]
பிரிட்டன் போன்ற பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றை முழுவதுமாக கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஆர்வமாக இருக்கின்றன. கொரோனாவை ஒழிக்க, உலக நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. பொது மக்கள் முதலில் தயங்கினாலும், அதன் பின்பு தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டத்தொடங்கினர். ஒரு சில நாடுகளில் 3 வயது குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே அங்கு, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும், நிபுணர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு, 1 […]
சுவிட்சர்லாந்தில் உள்ள பெடரல் சுகாதார அலுவலகம் பயணக் கட்டுப்பாடு விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்நாட்டு அரசு பயண கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தியிருந்தது. ஆனால் இன்று முதல் அந்த விதிகளை தளர்த்தியுள்ளது. அதிலும் உருமாறிய கொரோனா வைரஸின் பரவல் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து பிரித்தானியா, இந்தியா, நேபாளம் போன்ற நாடுகள் நீக்கப்பட்டு விட்டதாக பெடரல் சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. இனி சுவிட்சர்லாந்துக்கு வருவது அனைத்து பயணிகளுக்கும் எளிதாக […]
குதிரை கருணைகொலை செய்யப்பட்ட சோகத்தினால் பந்தய வீரர் சமூக வலைதளங்களில் இருந்து விலகியுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் குதிரைகள் தடை தாண்டி ஓடும் போட்டியும் முக்கியமானதாகும். இந்த பந்தயத்தில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த Robin Godel என்பவர் தனது Jet Set குதிரையுடன் போட்டியில் கலந்து கொண்டார். இதனையடுத்து தடைகளை தாண்டி ஓடிய போது குதிரையின் கால்கள் திடீரென அடிபட்டு நின்றுபோனது. இதனை தொடர்ந்து பின்னால் வேகமாக வந்தவர்களும் […]
சுவிட்சர்லாந்தில் தலிப்பான் என கூறி இளம்பெண்ணை அவமதித்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சூரிச் பிரதான ரயில் நிலையத்தில் 18 வயது இளம்பெண்ணை 36 வயதான நபர் ஒருவர் தீவிரவாதி என அடையாளப்படுத்தி அவரை அவமதித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சூரிச் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் 30 வயதான அந்த நபருக்கு 300 பிராங்குகள் அபராதமும், நீதிமன்றம் விவகாரங்களுக்கான கட்டணமாக 2,500 பிராங்குகளும், […]
சுவிட்சர்லாந்தில் ஒரே நாளில் 50 நபர்கள் புகலிடம் கோருவோர் மையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வரை சுவிட்சர்லாந்தில் உள்ள பெடரல் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் புகலிடம் கோருவோர் மையத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 50 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அந்த மையம் முழுவதும் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மையத்தில் 152 பேர்கள் தங்கி இருந்து வரும் […]
சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் 2019 இல் அந்நாட்டில் வந்த சட்டத்தை தொடர்ந்து அரசு வழங்கும் நலத்திட்டங்களை தவிர்த்து வருகிறார்கள். சுவிட்சர்லாந்து நாட்டில் 2019 ஆம் ஆண்டு புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. அதாவது ஸ்விட்சர்லாந்திலுள்ள பெடரல் சட்டத்தின் 63வது பிரிவின்படி வெளிநாட்டவர்கள் அந்நாட்டில் வாழ்வதற்கான உரிமைகளைப் பறிப்பது தொடர்பான சட்டத்தை பிறப்பித்துள்ளது. இதனால் சுமார் 4000 பேர் சுவிட்சர்லாந்தில் வாழும் உரிமையை இழந்துள்ளார்கள். இவர்கள் சுவிட்சர்லாந்து அரசின் நலத்திட்டங்களை பெறுவதினால் வாழிட உரிமையை இழந்தவர்கள் அல்ல என்றாலும் […]
உலக சுகாதார மையம், சுவிட்சர்லாந்தின் தடுப்பூசி திட்டத்தை கடும் விமர்சனம் செய்திருக்கிறது. உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ராஸ் அதானம், சுவிட்சர்லாந்து உட்பட சில நாடுகளின் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி திட்டமானது ஒழுக்கநெறி ஊழல் என்று தெரிவித்துள்ளார். உலகில் உள்ள மொத்த தடுப்பூசி மருந்துகளில் மூன்றில் ஒரு பங்கை 10 நாடுகளே பயன்படுத்திவிட்டது. இது, ஒரு ஒழுக்கநெறி ஊழல் என்று தெரிவித்துள்ளார். உலகிலுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் ஆபத்தான நிலையில் இருக்கும் மக்களுக்கு தற்போது வரை தடுப்பூசி […]
