சென்னையில் புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075ல் இருந்து 1173ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். 10 வயதுக்குட்பட்ட 31 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களில் 58-பேர் குணமடைந்து வீடு […]
Tag: சென்னை
வருகிற ஏப்ரல் 30ம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், ஏப்.30ம் தேதி வரை நீதிமன்ற பணிகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்ததன் காரணமாக கடந்த மாதம் மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாகக் குழு ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது, ஊரடங்கு காலம் முடியும் வரை நீதிமன்ற […]
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது மருத்துவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் நேற்று மேலும் 106 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1,075 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என பீலா ராஜேஷ் தகவல் அளித்திருந்தார். இந்த நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது மருத்துவர் உயிரிழந்துள்ளார். ஆந்திராவை மாநிலம் நெல்லூரை சேர்ந்த […]
அம்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த கும்பலை, அப்பகுதி இளைஞர்கள் துரத்தியதில் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடினர். சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு இந்திரா நகர் பகுதியில் வசித்து வருகிறார் சத்தியராஜ். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகின்றார். இந்த சூழலில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இவர் குடும்பத்துடன் கடந்த 24ஆம் தேதி சொந்த ஊரான புதுக்கோட்டைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை 2 […]
தமிழகத்தில் 34 மாவட்டங்களை பாதித்துள்ள கொரோனாவால் 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதன் மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த ஒருவர் இன்று மரணமடைந்துள்ள நிலையில் இன்று 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். 39,041 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 58,189 பேர் 28 நாள் தனிமை முடிந்தவர்களாக உள்ள நிலையில் 162 பேர் தனி வார்டில் […]
அம்பேத்கார் பிறந்த நாளை பொதுமக்கள் வெளியே கொண்டாடக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது. நாளுக்குநாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகள் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மூன்றாவது மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. இந்நிலையில்க் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடு விதித்துள்ளது. குறிப்பாக […]
சென்னையில் மேலும் ஒரு மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பழைய வண்ணாரப்பேட்டையில் பணியாற்றி வரும் மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 3ம் தேதி வரை மருத்துவமனையில் பணியாற்றிய இந்த பெண் மருத்துவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பெண் மருத்துவரின் தந்தைக்கு கடந்த 4ம் தேதி […]
ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் வேமாக பரவி வருகின்றது. இதுவரை தமிழகத்தில் 911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 44 பேர் குணமடைந்த நிலையில், 9 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது […]
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 27 வயது பெண் மருத்துவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 3ம் தேதி வரை மருத்துவமனையில் பணியாற்றிய இந்த பெண் மருத்துவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பெண் மருத்துவரின் தந்தைக்கு கடந்த 4ம் தேதி கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, இருவரும் […]
சென்னையில் கொரோனா அறிகுறியுடன் உள்ள 661 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என்று மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோன வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ல் இருந்து 834 ஆக அதிகரித்துள்ளது. இதில் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் […]
144 தடை உத்தரவால் புனித வெள்ளியான இன்று தேவாலயங்களில் மக்கள் யாருமின்றி பிரார்த்தனை நடைபெறாமல் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னை சின்னமலை பங்குச்சந்தை லாரன்ஸ் ராஜ் இணையதளம் வாயிலாக மக்களுக்கு போதனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த கொடிய கொரோனா வைரஸ் தொற்று மக்களை விட்டு நீங்குவதற்கு நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திப்போம் என தெரிவித்தார். உலகமெங்கும் இன்றைக்கு புனித வெள்ளியை கொண்டாடி கொண்டிருக்கிறோம். கோடிக்கணக்கான மக்கள் இந்த புனிதமான நாளில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இயேசு […]
சென்னையில் நேபாளத்தை சேர்ந்த காவலாளியின் மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்னன் பகதூர் என்பவர் சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். அதே குடியிருப்பில் மனைவியுடன் தங்கி உள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் காவலாளி அறையில் இருந்த போது, வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவியிடம் மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுதொடர்பாக புகாரின்பேரில் […]
