தீபாவளியை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் இருந்து இரண்டாவது நாளாக இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வெளியூர்களுக்கு செல்ல அதிகளவில் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் இல்லாததால் சிரமமின்றி பயணம் செய்ய முடிவதாக பேருந்து பயணிகள் தெரிவித்தனர்.
Tag: சென்னை மாவட்டம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 14,757 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி இன்று முதல் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும். வேலூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியில் இருந்தும். திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. கோவை மற்றும் தென் […]
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் நுழைவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வண்டலூர் பூங்காவில் மலைகள், ஏரி, சமவெளி, மரங்கள் மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதியில் சிங்கம், புலி, வெள்ளைப்புலி, யானை, காண்டாமிருகம், ஒட்டகச்சிவிங்கி மற்றும் பல்வேறு விதமான பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு பின் பூங்கா இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காவுக்கு […]
சமூக வலைதளம் மூலம் பெண்களிடம் பழகி பாலியல் வன்கொடுமை செய்ததோடு பண மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல பெண்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் பழகி பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவர்களை மிரட்டி பணம் பறித்த புகாரில் நாகர்கோவிலைச் சேர்ந்த காசு என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். காசி மீது ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள […]
சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிர்பயா திட்டத்தின்கீழ் 95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1604 ஸ்மார்ட் சிசிடிவி கேமரா கம்பங்களை நிறுவ மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடந்த 2013 ஆம் ஆண்டு நிர்பயா திட்டத்தை உருவாக்கி 2000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. இந்தத் திட்டத்தின்கீழ் சென்னையில் 425 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 வகையான திட்டங்களை சென்னை மாநகராட்சி வகுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பெண்களின் […]
சூப்பர் ஸ்பெஷாலிட்டி டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி நடப்பு கல்வி ஆண்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவிகித இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்க உத்தரவிடக்கோரி அரசு மருத்துவர்கள் சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வேறொரு வழக்கு நிலுவையில் உள்ளதால் அதுவரை […]
தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய பாரதிய ஜனதா மாநில தலைவர் திரு. எல். முருகன் செங்கல்பட்டில் கைது செய்யப்பட்டார். சென்னை கோயபெட்டில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் சென்ற திரு. எல். முருகன் அங்கிருந்து வேல் யாத்திரையை முயன்றார். அப்போது முருகனையும் அவருடன் வந்த பாஜக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
சென்னையில் தடையை மீறி வேல் யாத்திரை மேற்கொண்ட பாஜகவினர் மீது 3 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக வேல்யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு அறிவித்திருந்தது. முதற்கட்டமாக கடந்த வெள்ளியன்று திருத்தணியில் யாத்திரையில் பங்கேற்று ஏராளமானோர் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டனர். இரண்டாவது கட்டமாக நேற்று திருவாற்றியூரில் நடைபெற்ற ஊர்வலத்தில் பாஜக மாநில தலைவர் முருகன், இல கணேசன், சிபி ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, கரூர் நாகராஜன் உள்ளிட்டோர் […]
மகளின் வரதட்சணைக்காக பத்து வருடங்களுக்கு பிறகு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை எம்கேபி நகர் பகுதியைச் சேர்ந்த ஜோசப் செல்வராஜ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவிகளை ஆராய்ந்தபோது சந்தேகிக்கும் வகையில் ஒரு கார் அந்த பகுதியில் சுற்றி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். பின்னர் வாகன எண்ணை வைத்து விசாரித்ததில் உரிமையாளர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பதை அறிந்த […]
சென்னை மதுரவாயலில் திருநங்கை போல வேடமிட்டு வாகன ஓட்டிகளிடம் லிப்ட் கேட்டு வழிப்பறியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் சென்னை ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திருநங்கை ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். திருநங்கையை அவரது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அவர் கேட்ட இடத்தில் சத்தியமூர்த்தி இறக்கிவிட்டுள்ளார். அப்போது பேசிக் கொண்டிருந்தபோது […]
