Categories
உலக செய்திகள்

சூடானில் கோர விபத்து…. லாரி மீது பயங்கரமாக மோதிய பேருந்து…. 16 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

சூடான் நாட்டில் நின்றுகொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் 16 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடான் என்னும் வடக்கு ஆப்பிரிக்க நாட்டின் தலைநகரான கார்டூமிலிருந்து டார்பர் மாகாணத்தில் இருக்கும் பேசர் நகரத்திற்கு சென்ற பேருந்தில் 30-க்கும் அதிகமான பயணிகள் இருந்திருக்கிறார்கள். அந்த பேருந்து, ஓம்துர்மன் நகரத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் கட்டுப்பாடின்றி சென்ற பேருந்து சாலையோரத்தில் நின்ற லாரியின் மீது பயங்கரமாக மோதியது. பயத்தில், […]

Categories
உலக செய்திகள்

காதலனுடன் நெருக்கமாக இருந்த இளம் பெண்… 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு… இதுதான் காரணமா…??

சூடானில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அங்கு திருட்டு, விபச்சாரம் உள்ளிட்ட குற்றங்களுக்கு கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றுதல் அல்லது கைகளை துண்டித்தல் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் “ஒயிட்நைல் மாகாணத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். இந்நிலையில் விவாகரத்து பெற்ற அந்த இளம் பெண் மற்றொரு வாலிபருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததை அந்த பெண்ணின் […]

Categories
உலக செய்திகள்

இரு பிரிவினருக்கு இடையே முற்றிய மோதல்…. 150 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் பதற்றம்….!!!!

சூடான் நாட்டில் ப்ளூ நைல் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் பழங்குடியின மக்கள் பல பிரிவுகளாக வசித்து வருகின்றனர். இதில் ஹவுஸ் ஆப் பிரிவு மக்களுக்கும் வேறு சில குழுக்களுக்கும் இடையே நிலம் தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இந்த வாக்குவாதத்தினால் ஒருவரை ஒருவர் அடிக்கடி தாக்கிக் கொள்வது வழக்கம். இந்த நிலையில் இரண்டு நாட்களாக இரு பிரிவுகளுக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஏற்பட்ட மோதலால் 150 க்கும் மேற்பட்டோர் இதுவரை […]

Categories
உலக செய்திகள்

சூடான்: பருவமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…. வெளியான தகவல்….!!!!

சூடானில் கனமழைக்கு பலி எண்ணிக்கையானது 88 ஆக உயர்ந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் சென்ற ஜூன் முதல் பெய்து வரக்கூடிய கன மழையால் இறந்தவர்களின் எண்ணிக்கையானது செவ்வாய்க்கிழமை 88-ஆக அதிகரித்தது. பல்வேறு கிராமங்களில் தொடா் மழை பெய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சூடானில் பருவ மழை ஜூன் மாதத்தில் துவங்கி செப்டம்பா் வரையிலும் நீடிக்கும். இதையடுத்து ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் அது அதிகபட்சமான அளவை எட்டும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு பருவ மழைக்கு […]

Categories
உலக செய்திகள்

பழங்குடியின மக்கள் மோதல்…. 31 பேர் பலி…. 39 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு…!!!

பழங்குடியின மக்களுக்கிடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் ஹவுஷா மற்றும் பெர்டி என்ற 2 பழங்குடியின மக்களுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இங்குள்ள அல்-டமாசின் மற்றும் அல்-ருஸ்ஸைர்ஸ் பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நேரத்தில், ஹவுஷா மற்றும் பெரடி பழங்குடியின மக்களுக்கு இடையே திடீரென கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 16 கடைகள் சூறையாடப்பட்டதோடு, 31 பேர் பரிதாபமாக‌ உயிரிழந்ததாகவும் தகவல் […]

Categories
உலக செய்திகள்

ராணுவ ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு…. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிசூடு…. 8 பேர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூடானை கடந்த 30 வருடங்களாக ஓமல் அல் பஷீர் என்பவர் ஆட்சி செய்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஓமல் அல் பஷீரை ஆட்சியில் இருந்து தூக்கி விட்டு ராணுவத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் சேர்ந்து இடைக்கால அரசை நிறுவி ஆட்சி செய்தனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால அரசு முழுமையாக கலைக்கப்பட்டு ஆட்சியை ராணுவத்தினர் கைப்பற்றினர். இதை எதிர்த்து நாடு […]

Categories
உலக செய்திகள்

சூடானின் தெற்குப்பகுதிக்கு நிறுத்தப்பட்ட உணவு நிவாரணம்…. 17 லட்சம் பேர் பாதிப்பு…!!!

