தமிழகத்தில் கடந்த வாரம் புயல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனால் கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாமல் போனது. அதன் காரணமாக பல்கலைக்கழகம் விடுமுறை தினத்தன்று நடத்தப்பட இருந்த தேர்வுகளை ஒத்திவைத்தது. அந்த தேர்வுகளுக்கான மாற்றுத் தேதி வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது சென்னை பல்கலைக்கழகம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளுக்கான மாற்று தேதியை வெளியிட்டுள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு ஜனவரி […]
Tag: செமஸ்டர் தேர்வுகள்
மாண்டஸ் புயல் காரணமாக அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலையில் நாளை நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் எதிரொலி காரணமாக அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை பல்கலைக்கழகத்திலும் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இரண்டுக்குமான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், நாளை புதுச்சேரி, ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு சென்னையிலிருந்து தற்போது 520 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயலானது இன்று மாலை 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வலுப்பெரும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக டிசம்பர் 8-ம் தேதி முதல் அடுத்த 4 […]
தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் காரணமாக பள்ளி,கல்லூரிகள் கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் மூடப்பட்டு, ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடைபெற்று வந்தன. அதன்பின் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் நேரடி வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை மார்ச் 2-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது, அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்த […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆண்டு கட்டாயம் மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று உயர் கல்வித் துறை திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு […]
தமிழகத்தில் அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் இனி ஆஃப்லைன் எனப்படும் நேரில் மட்டுமே நடைபெறும் என்று உயர் கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.. எனவே பொறியியல் கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை கல்லூரிகளுக்கும் நேரடியாகவே இனி தேர்வுகள் நடைபெறும்.. ஆன்லைனில் தேர்வுகள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி மதுரையில் மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், திட்டவட்டமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை […]
தொழில்நுட்ப பிரச்சினையால் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல், மே மாதம் நடைபெற வேண்டிய இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் கொரோனா ஊரடங்கினால் தள்ளிவைக்கப்பட்டு நேற்று முதல் ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இருமுறை நடைபெற்ற மாதிரி தேர்வுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்து நேற்று ஆன்லைன் தேர்வு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 90% மாணவர்கள் ஆன்லைனில் […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் இன்று முதல் ஆரம்பம் ஆகின்றன. கொரோனா காலகட்டத்தில் பள்ளிகளில் தேர்வுகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக இறுதித் தேர்வுகள் நடைபெறும் என அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் இன்று தொடங்கப்பட்டன. முதல் தடவையாக ஆன்லைனில் நடைபெறும் இந்தத் தேர்வுகள் ஒரு மணிநேரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவாறு […]
செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் நடத்த உயர்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என அரசு தெரிவித்திருந்தது. அந்த வகையில் அது குறித்த அறிவிப்பை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தற்போது வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் இருக்கும் மாணவர்களின் நலனுக்காக இந்த ஆன்லைன் தேர்வு என்பது அனுமதிக்கப்படுகிறது. ஆனால் மற்ற மாணவர்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்படும். எந்த தேர்வு வைக்கலாம்? ஆன்லைனா? அல்லது ஆப்லைனா? என்பது குறித்து […]
கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து உயர் கல்வித்துறை அரசு ஆணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் அறிவிப்பில் தொடர்ந்து அரசாணை மற்றும் முந்தைய தேர்வுகளில் இருந்து எவ்வாறு மதிப்பெண் கணக்கிடுவது என்பதற்கான அறிவிப்புகளை உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். முந்தைய செமஸ்டர் தேர்வுகலிருந்து 30வது விழுக்காடு மதிப்பெண்கள் இன்டர்ணல் மதிப்பெண்களில் இருந்து 70வது விழுக்காடு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை பாடங்கள் மற்றும் மொழிப் பாடங்களுக்கு எந்த அடிப்படையில் […]
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. செய்முறை தேர்வு உள்மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பீங்க வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் காரணமாக இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், 1ம் வகுப்பு முதல் 10ம் […]
செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்தோ, ரத்து செய்வது குறித்தோ எந்த முடிவும் எடுக்கவில்லை என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகள், கொரோனா சிறப்பு மையங்களாக செயல்பட்டு வருகின்றன. எனவே தற்போதைக்கு தேர்வு நடத்த வாய்ப்பில்லை. நிலைமை சீரடைந்த பிறகே, தேர்வுகள் நடத்துவது அல்லது ரத்து செய்வது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில், கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. மேலும், கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில், […]
கொரோனா முடிந்த பின்னரே செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் முடிவு எடுக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார். இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து தெளிவான விவரம் கிடைத்தால் மட்டுமே தமிழக அரசு முடிவெடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசின் கால அவகாசத்தை பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை என தெரிவித்துள்ளார். சென்னையில் அண்ணா பல்கலை கழகம் உட்பட நாடு முழுவதும் […]
பொறியியல் மாணவர்களுக்கான அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல், மே-ல் தேர்வுகள் நடக்காது என தமிழக அரசு நேற்று அறிவித்ததை தொடர்ந்து அண்ணா பல்கலைக் கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலை. தெரிவித்துள்ளது. நேற்று உயர்கல்வித்துறை கல்லுரிகளில் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான தேர்வுகள் அடுத்த செமஸ்டரின் தொடக்கத்தில் நடத்தப்படும் என அறிவித்தது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு […]