சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் துறை நடத்தும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான ‘ட்ரான்ஸ்நேசல் எண்டோஸ்கோபிக்’ உடற்கூறியியல் நரம்பியல் அறுவை சிகிச்சை தொடர்பான கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இதில் மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் சாந்தி மலர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்துள்ளார். இதில் மருத்துவமனையின் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உட்பட பலர் கலந்து […]
Tag: சென்னை
தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளர் தி.மு.க வில் நிர்வாக ரீதியாக இருக்கக்கூடிய 23 அணிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தி.மு.க துணை பொது செயலாளர் பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, கருணாநிதி பொன்முடி, ஆ.ராசா போன்றோர் நிர்வாக ரீதியான அணிகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி நடைபெற்ற தி.மு.க அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள்கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் அவரது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் தனது தாயின் செல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தன்னை சிலர் கடத்தி வந்து அடைத்து வைத்திருப்பதாகவும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே விடுவிப்பதாக கூறி மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண்ணின் தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் செல்போன் அழைப்பிற்கு வந்த […]
சென்னை மெரினா கடற்கரையில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசின் 151 மகளிர் உதவி மையத்தின் சார்பாக மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டது. இந்த மணல் சிற்பத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடுவோம்! பெண்களுக்கான இடர் இல்லா சமுதாயத்தை உருவாக்கிடுவோம்! பெண்களின் பாதுகாப்பிற்காக அனைவரும் உறுதி ஏற்போம்! என்னும் பெண்களின் பாதுகாப்பு உறுதிமொழி விழிப்புணர்வு” பதாகையில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, உயர்கல்வித்துறை […]
சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களின் 164 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் இன்றோடு ஐந்தாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்தும், தேர்தல் அறிக்கையில் 311ஐ நிறைவுறுத்த வலியுறுத்தியும 5 நாட்களுக்கு முன்பு டிபிஐ வளாகத்தில் இந்த போராட்டம் தொடங்கியது. 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், இந்த போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். நேற்று அமைச்சர்களுடன் பேச்சு […]
போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 535 பேர் கைது செய்யப்பட்டார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லவன் சாலையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முன்தினம் பல வருடங்களாக வலுவையில் இருக்கும் பண பயன்கள், பஞ்சபடி, பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி, ஓய்வூதியத்தொகை உள்ளிட்டவை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களில் சில அரை நிர்வாணத்தில் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு உடலில் நாமத்தை வரைந்து பிச்சை எடுத்தும் நூதன முறையில் […]
குத்துச்சண்டை போட்டி சாகச நிகழ்ச்சியில் பெட்ரோல் கேன் சாய்ந்து விபத்து ஏற்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயில் இருக்கும் தனியார் உள்விளையாட்டு அரங்கில் குத்துச்சண்டை வீரர்கள் ஒரே மேடையில் போட்டியிடும் நிகழ்ச்சியானது நடந்தது. இந்த போட்டியில் குத்துச்சண்டை வீரர் பாலிஷ் சதீஸ்வரர் என்பவர் இளம் குத்துச்சண்டை வீரர்களுக்கு முன்பாக நெருப்பில் சாகசம் செய்தார். அப்போது எதிரில் இருந்து நெருப்பு பந்து அவர் மீது தூக்கி வீச இதனை அவர் கையால் தடுத்து தீயை அணைக்கும் சாகசத்தில் ஈடுபட்டார். […]
ஆங்கில புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற 1.1.2023 அன்று வரை நாகர்கோவில், மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு தினசரி இயங்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் புதுச்சேரி, ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு தினசரி இயக்கக்கூடிய […]
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்நிலையில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த பரவலானது தற்போது தமிழகத்திற்குள் நுழைந்துள்ளது. இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் சென்னையில் காவல்துறை […]
சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் திருவள்ளூர் தெருவில் ராம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆன்லைன் மூலம் வீடுகளுக்கு உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மாலதி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாலதி தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றதால் ராம்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். […]