புலம்பெயர்ந்தோரின் நிதி நிலைமையானது சுவிஸ் நாட்டில் உள்ளவர்களின் நிதி நிலையை விடக் குறைவாக உள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் புலம்பெயர்ந்து வருபவர்களின் நிதி நிலைமை அந்நாட்டில் உள்ளவர்களை விட மோசமாக உள்ளது என பெடரல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் புலம்பெயர்ந்தோரின் வாடகை வீதமானது சுவிஸ் நாட்டில் வசிக்கின்றவர்களின் வாடகையை விட 10% அதிகமாக உள்ளது. இதனை தொடர்ந்து வாடகை அதிகம் இருப்பினும் புலம்பெயர்ந்தோர் நெரிசலான மற்றும் இரைச்சல் அதிகமாக உள்ள இடங்களில் வாழ வேண்டிய சூழ்நிலை […]
சுவிட்சர்லாந்தில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை இரண்டே நாட்களில் கொட்டி தீர்த்ததால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள டிசினோ மாநிலத்தில் 1918-ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உக்கிரமான மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழையானது இரண்டே நாட்களில் கொட்டித்தீர்த்ததாகவும் கூறியுள்ளனர். இதனால் மான்டே ஜெனரோசோ பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ரயில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் Breggia நதியில் கனமழையால் ஏற்பட்ட […]
சுவிட்சர்லாந்தில் வானிலை ஆராய்ச்சி மையம், நாட்டின் மத்திய பகுதியிலும், தெற்கு பகுதியிலும் கடும் புயல் உருவாகப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் இன்று மதியம் ஒரு மணியிலிருந்து ஆறு மணி வரைக்கும் கடும் புயல் உருவாகவுள்ளதாகவும், அதன் தீவிரத்தன்மை 4-ல் 3 என்ற அளவாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். நாட்டில் சனிக்கிழமையில் இருந்து நேற்று வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை மற்றும் புயல் அதிக சேதத்தை ஏற்படுத்தியது. Warnung des Bundes: heftige […]
ஸ்விட்சர்லாந்திலுள்ள சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் Buochs என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள A2 என்னும் மிகவும் முக்கியமான சாலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் காரில் சென்றுள்ளார்கள். அப்போது அவர்கள் காரில் திடீரென புகை வெளியேறியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உடனடியாக காரை விட்டு வெளியேறி சாலையின் ஓரத்தில் நின்றுள்ளார்கள். இதனையடுத்து புகை வெளியேறிய அந்தக் […]
சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பூசி செலுத்தாதவர்களை போடவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுவிட்சர்லாந்து நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து சென்ற வாரம் 3033 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த வாரம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4692 ஆகும். இது சென்ற வாரத்தை விட இந்த வாரம் 55% அதிகமாகும். இந்த கொரோனா தொற்றினால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 97% பேர் டெல்டா வகை வைரஸால் […]
சுவிட்சர்லாந்தில் ஒரு அமைச்சர் கொரோனா பரிசோதனைகள் மக்களுக்கு கட்டணமில்லாமல் அளிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். ஜெனீவா மாகாணத்தில் சுகாதாரத் துறையின் கவுன்சிலராக உள்ள Mauro Poggia, கட்டணம் இல்லாமல் கொரோனா பரிசோதனைகளை இலவசமாக அளிப்பதை நிறுத்த வேண்டும் என்றார். அப்போதுதான் இளைஞர்கள் அதிகமாக தடுப்பூசி செலுத்திக்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார். அதாவது, கொரோனா பரிசோதனைகள் மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படுவதால், நமக்கு கொரோனா தொற்று இல்லை என்று இருந்துவிடுகிறார்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்வதில்லை என்று கூறியிருக்கிறார். ஜெனிவா மாகாணத்தில் தான் தற்போது கொரனொ […]
