சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, மாநகராட்சி தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சியின் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார்ச் 30ம் தேதி அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மே 30ஆம் தேதி சென்னை மாநகராட்சி சொத்து வரியை உயர்த்தியது தொடர்பான தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இந்த அரசாணை, மாநகராட்சியின் தீர்மானத்தை எதிர்த்து சென்னை […]
Tag: சென்னை உயர் நீதிமன்றம்
டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு […]
டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக […]
தமிழகத்தில் கடந்த 2011 ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி கோரி புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகள் 2022-23ஆம் ஆண்டுக்கான கட்டிட திட்ட அனுமதி அங்கீகாரம் புதுப்பிக்க கோரி தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் தனியார் பள்ளிகள் நிர்வாகம் முன்னதாக திட்ட அனுமதி தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி,தமிழ்நாடு நகர் மற்றும் ஊரக […]
பிள்ளைகளை கண்காணிப்பது பெற்றோரின் கடமை என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் பள்ளி மாணவன் யுவராஜ் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இழப்பீடு வழங்ககோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பிள்ளைகள் மீதான கடமை பொறுப்பை உணர்ந்து அவர்களை வீட்டிலும், சமூகத்திலும் கண்காணிப்பது பெற்றோரின் கடமை. நன்றாக படிக்கச் செய்யும், ஒழுக்கம் […]
கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாநில அரசுகளின் சட்டங்கள் நன்கொடை வசூலிப்பதை தடுக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பல்வேறு கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் அறக்கட்டளை மூலமாக வசூலித்த நன்கொடைகளுக்கு வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை மதிப்பீட்டு ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்து இருந்தன. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு […]
அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் நீதிபதிகள் மற்றும் அரசியலமைப்பு பிரதிநிதிகள் மீது கருத்துக்கள் வெளியிடப்படும் சமூக வலைத்தள ஊடகங்கள் மீது டிஜிபி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பெண் வழக்கறிஞர் மற்றும் நீதிபதிக்கு எதிராக இணையத்தில் கருத்துக்களை வெளியிட்டது தொடர்பான வழக்கில் கைதான ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கு அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் சமூக ஊடகங்களில் நேர்காணல் நடத்துவதற்கு நீதிபதி தண்டபாணி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் […]
ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பாக திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.. தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் தரப்பில் அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தை நாடிய பிறகு நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி 28ஆம் தேதிக்குள் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் உட்பட அனைத்து கட்சி ஊர்வலம், […]
தமிழகத்தில் சென்னை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது நகரங்களில் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி உள்துறை மற்றும் டிஜிபிக்கு மனு ஒன்று அளிக்கப்பட்டது . ஆனால் அதற்கு எந்த ஒரு முடிவும் எடுக்காததால் அனுமதி அளிக்கும்படி ஆர் எஸ் எஸ் நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவில் மற்ற மாநிலங்களில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது,ஆனால் இங்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதில்லை என்று கூறி குற்றம் […]
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2020 ஆம் ஆண்டு திமுக சார்பில் மாநில முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது உண்ணாவிரத போராட்டத்தில் கொரோனா விதிகளை மீறிய செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தப்பட்டதாகவும் விதிமுறைகளை மீறவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு […]
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமியின் பதவிக்காலம் 21ஆம் தேதி உடன் நிறைவடைவதால் டி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள டி.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வருகிறார். தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி ஓய்வு பெற்றதால் துரைசாமி ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். செப்டம்பர் 22ஆம் தேதி முதல் உயர்நீதிமன்ற […]
சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுகவில் உள்கட்சி மோதல் உள்ளதால் இரட்டை இலை சின்னத்தை முடக்கதேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி கோரி பிஏ.ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கு 25 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ரூ.25 ஆயிரம் அல்ல மேலும் ரூ.25 ஆயிரம் கூடுதல் அபராதம் விதித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தது. மேல் முறையீடு வழக்கையும் தள்ளுபடி […]
தமிழகம் முழுதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2020-ம் ஆண்டு காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும் வழக்கு கோப்புக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை எனவும், அதோடு குற்றப்பத்திரிக்கை நகலை வழங்க கோரி கீழமை நீதிமன்றத்தில் விண்ணப்பித்த போது மனு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறினார். இதேபோன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டும், வழக்கு கோப்புக்கு எடுக்கப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டங்கள் உயர் நீதிமன்றத்தில் […]
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என 13,331 காலி பணியிடங்கள் இருப்பதாக அண்மையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அந்தப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதாவது தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களில் ஆசிரியர் […]