சூடானின் தெற்கு பகுதியில் ஐ.நா வழங்கிக்கொண்டிருக்கும் உணவு பொருட்கள் நிறுத்தப்படும் பட்சத்தில் 17 லட்சம் பேர் உணவு தட்டுப்பாட்டால் பாதிப்படைவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. சூடான் என்னும் ஆப்பிரிக்க நாடு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. சூடானின் தெற்கு பகுதியில் அகதிகளும், பிற நாடுகளிலிருந்து வந்து குடியேறி இருக்கும் மக்களும் இருக்கிறார்கள். அங்கு வசிக்கும் மக்களுக்கு ஐ.நாவின் உணவு நிவாரண பிரிவு தான் உணவு வழங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பிரச்சினையால், அப்பகுதிக்கு கொடுக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

சூடான்: ஆயுதக்குழு தலைவா் மீது வழக்கு…. தொடங்கியது போர்க்குற்ற விசாரணை…..!!!!

சூடானில் 20 வருடங்களுக்கு முன் போா் குற்றத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு ஆயுதக்குழு தலைவா் அலி முகமது அப்துல் அல்-ரஹ்மான் (72) மீது வழக்கு விசாரணை நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐநாவின் சா்வதேச நீதிமன்றத்தில் தொடங்கியது. சென்ற 2003ஆம் வருடத்தில் சூடானைச் சோ்ந்த பழங்குடியினா் அரசுக்கு எதிராக கிளா்ச்சியில் ஈடுபட்டனா். அதனை தடுப்பதற்காக சூடான் அரசு அவா்கள் மீது கடும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. மேலும் அரசுக்கு ஆதவாக இயங்கி வந்த அல்-ரஹ்மான் தலைமையிலான ஜன்ஜாவிது ஆயுதக் […]

Categories
உலக செய்திகள்

பதற்றம்: மீண்டும் “களமிறங்கிய பொதுமக்கள்”…. வச்சி செய்த ராணுவத்தினர்கள்…. கொத்துக்கொத்தாக குவிந்த சடலங்கள்….!!

சூடானில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி பொது மக்களின் மீது ராணுவத்தினர்கள் சரியாக நடத்திய துப்பாக்கி சூட்டில் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். சூடான் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு பொது மக்கள் வீதியிலிறங்கி போராடி வருகிறார்கள். இந்நிலையில் மீண்டும் அந்நாட்டின் பொதுமக்கள் தலைநகர் கார்த்தோம் உட்பட பல முக்கிய பகுதிகளில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி பொதுமக்களின் […]

Categories
உலக செய்திகள்

சூடானில் வெடித்த கலவரம்…. 2 பேர் உயிரிழப்பு…. ராஜினாமா செய்த பிரதமர்….!!

சூடானில் மக்கள் ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்ததில் பிரதமர் அப்தல்லா ஹம்டோக், பதவி விலகியுள்ளார். சூடான் நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி அன்று நாட்டின் ராணுவம், இடைக்கால ஆட்சியைக் கவிழ்த்து அவசர நிலை பிரகடனம் செய்தது. மேலும், பிரதமர், அப்தல்லா ஹம்டோக்வை வீட்டில் சிறை வைத்தனர். இதனை கடுமையாக எதிர்த்து, மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதன் பலனாக, பிரதமர் கடந்த நவம்பர் மாதத்தில் மீண்டும் பதவியில் அமர்ந்தார். ஆனால், அவர் ராணுவத்துடன் இணைந்து அதிகாரப்பகிர்விற்கு ஒப்பந்தம் […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”…. திடீரென்று இடிந்து விழுந்த தங்கச்சுரங்கம்….. 38 பேர் பலியான சோகம்…..!!

சூடான் நாட்டில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து 38 நபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சூடானின் தலைநகரான கார்டோம் நகருக்கு தெற்கு பகுதியில் சுமார் 700 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஃபுஜா என்னும் கிராமத்தில் அரசாங்கத்திற்குரிய தர்சயா தங்க சுரங்கம் இருக்கிறது. அச்சுரங்கம் தற்போது செயல்பாட்டில் இல்லை. இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தவர்கள் சென்றபின் உள்ளூரில் இருக்கும் சுரங்க தொழிலாளர்கள் அங்கு சென்றிருக்கிறார்கள். அப்போது திடீரென்று சுரங்கம் இடிந்து விழுந்து […]

Categories
உலக செய்திகள்

கொடூரம்…! “கூட்டு பாலியல் பலாத்காரம்”…. ராணுவ வீரர்களின் வெறிச்செயல்…. சூறையாடப்பட்ட பெண்கள்..!!