சென்னை கே.கே.நகரில் மளிகைக்கடைக்காரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த நபரின் கடைக்கு சென்றவர்களின் விவரங்கள் குறித்து அரசு சேகரித்து வருகின்றனர். மேலும், கடைக்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்துமாறும், தானாக முன் வந்து சோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா காரணமாக உலகமே பேரழிவின் விளிம்பில் இருக்கிறது. இந்த நோயின் பரவலை தடுக்கும் வகையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு […]
காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருபவர்களுக்காக காவல்துறை சார்பில் கிருமிநாசினி சுரங்கப்பாதை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில, மத்திய அரசுகள் எடுத்து வருகின்றன. அரசு அலுவலகங்களிலும் கிருமிநாசினி மருந்து வைத்து வருபவர்களின் கைகளில் தெளித்து உள்ளே அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணியில் இருக்கும் காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக அவர்களே முககவசம் மற்றும் கிருமிநாசினி போன்றவற்றை தயாரித்து பணியிலிருக்கும் […]
கோடை காலத்திலும் தமிழகத்தில் பல இடங்களில் மழை பொழிந்து மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சாவூரில் கடந்த 5 ஆம் தேதி காலை ஒரு மணி நேரம் வரை நல்ல மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அமைந்த தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்று […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை மேற்கொண்ட தமிழக முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சமூக இடைவெளியை கடை பிடிப்பதற்காக காய்கறிகள் மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு தடுப்பு நடவடிக்கைக்கான அனைத்து மருத்துவ உபகரணங்களும் கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் இன்னும் 344 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் […]
அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்து பேசின் பிரிட்ஜ் பகுதியில் தங்கி இருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்ற்று குஜராத் சென்று அங்குள்ள அகமதாபாத்தில் இருந்து மதப்பிரச்சாரம் செய்ய சென்னை வந்த 39 பேர் தேனாம்பேட்டை, சுளை , பெரியமேடு பகுதிகளில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தாகவும், கொரோனா அறிகுறி தொடர்பாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தாமல் தொடர்ந்து மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானதையடுத்து அவர்களை கண்டறியக்கூடிய பணியில் காவல்துறையினர் ஈடுபட்டார்கள். இந்நிலையில் 19 பேரை […]
சென்னை அயனாவரத்தில் மதுகிடைக்காததால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொரோனா வைரஸ் தொற்று காட்டு தீயைப்போல வேகமாக பரவி வருவதன் காரணமாக இந்தியா முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மளிகை கடைகள், பால், இறைச்சி உட்பட அத்தியாவாசியப் பொருள்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதில் மதுபான கடைகளும் அடங்கும்.. இதனால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மது கிடைக்காத விரக்தியில் பலரும் இருந்து வருகின்றனர். மதுவுக்கு […]
சென்னையில் நடமாடும் மளிகை, காய்கறி அங்காடி திட்டத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் நடமாடும் காய்கறி மற்றும் மளிகை விற்பனை அங்காடியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக 5 ஆயிரம் தள்ளு வண்டிகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5,000 மூன்று சக்கர தள்ளுவண்டி, 2,000 சிறிய மோட்டார் வாகனங்கள் மூலம் மளிகைப்பொருட்கள், காய்கறிகள் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஏப்., […]
சென்னையில் 156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 48 பேருக்கு குறைவான உறுதி செய்யப்பட்டதால் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் 8 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா பாதித்த 21 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் இதன் […]
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்பட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், தமிழகத்தில் 30 -40 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்று […]
சென்னை மாநகரம் முழுவதும் உள்ள வீடுகளில் 4வது நாளாக களப்பணியாளர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இருமல், சளி அறிகுறிகளுடன் 435 பேர் கண்டறியப்பட்டுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் அளித்துள்ளார். அதிக அறிகுறிகளுடன் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள். 435 பேரில் 106 பேருக்கு சாதாரண அறிகுறிகள் தான் காணப்படுகின்றது. மற்றவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவித்துளளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்டு […]
கொரோனாவின் காரணமாக உயிரிழந்த நபரை மாரடைப்பால் இறந்தார் என்று இறுதிச்சடங்கை முடித்த சம்பவதிற்கு மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் பீலி ஜமால் முஹம்மது. தொழிலதிபரான இவர் சென்னையில் மண்ணடியில் வசித்து வந்துள்ளார். தொழில் தொடர்பாக தாய்லாந்து மற்றும் துபாய் சென்று சென்னை திரும்பிய ஜமாலை விமான நிலையத்தில் கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதித்த அதிகாரிகள் அவரை வீட்டில் தனிமையில் இருக்கவேண்டும் என முத்திரையிட்டு அனுப்பினர். கடந்த 2ஆம் தேதி கடுமையான […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு கபசுர நீரை அருந்த அறிவுரை வழங்கியுள்ளது. கபசுரக் குடிநீர் சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட 15 பொருட்கள் சேர்த்து இயற்கை முறையில் தயாரிக்கப் படுவதால், பக்கவிளைவுகள் இல்லாததால் இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் சென்னை பாரிமுனை ராசப்பா தெருவில் செயல்பட்டு வரும் நாட்டு மருந்து கடைகளில் தயாரிக்கப்படும் கபசுர குடிநீர் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் […]
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 690ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் தான் அதிகம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இன்று ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் […]
தமிழகத்திலேயே சென்னையில் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நிலையில், சென்னையில் 3 வார்டுகளுக்கு ஒரு மருத்துவர் குழு வீதம் அமைக்கப்பட்டு உள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பபட்டவர்களின் எண்ணிக்கை 621ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திருவொற்றியூர் பகுதியில் கொரோனா அறிகுறி உள்ளதா என்று கண்டறிய வீடு, வீடாக […]
சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 110ஆக அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில்,தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571இல் இருந்து 621 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்தவர்களை தவறாக சித்தரிக்க கூடாது என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் 91, 851 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 205 […]
சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் மலேசியா செல்ல முயன்ற 10 பேர் மீது 8 பிரிவின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற 10 பேரும் மலேசியா செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகளுக்கு சென்ற விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக மலேசியா நாட்டவா்கள் பலா் இந்தியாவில் சிக்கியுள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக அளவு மலேசியா்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், […]
சென்னையில் விதிகளை முறையாக பின்பற்றாமல் இறைச்சி விற்பனை செய்த கடைகளுக்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவையான மளிகைக்கடைகள், பால், இறைச்சி கடை மட்டுமே திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விதிகளை பின்பற்றாமல் இறைச்சி விற்பனை செய்து வந்த கடைகள் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை […]
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது மக்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485ஆக […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மூலமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் நடந்த மதக்கூட்டமும் ஒரு காரணமாக தான் திகழ்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு (மார்ச் 8,9,10 உள்ளிட்ட தேதிகளில்) டெல்லியில் மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஜிபூட்டி, இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, பிஜி, பிரான்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து 250க்கும் […]
சென்னை கொடுங்கையூரில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் இளைஞர்களை பிடித்த காவல்துறையினர் உறுதிமொழி எடுக்க வைத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சாலையில் சுற்றித் திரிந்த இளைஞர்களை விசாரித்த காவல்துறையினர் அவர்கள் காரணமின்றி வெளியில் சுற்றியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை வீட்டிலிருந்து வெளியே வர மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வைத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பினார். திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் முக […]
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் 27 மாவட்டங்களில் 411 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. #Update Here is the Zone-wise Breakup of Confirmed Cases in Chennai.#Covid19Chennai#GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/dRZDjCroXz — Greater Chennai Corporation (@chennaicorp) April 3, 2020 பகுதிகள் முழுமையாக கண்காணிக்கப்பட […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் தப்பிச்சென்றதாக காவல்துறையிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இன்று மதியம் சரியாக 12 மணியளவில் இருவர் உடல்நல குறைவு காரணமாக ஆய்வகத்தில் மார்பக ஸ்கேன் செய்துள்ளனர். மேலும் பல சோதனைகள் மேற்கொண்டதில் அவர்களுக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அறிந்த இரு நபர்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து எந்த வித தகவலும் இன்றி வெளியே சென்று விட்டனர். இதையடுத்து […]
சென்னையில் நாளை முதல் இறைச்சி கடைகள் என்பது மூடுவதற்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் நாளை முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை அனைத்து இறைச்சி கடைகளையும் மூடப்பட வேண்டும் என்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இறைச்சி கடைகள் மூடப்பட்டிருக்கிற நிலையில் தற்போது சென்னை மாவட்டத்தில் இருக்கும் அனைத்து வகை இறைச்சி கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை […]
சென்னையில் 24 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்ட்டுள்ளதை பொது சுகாதாரத் துறை உறுதி செய்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஊரடங்கு உத்தரவுக்கு முன்பாக சென்னை விமான நிலையத்திற்கு ஓமன், அயர்லாந்து, லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், உள்ளிட்ட பல்வேறு பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்களை சோதனை செய்ததில் கிட்டத்தட்ட 24 ஆயிரம் பேரை பொது சுகாதாரத் துறையும், சென்னை மாநகராட்சியும் தனிமைப்படுத்தி உள்ளது. அதிலும் நோய் தொற்று உள்ள […]
சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால் சென்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள லைப்ஸ்டைல் […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா […]
மார்ச் காலை 6 மணி முதல் ஏப்ரல் 1ம் தேதி காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 144 தடை உத்தரவை ஏப்., 14ம் தேதி வரை நீடித்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னை நகருக்குள் காரணமின்றி சுற்றி திரியும் வாகனங்களை தடுக்க காவல்துறை தீவிரப்பணியில் ஈடுபட்டுள்ளது. நகரில் உள்ள 169 சோதனை சாவடிகளில் வாகனங்களின் எண், பெயர்களை போலீசார் பதிவு செய்துள்ளனர். முன்னதாக சென்னை […]
சென்னையில் இருந்து வெளியூர் செல்ல விரும்புவோர் துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று முதல் அனுமதி கடிதத்தை பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ரிப்பன் மாளிகையிலுள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கடிதம் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் பாஸ் வழங்கப்படும். சமூக விலகலை பின்பற்றி கடிதத்தை பெற்று கொள்ளலாம் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் […]
சென்னையில் இருந்து டெல்லிக்கு பார்சல் விரைவு ரயில் ஏப்.1 மற்றும் 8ம் தேதிகளில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57லிருந்து 67ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. புதிதாக சென்னையில் 5 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பரவக் கூடிய பகுதிகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், ஆலந்தூர், போரூர், கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகம் பரவக் […]
தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் இருந்து முக்கிய பணிகளுக்காக வெளியூர் செல்ல விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் […]
சென்னையில் மனநலம் பாதித்த நபர் ஒருவர், தனது மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை தட்டான்குளம் பகுயைச் சேர்ந்தவர் ரவி. இவர் தனது மனைவி சாவித்திரி மற்றும் தாயாருடன் ஒன்றாக வசித்து வருகின்றார். ரவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அதனால் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் ரவி இன்று காலை வீட்டு வாசலில் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்துள்ளார். இதனை பார்த்த ரவியின் தாயார் சாவித்திரி எங்கே இருக்கிறாள் என்று […]
அவசர பயணத்துக்கு உதவ கட்டுப்பாடு அறை உருவாக்கப்பட்டுள்ளது என்று சென்னை காவல்த்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் சமூக விலகலை கடைபிடிக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 42 பேர் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் […]
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிழகத்தில் ஒருவர் இறந்துள்ள நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிழந்தவர்கள் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ள நிலையில் 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் […]
நான் வீட்டில் தனிமைப்படுத்தியதாக வெளியான செய்தி உண்மையில்லை என நடிகர் கமல் விளக்கம் அளித்துள்ளார். ஆழ்வார்பேட்டை முகவரியில் சில ஆண்டுகளாக வசிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. வரும் முன் தடுக்கும் நடவடிக்கையாக 2 வாரங்களாக நானே தனிமைப்படுத்தி கொண்டேன். அன்புள்ளம் கொண்ட அனைவருமே அவ்வாறே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார். முன்னதாக நடிகர் கமலஹாசன் தனிமையில் இருக்க வேண்டுமென அவர் வீட்டின் முன் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது. ஏப்ரல் 6ம் தேதி வரை அவரை […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை மேலும் 3 அதிகரித்து 38ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் குணமாகி விட்டதாக தமிழக அமைச்சர் தெரிவித்திருந்தார். இதுவரை கொரோனா வைரசால் 35 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை […]
சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் உள்ள எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி யில் உள்ள எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. நான்குமணி நேரமாக தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.தீயை அணைப்பதற்கு கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைப்பதற்கு போராடி வருகின்றனர். தொடர்ந்து எரிந்து வரும் தீயை அணைப்பதற்கு வீரர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். மிக பயங்கரமாக தீ கொழுந்து விட்டு எரிவதால் கரும்புகை […]
தாம்பரம் அருகே தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த திருடன் 70 நாள்கள் காவல் துறையினரிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்துள்ள நிலையில், பிடிபட்ட பின் அவனது வாக்குமூலத்தைக் கேட்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், சேலையூர், சிட்லபாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 மாதங்களுக்குள் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இந்த தொடர் கொள்ளை சம்பவத்தால், அப்பகுதி மக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்வதற்கே பயப்பட்டுள்ளனர். […]