Categories
மாநில செய்திகள்

பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க கோரி வழக்கு…. தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை  தடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

உப்பெனா விவகாரம் : நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்..!!

தெலுங்கு படமான ‘உப்பெனா’ என்ற படத்தை தமிழில் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி வாங்கியதாக தகவல் வெளியானது. தனது கதையை திருடி உப்பெனா படம் தெலுங்கில் உருவாக்கப்பட்டதாக தேனியை சேர்ந்த உதவி இயக்குனர் எஸ் யூ டல்ஹவுசி பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் “உப்பெனா” என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கவில்லை என விஜய் சேதுபதி தரப்பு சென்னை ஐகோர்ட்டில் விளக்கம் அளித்தது. விஜய் சேதுபதி விளக்கத்தை ஏற்று […]

Categories
மாநில செய்திகள்

ஒரு பெண் தன் வாழ்நாளில் எத்தனை முறை கருதானம் செய்யலாம்….? ரிப்போர்ட் கேட்கும் ஐகோர்ட்….!!!!!

இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டு கருத்தரித்தலை முறைப்படுத்துவதற்காக இனப்பெருக்க தொழில்நுட்ப முறைப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து கருமுட்டை வழங்கக்கூடிய பெண்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் சட்டத்தின்படி கருமுட்டைகளை அதற்கான வங்கிகளின் இருந்து பெறவேண்டும் என்றும், 23 வயது முதல் 35 வயதுகுட்பட்ட பெண்கள் தங்களுடைய ஆயுட்காலத்தில் ஒருமுறை மட்டுமே கருதானம் பெற வேண்டும் எனவும் இருக்கிறது. அதன் பிறகு ஒரு தம்பதிகளுக்கு ஒரு முறைக்கு மேல் கருமுட்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சென்னை ஐகோர்ட் ட்ரோன் மூலம் படப்பிடிப்பு”…. பிச்சைக்காரன் 2 படக்குழுவினர் அதிரடி கைது….. பெரும் பரபரப்பு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின்  வெற்றியால் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை தானே இயக்கி, நடித்து, இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிச்சைக்காரன் 2 படக்குழுவினர் சென்னை ஐகோர்ட் மற்றும் பார் கவுன்சில் போன்றவற்றை சட்டவிரோதமான முறையில் ட்ரோன் […]

Categories
மாநில செய்திகள்

“ஆர்டர்லிகளை உடனே திரும்பப்பெற வேண்டும்”….. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

உயரதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  உயரதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளதாவது: “உயரதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனே திரும்பப்பெற வேண்டும். ஓராண்டு பயிற்சி முடித்து ரூ.45 ஆயிரம் சம்பளம் பெறும் காவலர்களை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றம். ஆர்டர்லிக்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் கிடையாது…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளையில் இன்று முதல் வழக்குகள் அனைத்தும் நேரடியாக மட்டும் விசாரிக்கப்படும் என்று கடந்த மாதம் 27 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் தொடங்க இருந்த நேரடி விசாரணை தொடர்பான அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு, காணொலிக் காட்சி மூலமாக மட்டுமே அனைத்து வழக்குகளும் விசாரணை நடைபெறும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில், நேரடி விசாரணை முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இ- […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்துக்கொள்ள வேண்டும்…. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு…..!!

சென்னை ஐகோர்ட்டில் அறக்கட்டளையின் தலைவர் உமர் பாருக் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தமிழக அரசு பிறப்பித்த கட்டுப்பாடுகள் நீடிப்பு உத்தரவை பின்பற்றி அரசு துறைகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கல்வி நிறுவனங்களில் உள்ள பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் மாணவர்கள் நேரடி வகுப்பில் கலந்துகொள்ள முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தடுப்பூசியால் எந்தவித பக்கவிளைவும் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அக்.,21க்குள் பிராந்திய மொழிகளில் சுற்றுச்சூழல் அறிக்கை – மத்திய அரசு!!

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை அக்டோபர் 21க்குள் அனைத்து பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.. டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுப்படி அறிக்கை வெளியிடப்படும் என சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பொது மக்களிடம் விரிவாக கருத்து கேட்பது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கை வெளியிடக் கோரும் வழக்கு 8 வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் தடை…. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!!

டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்க வகை செய்யும் மத்திய தகவல் தொழில்நுட்ப விதிக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக இசைக்கலைஞர் டி என் கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு கண்காணிப்பு மூலம் கட்டுப்படுத்துவது ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல். தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு மும்பை கோர்ட்டு விதித்த தடை நாடு முழுவதும் பொருந்தும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி இருசக்கர வாகனங்களுக்கு…. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!

இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் முறை வேக கட்டுப்பாட்டு கருவிகளை கட்டாயமாக பொருத்த வேண்டும். இறக்குமதி செய்யப்படும் இருசக்கர வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படும் அதை கட்டாயம் ஆக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசில் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் பெரும்பாலான விபத்துகளை தடுக்கமுடியும் என்றும் கூறியுள்ளது.இனி

Categories
மாநில செய்திகள்

“100% இருக்கை நல்லதல்ல”… தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுரை…!!!

தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் போது திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிப்பது நல்லது அல்ல என சென்னை ஐகோர்ட் அறிவுரை கூறியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கடந்த மாதம் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் திரைக்கு வர இருப்பதால், திரையரங்குகளில் 100 சதவீதம் […]

Categories

Tech |