நடிகர் நாசர் சினிமாவில் இருந்து விலகுவதாக செய்தி பரவி வருகின்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நாசர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான கல்யாண அகதிகள் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், டப்பிங் ஆர்டிஸ்ட், நடிகர் என தனக்குள் பன்முக தன்மைகளை கொண்டுள்ளார். இந்த நிலையில் நாசர் சினிமாவில் இருந்து விலக இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. இவர் உடல் நிலையை கருத்தில் கொண்டு […]
Tag: செய்தி
அசைவ பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக மீன்பிடி தடைக்காலம் உள்ளிட்ட காரணங்களால் மீன் விலை உச்சத்தில் இருந்தது. தற்போது மீன் பிடி தடை காலம் முடிவடைந்து மீனவர்கள் மீண்டும் பழையபடி மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளதால் இன்று மீன் விலை சற்று குறைந்துள்ளது. சென்னை காசிமேடு உள்ளிட்ட தமிழகத்தின் பல மார்க்கெட்டுகளில் மீன் விலை குறைந்து காணப்பட்டது. அதன்படி சராசரியாக ஒரு கிலோ நெத்திலி 150 ரூபாய்க்கும், இறால் – நண்டு ரூபாய் […]
செய்தி விநியோகத்தை விரிவுபடுத்துவதற்கு 5ஜி தொழில்நுட்பம் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசும்போது, இன்று செய்தி ஊடகங்கள் தொழில்நுட்பம் சார்ந்தது எனவும், செய்தி விநியோகத்தை விரைவுபடுத்த 5ஜி தொழில்நுட்பம் தயாராக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் செய்தி ஊடகங்களை விரைவான புதுப்பித்தலுக்கு சாட்சியாக இருக்கிறது. மொபைல் மூலமாக சாத்தியமான இணைய வளர்ச்சி ஊடகத்துறைக்கு புத்துயிர் அளித்து இருக்கின்றது. 5ஜி தொழில்நுட்பம் மூலம் செய்தி […]
உக்ரைன் போர் பற்றி செய்தி வாசித்த போது செய்தி வாசிப்பாளர் தடுமாறி அழுத காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 59 நாளாக போர் தொடுத்து வருகின்றது. இந்த நிலையில் உக்ரைனில் உள்ள புச்சா பகுதியின் மீது தாக்குதல் நடத்திய வீரர்களை பாராட்டி ரஷ்ய அதிபர் புதின் கவரப்படுத்தினார். இதுதொடர்பான செய்தி ஜப்பானை சேர்ந்த ஒரு செய்தி நிறுவனத்தில் ஒளிபரப்பாகியுள்ளது. அப்போது அந்த செய்தியை வாசித்த செய்தி வாசிப்பாளர் யூமிகோ […]
உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதாக ரஷ்ய ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை அமெரிக்கா மறுத்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான சண்டை பங்காளி சண்டை போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் இரு நாட்டிற்கும் இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் […]
ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு கருத்துக்களை வெளியிட்டு வந்த ஸ்டாண்ட் நியூஸ் எனப்படும் இணையதளம் முடக்கப்பட்டது. ஹாங்காங்கின் ஸ்டாண்ட் நியூஸ் இணையதளம் முடக்கப்பட்டதை தொடர்ந்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனியும் இதனை நடத்த முடியாது எனவும், நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் விரைவில் பணி நீக்கம் செய்யப்படுவார் எனவும் கூறியுள்ளது. முன்னதாக இந்நிறுவனத்தின் ஆசிரியர்கள் 6 பேர் திடீரென கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜனநாயக கருத்துக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டு வந்த ஆப்பிள் டெய்லி […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சந்தைகளில் காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. காய்கறிகளை வாங்குவதற்கு கூட மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். பெருமழை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பூக்களின் விலையும் இரண்டு மடங்கு உயர்ந்து விற்பனையாகி வருகின்றது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ விலை நான்காயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் […]
தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அது குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இதுபற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். […]
நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஆதார் மற்றும் பான் அட்டையை இணைப்பதற்காக வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. வங்கி வசதியைப் பயன்படுத்த வேண்டும் என்றால், தங்கள் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “வாடிக்கையாளர்கள் 2021 செப்டம்பர் 30-க்கு முன்னர் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இதைச் செய்யாவிட்டால், […]
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் தங்கத்தின் விலையைக் காட்டிலும் பெட்ரோல் டீசலின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. வரலாறு காணாத வகையில் லிட்டருக்கு பெட்ரோல் ரூபாய் 100க்கு மேல் சென்றுள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இதுபோன்ற சூழலில் பெட்ரோல் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து விலை […]
சென்னையில் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. அவற்றை நம்ப வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் சென்னையில் அதிக அளவில் கொரோனா தொற்று பரவிவருகிறது. இதன் காரணமாக சென்னை மாநகராட்சியில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் […]
பெங்களூரு மாநிலத்தில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஒரு இளைஞரை ஒரு பெண் சாலையில் அடித்து உதைத்த வீடியோ வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் நரகில் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வீரையா என்பவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் ஆபாசமாக குறும்செய்தி அனுப்பி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் இன்று அவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்தப் பெண் […]
ஆஸ்திரேலிய பயனாளர்கள் இனி செய்திகளை படிக்க முடியாது என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா பயனாளர்கள் சமூக வலைத்தளங்களில் செய்தியை படிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகையால் இன்று முதல் ஃபேஸ்புக்கில் எந்த ஒரு செய்தியையும் படிக்கவும், பகிரவும் ஆஸ்திரேலியா பயனர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா பத்திரிகையாளர்கள் ஃபேஸ்புக்கில் செய்திகளை வெளியிடலாம். ஆனால் அதன் லிங்குகள் மற்றும் பதிவுகளை ஆஸ்திரேலிய பயனர்களால் பார்க்கவும், […]
வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பயணிகள் ரயில் சேவைகள் தொடங்கும் என்ற செய்தி முற்றிலும் போலியானது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அனைத்து பயணிகள் ரயில்களும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று செய்தி வெளியானது. ஆனால் இதனை இந்திய ரயில்வே மறுத்துள்ளது. இதுகுறித்து இந்திய ரயில்வே தெரிவித்ததாவது, வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்படும் என்று செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இது போலியான […]
மொபைல் செயலியில் செய்தி படித்தால் அதற்கு பணம் கொடுப்பதாக கூறி சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக ஈரோடு மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அபெக்ஸ் நிறுவனம் மொபைல் செயலியில் செய்திகளைப் படித்தால் பணம் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளது. இதனை உண்மை என்று நம்பி தமிழகம் முழுவதிலும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் இதில் முதலீடு செய்துள்ளனர். இதனால் அந்நிறுவனம் 100 கோடி ரூபாய் வரை முதலீடு பெற்றுள்ளதாக […]