சூடானில் நடைபெறும் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்களை ராணுவ வீரர்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அந்நாட்டின் தலைநகர் உட்பட பல பகுதிகளில் பெண்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளார்கள். சூடானை அந்நாட்டின் ராணுவத்தினர்கள் கைப்பற்றி அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இவர்களது ஆதிக்கத்திற்கு எதிராக அந்நாட்டின் பொதுமக்கள் பலரும் வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். ஆனால் சூடான் ராணுவத்தினர்கள் வீதியில் இறங்கி போராடி வரும் பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

அடப்பாவமே…! பொதுமக்களின் மீதான அத்துமீறல்…. தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு….!!

சூடானில் நடைபெற்று வரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டத்தின் 3 ஆவது ஆண்டு நிறைவடையும் நிலையில் அதிபர் மாளிகையை குறிவைத்து ஏராளமானோர் சென்றுள்ளார்கள். சூடானை கடந்த 2019 ஆம் ஆண்டு அந்நாட்டின் ராணுவத்தினர்கள் கைப்பற்றி அங்கு தங்களது ஆட்சியை நடத்தி வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 2019ஆம் ஆண்டு முதலிலிருந்தே அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சூடானில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் […]

Categories
உலக செய்திகள்

FLASH NEWS : “ஆட்சியை விட்டு விலகுங்க”…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. தடியடி நடத்திய ராணுவம்….!!!!

சூடானில் நடைபெற்று வரும் இராணுவ ஆட்சியை தற்போதே நீக்கக்கோரி பேரணி நடத்திய அப்பாவி பொது மக்களின் மீது ராணுவத்தினர்கள் கண்ணீர்புகை வீசியும், தடியடி நடத்தியுள்ளார்கள். சூடானில் தற்போது நடைபெற்று வரும் ராணுவ ஆட்சி 2023 ஆம் ஆண்டிலிருந்து நடைபெறாது என்று அந்நாட்டின் ராணுவ தளபதியான அல் ஃபுர்கான் தெரிவித்துள்ளார். ஆனால் தங்களுக்கு தற்போதே ஜனநாயக ஆட்சி வேண்டுமென்று சூடான் நாட்டின் தலைநகர் உட்பட பல பகுதிகளில் பொதுமக்கள் பேரணி நடத்தியுள்ளார்கள். இந்த பேரணியில் ஈடுபட்ட 10,000 பேரை […]

Categories
உலக செய்திகள்

“ஒட்டகம் திருடியதால் வெடித்த கலவரம்!”…. 25 பேர் பலியான கொடூரம்….. சூடானில் பயங்கரம்….!!

ஒட்டகம் திருடிய சம்பவத்தில் இரண்டு தரப்பினருக்குடையில் நடந்த மோதலில் 25 நபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் சூடான் நாட்டில், கடந்த 2013 ஆம் வருடத்திலிருந்து, உள்நாட்டு போர் நடந்து வருகிறது. எனவே, பழங்குடியின மக்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேறி வேறு இடங்களுக்கு தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில், தற்போது போர் பதற்றம் சிறிது குறைந்திருக்கிறது. எனவே, அந்த மக்கள் மீண்டும்  தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதற்கு முன்பு, இவர்களால் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் பிரதமர் பதவி..! பிரபல நாட்டில் முடிவுக்கு வரும் அரசியல் குழப்பம்… வெளியான முக்கிய தகவல்..!!

சூடான் ராணுவம் அப்தல்லா ஹம்டோக்-ஐ மீண்டும் பிரதமராக ஏற்றுகொண்டுள்ளதால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூடானில் அப்தல்லா ஹம்டோக் என்பவர் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றார். இதையடுத்து இடைக்கால அரசை கவிழ்த்து விட்டு சூடான் ராணுவம் கடந்த மாதம் 25-ஆம் தேதி ஆட்சி அதிகாரத்தை தன்வசம் கொண்டு வந்தது. அதன் பிறகு நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதோடு பிரதமர் பதவியிலிருந்த அப்தல்லா பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் நாடு முழுவதும் ஆட்சிக்கவிழ்ப்பு எதிராக […]

Categories
உலக செய்திகள்

“ஆர்ப்பாட்டக்கார்கள் மீது துப்பாக்கிசூடு தாக்குதல்!”.. 15 பேர் உயிரிழப்பு.. சூடான் இராணுவத்திற்கு அமெரிக்கா கண்டனம்..!!

