Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா 42: 13 வேடங்களில் மிரட்ட உள்ள சூர்யா..? வெளியான சுடச்சுட தகவல்கள்..!!!

சூர்யா நடிக்கும் 42வது திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது வாடிவாசல், சிவா உடன் இணைந்து சூர்யா 42 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயின் ஆக நடிக்க, தேவி ஸ்ரீ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உங்க மனசு யாருக்கும் வராது சார்!…. வாக்குறுதி கொடுத்த சூர்யா…. புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இவர் தன் அகரம் பவுண்டேசன் வாயிலாக பெரும்பாலான மாணவர்களை படிக்க வைத்து வருகிறார். மேலும் கல்வி சார்ந்த பிரச்சனைகளுக்கு தன் குரலை தவறாமல் பதிவு செய்து வருகிறார். அண்மையில் நடிகர் சூர்யா மாவட்ட வாரியாக ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அதாவது, தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளில் யாரேனும் படித்த இளைஞர்கள் இருப்பின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அதனால சூர்யா கோச்சுக்கிட்டு போயிட்டாரு’…. கொஞ்ச நாள் பேசல…. மனம் திறந்த அமீர்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அமீர். தற்போது இவர் நடிப்பில் ‘உயிர் தமிழுக்கு’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்த படத்தை இயக்கி தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் முதல் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடந்த  சம்பவம் பற்றி அமீர் பேசியுள்ளார். அதில், நான் ஃப்ரீயா பேசுனதுனால தான் பிரச்சனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி இயக்கத்தில் மீண்டும்…. நடிகர் சூர்யா எடுத்த திடீர் முடிவு…. வெளிவரும் புது தகவல்கள்….!!!!

நந்தா, பிதாமகன் திரைப்படங்களை அடுத்து மீண்டுமாக பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் சூர்யா நடித்து வந்தார். எனினும் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கதையில் தனக்கு போதுமான திருப்தி இல்லாததால் தற்போது அந்த படத்தில் இருந்து அவர் விலகி இருக்கிறார். இந்நிலையில் வணங்கான் திரைப்படத்திற்கு கொடுத்திருந்த அதே கால்ஷீட் இப்போது இயக்குனர் ஹரிக்கு, சூர்யா கொடுத்திருக்கிறார். அவர்கள் மீண்டுமாக இணையும் புது படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. முன்பே ஹரி இயக்கத்தில் ஆறு, வேல், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

#BREAKING: நடிகர் சூர்யா திடீர் விலகல்: பரபரப்பு அறிவிப்பால் ரசிகர்கள் ஷாக்…!!

நடிகர் சூர்யா, இயக்குனர் பாலா கூட்டணியில் நந்தா – பிதாமகன் படத்தை தொடர்ந்து தற்போது ”வணங்கான்” என்ற படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால் இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா ?  என்கின்ற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING: வணங்கான் – நடிகர் சூர்யா விலகல் – இயக்குனர் பாலா அறிவிப்பு ..!!

வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகி விட்டதாக இயக்குனர் பாலா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். கதையில் ஏற்பட்ட மாற்றங்களால் சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா? என்று ஐயம் கொண்டதால் தற்போது சூர்யா விலகி விட்டதாக பாலா தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த அறிவிப்பினை இருவரும் கலந்து பேசி எடுத்திருப்பதாகவும் பாலா அந்த அறிவிப்பில் தெரிவித்து இருக்கின்றார். சூர்யாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த நந்தா, பிதா மகன் படம் இயக்குனர் பாலா  இயக்கத்தில் வெளியாகிருந்தது. இந்நிலையில் வணங்கான் படத்தினுடைய படப்பிடிப்பானது தொடர்ந்து நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சர்வதேச திரைப்பட விழாவில்… சூர்யாவின் திரைப்படம் திரையிடத் தேர்வு..!!!