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை மதுரை உள்ளிட்ட இடங்களில் கடைவீதிகளில் புத்தாடைகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாடு முழுவதும் வரும் 14-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து அதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை இன்று சென்னை தியாகராயநகர் கடைவீதிகளில் ஆடைகள் விற்பனை களைகட்டியுள்ளது. புத்தாடைகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வரும் மக்கள் குடும்பம் குடும்பமாக கடைகளை முற்றுகையிட்டு தங்களுக்கு விருப்பமான அவற்றை தேர்வு செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கள் துவண்டு போயிருந்த […]
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவிற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவுக்கு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என்று வீரப்பன் என்ற பெயரில் கடிதம் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து கடிதம் அனுப்பி அடையாளம் தெரியாத நபர் மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பி அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மெரினா கடற்கரையில் பொது மக்களை அனுமதிப்பது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் மீன் கடைகளை ஒழுங்குபடுத்துவது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆய்வு நடத்தினார். மீன் சந்தை அமைந்துள்ள இடங்களை பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மெரினா கடற்கரை மற்றும் இணைப்பு சாலையில் உள்ள சாலையோர மீன் கடைகள் அகற்றப்பட்டு பட்டினப்பாக்கம் கடற்கரை அருகே இரண்டு ஏக்கர் பரப்பளவில் 300 கடைகள் அமைக்க நடவடிக்கை […]
பண்டிகை காலம் என்பதால் குழந்தைகள் முதியவர்களை கடை வீதிகளுக்கு அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை அமைச்சர் துவக்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த அதிநவீன சிடி ஸ்கேன் கருவி மூலம் இருதய மற்றும் இருதய ரத்த நாளங்களை துல்லியமாக படம் எடுக்க முடியும் என தெரிவித்தார். சுகாதாரத்துறையில் பிற மாநிலங்களுக்கு முன்னோடி […]
சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இது குறித்த நேரடி தகவல்களை தர கிண்டியில் இருந்து எமது செய்தியாளர் உசைன் நம்முடன் இணைந்துள்ளார். தமிழக கடலோர மற்றும் தென்மேற்கு வங்கக் கடலையொட்டி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவ மழையானது துவங்கி பெய்து வரும் […]
இஸ்லாமிய மதத்தையும் நபிகள் நாயகத்தையும் பிரான்ஸ் அதிபர் இழிவுபடுத்தியதாக கூறி சென்னையில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்விஷயத்தில் இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி மகாத்மா காந்தி சாலையில் 30 அடி தூரத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி குமரன்நகர்யில் மகாத்மா காந்தி சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. மேலும் இச்சாலையை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இச்சாலையில் அம்மா உணவகம் அருகில் திடீரென்று 30 அடி நீளம் 10 அடி ஆழத்திற்கு […]
சென்னை விம்கோ நகர் வண்ணாரபேட்டை இடையிலான மெட்ரோ ரயில் பணிகள் நிறைவு பெற்றுள்ளது விரைவில் அங்கு வெள்ளோட்டம் நடத்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வண்ணாரப்பேட்டையில் இருந்து ஆலந்தூர் வரையிலான பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பாதையை விம்கோ நகர் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் அங்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கியது. வண்ணாரப்பேட்டையில் இருந்து தண்டீயார்பேட்டை வழியாக சுரங்கவழியாகவும் […]
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சென்னை தியாகராயநகரில் புத்தாடை உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக கொரோனாவையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் அதிக அளவில் குவித்தனர். தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரத்திற்கு குறைவாகவே உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு புத்தாடை வாங்குவதற்காக பொதுமக்கள் தியாகராய நகரில் குவிந்தனர். கொரோனா பரவலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். பொதுமக்கள் வருகை அதிக அளவில் இருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் திணறினார். கொரோனா ஊரடங்கு […]
சென்னை அருகே பில்லி சூனியத்திலிருந்து மிருற்பதாக கூறி 110 சவரன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். நகைகளையும் பணத்தையும் எப்படி இளந்தார் என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. பாலவாக்கத்தில் உள்ள குப்பம் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் துறைமுகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மித்ரா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். இந்நிலையில் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நாராயணி என்ற 23 வயது பெண் தன் வசீகரப் பேச்சால் […]
உணவு பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த இட்ரைட் சென்னை என்னும் திட்டம் உணவு பாதுகாப்பு துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் இட்ரைட் மூமாட் என்ற இயக்கத்தை தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள நகரங்கலையும் இட்ரைட் சேலஞ்யில் பங்குபெற செய்து உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் மூலம் இட்ரைட் சென்னை திட்டம் சென்னை […]
