சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான யுஜிசி- யால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை, முதுகலை,முதுகலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதில் மாணவர்கள் நேரிலும் அல்லது http://online.ideunom.ac.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tag: சென்னை பல்கலை
மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெறுவதாக இருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மாண்டஸ் புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய கடற்கரை மாவட்டங்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் கனமழையானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த புயலானது மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவு முதல் கொண்டு நாளை அதிகாலை வரையில் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கக் கூடிய சூழ்நிலையில், தொடர்ந்து மழையின் தாக்கமும், புயலின் வேகமும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
மாண்டஸ் புயல் காரணமாக அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலையில் நாளை நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் எதிரொலி காரணமாக அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை பல்கலைக்கழகத்திலும் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இரண்டுக்குமான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சென்னை பல்கலை அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வியியல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் ஆகியவற்றிற்கு செப்டம்பர் 3ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற உள்ளது. அதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டை இன்று முதல் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வமான www.ideunom.ac.in என்ற […]
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள உயர்க் கல்வி நிறுவனங்களின் செயல்திறன், ஆராய்ச்சி, மாணவர்-ஆசிரியர் உறவு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப் பட்டியலை QS நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் QS வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 50 ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 3 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. அதில் சென்னை பல்கலை 48-வது இடத்திலும், 47- வது இடத்திலேயே ஐஐடி ரூர்கியும், 37- வது இடத்தில் ஐஐடி கௌஹாத்தியும் உள்ளன. கல்வி மதிப்பீடு, ஊழியர்கள் […]