சர்வதேச திரைப்பட விழாவில் சூர்யாவின் திரைப்படம் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் சர்வதேச திரைப்பட விழா மத்திய அரசு தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்படம் மேம்பாட்டு கழகம் சார்பாக நடந்து வருகின்றது. அந்த வகையில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நேற்று முன்தினம் ஆரம்பமாகி உள்ளது. இந்த விழா வருகின்ற 28ஆம் தேதி வரை மொத்தம் ஏழு நாட்கள் நடைபெற இருக்கின்றது. இந்த விழாவில் 79 நாடுகளைச் சேர்ந்த 280க்கும் மேற்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹரி-சூர்யா கூட்டணியில் சிங்கம் 4…?” படம் குறித்து வெளியான தகவல்…!!!!

சூர்யா-ஹரி கூட்டணியில் சிங்கம் 4 திரைப்படம் உருவாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிப்பில் ஹரி இயக்கத்தில் சென்ற 2019 வருடம் வெளியான திரைப்படம் சிங்கம். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றது. இதன்பின் சிங்கம் 2 2013 ஆம் வருடம் வெளியான து இந்தப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் வெளியான சிங்கம் மூன்றாம் பாகம் தோல்வியை தழுவியது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட… சூப்பர் ஸ்டார் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்த சூர்யா…. வைரலாகும் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா தற்போது கதாநாயகி முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.   மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மம்முட்டி. இவர் தற்போது இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் ”காதல் தி கோர்” என்ற […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இது வேற லெவல்!…. சங்கர் இயக்கத்தில் 4 மாஸ் ஹீரோக்கள்….. KGF, பாகுபலியை மிஞ்சும் பிரம்மாண்டம்….!!!!!

சங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த திரைப்படத்தில் நான்கு முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள திரைபடம் குறித்து அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. சங்கர் அடுத்ததாக வேள்பாரி கதையை படமாக எடுக்க முடிவெடுத்திருப்பதாக செய்தி வெளியான பிறகு இந்த படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என கேள்வி எழுந்திருக்கின்றது. ஆரம்பத்தில் இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிப்பதாக கூறிவந்த நிலையில் தற்போது ரன்வீர் சிங் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த கதாபாத்திரம் என் வாழ்வில் ஓர் மைல்கல்”…. நடிகர் சூர்யா டுவிட் பதிவு…. நெகிழ்ச்சி….!!!!

சூர்யா நடிப்பில் கூட்டத்தில் ஒருவன் திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியான படம்தான் “ஜெய்பீம்”. இந்த படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் குறித்து பேசும் இந்த படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்து இருந்தார். சென்ற வருடம் நவம்பர் மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிய இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் சூர்யாவின் “வாடிவாசல்”…. படம் எப்படி….? இணையத்தில் லீக்கான தகவல்…..!!!!

வாடிவாசல் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தற்போது இயக்குனர் பாலா இயக்கும் திரைப்படம் மற்றும் சிறுத்தை சிவா இயக்கம் புதிய படம் போன்றவற்றில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படம் ஜல்லிக்கட்டு கதையம்சத்தில் உருவாகியுள்ளது. இதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புனித் ராஜ்குமார் நினைவு திட்டம்”…. சத்தமே இல்லாமல் உதவிய நடிகர்கள்… பிரகாஷ் ராஜ் நெகிழ்ச்சி….!!!!

புனித் ராஜ்குமார் நினைவு திட்டத்திற்கு நடிகர் சூர்யாவும் சிரஞ்சீவியும் உதவி இருப்பதாக பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் சென்ற வருடம் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு 46 வயதே ஆன நிலையில் திடீரென மரணம் ஏற்பட்டதால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் அவர் மறைந்து ஒரு வருடம் நினைவு பெற்ற நிலையில் அவரின் நினைவாக நடிகர் பிரகாஷ்ராஜ் அப்பு எக்ஸ்பிரஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அடி தூள்” மீண்டும் தேசிய விருது இயக்குனருடன் இணையும் நடிகர் சூர்யா….. வெளியான மரண மாஸ் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ‘சூரரை போற்றும்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படம் தேசிய விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளையும் வென்றது. அதுமட்டுமில்லாமல் ஓடிடி தளத்தில் அதிகமானோர் பார்த்த பிராந்திய மொழி படம் என்ற சாதனையும் நிகழ்த்தியுள்ளது. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த திரைப்படம் வெளிவந்தது. தற்போது சூரரைப் போற்றும் திரைப்படம் இந்தியில் ரீமேக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அன்புள்ள சூர்யாவுக்கு நன்றி”…. நடிகர் மம்முட்டி இணையத்தில் பதிவு…!!!!!!