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னையில் ஒரேநாளில் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தமிழகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடாது மழை பெய்தது. விட்டுவிட்டு பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல கரைபுரண்டு ஓடியது. குறிப்பாக சென்னை நகரில் பிரதான சாலைகளான அண்ணா சாலை, ஜிபி ரோடு, பெரியார் சாலைகளில் சூழ்ந்த மழைநீரால் […]
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மணல் பரப்பில் குளம்போல் தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் உற்சாகமாக படகு சவாரி செய்து வருகின்றனர். சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை தொடர்கிறது. ஒரு சில நேரத்தில் வெளுத்து வாங்கும் மழையால் நகரே தண்ணீர் சூழ்ந்து சிறு சிறு தீவுகள் போல காட்சியளிக்கிறது. இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மணல் பரப்பில் வெளுத்து வாங்கிய மழையால் நீர் தேங்கி குளம் போல காட்சி […]
கேஸ் ஏஜென்சிகளில் திடீர் சோதனை நடத்தப்பட வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேஸ் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையை சேர்ந்த உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கேஸ் ஏஜென்சிகளின் மீது கொடுக்கப்பட்ட புகார்களில் எத்தனை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனவரி 8-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் […]
சென்னை புறநகர் பகுதியான கோவிலம் வடுநிலப்பகுதியில் 1,143 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் 4,034 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி முதற்கட்டமாக கூவம் மற்றும் அடையாறு வடிநிலப்பகுதிகளில் 406 கிலோமீட்டர் நீளத்திற்கு […]
சென்னை அம்பத்தூரில் கஞ்சா விற்பனை செய்த இருவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் வெள்ளிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் இருவரும் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அம்பத்தூர் துணை ஆணையர் தீப சத்தியம் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். அண்ணாநகர் வில்லிவாக்கம் அம்பத்தூர் பகுதிகளில் இருவரும் பதுக்கி வைத்திருந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. […]
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தமிழக அரசு வன்மையாக கண்டிப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் கட்டப்பட்ட நவீன மீன் விற்பனை அங்காடிகளுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ஒதுக்கீட்டு ஆணையும் 15 விசைப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் செயற்கை கோள் தொலைபேசியையும் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் திருவொற்றியூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்பிடி துறைமுகம் அடுத்த ஓராண்டிற்குள் […]
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான நில மோசடி வழக்கு தொடர்பாக பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்தனர். திமுக எம்பி ஜெகத்ரட்சகன் 1995-ல் சென்னை குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் தொழிற்சாலை தலைவராக இருந்தபோது தொழிற்சாலைக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை நகர்புற நில உச்சவரம்பு சட்டத்தின் விதிகளை மீறி நாற்பத்தி ஒருவருக்கு பிரித்துக் கொடுத்ததாகக் புகார் எழுந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் புகார் குறித்து […]
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவிலுக்கு 3 கிலோ தங்கத்தால் ஆன கிரீடத்தை நகை கடை அதிபர் ஒருவர் காணிக்கையாக செலுத்தினார். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் உள்ள உற்சவருக்கு தியாகராய நகரை சேர்ந்த நகைக்கடை அதிபரான ஜெயந்திலால் சலனி என்பவர் பாண்டியன் கொண்டை என்றழைக்கப்படும் கிரீடத்தை காணிக்கையாக செலுத்தினர். 3 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட இந்த கிரீடத்தில் வைரம், மரகதம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. கடந்த 11 மாதங்களாக இந்த நகையை தனது நகைப் பட்டறையில் […]
சென்னையில் வங்கியில் பேசுவது போன்று ஏமாற்றி மோசடி செய்த பணத்தை போலீசார் சில மணி நேரத்தில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தர். சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ராமதுரை என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி கிரெடிட் கார்ட் விவரங்களை கேட்டுள்ளார். கிரெடிட் மூலம் கடன் பெறுவதற்கான வரம்பு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். இந்த ஆசை வார்த்தையை நாம்பி ராமதுரை OTB எண்ணை பகிர அவரது கணக்கில் இருந்து 24 ஆயிரம் ரூபாயை மர்மநபர் பறித்து […]