சுவிட்சர்லாந்தின் அரசியல்வாதிகள் கூறிய கருத்து மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுவிட்சர்லாந்தில் டெல்டா வகை மாறுபாடு தற்போது அதிகரித்திருக்கிறது. எனவே தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம். எனினும் சில மக்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக அல்லது வேண்டுமென்றே சிலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் மருத்துவமனையில் கொரோனா பாதித்து அனுமதிக்கப்படுபவர்களில், பலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அரசியல்வாதிகள் சிலர் கோரிக்கை வைத்தது, மக்களிடையே பிரச்சனை மற்றும் குழப்பத்தை உண்டாக்கி இருக்கிறது. […]
சுவிட்சர்லாந்தில் கஞ்சா செடிகளை பெருமளவில் வளர்த்து வந்த 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் Sankt Gallen மாகாணத்தில் காவல்துறையினர் ரோந்து பணியின் போது 300 கிலோ கஞ்சா மற்றும் சுமார் 9000 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 12 பேர் 24 மணி நேரமும் ஷிஃப்ட் முறையில் ஒரு வருடமாக அந்த கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளனர். இதையடுத்து அந்த 12 பேரும் புலம்பெயர்ந்தவர்கள் என்பதால் காவல்துறையினர் அவர்கள் மீது புலம்பெயர்தல் […]
சுவிட்சர்லாந்தில் கனத்த மழை ஒருவழியாக முடிவடைந்த நிலையில், வானிலை ஆராய்ச்சி மையம் மீண்டும் பெரிய புயல் உருவாகும் என்று எச்சரித்திருக்கிறது. சுவிட்சர்லாந்தில் கடந்த வரம் முழுக்க பலத்த மழையால் கடும் புயல் ஏற்பட்டது. இதனால் பல சேதங்களும் ஏற்பட்டது. குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பியதால் அச்சம் ஏற்பட்டது. ஒரு வழியாக தற்போது தான் மழை நின்றுள்ளது. இந்நிலையில் வானிலை ஆராய்ச்சி மையம் மீண்டும் பெரிய புயல் உருவாகும் என்று எச்சரித்திருக்கிறது. எனினும் எந்த பகுதிகளில் ஆபத்து என்று […]
சுவிட்சர்லாந்து நாட்டில் பனிப்பாறைகள் உருகி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 18 புதிய ஏரிகள் உருவானதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டில் காலநிலைகளில் ஏற்பட்ட மாறுபாடுகளினால் பனிப்பாறைகள் உருகுகின்றன. அதன் பின் அவை ஏரிகளாக உருமாறுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து 1850 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் வரை ஆன காலங்களில் சுமார் 1200 பனிப்பாறை ஏரிகள் உருவானதாக கூறப்படுகின்றன. ஆனால் அதில் வெறும் ஆயிரம் ஏரிகள் தான் காணப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். […]
சுவிட்சர்லாந்து நாட்டில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் வருங்காலங்களில் பலவித இன்னல்களை சந்திக்க நேரிடும் என அந்த நாட்டு அரசு கூறியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அந்நாட்டு அரசானது சலுகைகளை வழங்கி வருகிறது. இதே நேரத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டித்தும் வருகிறது. இதனை அடுத்து சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி செலுத்தியர்களின் எண்ணிக்கையை விட கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் லிபரல் கட்சியின் தலைவரான Jürg Grossen கூறியதில் “மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க விரும்பினால் […]
சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட சில அலுவலகங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பகுதியில் பணிபுரியும் 39 வயது பெண் ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் தான் பணியாற்றும் இடத்தில் தனக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் மதிய உணவின் போது அனைவருடனும் அமர்ந்து சாப்பிட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், வேலை பார்க்கும் போது முழு நேரமும் FFP2 மாஸ்க் அணிந்தே வேலை பார்க்க வேண்டும் என்று நிர்வாகம் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். […]
