செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி விடுதி உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 150 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதியில் இரவு உணவாக பிரியாணி சாப்பிட்டு உறங்கச் சென்ற மாணவர்களில் பலருக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.
Tag: செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் லெனின், நரேஷ் பாபு, மேத்யூ ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களின் மீது அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. இவர்கள் 3 பேருக்கும் எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேத்யூவின் நண்பரான சூர்யாவை லெனின் திடீரென படுகொலை செய்துள்ளார். இதனால் புதிதாக 3 பேருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேத்யூ தன்னுடைய நண்பரின் […]
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் கேளம்பாக்கம் பகுதியில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் வந்திருந்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும், சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தது. இருப்பினும் திருவிழாவிற்கு வந்திருந்த எட்டு பேரிடம் நகை பறிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே நடந்திருந்தால் சில மணி நேரத்துக்கு பிறகு தான் அவர்களுடைய கழுத்தில் இருந்த செயின் மாயமாய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை தொடர்ந்து எட்டு பெரும் […]
வாலிபர் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த பரதபுரம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் கண்ணா (22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் டாடா மேஜிக் வாகனம் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இவருடைய வீட்டின் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு இரவு நேர காவலாக ராஜேஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் கார்த்திக் மற்றும் ஆல்பர்ட் ஆகியோர் […]
ஓட்டுநர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் அருகே செம்மஞ்சேரி பகுதியில் விக்கி (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து கிளம்பிய விக்கி மற்றும் அவருடைய நண்பர் சாமுவேல் ஆகியோரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். […]
மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள போந்தூர் பகுதியில் மண்ணாங்கட்டி என்ற ராஜமாணிக்கம் (62) வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு குழந்தைகள் இல்லாததால் மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு மண்ணாங்கட்டி 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக சித்தாமூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மண்ணாங்கட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மண்ணாங்கட்டி மீதான வழக்கு […]
தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பல லட்சம் மக்கள்,ரேஷன் அட்டை மூலம் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசியை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளன. ஆனால் ரேஷன் அரிசி, தற்போது தரமற்ற முறையில் விநியோகிப்பதாக பல மாவட்டங்களில் இருந்து புகார்கள் வந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 800 ரேஷன் கடைகள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 645 ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிபாக்கம் பகுதியில் […]
ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு, புதிய திட்டம் ஒன்று சோதனையில் இருப்பதாக தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை பணிகள் தொடர்பாக, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டமானது நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார். மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் […]
கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த கணவன்-மனைவி இருவரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பகுதியில் சதீஷ்குமார்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலதிபரான இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சதீஷ்குமாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடல் தொல்லையால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் மனமுடைந்த கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவருக்கும் மாம்பலம் ரெயில் […]
கொடுமை செய்த மாமியாரை மருமகள் உறவினர்களை வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பஜாரில் அடகு கடை நடத்தி வரும் பத்தேசந்த் என்பவருக்கு பிரேமா என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் முதல் 2 மகன்கள் சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில் மூன்றாவது மற்றும் நான்காவது மகன்கள் தந்தையுடன் அடகு கடையில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் மூன்றாவது மகன் பிண்டு குமார் (44) என்பவருக்கு பீகாரை சேர்ந்த […]
பொய்கைக் குளத்தில் வாலிபரின் சடலத்தை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொய்கைக் குளத்தில் வாலிபரின் சடலம் மிதந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி விரைந்து சென்று காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் வீரர்களின் உதவியுடன் வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து அந்த வாலிபரின் இடது கையில் கன்னியப்பன் என்றும், வலது கையில் மீன் முத்திரையும் […]
தாலுகா அலுவலகம் கட்டுவதற்காக அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் செங்கல்பட்டு மாவட்டம் உதயமானது. தற்போது வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் உள்ள சமுதாய கூடத்தில் தான் தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது. இதனை அடுத்து வண்டலூர் பகுதியில் உள்ள பாபா கோயிலுக்கு அருகே இருக்கும் 1 ஏக்கர் 34 சென்ட் நிலம் தமிழக அரசிற்கு சொந்தமானதாகும். இந்த நிலத்தில் தாலுகா அலுவலகம் கட்டுவதற்காக 3 கோடியே 75 லட்சம் […]
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் பழுதடைந்ததாக்க கூறி 500க்கும் மேற்பட்ட பழைய, புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஓரம் கட்டப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பழுதடைந்ததாக்கக்கூறி 500க்கும் மேற்பட்ட பழைய மற்றும் புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் பல மாதங்களாக தொடர்ந்து ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட மருத்துவமனைகளில் பயன்படுத்திய மற்றும் பயன்படுத்தப்படாத புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வீணாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் நிர்வாகிகளுடன் கேட்ட […]
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் திமுக 5 முறையும், அதிமுக 4 முறையும் வென்றுள்ளன. பாமக 2 முறையும் தேமுதிக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதைய எம்எல்ஏ திமுகவின் வரலட்சுமி. செங்கல்பட்டு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4,26,535 ஆகும். பாதாளசாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என்ற அரசு அரசின் அறிவிப்பு பல ஆண்டுகளாக வெற்று அறிவிப்பாகவே உள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை தேவை என்பது மக்களின் வேண்டுகோளாக உள்ளது. […]
திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக 6 முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதய எம்.எல்.ஏ திமுகவின் இதயவர்மன். திருப்போரூர் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,93,251 ஆகும். மாமல்லபுரத்தில் படகுகளை நிறுத்துவதற்காக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது மீனவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டும் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை என்ற […]
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 4 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 6 முறையும், அதிமுக 5 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர். தற்போதய எம்.எல்.ஏ திமுகவின் புகழேந்தி. மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,26,3463 ஆகும். மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்தி தூர்வார வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதி என்பதால் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற […]
மதுபோதையில் தம்பியின் மனைவியை கத்தியால் தாக்கியவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடுகப்பட்டு கிராமத்தில் வீரராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா. இவருக்கு கோதண்டம் என்னும் அண்ணன் உள்ளார். அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே பல நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கோதண்டம் மதுபோதையில் தம்பியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டின் வாசல் முன் நின்று வீரராகவனை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். […]
தனியார் பேருந்து ஒன்று சைக்கிள் மீது மோதியதில் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூர் கிராமம் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வந்தார். ஜெயக்குமார் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஒரகடம் வாலாஜாபாத் பகுதியில் தனது வேலையை முடித்து விட்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் ஜெயகுமார் சைக்கிளின் பின் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் […]
மனைவியை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி சென்ற டாக்டர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் பகுதியில் முரஹரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா என்ற ஒரு மகள் உள்ளார். அவர் தனியார் கல்லூரி ஒன்றில் மேல்மருவத்தூரில் பணியாற்றி வந்தார். கீர்த்தனாவிற்கு சென்ற 3 வருடங்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த கோகுல்குமார் என்ற டாக்டருடன் திருமணம் நடைபெற்றது. அதன்பின் அவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லை. மேலும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட […]
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியில் 11வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை மகளிர் காவல் துறையினர் கையும், களவுமாக கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதிகளில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவர் வசித்து வரும் வீட்டின் எதிரே உள்ள வீட்டில் 11 வயது சிறுமி இருந்துள்ளார். அந்த சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடுவது வழக்கம். அப்போது காமுகன் ஸ்ரீதர் சிறுமியிடம் நைசாக பேசுவது போல பழகி, சிறுமியிடம் தவறாக நடந்து, சிறுமிக்கு பாலியல் […]
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கண்டெய்னர் வேன் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரியை சேர்ந்த சிலர் சென்னையில் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையை நோக்கி ஒரே காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து கன்டெய்னர் வேன் ஒன்று புதுச்சேரி நோக்கி சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த செந்தில், முருகன், ஜெயபாலன் ஆகியோர் சம்பவ […]
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 1,43,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த திருக்கழுக்குன்றத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத 1,43,330 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று மாலை முதல் இரவு 10 மணி வரை நீடித்த இந்த சோதனையில் பல இடங்களில் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையின்போது தப்பியோட […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் திரு. சண்முகம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 19 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 ஆயிரத்து 24 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதிப்பு உள்ள பகுதிகளில் பரவலை கட்டுப்படுத்த தீவிர […]