விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் கீழ்பாக்கம் கல்லூரி சாலை மற்றும் கல்லூரி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, “விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு கலைக் கல்லூரிக்கும், கல்லூரி சாலைக்கும் இடையே தனிநபர் ஒருவருக்கு சொந்தமான காலிமனை அமைந்துள்ளது. அந்த காலி மனையில் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு […]
Tag: செல்போன் கோபுரம்
மதுரை மாவட்டத்தில் உள்ள கூடல்புதூரில் அமராவதி தெருவில் அமைக்கப்பட்டிருந்த பிரபல நிறுவனத்தின் செல்போன் கோபுரம் இரு தினங்களுக்கு காணாமல் போனதாக அந்நிறுவனத்தின் மேலாளர் முத்து வெங்கடகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது செல்போன் கோபுரம் திருட்டு போனது உறுதியாகியுள்ளது. இதையடுத்து செல்போன் கோபுரம் அமைத்துக் கொடுக்கும் ஒப்பந்ததாரர், இடத்தின் உரிமையாளர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒப்பந்ததாரர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் செல்போன் கோபுரம் கழற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் […]
செல்போன் கோபுர வசதி ஏற்படுத்தி தரக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள சித்தேரி மலைப் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் இருக்கின்றது. இங்கு எஸ். அம்மாபாளையம், சோலூர், மாங்கடை, ததுக்கனஅள்ளி, மண்ணூர் போன்ற மலை கிராமங்களில் செல்போன் கோபுர வசதி இல்லாததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தொடர்பை பெற முடியாத நிலையில் இருக்கின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் கொரோனா கால கட்டங்களில் ஆன்லைன் வகுப்பை பயன்படுத்தி கல்வி கற்க முடியவில்லை. […]
செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புதுநல்லூர் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு தனியார் நிறுவனம் முடிவு செய்தது. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ரேடியேஷன் அதிகமாக காணப்படும் என தெரிவித்து சோமங்கலம்-புதுநல்லூர் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் […]
செல்போன் கோபுரத்தை அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வசந்தபுரம் பர்மா காலனியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் தனியார் செல்போன் நிறுவனத்தில் கடந்த வாரம் செல்போன் கோபுரம் அமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து செல்போன் கோபுரம் அமைக்கும் பணி பாதியில் […]
செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பஷீராபாத் 4-வது தெருவில் ஷபீக் அஹமத் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள சொந்தமான காலி இடத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]