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமாக ஹுக்கா பார்கள் நடத்தி வந்த 14 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையில் சட்டவிரோதமாக ஹுக்கா பார்கள் செயல்பட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு நுங்கம்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில் திருவல்லிக்கேணி உடற்பயிற்சி கூடத்தில் நடத்தப்பட்டு வந்த ஹுக்கா பார் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட ஹுக்கா பார்களை மூடி சீல் வைத்தனர். சட்டவிரோதமாக ஹுக்கா […]
சென்னை கோயம்பேடு சந்தையில் சிறு குறு சில்லரை வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படாததால் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் ஆயுத பூஜை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இல்லங்கள் அலுவலகங்களில் மலர்கள், பழம் வகைகள், வாழை கன்று, மாவிலைத் தோரணம், மஞ்சள் கிழங்கு, அவல், பொரி என இறைவனுக்கு படைப்பது வழக்கம். இவை அத்தனையும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் கோயம்பேடு சந்தையையே அதிகம் நாடுவர். இந்த ஆண்டு கொரோனா பரவல் […]
பெண்களை தரக்குறைவாக பேசிய புகாரில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் பாரிமுனையை சேர்ந்த திரு. அஸ்வத்தாமன் என்பவர் சென்னை காவல் ஆணையருக்கு ஆன்லைனில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரை திருமாவளவன் இந்து பெண்களை தரக்குறைவாக விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டதாக புகார் தெரிவித்திருந்தார். அவருடைய கருத்து பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் கலவரத்தை தூண்டிய சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக திரு. அசுவத்தாமன் தனது […]
விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் ஆன ஆன்டன் பாலசிங்கத்தை குண்டுவெடிப்பு நிகழ்த்தி கொல்ல முயன்றதாக தொழில் அதிபர் வி.கே.டி.பாலன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னை பேஷன் நகரில் ஆண்டன் பாலசிங்கம் தங்கியிருந்த வீட்டில் 1985 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு நிகழ்வு தொடர்பாக வி.கே.டி.பாலன் உள்பட 7 பேர் மீது அப்போது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 2 பேர் தலைமறைவாகி விட்ட நிலையில் ராதாகிருஷ்ணன் அரசு […]
மருத்துவ உள் இடஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை போலீசாரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். மருத்துவ படிப்பில் தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்க மறுக்கும் தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித்தை கண்டித்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆளுநருக்கு […]
பண்டிகை கால விடுமுறையையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு வரும் 23, 24 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரும் 27-ம் தேதி மற்றும் நவம்பர் 2-ம் தேதி ஆகிய […]
தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்திற்கு நாளை முதல் 17 முதல் 27 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் புகழ் பெற்ற தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்திற்கு நாளை 17 முதல் 27-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர வழக்குகளுக்கு வரும் 20-ஆம் தேதி மனு தாக்கல் செய்தால் 22-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என பதிவாளர் சி. குமரப்பன் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறை நாட்களில் அவசர வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பார்த்திபன், […]
ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த ஆறரை லட்சம் ரூபாய் சொத்து வரிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்திற்க்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொத்து வரி விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். மனுவில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மத்திய […]
பச்சையப்பன் அறக்கட்டளையின் கல்லூரிகளில் நூற்றுக்கு மேற்பட்ட பேராசிரியர்களை அநீதியாக பணி நீக்கம் செய்த அறக்கட்டளை தலைவர் திரு. சண்முகத்தை நீக்கிவிட்டு கல்லூரிகளை நிர்வகிக்க தனி அலுவலரை அரசு நியமிக்க வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் பசுபதி அறக்கட்டளைக்கு தேர்தலை நடத்த நியமிக்கப்பட்ட இடைக்கால அதிகாரி திரு. சண்முகம் குறுக்கு வழியில் அறக்கட்டளையின் தலைவர் பதவியை பெற்றுக் கொண்டதாக கூறினார். […]
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே நகர் தனசேகரனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கே.கே நகரில் உள்ள திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே நகர் தனசேகரன் அலுவலகத்தில் அமுதா என்ற பெண் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அமுதாவின் கணவர் பொன்வேல் என்பவர் அலுவலகத்திற்கு வந்து தனது மனைவியிடம் தகராறு ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த தனசேகரன் பொன்வேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொன்வேல் […]
சென்னை மெரினா கடற்கரையில் நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய வேண்டும் என மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது மெரினாவை தூய்மைப்படுத்துவது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் ரமேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. பிரகாஷ் சென்னை காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் […]