நடிகர் சூர்யாவுக்கு மம்முட்டி நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா முன்னணி நடிகரான சூர்யாவை சென்ற 2006 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா சென்ற 2015 ஆம் வருடம் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் உடன்பிறப்பே. இந்த நிலையில் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யாவின் சூரரை போற்று, ஜெய் பீம்”…. தேசிய அளவில் படங்களுக்கு கௌரவம்….!!!!!

தேசிய அளவில் சூரரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கௌரவம் கிடைத்துள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சூர்யா. இவர் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் சென்ற 2020 ஆம் வருடம் வெளியான சூரரை போற்று திரைப்படமும் 2021 ஆம் வருடம் ஜெய் பீம் என இவரின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது. அண்மையில் சூர்யாவுக்கு ஒரு விழாவில் விருது கிடைத்தது. சூரரை போற்று திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் ஏங்கி தவிச்சுக்கிட்டு இருந்த போது தான் அது எனக்கு கிடைத்தது”….. வருத்தத்தை தெரிவித்த நடிகர் சூர்யா….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பல தரமான படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகவும் சூர்யா 42 படத்திலும் நடித்து வருகிறார். இதனையடுத்து அனைவரும் எதிர்பார்த்த வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் விரைவில் நடிக்க உள்ளார். ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த சூர்யா இடையில் சில தோல்விகளை சந்தித்தார். லிங்குசாமி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!‌ சூப்பர்…. சூர்யா, ஜோதிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…. இணையத்தில் படு வைரல்….!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர்களில் சூர்யா, ஜோதிகா மிகவும் பிரபலமானவர்கள். திருமணத்திற்கு முன்பு இவர்கள் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரில் கலந்தது, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் கடந்த 2007 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்ட இருந்து வருவது ரசிகர்களுக்கு வருத்தமளிக்கிறது. இந்த நிலையில் அண்மையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தேசிய விருது வாங்கியது ரசிகர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது விருதுடன் குடும்பத்துடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர்யா….! “சூர்யாவின் 2டி நிறுவனம் செய்த செயல்”…. பல தரப்பினரும் பாராட்டு….!!!!!!

தூய்மை பணிக்காக நவீன வாகனத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் வழங்கியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சூர்யா. இவர் 2டி என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகின்றார். இவர் இந்நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிப்பது மட்டுமல்லாமல் சமூக நல பணிகளுக்காகவும் மக்கள் நல திட்டங்களுக்காகவும் நிதி உதவிகளையும் பொருளுதவிகளையும் செய்து வருகின்றார். அந்த வகையில் கானாத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் தூய்மை பணிகளுக்காக வாகனம் ஒன்று வேண்டும் என அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் சஞ்சய் ராமசாமி வருகிறாரா…?” கஜினி-2 உருவாக இருப்பதாக தகவல்….!!!!!

சூர்யா நடிப்பில் கஜினி 2 பாகம் உருவாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சூர்யா. இவர் தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நடிப்பில் சென்ற 2005 ஆம் வருடம் வெளியான திரைப்படம் கஜினி. இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தில் அசின், நயன்தாரா உள்ளிட்டோர் ஹீரோயினாக நடித்திருந்தார்கள். மேலும் இப்படம் இந்தியிலும் அமீர்கான் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. சூர்யா வாழ்க்கையில் முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்.. “மீண்டும் விருதுகளை குவித்த சூரரை போற்று”…. இது வேற லெவல் நியூஸ்….!!!!!

சூரரை போற்று திரைப்படம் மேலும் எட்டு விருதுகளை குவித்திருக்கின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சூர்யா. இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் சூரரை போற்று. இத்திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டடு விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படமானது சர்வதேச […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வணங்கான் திரைப்படம் குறித்து தகவல் வெளியிட்ட முக்கிய நடிகர்”…. குஷியில் சூர்யா ரசிகாஸ்….!!!!!

வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என படத்தில் நடிக்கும் முக்கிய பிரபலம் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக பலம் வரும் சூர்யா நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் பாலா இயக்கத்தில் நடித்த நந்தா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்‌. இதனையடுத்து பாலா இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து நடிகர் சூர்யா பிதாமகன் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பெற்றோருக்கு தேசிய விருது அளித்து பெருமைப்படுத்திய சூர்யா – ஜோதிகா…. வைரலாகும் புகைப்படம்….!!!

தேசிய விருது பெற்ற சூர்யா மற்றும் ஜோதிகா புகைப்படத்தை வெளியிட்டுள்ளனனர். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”சூரரைப் போற்று”. இந்த திரைப்படத்திற்காக நேற்று சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த படத்திற்கான விருதை நடிகை ஜோதிகா வாங்கினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதனையடுத்து, சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தேசிய விருதை பெற்றோருக்கு அளித்து பெருமைப்படுத்தி புகைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தேசிய விருது பெற்ற நாயகன் சூர்யா”… வாழ்த்து தெரிவித்த இசைப்புயல்…!!!!!

தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார். இந்திய அரசு சார்பாக வருடந்தோறும் திரைத்துறை மற்றும் திரை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. சென்ற 2020-ம் வருடத்திற்கான 68-வது தேசிய விருது பட்டியலானது சென்ற சில மாதங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டதில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று படத்திற்கு 5 விருதுகளும் மண்டேலா திரைப்படத்திற்கு இரண்டு விருதுகளும் மற்ற திரைப்படத்திற்கு மூன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. மகன் மற்றும் மகள் புகைப்படத்துடன் சூர்யா நெகிழ்ச்சி பதிவு….!!!

 தேசிய விருது பெற்ற சூர்யா குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”சூரரைப் போற்று”. இந்த திரைப்படத்திற்காக நேற்று சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த படத்திற்கான விருதை நடிகை ஜோதிகா வாங்கினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதனையடுத்து தேசிய விருது பெற்ற சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் வீட்டில் குடும்பத்தினருடன் புகைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மேடையில் தேசிய விருது வாங்கும் சூர்யா”…. ஜோதிகா செய்த செயல்…. வைரலாகும் வீடியோ….!!!!!!

சூர்யா மேடையில் விருது வாங்கும்பொழுது ஜோதிகா செய்த செயலின் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இந்திய அரசு சார்பாக வருடந்தோறும் திரைத்துறை மற்றும் திரை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. சென்ற 2020-ம் வருடத்திற்கான 68-வது தேசிய விருது பட்டியலானது சென்ற சில மாதங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டதில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று படத்திற்கு 5 விருதுகளும் மண்டேலா திரைப்படத்திற்கு இரண்டு விருதுகளும் மற்ற திரைப்படத்திற்கு மூன்று விருதுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“68-வது தேசிய திரைப்பட விழா”…. சூர்யா, ஜோதிகாவுக்கு தேசிய விருது….!!!!!

சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஜோதிகாவும் பெற்றுக் கொண்டார்கள். இந்திய அரசு சார்பாக வருடந்தோறும் திரைத்துறை மற்றும் திரை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. சென்ற 2020-ம் வருடத்திற்கான 68-வது தேசிய விருது பட்டியலானது சென்ற சில மாதங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டதில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று படத்திற்கு 5 விருதுகளும் மண்டேலா திரைப்படத்திற்கு இரண்டு விருதுகளும் மற்ற திரைப்படத்திற்கு மூன்று விருதுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்ற 2020 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிளம்பியாச்சு!….. சூர்யா குடும்பத்தினருடன்…. எங்கே தெரியுமா?…. வைரல் புகைப்படம்….!!!!

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரை துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்து 2020 ஆம் ஆண்டிற்கான 68வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் சூரியா நடிப்பில் வெளியான சூரரை போற்றும் படத்திற்கு 5 விருதுகளும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும் மண்டேலோ படத்திற்கு இரண்டு விருதுகளும் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து டெல்லியில் இன்று இந்திய குடியரசு தலைவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கார்த்தி செயலால் கண்கலங்கிய சூர்யா”…. இணையத்தில் பரவும் வீடியோ….!!!!!

