தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இளம்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் (வயது 27) ஒருவர் செங்கல்பட்டில் இருக்கும் ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வருகின்றார்.. தற்போது கொரோனா தாக்கம் காரணமாக பொதுமுடக்கம் மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதையடுத்து லாரியில் கடந்த 5ஆம்தேதி சொந்த ஊரான இளம்புவனத்திற்கு வந்துள்ளார்.. இவர் சொந்த ஊர் திரும்பிய தகவலறிந்த வருவாய் துறையினர் மற்றும் சுகாதாரத் […]
Tag: செங்கல்பட்டு
செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 284 ஆக உயர்ந்துள்ளது. அதில் 35 ஆண்கள், 25 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் காய்கறி வியாபாரிகள் என தகவல் வெளியாகியுள்ளது. 80க்கும் மேற்பட்டவர்கள் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது. கோயம்பேடு சென்று திரும்பிய நபர்கள் […]
செங்கல்பட்டில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒற்றை இலக்கில் கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் கோயம்பேடு சந்தை தொடர்புடைய பலருக்கும் தொற்று உறுதியாகிக்கொண்டு இருப்பதால் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு கூடுதலாக அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு காய்கறி சந்தையோடு தொடர்புடையவர்கள். கோயம்பேடு சந்தைக்கு சென்று காய்கறி வாங்கி வந்தவர்கள், ஓட்டுநர்கள் என ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் […]
செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 30 காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காய்கறி வியாபாரிகள் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து காய்கறி வியாபாரிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கவும், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ பரிசோதனையில் செய்து கொண்ட 5 காய்கறி வியாபாரிகள் மாயமடைந்துள்ளனர். நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 184 […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை செங்கல்பட்டில் 158 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும், இதுவரை 49 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்திலும் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியாகியுள்ளது. கொரோனா பதித்த 8 பேரும் கோயம்படு காய்கறி […]
திருவள்ளூர் மாவட்டத்தில் 59 பேருக்கும், செங்கல்பட்டில் 13 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 4 பேருக்கும் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 59 பேரில் பெரும்பான்மையானர்கள் கோயம்பேடு உடன் தொடர்புடையர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 129 ஆக இருந்த பாதிப்பு தற்போது, 188 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று வரை 50 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல செங்கப்பட்டில் மேலும் 13 […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் கொரோனா வேகம் எடுக்கும் நிலையில் அருகே உள்ள மாவட்டத்திலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நசரத்புரத்தில் 18 பேர், மதுராந்தகத்தில் 5 பேர், நந்திவரத்தில் 4 பேர் கொரோனாவால் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, பம்மலில் 3 பேர், திருநீர்மலையில் 2 பேர் ரங்கநாதபுரத்தில் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதவிர, கிழக்கு தாம்பரத்தில் 2 பேர், […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 121 பேர் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இன்றைக்கு 121 நபர்களுக்கு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. 1937ஆக நேற்று வரை இருந்த எண்ணிக்கை, இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 2058 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 103 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். செங்கல்பட்டில் 12 நபர்களுக்கும், நாமக்கல்லில் 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சியில் […]
செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 26ம் தேதி காலை 6 மணி முதல் 29ம் தேதி இரவு 9 மணி வரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு […]
ஊரடங்கு உத்தரவால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து மீனவர்கள் தவிக்கின்றனர். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக ஏற்கனவே மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இழப்பை சந்தித்து வரும் நிலையில், தற்போது மீன்பிடி தடைக்காலமும் அமல்படுத்தப்பட்டுள்ளதால் சுமார் பத்து லட்சம் மீனவர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் கடலோரப் பகுதியான கானத்தூர், ரெட்டி குப்பம் மீனவர்கள் கூறுவதாவது; கொரோனா வைரஸினால் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், மீனவர் சமுதாயம் மிகுந்த வருத்தற்குரிய விஷியமாக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் […]
தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 124ஆக உயர்ந்துள்ளது. இதனால் பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நேற்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். […]
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவை தொடங்கியது. அதில், கொரோனா பாதித்த 3 பேரின் தற்போதைய நிலை என்ன? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கொரோனாவிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.60 கோடி நிதி போதாது, ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக 5 முறை அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். […]
செங்கல்பட்டில் காதலிக்காததால் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிடுவதாக மிரட்டிய இளைஞனால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் மாமல்லபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் அக்கா மகள் மோனிஷா. 22 வயதுடைய இவர் அரசு கல்லூரியில் படித்து வருகின்றார். மோனிஷாவின் பெற்றோர் இறந்து விட்டதால் தனது தாய் மாமா சரவணன் வீட்டில் தான் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் மோனிஷாவை அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞன் ஒரு […]
சொகுசு பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.. செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் அருகே கனரக லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்தில் 2 பேர் பலியாகினர். சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சசாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து 45 பயணிகளுடன் தூத்துக்குடிக்கு புறப்பட்ட சொகுசு பேருந்து, படாலம் அடுத்த அத்தினம்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த […]