கையூட்டு பெரும் காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டுமல்லாமல் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பெரியார் நகரில் பெட்டிக் கடைக்காரரிடம் ரூபாய் 100 லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் குமாரதாஸ் ஊதிய உயர்வு பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கையூட்டு பெறும் காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டுமின்றி, குற்ற நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது. சமுதாயத்தையும் அரசு நலத்திட்டங்கள் […]
காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதாக ஐகோர்ட் கூறியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு மாணிக்கவேல் என்ற காவலர் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இவர் காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2014-ஆம் ஆண்டு காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் உத்தரவை மதிக்காமல் இந்த ஆண்டு தான் வீட்டை காலி செய்திருப்பதாகவும், […]
சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் படிப்புகள் சார்ந்த துறையை துவங்கக் கோரிய வழக்கில் பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பல்கலைக்கழக சிண்டிகேட் முன்னாள் உறுப்பினரும் மற்றும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் படிப்புகள் என்ற பெயரில் தனி துறையை அமைக்க 2006 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் […]
மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வன பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையத்தில் காணொலிக் காட்சி வெளியானது . இதன் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கானது உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்குவோர், மது அருந்திய பின், அந்த காலி கண்ணாடி பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசிச் […]
குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பழுதுபார்க்கும் வேலைகளை விரைவில் முடிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருக்கின்றார். மனுதாரர் தரப்பில் நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தானியங்கு குடிநீர் சுத்திகரிப்பு வழங்கும் நிலையங்கள் முறையாக செயல்படவில்லை என வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிபதி விசாரித்த போது மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளதாவது, முப்பத்திமூன்று குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள பணிகளை விரைவில் முடித்து விடுவதாக கூறினார். இதனை தொடர்ந்து நீதிபதி, ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் […]
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு சுப்ரீம் கோர்ட்டு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 6 நபர்களை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் ஜனாதிபதி 2 பேரை நீதிபதிகளாக நியமித்துள்ளார். அதாவது மாலா மற்றும் சௌந்தர் ஆகியோரை கூடுதல் நீதிபதியாக நியமித்துள்ளார். இதன்மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 12 ஆகவும், காலியிடங்கள் 14 ஆகவும் குறைந்துள்ளது.
மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் கல்லூரிகள், மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகள், துறையினர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறைகேட்டில் தொடர்புடைய தேர்வுக்குழு முன்னாள் செயலாளரின் ஓய்வூதிய பலனை நிறுத்தி வைக்கவும், சிபிசிஐடி விசாரணையில் தொடர்புடைய அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுக்கடைகளை வேளாண் நிலங்களில் திறக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பாக்கம் கிராமத்தில் யாழினி நகரில் டாஸ்மாக் மதுபானக்கடை திறக்க தடை விதிக்ககோரி, அப்பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேளாண் நிலம் என்பதால் மதுபான டாஸ்மாக் கடையை இந்த […]
சென்னை உயர் நீதிமன்றம் தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவினை விசாரித்த நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரும்வரை பணி நியமனமோ அல்லது புதிதாக மாணவர் சேர்க்கையோ 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நடைபெறக் கூடாது என்று கூறியது. மேலும் வழக்கை பிப்ரவரி 15 […]
மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்களின் வீட்டின் அருகாமையிலேயே எளிதில் தடுப்பூசி கிடைக்கும் வகையில் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரை பத்து தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புக்கு வந்து செல்கின்றனர். மேலும் ஆசிரியர்கள், பள்ளியில் […]
சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி மாதம் சஞ்சய் பானர்ஜி நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் வரும் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை இருக்கும் நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் குழு கூட்டத்தில் நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிமுனீஸ்வரர் நாத் பண்டாரியை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றவும் கொலிஜியம் பரிந்துரை செய்தது. அதன்படி […]
தமிழகம் அனைத்து பசுமையான வன வளங்கள் உள்ள மாநிலமாக திகழ்கிறது. அதனால் தமிழகத்தில் பல பகுதிகள் சுற்றுலாத் தலங்களாக காணப்படுகிறது. அதில் கன்னியாகுமரி, ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய சுற்றுலாத்தலங்களில் தமிழர்கள் மட்டுமன்றி உலக அளவில் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் பகுதியாக காணப்படுகிறது. மேலும் தமிழகத்திற்கு பல மாநிலங்களிலிருந்து கூட்டம் கூட்டமா வாகனங்களில் வந்து தங்கி சுற்றுலாவை மகிழ்ச்சியாக கொண்டாடி செல்கின்றனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் தமிழகத்திற்கு […]
சென்னை உயர்நீதிமன்றம் புரட்டாசி சனிக்கிழமையில் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென்று அறநிலையத்துறை கோரியுள்ள வழக்கிற்கு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதை அடுத்து விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகயாசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் கோவில்களுக்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இப்போது தமிழ்நாட்டில் கொரானா தொற்று […]
உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் இச்சிபுத்தூர் கிராமம் 8வது வார்டு வாக்காளர் பட்டியலில் 120 பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டு இருக்கிறது, எனவே புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் வரை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று சீனிவாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. […]