ஸ்விட்சர்லாந்தில் 13 வயதுடைய சிறுவன் விபச்சார விடுதிக்கு சென்று வந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் 13 வயதுடைய ஒரு சிறுவன் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஒரு விபச்சார விடுதிக்கு சென்று 23 வயது பாலியல் தொழிலாளியுடன் தவறான உறவில் இருந்திருக்கிறார். அப்போது அச்சிறுவன் தனக்கு 18 வயது என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் விபச்சார விடுதியிலிருந்து சிறுவன் வெளியே வந்ததை அங்கு சோதனை பணியில் இருந்த காவல்துறையினர் பார்த்துவிட்டனர். எனவே சிறுவனிடம் விசாரித்தபோது அவருக்கு […]
சுவிட்சர்லாந்தில் பெய்த கனமழை காரணமாக குளங்கள் ஏரிகள் அனைத்தும் நிரம்பி ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்தில் பெய்த கனமழை காரணமாக குளங்கள் ஏரிகள் அனைத்தும் நிரம்பி ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் Biel ஏரியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் கரையை உடைத்து தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி வியாழக்கிழமையிலிருந்தே குடியிருப்புகளை விட்டு வெளியேற வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விலை உயர்ந்த பொருள்களை […]
சுவிட்சர்லாந்தில் அதிகமான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் சில பகுதிகள் அபாயமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில், கடும் இடி மின்னலுடன் மழை பொழிந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆறுகள் ஏரிகள் முழு கொள்ளளவில் நிறைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Lucerne ஏரியின் கறைகள் உடையும் நிலையில் இருப்பதால் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பெடரல் சுற்றுச்சூழல் அலுவலகமானது ஆபத்து அளவில் ஐந்தாம் மட்டத்தை அடைந்துவிட்டதாக கூறியிருக்கிறது. இது நூறு வருடங்களுக்கு ஒரு தடவை நிரம்பக் கூடிய அளவு […]
ஸ்விட்சர்லாந்தில் தூங்கிக்கொண்டிருந்த தன் முன்னாள் காதலியை ஜெர்மன் நாட்டை சேர்ந்த நபர் கொன்ற வழக்கில் தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் வருடத்தில் ஜூலை மாதம் ஜெர்மனி நாட்டை சேர்ந்த 35 வயதுடைய நபர், தன் முன்னாள் காதலியை தற்செயலாக பார்க்க நேர்ந்தது. அப்போது இவர் மது போதையில் இருந்ததால், அப்பெண்ணின் தலையில் கொடூரமாக தாக்கியிருக்கிறார். அதன்பின்பு அவரின் கழுத்தை நெரித்திருக்கிறார். இதில் அந்த பெண் மயக்கமடைந்து விழுந்துவிட்டார். அதன்பின்பு கத்தியால் அவரின் மார்பில் 6 தடவை […]
பல்வேறு குற்றங்கள் செய்த முதியவர் ஒருவருக்கு ஒரு மாத கால சிறைதண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் என்ற நகரில் உணவகம் ஒன்று அமைந்துள்ளது இந்த உணவகத்திற்கு 69 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் மாஸ்க் அணியாமல் வந்துள்ளார். அவரை மாஸ்க் அணிய சொல்லி உணவக ஊழியர் ஒருவர் வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த முதியவர் உணவக ஊழியரை தாக்கியும் இந்த காட்சியைப் படம் பிடித்த பெண்ணையும் தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து இவர் பல்வேறு […]
இரத்தத்தானம் செய்ய முன் வராவிட்டால் அவசியமற்றவை என்று கருதப்படும் அறுவை சிகிச்சைகள் செய்யப்படமாட்டாது என்று மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா மாகாணத்தில் மருத்துவமனையின் மருத்துவர்கள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியதாவது “ஜெனிவா மாகாணத்தில் மாதம் ஒன்றுக்கு 1000 பேர் இரத்ததானம் செய்வார்கள். ஆனால் தற்பொழுது வழக்கத்தைவிட கடந்த ஜூன் மாதத்தில் 800 பேர் மட்டுமே இரத்ததானம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் அதிமாகியுள்ளதாலும், கோடை வெயிலின் தாக்கத்தாலும் […]