நடிகர் கார்த்தி குறித்து சூர்யா பேசிய பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகின்றது. தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சிவகுமாரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் இருவரும் தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றார்கள். சூர்யா தற்போது சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் கார்த்தி நடிப்பில் நாளை மறுநாள் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சூர்யாவின் பழைய பேட்டி ஒன்று தற்பொழுது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பத்து மொழிகளில் வெளியாகும் சூர்யா படம்… மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!

சிறுத்தை, வீரம், விசுவாசம், அண்ணாத்த போன்ற பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றார்கள். இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா, பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்க இருக்கின்ற இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரோலக்ஸ் சாரும் ராயப்பனும் வடிவேலால்தான் பெரிய ரவுடியானார்கள்”…. நெட்டிசன்ஸ் பேச்சு….!!!!!

ரோலக்ஸ் சாரும் ராயப்பனும் வடிவேலுவால்தான் பெரிய ரவுடியானார்கள் என கூறி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார் வடிவேலு. மீம்ஸ் என்றாலே வடிவேலுவின் காமெடி இல்லாமல் இருக்காது. இந்த நிலையில் வடிவேலு தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதற்காக ரசிகர்கள் வடிவேலு ஜோக்ஸ் வீடியோ, மீம்ஸ் உள்ளிட்டவற்றை இணையத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் ஒரு மீம்ஸில் ரோலக்ஸ் சாரும் ராயப்பனும் தூங்கிக் கொண்டிருந்த வடிவேலை தூக்கிச் சென்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பான் இந்தியா திரைப்படத்தில் இணைந்த பிருந்தா”… சூர்யா-கார்த்தி சகோதரிக்கு குவியும் வாழ்த்து….!!!!!!

பான் இந்தியா திரைப்படத்தில் சூர்யா-கார்த்தி சகோதரி பிருந்தா இணைந்து இருக்கின்றார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வளம் வருபவர்கள் சூர்யா மற்றும் கார்த்திக். இவர்களின் சகோதரி பிருந்தா. சிவகுமார் மகன்கள் இருவரையும் சினிமா துறைக்கு கொண்டு வந்தார். ஆனால் பிருந்தா படிப்பு, குடும்பம் என செட்டில் ஆன நிலையில் அண்மைக்காலமாக சினிமாவில் அவரை என்ட்ரி கொடுத்துள்ளார். அண்மையில் ஒரு பாடலுக்கு பாடியிருந்தார். இந்த நிலையில் இவர் பான் இந்தியா திரைப்படத்தில் களம் இறங்கி இருப்பதாக இணையத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

10 மொழிகளில் சூர்யா 42….. அதுவும் 3D-யில்….. படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்….!!!!

சூர்யாவின் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சூர்யா 42 என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். சூர்யா மோஷன் போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். சூர்யா 42 ஒரு 3D படமாக இருக்கும் என்று போஸ்டர் தெரிவிக்கிறது. இப்படம் பத்து மொழிகளில் வெளியாகவுள்ளது. கதாநாயகியாக திஷா பதானி நடிக்கிறார். மற்ற நடிகர்கள் பற்றி அறிவிக்கப்படவில்லை. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்கிறார். யுவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி பிரமோத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வந்தியத்தேவா…! அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே…. தம்பியை கிண்டலடித்த சூர்யா….!!!!

சூர்யா ர் சினிமா திரையுலகில் அறிமுகமாகி 25 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தனது 25-வது ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடி வருகிறார். இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நடிகர் கார்த்தி, சூர்யா குறித்து தனது இணைய பக்கத்தில், “அவர் தனது ஒவ்வொரு மைனஸையும் பிளஸ்ஸாக மாற்ற இரவும் பகலும் உழைத்தார். அவர் தன் சொந்த சாதனையை விஞ்சுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஒரு நபராக, அவர் ஏற்கனவே தாராளமான இதயத்தை இன்னும் பெரிதாக்கினார் மற்றும் ஆயிரக்கணக்கான தகுதியான குழந்தைகளின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யாவின் 25 வருட திரைப்பயணம்”….. பெருமிதமாக கார்த்தி ட்விட்….!!!!!!