சூடானில் மக்கள் ராணுவ அதிகாரத்தை எதிர்த்து வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த நிலையில், துப்பாக்கிசூடு நடத்தப்பட்டு 15 பேர் உயிரிழந்துள்ளனர். வட ஆப்பிரிக்காவில் இருக்கும் சூடானில் கடந்த 2019 ஆம் வருடத்திலிருந்து ராணுவம் மற்றும் மக்கள் கலந்த கூட்டணி ஆட்சி தான் நடந்து வந்தது. அதில், அப்துல்லா ஹம்டோ நாட்டின் பிரதமராக இருந்தார். ஆனால் கடந்த மாதம் 25ஆம் தேதியன்று கூட்டணி ஆட்சியை கவிழ்த்து, ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றி, ஃபடக் அல்-பர்ஹன் என்ற ராணுவ தளபதி ஜெனரல் […]

Categories
உலக செய்திகள்

ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான போராட்டம்… 5 பேர் கொல்லப்பட்ட அவலம்… பிரபல நாட்டில் நிலவும் பதற்றம்..!!

சூடான் நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 25-ஆம் தேதி ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவம் புரட்சி செய்து ஆட்சியை தங்கள் வசம் கொண்டு வந்தது. இதையடுத்து சர்வதேச நாடுகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டதோடு நாடு முழுவதும் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படைகளை கொண்டு போராட்டங்கள் ஒடுக்கப்பட்டது. இந்த நிலையில் ராணுவ தளபதி […]

Categories
உலக செய்திகள்

சூடானைக் கைப்பற்றிய ராணுவத்தினர்…. கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை…. கண்டனம் தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர்….!!

ராணுவத்தினரை கண்டித்து மக்கள் நடத்திய போராட்டத்தில் பத்து பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சூடானில் கடந்த திங்கட்கிழமை அன்று ராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் அமைச்சர்கள், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்களை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். மேலும் ராணுவத்தை கண்டித்து போராட்டம் நடத்தியவர்களை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ராணுவ ஆட்சியை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்ததை பொறுத்துக் கொள்ள முடியாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை […]

Categories
உலக செய்திகள்

இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம்…. 11 பேர் பலி…. பிரபல நாட்டில் தொடரும் பயங்கரம்….!!

சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிரான தொடர் போராட்டத்தால் உள்நாட்டு போர் ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் 1989 முதல் 2019 வரை ஒமர் அல்-பஷீர் அதிபராக செயல்பட்டார். மேலும், மக்கள் போராட்டம், இராணுவ கிளர்ச்சியின் காரணமாக ஒமர் அல்-பஷீர் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், பொதுமக்கள் மற்றும் இராணுவம் கலந்த கூட்டணி ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார். இதனை தொடர்ந்து, கடந்த 25 ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

ஆட்சியை கைப்பற்றிய இராணுவம்…. துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

சூடானில் உள்நாட்டு போரை தவிர்க்க ஆட்சியை கைப்பற்றியதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார். சூடான் நாட்டில் இடைக்கால அரசை கலைத்து ஆட்சியை கைப்பற்றிய இராணுவம், பிரதமர் அப்தல்லா ஹம்தக் உட்பட முக்கிய அதிகாரிகளையும் கைது செய்தது. மேலும், அவர்களை இராணுவத்தினர் இரகசியமாக வீட்டுக்காவலில் சிறைபிடித்து வைத்துள்ளனர். இது குறித்து அந்நாட்டின் இராணுவ தளபதி அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் கூறியதாவது, “சூடானில் தொடரும் உள்நாட்டு போரை தவிர்க்கவே இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது” என்று கூறினார். இதனால், இராணுவ ஆட்சிக்கு கண்டணம் […]

Categories
உலக செய்திகள்

ஆட்சியை கைப்பற்றிய இராணுவம்…. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்துவதால் நாடு முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.  வட ஆப்ரிக்க நாடான சூடானில், கடந்த 2019 ஆம் ஆண்டு உமர் அல் பஷிர் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், புதிய ஆட்சி அமைப்பதில் இராணுவம், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, 2023 இல் தேர்தல் நடத்தி புதிய அரசை தேர்ந்தெடுக்கவும், அதுவரை அப்துல்லா ஹம்தக் இடைக்கால ஆட்சி […]

Categories
உலக செய்திகள்

ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் இராணுவம்…. பிரதமர் சிறைபிடிப்பு…. பிரபல நாட்டில் பயங்கரம்….!!