தமிழகத்தில் கோவில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில் நிலம்,சொத்து மற்றும் நகைகளை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு பிரிவு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இனி கோவில் நிலத்தை அபகரிப்பவர்கள் மீது உடனே குண்டர் சட்டம் பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அரசுக்கு உறுதுணையாக மருத்துவர்கள் முதல் சுகாதாரத்துறை பணியாளர்கள் வரை அனைவரும் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா காலகட்டத்தில் அவர்களின் பணி இன்றியமையாதது. ஆனால் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சிலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் மருத்துவ பணியாளர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி தரலாம் […]
இப்போது நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் […]
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் மே 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளித்து பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார். அவசர வழக்குகளை விசாரிக்க எட்டு நாட்கள் மட்டும் விடுமுறைகால நீதிமன்றம் இயங்கும். மே 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் அவசர வழக்குகளை தாக்கல் செய்யலாம். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் வழக்குகள் மே 5, 6 ஆகிய தேதிகளில் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு […]
கட்சிகள் இஷ்டம்போல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது நீங்கள் வேற்று கிரகத்தில் இருந்தீர்களா என்று சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் […]
தமிழகத்தில் மூன்று கட்சிகளுக்கும் ஒதுக்குவது பற்றி தேர்தல் ஆணையம் நாளைக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]
தமிழகத்தில் மனிதர்களை கொண்டு பாதாள சாக்கடை சுத்தம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழகத்தில் பாதாள சாக்கடைகளை இறங்கி சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்கள் பெருமளவு ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சுத்தம் செய்யும் பணிகளின்போது விஷவாயு தாக்கிய உயிரிழக்கும் தொழிலாளிகளுக்கு போதுமான இழப்பீடு கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையில் நாகரீக சமூகத்தில் மனிதர்களை பாதாள சாக்கடை சுத்தம் செய்வதை ஏற்க […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5000 கேங்க் மேன் பணியிடங்களை நிரப்பி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் கள்ளப்பணிக்காக உருவாக்கப்பட்ட Gang man பணிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்று 2019 மார்ச் மாதம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்து மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்த ஊழியர்களும், அவர்களது சங்கங்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்தனர். அந்த வழக்குகளில் மின் வாரியத்தில் […]
சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்தில் பொது மக்களை அனுமதிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வசித்துவந்த போயஸ் கார்டன் இல்லமானது கடந்த ஜனவரி மாதத்தில் அவரின் நினைவிடமாக தமிழக அரசால் மாற்றியமைக்கப்பட்டது. இதை எதிர்த்து தீபா மற்றும் தீபக் ஆகியோர் வீடு கையகப்படுத்துதல் மற்றும் இழப்பீடு உத்தரவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதியான சேஷசாயி, பொதுமக்களின் பார்வைக்காக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் […]
தமிழகத்தில் உதவிப்பேராசிரியர் நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் உதவி பேராசிரியர்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உதவி பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும் என யுஜிசி விதி உள்ளது. எனவே அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் உதவி பேராசிரியர்களாக நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்று பாண்டியம்மாள் என்பவர் வழக்கு தொடர்ந்தார். […]
கல்லூரிகளில் அரியர் தேர்வுகளை ஆன்லைனில் ஏன் நடத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையின் போது இறுதி பருவ மாணவர்களின் முந்தைய தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அடைய செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என பல்கலைக்கழக மானியக்குழு குறிப்பிட்டதுடன் தேர்வை நடத்த வேண்டியது அவசியம் என்றும் தேர்வை தள்ளி வைப்பது […]
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்திருந்தால் மட்டுமே சட்டப் படிப்பை படிக்க முடியும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்திருந்தால் மட்டுமே சட்டப்படிப்பில் சேரும் வகையில் இருக்கும் பார் கவுன்சில் விதிகளைத் திருத்தம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. அதாவது சமீபத்தில், 12ஆம் வகுப்பைத் தனித்தேர்வராகவும், பட்டப்படிப்பைத் தொலைநிலைக் கல்வியிலும் படித்து முடித்த கிருஷ்ணகுமார் சட்டப்படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பித்த நிலையில், தொலைநிலைக் கல்வியில் படித்ததன் காரணமாக அவரின் விண்ணப்பம் நிராகரிப்பட்டது. அவருடைய விண்ணப்பம் […]
தங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய கோரி தயாநிதிமாறன், டி.ஆர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அண்மையில் தமிழக தலைமைச்செயலாளர் சந்திக்க சென்ற திமுக எம்.பிக்களான தயாநிதிமாறன், டி.ஆர் பாலு தங்களை தாழ்த்தப்பட்டவராக நடத்துவதாக பேட்டியளித்தார். தயாநிதிமாறனின் இந்த பேச்சுக்கு கண்டம் எழுந்தநிலையில் தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். இதனிடையே தயாநிதிமாறன், டி.ஆர் பாலு மீது கோயம்புத்தூரை சேர்ந்த சேகர் என்பவர் காவல்நிலையத்தில் புகாரின் கொடுத்தார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் […]
தமிழக அரசு நாளை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் நிறுவனத்திற்கும், தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. தனி மனித இடைவெளியை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகள் டிஜிபி உத்தர விட்டது போல முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மதுபானக் கடைகளின் பார்களை […]
முதலமைச்சர் வழங்கும் ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜேஷ் தொடர்ந்த வழக்கில் கொரோனா பரவாமல் தடுக்க ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இன்று முதல் ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்கள் […]