பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதிகளை நால்கே என்னும் பயங்கர புயல் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் வருடந்தோறும் குறைந்தபட்சம் 20 புயல்கள் மற்றும் சூறாவளிகள் ஏற்பட்டு நாட்டை புரட்டி போடுகின்றன. இதில் பொதுமக்கள், கால்நடைகள் உயிரிழப்பதோடு வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் பண்ணைகளும் சேதமடைந்திருக்கின்றன. இந்நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக பூமி வெப்பமடைந்து அந்நாட்டை அதிகமான புயல்கள் தாக்கி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். தெற்கு பகுதியில் இருக்கும் மாகாணங்களில் நால்கே உருவான புயல் பல மாகாணங்களை […]
Tag: சூறாவளி
வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த சிட்ரங் புயல் நேற்று மாலை கரையை அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து புயல் கரையை தொட்டதும் வலு விழுந்தது. இதன்பின் சிட்டகம் மற்றும் பரிசால் கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் சூறாவளிப்புயல் கரையை கடந்துள்ளது. சூறாவளி புயலால் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது என அந்த நாட்டு வானிலை ஆய்வு மைய தலைவர் அபுல் கலாம் மாலிக் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் புயலால் கன […]
மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இன்று முதல் அக்டோபர் 7 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அடுத்த […]
மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதால், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமாக மழை பெய்யலாம். மேலும் நாளை முதல் ஆறாம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, […]
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கேயா கோஸ்டா எனும் கடற்கரை பகுதி அருகே ஐயான் சூறாவளி புயல் நேற்று மதியம் கரையை கடந்துள்ளது. இதனால் மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி நிலவரப்படி இந்த சூறாவளி வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்றுள்ளது. அப்போது அதன் வேகம் மணிக்கு 75 மைல்களாக குறைந்து ஒன்றாம் பிரிவில் வகைப்படுத்தப்பட்டது. அயர்லாந்து மற்றும் கேப் கேனவெரல் பகுதிக்கு […]
அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த பியோனா புயல் கனடா நோக்கி நகர்ந்துள்ளது. இதனை அடுத்து கன்னட வரலாற்றில் மிகவும் கடுமையான புயல்களில் ஒன்றாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சூழலில் தற்போது கனடாவை தாக்கி இருக்கும் பியோனா புயலால் நோவாஸ் கோடியா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான வீடுகள் இருந்து […]
கனடா நாட்டில் கடும் சூறாவளி புயலில் சிக்கி எட்டு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் கியூபெக், ஒன்றாரியோ ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் கடும் சூறாவளி புயல் ஏற்பட்டது. இதில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 132 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியிருக்கிறது. இதனால் மின் கம்பங்களும், மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மேலும், இதில் சிக்கி 8 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருட்டோ […]
அடுத்தடுத்து வீசிய மூன்று சூறாவளியால் அமெரிக்காவில் உள்ள 2 மாகாணங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. அமெரிக்கா நாட்டில் அலபாமா லூசியானா மற்றும் மிசிசிபி என்ற மாகாணங்கள் அமைந்துள்ளன. இந்த மாகாணத்தில் திடீரென சூறாவளி மற்றும் புயல் காற்று வீசியதால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. மேலும் மத்திய அலபாமா பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று சூறாவளிகள் தாக்கியதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனையடுத்து சூறாவளி காற்றில் சிக்கிய […]
அமெரிக்காவின் அயோவா மாகாணத்திலுள்ள மேடிசன் கவுன்ட்டி பகுதியில் பயங்கர சூறாவளி காற்று தாக்கியுள்ளது. இதனால் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர். பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். தற்போது அங்கு மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முடிந்த பிறகே இறந்தவர்கள் குறித்த தகவல்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் உள்ள அயோவா என்னும் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில் குழந்தைகள் உட்பட 6 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள அயோவா மாகாணத்தின் மேடிசன் கவுண்டி என்னும் பகுதியில் மிகப்பெரிய சூறாவளி உருவானது. இதன் தாக்கத்தால், பல குடியிருப்புகள் சேதமடைந்ததோடு குழந்தைகள் உட்பட 6 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சூறாவளி கடந்து சென்ற பின் பாதிப்படைந்த பகுதிகளில், மீட்பு குழுவினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக […]