பள்ளிக்கல்வித்துறை வளாகத்திலேயே இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து நான்கு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இன்று நான்காவது நாட்களாக போராட்டம் நடத்தி வரக்கூடிய சூழ்நிலையில் இதுவரை 107 ஆசிரியர்கள் தொடர்ந்து மயக்கம் போட்டு இருக்கிறார்கள். அவர்கள் அருகில் இருக்கக்கூடிய பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு பணிக்கு சேர்ந்தவர்களுக்கு ஒரு மாதிரி சம்பளமும், ஒரு மாதம் முன்கூட்டியே சேர்ந்தவர்களுக்கு உயர்வாக சம்பளமும் வழங்கப்படுகிறது. இருவருமே ஒரே வகுப்புகளுக்கு தான் பாடம் […]
ஆவடியை அடுத்த ஆரிக்கம்பேடு தெருவை சேர்ந்த தங்கமணி(60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதி ராம் நகரைச் சேர்ந்த ஹாஜா மொய்தீன்(41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் ஹாஜா மொய்தீன் தன்னிடம் பணத்தை கொடுத்தால் அதனை ஷேர் மார்க்கெட்டில் போட்டு அதன் மூலமாக பணத்தை இரட்டிப்பாகி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய தங்கமணி காஜா மொய்தினிடம் ரூ.54 லட்சத்து 80 ஆயிரத்தை கொடுத்துள்ளார். இது […]
சென்னை மாநகராட்சியில் மாதாந்திர மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணைமேயர் மு மகேஷ் குமார், கமிஷனர் சுகன் தீப் சிங் பேடி போன்றோர் முன்னிலை வகித்தனர். மேலும் நிலை குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கேள்வி நேரமும், கேள்வி இல்லா […]
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக இருக்கும் என்பதால் காவல்துறை பல முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது புத்தாண்டில் அளவுக்கு அதிகமாக போதையில் மிதக்கும் மது பிரியர்கள் வாகனம் ஓட்டுவதால் விபத்து நேரிடும். இதனால் போலீசாரின் அபராத நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதனைத் தவிர்க்க சென்னையில் நட்சத்திர விடுதி மற்றும் நகரின் முக்கிய இடங்களில் க்யூ ஆர் கோடு ஒட்டப்படும். […]
சென்னை தீவு திடலில் இன்று முதல் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கப்படுகிறது. மக்களை கவரும் விதமாக பொழுதுபோக்கு அரங்குகள் இந்த பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து 70 நாட்களுக்கு பொருட்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக சுற்றுலா பொருட்காட்சி நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது சென்னை தீவு திடலில் 47வது சுற்றுலாத்தொழில் பொருட்காட்சி இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக சென்னை தீவுத்திடலில் சுற்றுலா […]
உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு பண்டிகையின் போது கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு விதமான முன்னேற்றத்திற்கு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் 2023-ம் ஆண்டு புத்தாண்டு பண்டிகையின் போது பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர காவல் துறை ஒரு முக்கிய […]
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு 600 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக சென்னையிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்துள்ள நிலையில், சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அதேபோல கிறிஸ்துமஸ்க்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். பிற மாவட்டத்தில் இருந்தும் சென்னைக்கு பல்வேறு பகுதிக்கு வந்துள்ளனர். இந்நிலையில் ஜனவரி […]
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு ரூபாய் 206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது. சி.எம்.பி.டி முதல் மாதவரம் வரை 10.1 கிலோமீட்டர் தூரத்திற்கு இருப்பு பாதை, இதர பணிகள் நடைபெற உள்ளன. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணி 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த 3 வழித்தடங்கள் என்பது மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலும், பூந்தமல்லியில் இருந்து மெரினா கலங்கரை விளக்கம் வரையிலும் 3 […]
சென்னையில் 31ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டமானது மிக விமர்சையாக கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில், சென்னையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் – நிபந்தனைகளை விதித்து தமிழக காவல்துறை மட்டுமல்லாமல், சென்னை காவல்துறை ஆணையர் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என தெரிவித்திருந்த நிலையில், அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அம்பேத்கர் […]
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி பணிகள் துறையானது நகர திட்டமிடல் துறை என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த மாமன்ற கூட்டத்தில் துணை மேயர் எம் மகேஷ் குமார், ஆணையர் சுகன் தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிலையில் இந்த மாமன்ற கூட்டத்தில் 80 தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டு அதில் 79 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி பகுதியில் அமைக்கப்படும் கட்டட அனுமதியானது […]
சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 6-வது தெருவில் சக்திவேல்- துலுக்காணம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இரண்டு பேரும் சென்னை மாநகராட்சி 128 வது வார்டில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தனர். திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கணவன் – மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இவரது வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் இருந்தது. இதனால் அக்கம்பக்கத்தினர் அவர்கள் வெளியே […]
நள்ளிரவு 1 மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளதாக ஹோட்டல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் 80 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளம் அருகே எந்த நிகழ்ச்சியையும் நடத்தக்கூடாது. நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது. ஆம்புலன்ஸ் சேவையோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, சென்னையில் ஒரு நாள் தேவைக்கு தண்ணீர் என்பது ஆயிரம் எம்.எல்.டி தேவை. புதிய திட்டத்தை உண்டாக்க சொன்னார். சென்னைக்கு 50 ஆண்டு காலத்திற்கு தண்ணீர் பஞ்சம் வரக்கூடாது என்று சொல்லி, செம்பரபாக்கம், புழல் , பூண்டி போல இயற்கை ஏரியை உருவாக்க உத்தரவு தந்திருக்கிறார். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. 200 ஏக்கர் அளவில் புதிய ஏரிகளை உருவாக்குகின்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதைவிட கடல் நீரை […]
பத்தாம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் மூன்று ஆண்டுகள் சட்டப் படிப்பு படிக்க தகுதியானவர்கள் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மூன்றாண்டு சட்டப் படிப்பை படிப்பதற்கு பத்தாம் வகுப்புக்கு பிறகு பிளஸ் டூ முடிக்க வேண்டும். அதற்கு பிறகு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்று விதிகள் பார்கவுன்சில் அறிவித்து இருந்தது. ஆனால் பத்தாம் வகுப்புக்கு பிறகு டிப்ளமோ முடித்தவர்களும், பொறியியல் முடித்த பிறகு, பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை நிலவுவதாக […]
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்கினர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்ற சில வருடங்களாக போராட்டம் நடத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள திமுக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றும் என எதிர்பார்த்திருந்த நிலையில் இது தொடர்பான எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் நேற்று முதல் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் பேராசிரியர் அன்பழகன், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் […]
குருவாயூரிலிருந்து சென்னை எழும்பூருக்கு நேற்று குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மர்மநபர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தாம்பரத்தில் உள்ள ரயில்வே போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குருவாயூர் எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரயில் நிலையத்தை வந்தடைந்த உடன் அனைத்து பெட்டிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த டயானா என்ற மோப்பநாய் அழைத்துவரப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் குருவாயூர் […]
சென்னையில் நாம ஒரு திருவிழா நடைபெறும் இடங்களை கனிமொழி எம்பி மற்றும் சந்தீப் நந்தூரி ஐஏஎஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர். சென்னையில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் நம்ம ஊரு திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழா கனிமொழி எம்பி, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள சிவன் பூங்கா, நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா ஆகிய பகுதிகளில் நம்ம ஊரு திருவிழா நடத்துவதற்கான ஆய்வை கனிமொழி […]
சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் மஞ்சுநாதன் என்பவர் குடும்பத்தினருடன் காரில் சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்னகங்கணாங்குப்பம் பகுதியில் சென்ற போது மஞ்சுநாதனின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ரமணா என்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மீது மோதி கவிழ்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த ரமணாவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த […]
சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் பாரதி ஹோம் என்ற கட்டுமான நிறுவனம் புதிதாக கட்டிடம் கட்டி வருகிறது. இங்கு மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அங்குள்ள 8 அடி ஆழ பள்ளத்தில் மழை நீர் தேங்கி நின்றது. இந்நிலையில் மண் சரிந்து விழக்கூடாது என்பதற்காக பள்ளத்தை சுற்றி பலகை பொருத்தும் பணி நடந்தது. அப்போது சரோவர் ஷூசைன் என்ற தொழிலாளி பள்ளத்தில் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். […]
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில் தேவசகாயம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் மூத்த மகளான பிரதீபாவுக்கும், ஜேம்ஸ் என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த பிரதீபா நேற்று முன்தினம் குளியல் அறையில் வழுக்கி விழுந்துவிட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து இருப்பதாகவும் ராணிக்கு ஜேம்ஸ் செல்போனில் தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த […]
துபாயில் இருந்து சென்னைக்கு வந்த 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரேண்டம் முறையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதிய வகை கொரோனாவா, இல்லையா என்பது பற்றி ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. நேற்று சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த 2 பேருக்கு தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
பூவிருந்தமல்லி நசரத்பேட்டை சந்திப்பில் இருந்து நேரு சிலை கார் மோதியதில் சுக்கு நூறாய் உடைந்தது. ஸ்ரீபெரும்புதூர் நோக்கி அதி வேகமாக சென்ற கார் மோதியதில் சிலை உடைந்தது. கார் ஓட்டுனர் ஏழுமலைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் அந்த பகுதியில் கூடுவதால் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செல்போன் வியாபாரிகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திடீர் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாலிக், அப்துல்லா, செல்லா, சித்திக் உள்ளிட்ட நான்கு பேரும் சென்னையில் உள்ள மலையப்பன் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி அங்கிருக்கும் பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் சென்ற 13ஆம் தேதி மர்ம கும்பல் என்.ஐ.ஏ அதிகாரிகள் போல நடித்து இவர்களின் வீடு மற்றும் கடமைகளில் சோதனை மேற்கொண்டு அங்கே இருந்த 30 லட்சத்தை கொள்ளையடித்து சென்று […]
ராட்சத அலையில் சிக்கிய நான்கு தொழிலாளர்கள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஆண்டவர் குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனத்தில் இரும்பு தகடால் ஆன கூடாரம் அமைக்கும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தார்கள். இவர்களில் சுமார் 25 பேர் ராமகிருஷ்ண நகரில் இருக்கும் கடற்கரையை சுற்றி பார்க்க சென்றுள்ளார்கள். இதில் எட்டு பேர் கடலில் இறங்கி குளித்துள்ளார்கள். எட்டு பேரும் அலையில் சிக்கினர். இதில் நான்கு பேர் தப்பித்து கரை வந்தார்கள். […]
ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததால் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னைக்கு நேற்று குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலில் வெடிக்குண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதன் பேரில் ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டார்கள். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்கு பிறகு ரயிலில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். இரவு 07.50 மணி முதல் ஒரு மணி நேரமாக நடந்த சோதனையில் வெடிக்குண்டு எதுவும் இல்லை. […]
சென்னை எழும்பூர் ரயில் நிலைய கட்டிடம் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மிகவும் தொன்மை வாய்ந்த கட்டிடமாகும். இங்கு தினம்தோறும் 120 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 442 புறநகர் ரயில்கள் என 562 ரயில்கள் கையாளப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற ஐந்து ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதன்படி ரூ.734.91 கோடி மதிப்பில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு மணிகள் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் போக்குவரத்து போலீசில் மாரிமுத்து என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். அதே போக்குவரத்து பிரிவு போலீசில் மகாவீரன் என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பிறகு மகாவீரன் போலீஸ் ஜீப்பில் மாரிமுத்துவை அவரது வீட்டில் விடுவதற்காக அழைத்து சென்றுள்ளார். அவர்கள் திருமுல்லைவாயில் கல்லறை நிறுத்தம் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே கிடந்த மரக்கட்டை மீது ஏறி இறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் […]
சொத்து வரி உயர்வு செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்து வரி உயர்வை எதிர்த்து 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் நிராகரிக்கபட்டுள்ளது. மாநகராட்சிகளின் தீர்மானங்கள் செல்லும் என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சொத்து வரி உயர்வை எதிர்த்து வழக்கு தொடுத்த மனுதாரர்களுக்கு 2023 ஏப்ரல் முதல் சொத்துவரி உயர்வை அமல்படுத்தவும் உத்தரவு பிரபிக்கபட்டுள்ளது. மேலும் சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் பெறுவதற்கு வசதியாக மாநகராட்சி இணையதளங்களை மேம்படுத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற 29-ஆம் தேதி சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ள நட்சத்திர விடுதி உரிமையாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தபட உள்ளது. அதேபோல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் பற்றி அறிவுறுத்தப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் […]
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை மழைக்கு வாய்ப்பு. நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, சேலத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வெளியான டிஜிட்டல் விளம்பரம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் வணிக ரீதியிலான விளம்பர டிஜிட்டல் பேனர்கள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலைய பாலங்களுக்கு கீழேயும் இது போன்ற டிஜிட்டல் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலை மெட்ரோ ரயில் நிலைய பாலத்திற்கு கீழே வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆயிரம் ரூபாய் கொடுத்தால் எந்த பெண்ணுடனும் […]
