சிறுமியிடம் நகையை பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவிளந்தூர் ராதாநல்லூர் தெருவில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7 வயது உடைய அபிக்ஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் தனது மகளுடன் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் மாமனார் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் அரசு பேருந்தில் மயிலாடுதுறைக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலை பேருந்து நிறுத்தத்தில் அபிக்ஷாவை கையில் பிடித்துக் கொண்டு தினேஷ்குமார் இறங்கியுள்ளார். […]
Tag: செயின் பறிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன். இவர் தி.மு.க மாவட்ட கவுன்சிலராக இருக்கிறார். இவருக்கு சொந்தமாக திருப்போரூர் கந்தசுவாமி கோயில் சரவண பொய்கைகுளம் அருகில் 2 தளத்துடன் வீடு மற்றும் வணிகவளாகம் இருக்கிறது. இதற்கிடையில் இவரது மனைவி மேகலா உடல்நிலை சரியில்லாத காரணத்தால், திருப்போரூர் வீட்டில் 2வது தளத்தில் ஒரு மாதமாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்றுகாலை மேகலா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது 40 […]
சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கடனை திரும்பி அடைக்க பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற என்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்ச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மகளுடன் கடந்த 5 ஆம் தேதி சென்னை மேற்கு மாம்பழத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவரும் மண்டபத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபர் தமிழ்ச்செல்வி […]
மயக்கப்பொடி கலந்த தண்ணீரை தெளித்து மூதாட்டியிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி கிராமத்தில் கமலம்மாள்(80) என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது கணவரின் ஓய்வூதியத்தை பெறுவதற்காக ஜோலார்பேட்டையில் இருக்கும் வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த காரில் இருந்து இறங்கிய பெண் கமலம்மாவிடம் பேச்சு கொடுத்தபடி வீட்டிற்குள் சென்றுள்ளார். இதனை அடுத்து அந்தப் பெண் […]
தண்ணீர் பாட்டில் வாங்குவது போல நடித்து வாலிபர்கள் மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் ஞானப்பிரகாசம் குளக்கரை தெருவில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி(60) என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டிற்கு முன் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மூதாட்டியின் கடைக்கு மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் சென்றுள்ளனர். அவர்கள் 100 ரூபாய் கொடுத்து மேரியிடம் தண்ணீர் பாட்டில் வாங்கியுள்ளனர். […]
போலீஸ்காரரின் மகளிடமே செயினை பறித்துச் சென்ற கோலமாவு வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள வடபழனியில் இருக்கும் பக்தவச்சலம் காலனியில் வசித்து வருபவர் தாமோதரன். இவர் மத்திய ரிசர்வ் படை போலீசாக பணியாற்றி வருகின்றார். இவருக்கு அபிராமி என்ற மனைவியும் மற்றும் மூன்று வயதில் ரித்திகா என்ற குழந்தை இருக்கின்றது. இந்த நிலையில் நேற்று மாலை வீட்டு வாசலில் ரித்திகா, குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற கோலமாவு வியாபாரி ரித்திகாவிடம் நைசாக பேச்சு […]
பஸ்ஸில் அமர்ந்து கொண்டிருந்த சிறுவனிடம் 2 1/4 பவுன் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறிவேப்பிலான் கேட் பகுதியில் வாழ்ந்து வருபவர் 61 வயதுடைய சோலையம்மாள். இவர் தனது பேரனான சாய்சேஷனுடன் புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் டவுன் பஸ்ஸில் அமர்ந்திருந்தபோது பேரனின் கழுத்தில் இருந்த 2 1/4 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து நகர போலீஸ் நிலையத்தில் சோலையம்மாள் புகார் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு […]
காஞ்சிபுரம் அருகே செயின் பறிப்பு கொள்ளையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் என்கவுண்டர் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பென்னலூர் பகுதியை சேர்ந்த இந்திரா என்ற பெண் நேற்று மாலை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு வடமாநில இளைஞர்கள் இந்திராவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓட முயன்றனர். இதையடுத்து இந்திரா அலறி சத்தம் போடவே அப்பகுதியில் இருந்த மக்கள் அவரை பிடிக்க முயன்றனர். […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவில் தேரோட்டத்தின் போது மூதாட்டியின் கழுத்திலிருந்த சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாபாரம் பட்டியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராணி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் இவர்கள் குடும்பத்துடன் நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை காணச் சென்றுள்ளனர். அப்போது அங்கு கூட்ட நெரிசலை பயன்படுத்தி ராணியின் கழுத்திலிருந்த 3 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இதுக்குறித்து […]
மொபட்டில் சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேச்சேரி பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த செவிலியிராக பணிபுரியும் ஆர்த்தி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் ஆர்த்தி மேச்சேரி- ஓமலூர் சாலையில் மொபட்டில் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஆர்த்தி கழுத்திலிருந்த 5 3/4 பவுன் […]
டெல்லியில் செயினை பறிக்க வந்த திருடனை தடுத்ததால் அப்பெண்ணை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தனியாக நடந்து செல்வது என்பது மிகவும் ஆபத்தான விஷயமாக உள்ளது. ஏனெனில் ஒரு பெண் சாதாரணமாக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று வரும் மர்ம நபர்கள் செயினை பறித்து செல்கின்றனர். இதனால் பல உயிர் சேதமும் நடந்து வருகின்றது. அதுபோன்றுதான் டெல்லியில் ஆதர்ஷ் நகர் பகுதியில் நேற்று இரவு […]
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த 16 வயது சிறுவன் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் கடந்த ஜனவரி 19ஆம் தேதி வாசுகி நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு ஓடியுள்ளார். இதைத்தொடர்ந்து ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் […]
கோயம்பத்தூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்துச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த 58 வயதுடைய விஜயலட்சுமி என்ற பெண் கோவை காரமடை காந்திநகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் விஜயலட்சுமியின் கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை அறுக்க முயற்சி செய்தனர். 5 பவுன் […]
செங்கல்பட்டில் வீட்டு முன்பு நின்ற பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மண்ணிவாக்கம் ராம் நகரில் வசித்து வருபவர் லட்சுமி. 53 வயதுடைய இவர் நேற்று காலை தனது வீட்டு பக்கத்தில் நின்று கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில் மோட்டார் பைக்கில் வந்த 2 நபர் லட்சுமி கழுத்தில் உள்ள 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று உள்ளனர். இதை குறித்து லட்சுமி […]
சென்னையில் தொடர்ந்து பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் ஆர்.கே மடம் சாலையில் சென்ற பத்தாம் தேதியன்று நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண்ணிடம் ,இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து கொண்டு வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் கழுத்தில் அப்பெண் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றார்கள்.இதனைத் தொடர்ந்து அந்த பெண் உடனடியாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் தனிப்படை ஒன்றை […]