Categories
அரசியல்

எல்லாத்துக்கும் பொய் சொல்லியே…. மக்களை ஏமாற்றுகிறார்கள்…. மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு…!!!

கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட ஊராட்சி குழு 8வது வார்டு உறுப்பினர் பதவிக்காக அதிமுக சார்பில் போட்டியிடும் முத்துக்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, “திமுக அரசானது தேர்தலில் கூறிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மேலும் இதற்கு அவர்கள் பொய்யான காரணங்களை கூறி பொது மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். நீட் தேர்வை ஆட்சிக்கு வந்த உடனே ரத்து செய்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டைரியில என் பெயர் இருந்தா…. அதை நிரூபிக்கணும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி…!!

கடந்த 2017ஆம் வருடம் தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித்துறையினர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது முக்கிய ஆவணங்கள், தங்கம், கோடி கோடியாய் பணம் உள்ளிட்டவைகளுடன் அவருடைய டைரி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட 12 பேருக்கு பணம் கொடுத்தது தொடர்பான விவரங்கள் இருந்ததாக தகவல் வெளியானது. எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை ஓபிஎஸ், இபிஎஸ் […]

Categories
மாநில செய்திகள்

வேலை வாங்கி தருவதாக கூறி…. மோசடி செய்த வழக்கில்…. நீதிமன்றம் ஆஜராக உத்தரவு…!!!

வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வழக்கில் புகார்தாரர்களின் வாக்குமூலங்களை வழங்குவதற்காக அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட இரண்டு பேரை நேரில் ஆஜராகும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ் குமார், தேவசகாயம் உள்ளிட்டவர்கள் புகார் அளித்திருந்தனர். […]

Categories
அரசியல்

நம்ம ஊர் அறிவாளி அமைச்சர்…. அணில், பாம்பு கதை சொல்வார்…. அந்த கதையெல்லாம் வேணாம்…!!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் செயல்படவேண்டிய ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்ஆர் விஜயபாஸ்கர், “தற்போது நீட் தேர்வு குறித்து திமுக அரசு பேசுகின்றது. இதனை கொண்டுவந்தது அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும், கூட்டணிக் கட்சியாக இருந்த திமுகவும் தான். அப்போது எதுவுமே செய்யாத திமுக கட்சி இப்போது நீட் தேர்வினை வைத்து அரசியல் செய்கிறது. தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மது விற்பனை….? அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மதுபானங்கள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது இந்த விவாதத்தில் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி கூறுகையில்: “தமிழக அரசு டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கு பரிசீலனை செய்து வருகிறது. கடந்த ஆட்சியில் ஆயிரம் மதுக்கடைகள் குறைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய நேர்ந்தால் ஆண்கள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின்வெட்டு, மின் கட்டணம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் மின்வெட்டு நடைபெறாது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், சாய்ந்த மின் கம்பங்கள், மின்கம்பிகள் போன்றவை சரி செய்ய வேண்டிய நிலையில் இருந்த காரணத்தினால், தமிழகத்தில் அடிக்கடி மின் நிறுத்தம் ஏற்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் இவை அனைத்தும் தற்போது சரி செய்யப்பட்டு விட்டதாகவும், இனி தமிழகம் முழுவதும் மின்வெட்டு நடைபெறாது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் […]

Categories
மாநில செய்திகள்

மின் கட்டணம் 3 மடங்கு உயர்வு… அமைச்சர் உறுதி…!!!

ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் இரண்டு மூன்று மடங்கு அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நான்கு மாதங்களுக்கு கணக்கீடு செய்தால் தான் இந்த கட்டணம் வருவதாக அவர்கள் தெரிவித்தனர். கடந்த மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பின்னர் படிப்படியாக தொற்று குறைந்து வந்த காரணத்தினால் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. மே மாதத்தில் தொற்று அதிகமாக இருந்த காரணத்தினால் மின் ஊழியர்கள், மின்கட்டணம் எடுப்பதற்கு வரவில்லை. நுகர்வோர் மார்ச் மாத கட்டணத்தை […]

Categories
மாநில செய்திகள்

மிஸ்டர் செல்லூர் ராஜு… தங்கமணியிடமோ, உயர் நீதிமன்றத்திடமோ கேளுங்க… செந்தில் பாலாஜி பதிலடி…!!!

என்னை மிஞ்சிய விஞ்ஞானி செந்தில்பாலாஜி என்று அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்ததற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தக்க பதிலடி கொடுத்துள்ளார். மதுரை கோரிப்பாளையத்தில் அதிமுக மாணவரணி உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய செல்லூர் ராஜு அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டிற்கு சென்றிருந்த அணில்கள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு படையெடுத்து வந்து மின்கம்பி மீது ஓடி வருவதை கண்டுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

என்னை மிஞ்சிய விஞ்ஞானி செந்தில் பாலாஜி… அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்…!!!

என்னை மிஞ்சிய விஞ்ஞானி செந்தில்பாலாஜி என்று அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார். மதுரை கோரிப்பாளையத்தில் அதிமுக மாணவரணி உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய செல்லூர் ராஜு அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டிற்கு சென்றிருந்த அணில்கள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு படையெடுத்து வந்து மின்கம்பி மீது ஓடி வருவதை கண்டுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும் தங்களது […]

Categories
மாநில செய்திகள்

உங்க ஏரியாவுல கரண்ட் இல்லனா…. இந்த வாட்ஸ் அப் எண்ணுக்கு…. தகவல் அனுப்புங்க…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என தமிழக […]

Categories
அரசியல்

செந்தில்பாலாஜி-யின் முன் ஜாமின் வழக்கு… தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!!

அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி முன்ஜாமீன் மனு மீதான வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராகவும் உள்ளார். கடந்த, 12ல் கரூர் கலெக்டர் அன்பழகனை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்தார். பின், நிருபர்களிடம் பேசும்போது, கலெக்டரை படித்த முட்டாள் எனவும், இனிமேல் ஆய்வு கூட்டத்துக்கு எங்களை அழைக்கமால் இருந்தால், கலெக்டர் வெளியே நடமாட முடியாது’ எனவும் தெரிவித்தார். இதுகுறித்து தான்தோன்றிமலை போலீசில், கலெக்டர் […]

Categories

Tech |