மடகாஸ்கர் நாட்டில் சூறாவளி உருவாகி ஒரே நாளில் 20 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மடகாஸ்கரின் வடக்கு பகுதியில் இருக்கும் மனன்ஜாரி என்ற நகரத்திலிருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தூரத்தில் கடந்த சனிக்கிழமை அன்று பத்சிராய் என்னும் சூறாவளி ஏற்பட்டுள்ளது. மேலும் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதியை நோக்கி இந்த சூறாவளி கடந்ததை தொடர்ந்து, அந்நகரில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும், சூறாவளியில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பலத்த மழை, நிலச்சரிவு ஏற்பட்டதோடு […]
சூறாவளியினால் மாகாண நீதிபதி உயிரிழந்துவிட்டார் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் தொடர்ச்சியான சூறாவளிகளால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது . அதிலும் முப்பது சூறாவளிகளால் அங்குள்ள அர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டகி, மிஸ்சிசிப்பி, மிசோரி மற்றும் டென்னஸ்சி ஆகிய ஆறு மாகாணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் கென்டகி மாகாணத்தில் உள்ள மெழுகுவர்த்தி ஆலையானது பெரும் சேதமடைந்துள்ளது. அதிலிருந்த 110 பேரில் 50க்கும் மேலானோர் கென்டகி மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். குறிப்பாக இந்த சூறாவளியினால் 70 முதல் […]
அமெரிக்காவில் 30-க்கும் மேற்பட்ட சூறாவளிகள் தொடர்ந்து தாக்கியதில் 100 பேர் இறந்துள்ளனர் என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்க நாட்டின் தென்மேற்கு கென்டகி பகுதியில் பல்வேறு சூறாவளிகள் தொடர்ந்து தாக்கி வருகிறது. இதில் 30 சூறாவளி புயல்கள் அந்நாட்டின் அர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டகி, மிஸ்சிசிப்பி, மிசோரி மற்றும் டென்னஸ்சி போன்ற 6 மாகாணங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அதிலும் குறிப்பாக கென்டகியில் உள்ள மெழுகுவர்த்தி ஆலை ஒன்று புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த ஆலையில் 110 நபர்கள் இருந்து […]
அமெரிக்காவில் கென்டகி பகுதியில் அடுத்தடுத்து சூறாவளி தாக்கியதில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் கடுமையான சூறாவளி புயல் தாக்கியது. இதனால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. ஆயிரக்கணக்கான வீடுகளின் கூரைகள் பறந்து விட்டன. சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகலால் 100 பேர் வரை இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆர்கன்சாஸ் மருத்துவமனையின் கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 20 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். […]
அமெரிக்காவின் தென்பகுதியில் அமைந்துள்ளது கென்டகி மாகாணம். இந்த மாகாணத்தில் அடுத்தடுத்து நான்கு முறை பயங்கர சூறாவளி காற்று தாக்கியதால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த சூறாவளி தாக்குதலில் 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி வந்தது. இந்த நிலையில் கென்டகி பகுதியில் சூறாவளி தொடர்ந்து தாக்கியதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. மேலும் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
துருக்கியிலுள்ள இஸ்தான்புல் மார்மரா என்னும் கடல்பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் அங்கிருந்த சரக்கு கப்பல்கள் சீர் குழைந்துள்ளது. துருக்கியில் 60 நிமிடத்திற்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியுள்ளது. அந்த சூறாவளி காற்றால் மிகப் பெரிய இரும்புத் தகடு ஒன்று அருகிலிருந்த முதியவர் தலையில் விழ சென்றுள்ளது. ஆனால் அந்த முதியவர் தன்னுடைய தலையில் விழ விருந்த இரும்புத் தகட்டிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அதேபோல் இஸ்தான்புல் மார்மரா கடல் பகுதியிலும் சூறாவளி காற்று வீசியுள்ளது. […]
துருக்கியில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததில் 4 பேர் பலியானதுடன் அதிக சேதம் ஏற்பட்டிருக்கிறது. துருக்கி நாட்டில் இருக்கும் இஸ்தான்புல் என்ற நகரத்தின் பல பகுதிகளில் சூறாவளி காற்று வீசியதோடு பலத்த மழை பெய்திருக்கிறது. இதில், கடல்கா மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு 129 கிலோ மீட்டர் வேகத்தில், பலத்த காற்று வீசியதில் மிக பிரம்மாண்டமான மணிக்கூண்டு இடிந்து விழுந்துவிட்டது. நல்லவேளையாக, அந்த மணிக்கூண்டு அருகில் எந்த நபர்களும் இல்லாததால் பாதிப்புகள் இல்லை. மேலும், புயல் […]