சென்னையில் கொரோனாவின் தாக்கம் மேலும் அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று விளையாட்டு மைதானங்களில் இளைஞர்கள் அதிக அளவில் குவிந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த 10 நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு 1,400 என்ற அளவில் இருந்து வருகிறது. கொரோனா தாக்கம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஏற்கனவே அறிவித்திருந்தார். கொரோனா ஊரடங்கு முக்கிய […]
மருந்துகளின் மூலப் பொருள்களுக்கு அண்டைய நாடான சீனாவை மட்டுமே நம்பி இருப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி வின்கேம் ஆய்வகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. புதிய மருந்துகள் கண்டுபிடிக்க அரசு முறையாக ஒத்துழைப்பு அளிப்பதில்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மனுதாரர் நிறுவனத்திற்கு நிதி உதவி உள்ளிட்ட உதவிகளை […]
தம்மை மர்ம நபர்கள் கடத்தி விட்டதாக கூறி தங்களிடம் 10 லட்சம் ரூபாய் பணம் பறிக்க முயன்ற சிறுவனின் நாடகம் அம்பலமானது. வாய்ஸ் ஆப் மூலம் கடத்தல்காரர் போன்று குரலை மாற்றி பேசிய சிறுவனை சிசிடிவி உதவியோடு போலீசார் பிடித்தனர். சென்னை திருவல்லிகேணியில் வசிக்கும் பலராம் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அவரது மகன் கோபாலபுரத்தில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டைவிட்டு வெளியே சென்ற மகன் […]
கடலுக்கு மீன்பிடிக்க சென்று காணாமல் போன சென்னை காசிமேடு மீனவர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்ட பின் ஒரு வழியாக தாயகம் திரும்பி இருக்கின்றனர். வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் ஆனால் சென்னையை சேர்ந்த மீனவர்கள் 9 பேருக்கு கடந்த இரண்டு மாதங்களாக போராட்டமே வாழ்க்கை ஆகிவிட்டது. ஆழ்கடல் மீன் பிடிப்புக்காக ஜூலை 22-ஆம் தேதி கடலுக்கு சென்று சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேர் மீண்டும் கரை சேரவில்லை. படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்து நியான்மர் நாட்டில் கரை ஒதுங்கி […]
சென்னையில் சைக்கிள் ஷேரிங் திட்டத்தின் மூலம் ஒரு மாதத்திற்கு 999 ரூபாய் செலுத்தி சைக்கிளை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் புதிய வசதியை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது. சென்னையில் பொதுமக்களிடம் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் ஷேரிங் திட்டம் ஜூன் மாதம் சென்னை மாநகராட்சியால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை மாநகராட்சி தற்போது வாடகை அடிப்படையில் சைக்கிளை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் புதிய […]
கொரோனா பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் அப்பகுதிக்கு தகரம் அடிப்பதற்கு காரணம் என்னவென்று சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பிரியங்கா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தனது கணவருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா பாதித்திருப்பது கண்டறியபட்டதாகவும் எங்கு சிகிச்சை பெறுகிறீர்கள் என தங்களை கேட்காமல் வலுக்கட்டாயமாக மையத்திற்கு அழைத்து சென்றதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு […]
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பீட்ரூட் தற்போது 35 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெண்டைக்காய் 20 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ முட்டைகோஸ் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் உஜாலா கத்திரிக்காய் 40 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும், வரி கத்திரிக்காய் 25 ரூபாயிலிருந்து 15 ரூபாயாகவும் குறைந்துள்ளது. […]
மறைந்த இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனின் திருவுருவப்படத்திற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் அஞ்சலி செலுத்தினார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன் விநாயகர் சதுர்த்தியை தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் கொண்டாட காரணம் ஐயா ராமகோபாலன் தான் என்றார். தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற மதமாற்றத்தை தடுப்பதற்கு அனைத்து கிராமங்களிலும் அவர் சென்றதாக கூறினார். ஒரு சம்பவம் நடைபெற்றால் அது அரசியல் லாபம் […]
சென்னையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் குறும்படத்திற்கான காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற்றது. சென்னை மவுண்ட்ரோடு போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறும்படத்தை தயாரித்து வருகின்றனர். இதற்கான காட்சிகளை சென்னை ஆலந்தூர் தபால் நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில் படப்பிடிப்பு நடத்தி கொண்டிருந்தன. விபத்து காட்சியை படம் பிடித்து கொண்டிருந்தனர்.மேலும் ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் உண்மையில் விபத்து ஏதும் ஏற்பட்டு விட்டதோ என்று […]