சூர்யா திரைத்துறைக்கு வந்து 25 வருடங்களானதையொட்டி தம்பி நடிகர் கார்த்திக் ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக படம் வருகின்றார் சூர்யா. இவர் பல வெற்றி திரைப்படங்களை தந்தாலும் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தார். பின் சூரரைப்போற்று திரைப்படம் அவரை வெற்றிப் பாதைக்கு திருப்பியது. தற்பொழுது சூர்யா பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்திலும் சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார். இந்த நிலையில் திரைத்துறையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யாவின் வணங்கான், வாடிவாசலில் இருக்கும் ஒற்றுமை”… என்ன தெரியுமா…? எதிர்பார்ப்பில் ரசிகாஸ்.‌‌…..!!!!!

வணங்கான் மற்றும் வாடிவாசல் திரைப்படங்களில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கின்றார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக படம் வருகின்றார் சூர்யா. இவர் பல வெற்றி திரைப்படங்களை தந்தாலும் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தார். பின் சூரரைப்போற்று திரைப்படம் அவரை வெற்றிப் பாதைக்கு திருப்பியது. தற்பொழுது சூர்யா பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்திலும் சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார். இந்நிலையில் தற்பொழுது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல்”…. படப்பிடிப்பு எப்போது தெரியுமா….? வெளியான தகவல்…!!!!!!!

சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் ஜல்லிக்கட்டு போல செட் அமைத்து ஷூட்டிங் நடைபெற்றதில் சூர்யா, வெற்றிமாறன், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது விரைவில் ஆரம்பமாகும் என சொல்லப்பட்ட நிலையில் தற்பொழுது டிசம்பர் மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. சூர்யா தற்பொழுது வணங்கான், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகரின் மனைவிக்காக சூர்யா செய்த செயல் … நெகிழ்ந்து போன ரசிகர்கள்….!!!!

நடிகர் சூர்யா, நடிப்பது மட்டுமல்லாமல் ‘அகரம்’ என்ற அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் மூலம் பல ஏழை எளிய மாணவர்களின் கல்வி செலவை ஏற்று உதவி செய்துள்ளார். இந்நிலையில் சூர்யா ரசிகர் மன்றத்தின் மதுரை மாவட்ட செயலாளர் மனோஜின் மனைவி தீபிகா தனது மேற்படிப்பிற்காக ‘அகரம்’ அறக்கட்டளையின் மூலம் அயர்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சூர்யா தொலைபேசி வாயிலாக தீபிகாவிற்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பினார். அதில், “தொழிலும் முக்கியம். அதே நேரம் குடும்ப சந்தோஷமும் முக்கியம். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யா 42” படம் குறித்து ட்விட் செய்த சூர்யா….. முதல் ஆளாக வந்து விஜய் ரசிகர்கள் செய்த காரியம்….!!!!!!

சூர்யா 42 படம் குறித்து சூர்யா செய்த ட்விட்டர் பதிவிற்கு விஜய் ரசிகர்கள் செய்த காரியம் அனைவரையும் ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவரின் 42 வது படத்தில் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே பேசப்பட்டு வந்தது. அதன்படி சூர்யா 42 படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிறுத்தை சிவா இயக்கும் “சூர்யா 42″…. துவங்கிய படப்பிடிப்பு….!!!!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 42வது திரைப்படத்தின் படப்பிடிப்பானது இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவரின் 42 வது படத்தில் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே பேசப்பட்டு வந்தது. அதன்படி சூர்யா 42 படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை ஞானவேல் ராஜா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கமலால் கண் கலங்கிய சூர்யா”…. பேட்டியில் கூறிய லோகேஷ் கனகராஜ்…!!!!!

கமல் செய்த காரியத்தால் சூர்யா பீல் பண்ணி கண் கலங்கியதாக பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்தது. […]

Categories
சினிமா

வாவ்!…. சூர்யாவின் 42 படம்….. இவர்தான் நடிகை….. வெளியான வேற லெவல் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவரின் 42 வது படத்தில் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் அதனை உறுதி செய்யக்கூடிய வகையில் பல தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி சூர்யா 42 படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். அதனைத் […]

Categories
சினிமா

“சூர்யாவின் திரைப்படங்களில் எனக்கு அந்த திரைப்படம் தான் மிகவும் பிடிக்கும்”…. பேட்டியில் கூறிய கார்த்தி….!!!!!!!