மீனவர்கள் அடுத்த 3 தினங்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. இன்று குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்கிழக்கு, அரபிக்கடல், கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி […]
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை சென்னை அருகே கரையை கடந்தது. கரையை கடந்தாலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து சில மணி நேரம் நீடிக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வடதமிழக கடலோரம் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் […]
போலந்து நாட்டில் சூறாவளி தாக்கியதில் 900-த்திற்கும் அதிகமான கட்டிடங்கள் பாதிப்படைந்ததோடு 4 பேர் உயிரிழந்துள்ளனர். போலந்து நாட்டின் மேற்குப் பகுதியிலும் மத்திய பகுதிகளிலும் சூறைக் காற்று பலமாக வீசியிருக்கிறது. இதில் அதிகமான மரங்கள் சாலைகளில் சாய்ந்துவிட்டது. இதனால் போக்குவரத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் தலைநகரான வார்சாவில் ஒரு வாகனத்தின் மேல் மரம் சாய்ந்ததில், வாகனத்திலிருந்த இரண்டு நபர்கள் பலியாகியுள்ளனர். மேலும், இந்த சூறாவளி ஏற்பட்டதில் மொத்தமாக 4 நபர்கள் மரணமடைந்ததோடு, 18 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
மெக்சிகோவில் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் கனமழையுடன் வீசிய காற்றினால் 8 பேர் உயிரிழந்ததோடு மட்டுமின்றி பலரும் படுகாயமடைந்துள்ளார்கள். மெக்சிகோவில் வெராகூரூஸ் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் கிரேஸ் என்னும் சூறாவளி புயல் மிகுந்த கன மழையுடன் வீசியுள்ளது. இவ்வாறு பெய்த கன மழையினால் வெராகூரூஸ் மாவட்டம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி அந்நாட்டிலுள்ள பல இடங்களில் மழை நீரும் தேங்கியுள்ளது. மேலும் இந்த கிரேஸ் […]
ஜப்பானில் ஏற்பட்ட சூறாவளியினால் கனமழை பெய்து நகரம் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் தென்மேற்கு பகுதியில் க்யூஷூ நகரம் அமைந்துள்ளது. இந்த நகரை சூறாவளி தாக்கியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூறாவளிக்கு லுபிட் என்று பெயர் வைத்துள்ளனர். இதனால் அங்கு கனமழை பெய்து நகரம் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதனை அடுத்து சூறாவளி காற்றானது மணிக்கு 125 கிலோ மீட்டரில் வேகத்தில் வீசியுள்ளது. மேலும் மழை பொழிவானது 300 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. இந்த […]
சீனாவின் கிழக்குப் பகுதி மற்றும் மத்திய பகுதிகளில் வீசிய சூறாவளியால் 12 நபர்கள் பலியானதோடு 400க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் கிழக்குப்பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் இருக்கும் சுஜோ என்ற நகரத்தில் நேற்று இரவில் சுமார் ஏழு மணிக்கு சூறாவளி வீசியத்தில் நான்கு நபர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 149 நபர்கள் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மத்திய சீனாவின் வூகான் நகரத்தில் இருக்கும் இரண்டு மாவட்டங்களிலும் மற்றொரு சூறாவளி வீசியுள்ளது. இதில் 8 நபர்கள் பலியானதோடு 280 […]
அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் அச்சத்தில் உள்ள மக்கள் தற்பொழுது ஹன்னா புயலால் பெரிதும் பீதியில் உறைந்து உள்ளனர். தொடர்ந்து நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் புயலின் வருகையையும் உறுதி செய்துள்ளனர். சனிக்கிழமை காலை டெக்சாசின் தெற்கே சுழன்று அடித்த புயலால் கோர்பஸ் கிறிஸ்டி பகுதிகளில் பலத்த காற்றும் மழையும் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை தொடங்கிய புயல் டெக்சாஸ் கடற் பகுதியை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. […]
அமெரிக்காவின் டென்னிசி (Tennessee) பகுதியில் சூறாவளி தாக்கியதில் கடுமையான சேதமடைந்த இடங்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அமெரிக்காவின் டென்னிசி பகுதியில் கடந்த 3 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அடுத்தடுத்து வேகமாக சூறாவளி தாக்கியது. மிக வேகமாக சுழன்று அடித்த சூறாவளியால் டென்னிசி பகுதி நிலைகுலைந்து சின்னாபின்னாமாக தற்போது காட்சியளிக்கிறது. இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். அங்கு இருந்த ஏராளமான வீடுகளின் கூரைகள் சூறாவளியின் தாக்கத்தால் பிய்த்து எறியப்பட்டு கிடக்கின்றன. இதனால் மக்கள் […]