திருவெற்றியூர் கடற்கரையில் மாயமான நான்கு பேரை தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மணலி அருகே அமைந்துள்ள ஆண்டார்குப்பம் பகுதியில் ஐ.ஓ.சி நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் உள்ளே இரும்பு தகடால் கூடாரம் அமைக்கும் பணியை தனியார் நிறுவனர் ஒருவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இந்த நிறுவன ஒப்பந்ததாரரிடம் வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் நேற்று […]
சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை பரிசோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 24-ஆம் தேதி முதல் ரேண்டம் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்.பி.சி.டி.ஆர் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் தட்பவெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அவர்களில் கொரானா தொற்று அறிகுறிகளுடன் இருப்பவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் […]
சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, மாநகராட்சி தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சியின் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார்ச் 30ம் தேதி அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மே 30ஆம் தேதி சென்னை மாநகராட்சி சொத்து வரியை உயர்த்தியது தொடர்பான தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இந்த அரசாணை, மாநகராட்சியின் தீர்மானத்தை எதிர்த்து சென்னை […]
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகாண் மாகாணத்தில் கொரோனா வைரஸ் ஆனது பரவத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு அதன் கோரத்தாண்டவத்தை உலகம் முழுவதும் கண்டது. இந்த கொரோனாவால் கடந்த 2020 மார்ச் 25ஆம் தேதி இந்தியாவில் பொதுமுடக்கமானது அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலமும் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். சென்னையில் கோயம்பேடு சந்தையில் கொரோனாவின் தாக்கமானது அதிக அளவில் பரவ தொடங்கியது. கோயம்பேடு சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிகமாக […]
கோயம்பேடு காய்கறி சந்தையில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமுலாகிறது. தனிமனித இடைவெளி கட்டாயம் என சி.எம்.டிஏ அதிகாரிகள் தகவல். pf 7 புதிய வகை கொரோனா பரவலை அடுத்து மீண்டும் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றது. கட்டுப்பாடுகளை பின்பற்றாத வியாபாரிகளுக்கு அபராதம் எனவும் சிஎம்டிஏ அதிகாரி தகவல். காய்கறி வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தகவல்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கடும் பனிப்பொழிவு பொழிந்து வருகின்றது. வாகனங்கள் செல்லக்கூட முடியாத அளவுக்கு கடும் பனிப்பொலிவால் வாகன ஓட்டிகள் பெறும் அவதிக்குள்ளாகி உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை கடும் பனிப்பொலிவு நிலவி வருகிறது. திருவள்ளூர், ஈக்காடு, புரசைவாக்கம், வேப்பம்பட்டு, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை என மாவட்டத்தின் பல்வேறு […]
வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் புத்தாண்டு பள்ளி அரையாண்டு தேர்வு தொடர் விடுமுறையை அடுத்து வண்டலூர் பூங்கா நாளை திறக்கப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. வழக்கமாக வண்டலூர் பூங்காவுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்படும் நிலையில், திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காரணமாக அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வருவார்கள் என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்துள்ள போதிலும் பாதுகாப்பு கருதி மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார். சென்னை நூற்றாண்டு நூலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் மூதறிஞர் ராஜாஜி அவர்களின் 50 -ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புத்தகக் கண்காட்சியை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் போன்றோர் தொடங்கி வைத்தனர். அதன்பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தமிழகத்தில் முக கவசம் அணிய வேண்டும் என்கிற உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் […]
தமிழகத்தில் விபச்சார தொழிலுக்கு தடை செய்யப்பட்ட போதிலும் ஒரு சில மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பாக்கள் போன்றவைகளில் சட்டவிரோதமான முறையில் விபச்சார தொழில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் அடிக்கடி ஆய்வுகள் நடத்தி விபச்சார தொழில் ஈடுபடுபவர்களை கையும் களவுமாக பிடித்து கைது நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் பரபரப்பான சென்னை மாநகரில் பொதுவெளியில் அதுவும் டிஜிட்டல் பலகையில் விபச்சார தொழிலுக்கு விளம்பரம் செய்துள்ளனர். அதாவது சின்னமலை பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலின் விளம்பர டிஜிட்டல் பலகையில் ரூபாய் […]