சுரங்கப்பாதையின் வெளியில் நின்று கொண்டிருந்த லாரி தீடிரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள யூரி மாநிலத்தின் வாஸன் பகுதியில் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. இந்த சுரங்கப் பாதையின் அருகில் நின்றுக்கொண்டிருந்த லாரி தீடிரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தகவலை அறிந்த போலீசார் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர்களோடு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் எந்த வித உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றும் சுரங்கப்பாதைக்கு வெளியே […]
சுவிட்சர்லாந்தில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளிநாட்டு மக்களை தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள முன்வருமாறு அறிவுறுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுவிட்சர்லாந்திலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே தடுப்பூசி போட்டு கொள்ளுதல் குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் 38.6 சதவிகிதத்தினர் வெளிநாட்டு மக்கள் என்கிற […]
சுவிட்சர்லாந்தில் தொடர் கனமழை காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . சுவிட்சர்லாந்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக தலைநகர் பெர்ன் மற்றும் சில ஆல்பைன் பகுதிகளில் உள்ள ஏரிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட புயல் தாக்கத்தால் அப்பகுதியில் உள்ள 30 வீடுகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மேலும் சுற்றுச்சூழலுக்கான பெடரல் அலுவலகம் இந்த வெள்ள அபாய எச்சரிக்கையை மூன்று அளவுகளாக கணித்துள்ளது. இதில் ஆல்பைன் பகுதிகளில் […]
கொரோனோ சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் கடவுச்சீட்டில் இருந்து வேறாக இருந்தால் பயணங்கள் தடை செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்கள் கடவுச்சீட்டிலும் இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் பயணங்கள் அல்லது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் பல பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்த சமயத்தில் அவர்களின் பெயரில் ஒரு வார்த்தை அல்லது எழுத்தில் பிழை ஏற்பட்டிருக்கலாம். எனவே அதனை, […]
மிகப்பெரிய வரி ஏய்ப்பு மோசடியில் முக்கிய குற்றவாளியாக ஜெர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞர் கைதாகியுள்ளார். சுவிட்சர்லாந்து காவல்துறையினர் Graubuenden என்ற மாகாணத்தில் அந்த வழக்கறிஞரை கைது செய்திருக்கிறார்கள். இதற்காக, ஜெர்மன் அதிகாரிகள் கோரிக்கை வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நபர் ஜெர்மனிக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நபர், மோசடியை திட்டமிட்டு செய்ததாக ஜெர்மன் நாட்டின் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் வாதாடினார்கள். மேலும் இந்த நபரால் பல பில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய கஜானாக்கள் […]
சுவிட்சர்லாந்தில் சமீப நாட்களாக பலத்த மழை பெய்ததில், முக்கிய நகரங்கள் தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சுவிட்சர்லாந்தின் சில நகரங்களில் சதுர மீட்டருக்கு 100 லிட்டர் மழை பொழிந்துள்ளது. மேலும் Faido பகுதியில் 180 லிட்டர்கள் பதிவாகியுள்ளது. எனினும் கடந்த 1987ஆம் வருடத்திற்கு பின்பு பெய்த இரண்டாவது பெரிய மழை இதுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 1987 ம் வருடம் ஜூலை மாதத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து கனமழை பெய்து சதுர மீட்டருக்கு 365 லிட்டர்கள் […]
ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் சுவிட்சர்லாந்தின் தடுப்பூசி சான்றிதழ்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முழுவதும் செல்லுபடியாகும் என்பதை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் பயணிகள் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்ககப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் சுவிட்சர்லாந்தில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழ்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முழுவதும் செல்லுபடியாகும் என்பதை ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் வெளியிட்டுள்ளது. மேலும் பயணிகள் கண்டிப்பாக பயண கட்டுப்பாடுகளை பின்பற்ற […]