சூடானில் கூட்டணி ஆட்சிக்கு எதிராக இராணுவம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு பிரதமரை சிறைபிடித்துள்ளனர். வட ஆப்பிரிக்காவின் சூடானில் 30 ஆன்டுகளாக ஆட்சி புரிந்த ஒமர் அல்-பஷீர் மக்கள் போராட்டம் மற்றும் இராணுவ கிளர்ச்சியால் கடந்த 2019 இல் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, அந்நாட்டில் பொதுமக்கள் மற்றும் இராணுவம் இணைந்த கூட்டணி அரசு ஆட்சியமைத்தது. இந்த ஆட்சியில் சூடான் நாட்டில் அப்துல்லா ஹம்டோ அவர்கள் புதிய பிரதமராக ஆட்சி புரிந்து வருகிறார். ஆனால், […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் திடீர் தாக்குதல்… ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் பலி… வெளியான பரபரப்பு தகவல்..!!

சூடானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நான்கு பேர் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ஒன்று சூடான் நாட்டில் இயங்கி வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் மீது திடீர் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் சூடான் பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுக்கும் வகையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஒழிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று முன்தினம் சூடானில் உள்ள ஹர்டோமின் […]

Categories
உலக செய்திகள்

இடைக்கால ஆட்சியை…. கவிழ்க்க முயற்சிக்கும் கிளர்ச்சியாளர்கள்… தகவல் வெளியிட்ட ரஷ்யா செய்தி நிறுவனம்….!!

சூடானில் கிளர்ச்சியாளர்கள் தற்பொழுதுள்ள இடைக்கால அரசை கவிழ்க்க முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்காவின் வட பகுதியில் அமைந்துள்ள நாடு சூடான். இந்த நாட்டில் தற்பொழுது இடைக்கால ஆட்சி முறை அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது இடைக்கால அரசின் பிரதமராக அப்தல்லா ஹாம்டாக் உள்ளார். இவருக்கு முன்பாக 1989 முதல் 2019 வரை நெடுங்காலமாக  ஒமர் அல் பஷீர் என்பவர் சூடானின் அதிபராக இருந்தார். குறிப்பாக அவர் மீது மக்கள் வைத்திருந்த நன்மதிப்பு குறைந்தது. இதனால் மக்கள் ராணுவத்துடன் […]

Categories
உலக செய்திகள்

விளையாட தான் போனாங்க…. ஸ்போர்ட்ஸ் கிளப்பில் குண்டுவெடிப்பு…. 4 பேர் உயிரிழந்த சோகம்…!!

ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட ஆப்பிரிக்காவில் உள்ள சூடானின் கிழக்கு பகுதியில் அல்-அமீன் நகரத்தில் ஸ்போர்ட்ஸ் கிளப்  ஒன்று உள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நேற்று திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.  இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு  காரணமானவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த பயங்கரவாத நிகழ்விற்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை […]

Categories
உலக செய்திகள்

பூனை செய்த அட்டகாசம்… உடனே தரையிறங்கிய விமானம்… பூனைக்கு யாருடா பாஸ்போட் கொடுத்தது?…!!!

சூடானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் விமானியை பூனை ஒன்று தாக்கியதால் வானில் பறந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சூடானில் கார்டூம்  விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை காலை கத்தாரை  நோக்கி டர்கோ  ஏர் விமானம் வானில் பறந்தது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 30 நிமிடத்தில் திடீரென விமானி அமர்ந்திருக்கும் இடத்திற்கு பூனை ஒன்று சென்று உள்ளது. அப்பொழுது அந்த பூனை விமானியை தாக்கியது. அதனால் விமானி பயணிகளுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் விமானத்தை மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

“இவன் எப்படி இங்க” விமானத்தில் பயணித்த பூனையால்…. அலறிய பயணிகள்…!!

சூடான் நாட்டு விமானத்தில் பூனையொன்று பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடான் நாட்டு விமானம் ஒன்று கத்தாருக்கு செல்வதற்காக சர்வதேச விமான நிலையம் ஒன்றில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த விமானம் புறப்படும் பொழுது பயணிகளுடன், பூனையும் மறைந்திருந்து பயணித்துள்ளது. மேலும் விமானம் புறப்பட்ட 30 நிமிடங்களில் மறைந்திருந்த அந்த பூனை விமானியின் அறைக்குள் நுழைந்து விமானி மீது பாய்ந்து அவர்களை தாக்கியுள்ளது. இதனால் விமானி  அந்த விமானத்தை புறப்பட்ட  இடத்திலேயே தரை இறக்கியுள்ளார். மேலும் பூனையை விமானத்துக்குள் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் திக் திக்… “விமானியின் மீது பாய்ந்த பூனை”… புறப்பட்ட இடத்திலேயே தரையிறக்கப்பட்ட விமானம்…!!

சூடானிலிருந்து கத்தாரில் உள்ள தோஹாவுக்கு புறப்பட்ட பயணிகள் விமானத்தின் விமானியை  பூனை தாக்கியதால் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. கடந்த வாரத்தின் புதன் கிழமை சூடானின் தலைநகரமான கார்ட்டூமில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து  கட்டாரில் இருக்கும் தோஹாவுக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது . அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமானியின் அறைக்குள் பூனை ஒன்று பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்ட அந்த பூனை விமானிகளின் மீது பாய்ந்து தனது கோபத்தை வெளிப்படுத்தியது. […]

Categories
உலக செய்திகள்

மீறப்பட்ட அமைதி ஒப்பந்தம்… கிளர்ச்சியாளர்களின் கொலைவெறி தாக்குதல்… கொன்று குவிக்கப்படும் அப்பாவி மக்கள்….!!

சூடானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 83 பேர் கொல்லப்பட்டதுடன் 160 பேர் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியது. வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் 2003ஆம் ஆண்டிலிருந்து டர்பர் மாகாணத்தை மையமாகக்கொண்டு உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசு படையினர் மற்றும் கிளர்ச்சியாளர்கள் நடத்திய இந்த உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமைதி ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. இதனால் பல ஆண்டுகளாக நீடித்து வந்த […]

Categories
உலக செய்திகள்

தெற்கு சூடானில் சரக்கு விமானம் கோர விபத்து… 17 பேர் பலி…!!!

தெற்கு சூடானில் ஏற்பட்ட சரக்கு விமான விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானுக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று 18 பயணிகளுடன் தலைநகர் ஜீபாவில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சில மணித்துளிகளில் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், விமான நிலையத்திற்கு அருகில் இருந்த குடியிருப்பு பகுதியை ஒட்டி விழுந்து நொறுங்கியது. அந்த பயங்கர விமான விபத்தில், விமானத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதல்… குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழப்பு….!!

சூடான் நாட்டில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய பயங்கர தாக்குதலால் 60 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடான் நாட்டின் மேற்கு பகுதியில் இருக்கின்ற டார்பூர் பிராந்தியத்தில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக பழங்குடியின மக்களுக்கு இடையில் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில் சென்ற 2013ஆம் ஆண்டு அப்பகுதியில் சூடான் அரசுக்கு எதிராக கிளர்ச்சிக் குழுக்கள் உருவாகியுள்ளன. அச்சமயத்தில் தொடங்கிய வன்முறை தற்போது வரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பழங்குடியின மக்களுக்கு இடையே உள்ள பிரிவை […]

Categories
உலக செய்திகள்

சூடான் நாட்டில்…! ”விவசாய நிலத்தில் துப்பாக்கிச்சூடு” 20 பேர் பரிதாப பலி..!!

சூடான் நாட்டில் விவசாய நிலப் பகுதிக்குள் ஒரு மர்ம நபர் புகுந்து அங்கு பணிபுரிந்தவர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் என்ற நாடு உள்ளது. இந்நாட்டில் 2013 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நிலவி வருகின்றது. இந்த போரால் பலர் தங்கள் சொந்த இடங்களை விட்டு வேறுபகுதிகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால் தற்போது போர் சற்று குறைந்ததனால் இடம்பெயர்ந்த சூடான் மக்கள் தங்கள் சொந்த பகுதிகளுக்கு திரும்பியவாறு உள்ளனர். […]

Categories

Tech |