சூர்யாவின் திரைப்படங்களில் தனக்கும் மிகவும் பிடித்த திரைப்படம் குறித்து கார்த்தி பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் கார்த்தி. இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை என தொடர் வெற்றி திரைப்படங்களை கொடுத்து பிரபல முன்னணி நடிகராக மாறினார். இடையில் சில சருக்கல்களை சந்தித்தாலும் மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பினார். இதைத்தொடர்ந்து தோழா, தீரன்,கைதி என வெற்றி திரைப்படங்களை கொடுத்தார். இவர் நடிப்பில் அண்மையில் விருமன் திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யாவின் அடுத்த திரைப்படத்தின் கதை இதுதான் போல….?” இணையத்தில் லீக்…!!!!!

சூர்யா மற்றும் சிவா இணையும் திரைப்படத்தின் கதை இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் 5 நிமிடங்களில் நடித்திருந்த சூர்யாவை ரசிகர்கள் கொண்டாடினர். இவர் தற்போது பாலா இயக்கத்தில் படம் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், ஞானவேல் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யாவின் அடுத்த பட அப்டேட்”…. வெளியான படப்பிடிப்பு தேதி…!!!!!

சூர்யா மற்றும் சிவா இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்குகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் 5 நிமிடங்களில் நடித்திருந்த சூர்யாவை ரசிகர்கள் கொண்டாடினர். இவர் தற்போது பாலா இயக்கத்தில் படம் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், ஞானவேல் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிக்க […]

Categories
சினிமா

சூர்யாவின் அடுத்த படத்தில் இவர் தான் இயக்குனர்…. வெளியான மாஸ் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ். தானு தயாரிப்பில் உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் சூரியா நடிக்கவுள்ளார். சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாள் அன்று படத்திற்காக தன்னை தயார் படுத்திக் கொள்ள, மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜெய் பீம் படத்தைதொடர்ந்து மீண்டும் உண்மைச் சம்பவம்”…. இயக்கவுள்ள ஞானவேல்….!!!!!

இயக்குனர் ஞானவேல் ஜெய் பீம் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் உண்மை சம்பவத்தை படமாக்க இருக்கின்றாராம் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகனாக வலம் வருகின்றார் சூர்யா. தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா என்டர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இத்திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தை பார்த்த பலரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்தார்கள். இந்த நிலையில் ஞானவேல் ஜெய் பீம் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் உண்மை சம்பவத்தை கொண்டு “தோசா கிங்” என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தேசிய விருது பெற்ற சூர்யா”…. ட்விட்டரில் பாராட்டி ரஜினி வாழ்த்து…!!!!!

தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யாவுக்கு ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்துக்களை கூறியுள்ளார். 68 ஆவது தேசிய விருதுகள் ஜூலை 22ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூர்யாவுக்கு கிடைக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் சூர்யாவுக்கு கிடைத்திருக்கின்றது. மேலும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அபர்ணா பாலமுருளிக்கு சூரரைப் போற்று திரைப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தட்டிச் சென்ற சூர்யா”…. 5 விருதுகளை குவித்த சூரரைப் போற்று….!!!!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூரரை போற்று திரைப்படத்தில் நடித்த சூர்யாவுக்கு கிடைத்துள்ளது. 68 ஆவது தேசிய விருதுகள் ஜூலை 22ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூர்யாவுக்கு கிடைக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் சூர்யாவுக்கு கிடைத்திருக்கின்றது. மேலும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அபர்ணா பாலமுருளிக்கு சூரரைப் போற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய், அஜித், விக்கி, சூர்யா உள்ளிட்டோரிடையே உள்ள ஒற்றுமை….!!!!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்டோர் இடையே ஒற்றுமை உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இத் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். தனது அண்ணன் கமல் மீது கொண்ட அன்பால் படத்தில் நடித்ததற்கு அவர் சம்பளம் எதுவும் பெறவில்லை. ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான திரைப்படம் இங்கிலீஷ் விங்கிலீஷ். இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் அஜித்குமார் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தில் நடித்ததற்காக அஜித்குமார் எந்த சம்பளமும் வாங்கவில்லை. […]

Categories

Tech |