சுற்றுலா பேருந்தில் கஞ்சா கடத்திய இரட்டை சகோதரர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டில் ஆர்கு மாகாணத்தில் எல்லை தாண்டி சென்ற சுற்றுலா பேருந்து ஒன்றை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த பேருந்தில் இருந்த இரட்டை சகோதரர்கள் சுற்றுலா செல்வது போல நடித்து கஞ்சா கடத்தி வந்துள்ளனர். இதனை அறிந்த போலீசார் அந்த சுற்றுலா பேருந்தை மடக்கி அதிலிருந்து 116 கிலோ கஞ்சாவை எடுத்துள்ளனர். இந்த போதை பொருளின் மதிப்பு ஒரு மில்லியன் சுவிஸ் […]
ஓட்டுனர் உரிமம் இன்றி 20 ஆண்டுகளாக வாகனம் ஓட்டுபவரை போலீசார் கைது செய்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டில் லூசர்ன் நகரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் வேகமாக சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த சோதனையில் காரை ஓட்டிச்சென்ற அறுபது வயதுடைய நபர் குடிப் போதையில் இருப்பதாக நினைத்த போலீசார் அவரை விசாரித்துள்ளனர். இந்த நிலையில் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கடந்த இருபது வருடங்களாக ஓட்டுநர் உரிமம் இன்றி அவர் வாகனம் ஓட்டுவது […]
சுவிட்சர்லாந்தில் குடியிருப்பு ஒன்றில் ஒரு தம்பதியர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா மாகாணத்தில் Chatelaine என்ற பகுதியில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. அங்கு வசித்த தம்பதியர் தான் இறந்து கிடந்துள்ளனர். முதல்கட்ட விசாரணையின் படி 64 வயதுடைய அந்த நபர், தன் 58 வயது மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்திருப்பார் என்று கூறப்படுகிறது. எனினும் அந்த குடியிருப்பின், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் துப்பாக்கி சத்தம் கேட்கவில்லை […]
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாநிலத்திலுள்ள ஒரு பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் ஒரு நபரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள Tscharnergut என்ற பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் சில மாணவர்கள் ஒரு நபரின் உடல் கிடப்பதை கண்டுள்ளனர். இதையடுத்து அந்த பள்ளியின் பாதி பகுதியை காவல்துறையினர் முடக்கி வைத்தனர். அதன்பின்பு, மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் கடிதம் அனுப்பி சம்பவத்தை தெரியப்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் மாணவர்களின் பெற்றோர், இது குறித்த சந்தேகங்களை பள்ளி நிர்வாகத்திடம் […]
சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதால் பொதுமக்கள் அதை பயன்படுத்துவதற்கு மாநில நிர்வாகம் தடை விதித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் பெர்ன் மாகாணத்தில் Emmental மாவட்டத்தில் உள்ள Hindelbank , Krauchthal பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. இதில் குறிப்பாக Hettiswil , Schleumen மற்றும் Sagi ஆகிய தொழிற்சாலைப் பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் சமைப்பதற்கும்,குடிப்பதற்கும் இந்த நீரை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த […]
காரிலேயே குழந்தையை பெற்றெடுத்த பெண்ணை பத்திரமாக ஜெர்மனி சுங்க அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் இருந்து பிரசவத்திற்காக நிறைமாத கர்ப்பிணியான மனைவியை காரில் ஏற்றிக்கொண்டு கணவர் ஜெர்மனி நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆனால் சுவிஸ் எல்லையில் வந்துகொண்டிருக்கும் போது காரிலேயே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது . அப்போது ஜெர்மனி பாஸல் பகுதியில் உள்ள சுங்க சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதிகாரிகளிடம் சென்று மனைவிக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சுங்க அதிகாரிகள் […]