Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மேற்கூரையை பிரித்து இறங்கிய மர்ம நபர்கள்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் வலைவீச்சு….!!

போட்டோ ஸ்டூடியோ மற்றும் செல்போன் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் அங்கிருந்த பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோமனஅள்ளியில் நாச்சியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போன் கடை வைத்து  நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நாச்சியப்பன் கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது யாரோ மர்ம நபர்கள் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி செல்போன்கள், மெமரி கார்டுகள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது நாச்சியப்பனுக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“செல்போனில் ரொம்ப நேரம் பேசாத” மாணவியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

செல்போனில் பேசியதை கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியவலசு பகுதியில் அம்பிகா என்பவர் வசித்து வருகிறார். இவர் தறிப்பட்டறை தொழிலாளி ஆவார். இவரது கணவர் சிவா உடல் நலக்குறைவால் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களின் மகள் பாக்கியலட்சுமி அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் அம்பிகா தறிப்பட்டறைக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இதன் காரணமாக வீட்டில் மாணவி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டல்…. 2 பேரின் துணிச்சலான செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழ சித்தர்காடு பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் மாரியம்மன் கோவில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பிரபுவிடம் கத்தியை காட்டி மிரட்டி திடீரென அவரது செல்போன் மற்றும் 300 ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வரின் அதிரடி நடவடிக்கை…  டெல்லிக்கு பறந்த போன் கால்… பிரதமர் என்ன சொன்னார்…?

மழை, வெள்ளம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி டெல்லிக்கு போன் செய்து பேசி உள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூ,ர் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முதல்வர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “வடகிழக்கு பருவமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை நானும் எனது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” மாட்டி கொண்ட 2 பேர்… கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக செயல்களில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏ. ஒய்.ஏ.நாடார் சாலையில் லாட்டரி சீட் விற்பதாக கிடைத்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது காவல்துறையினர் பார்த்ததும் அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேரில் ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார். இதில் பிடிபட்ட நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் வடக்கு அலங்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பதும், […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“பலமுறை மனு கொடுத்தேன்” மிரட்டல் விடுத்த தொழிலாளி…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

செல்போன் கோபுரத்தில் ஏறி கட்டிட தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏலகிரியான்கொட்டாய் கிராமத்தில் கட்டிட தொழிலாளி விஸ்வநாதன் வசித்து வருகின்றார். இவர் தனது நிலத்திற்கு அனுபவ சான்று தரக்கோரி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விஸ்வநாதன் அனுபவ சான்று வழங்க வலியுறுத்தி அதியமான்கோட்டை காவல் நிலையம் அருகே உள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை […]

Categories
உலக செய்திகள்

பிரபல கோடீஸ்வர டிரக் மோதி பலியான சம்பவம்….டர்க்கின் டிரைவர் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியதே காரணம்….!!

கனடிய கோடீஸ்வரர் டிரக் மோதி பலியான விபத்தில் ட்ரக்கின் டிரைவர் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது விபத்திற்கு தான் காரணம் என தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி கனடாவை சேர்ந்த கோடீஸ்வரரான ரான் காரே லண்டனில் இருந்து பிரிட்டன் நோக்கி சென்ற பழங்கால கார்களின் அணிவகுப்பில் பங்கேற்றுள்ளார். அப்போது தவறுதலாக அவர் நெடுஞ்சாலை ஒன்றிற்கு சென்றுள்ளார். அவ்வாறு அவர் நெடுஞ்சாலையில் செல்லும் போது பின்னால் வந்த ட்ரக் ஒன்று அவர் காரின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டல்…. 2 பேரின் துணிச்சலான செயல்…. போலீஸ் விசாரணை….!!

டாஸ்மாக் ஊழியரிடம் பணத்தை பறித்துச் சென்ற கொள்ளையர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தம்பாடி ஜீவா செட் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கிரே நகர் பகுதியில் உள்ள ஒரு மதுபான கடையில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜ் வேலை முடிந்தவுடன் மதுபான கடையை பூட்டி விட்டு வசூலான பணத்தோடு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பெரிய வீரசங்கிலி அருகில் ஒரு கோழிப் […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கும் கொஞ்ச நேரம் செல்போன் கொடு”… மறுத்த இளைஞன்… சிறுவன் செய்த கொடூர காரியம்…!!!

செல்போன் தராததால் 23 வயது நண்பனை ஒரு சிறுவன் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் பர்சியோனியை என்ற பகுதியில் 23 வயதான பிரிதம் கமேட் என்பவருக்கு ஒரு சிறுவன் நண்பனாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த சிறுவனுடன் பிரிதம் கமேட் பேசிக் கொண்டிருந்தபோது அந்த சிறுவன் செல்போன் கேட்டுள்ளார். அதற்கு செல்போனில் சார்ஜ் இல்லை என்றும், நான் உனக்கு கொடுக்க மாட்டேன் எனவும் பிரீதம் கூற […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி… ஸ்மார்ட்ஃபோன் வாங்க ஆசைப்பட்டு… ‘பொண்டாட்டியை விற்ற புருசன்’… அதுவும் யாருக்கு தெரியுமா…??

ஒடிசா மாநிலத்தில் மனைவியை விற்று கணவன் ஸ்மார்ட்போன் வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் 17 வயது சிறுவனுக்கும், அதே பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது செல் போன் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட கணவன் தனது மனைவியை 55 வயதான முதியவருக்கு 1.8 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். அந்த பணத்தை வைத்து […]

Categories
உலக செய்திகள்

வயிற்றுக்குள் இதுவா இருந்துச்சு…? அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்…. பாதிக்கப்பட்டவர் சொன்ன சொல்….!!

கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நபர் செல்போனை முழுங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டின் Aswan நகரில் 33 வயதுள்ள ஒரு நபருக்கு கடந்த 6 மாதங்களாக சாப்பிட்ட உணவு எதுவும் ஜீரணமாகாமல், உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் கடும் வயிற்று வலியால் சிரமப்பட்ட அந்த நபர் உடனடியாக Aswan University மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அந்த நபர் தனக்கு தொடர்ந்து வயிற்று வலி இருப்பதாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் அந்த நபரின் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்க…. டி.வி., செல்போன் போன்ற பரிசை அள்ளுங்க… மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு…!!!

இம்பாலில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் குலுக்கல் முறையில் டிவி, செல்போன் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மட்டுமே தற்போது நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம். இதனால் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை மேம்படுத்த இம்பால் மேற்கு மாவட்ட […]

Categories
தேசிய செய்திகள்

என்னோட செல்போன குடுப்பியா? மாட்டியா…? “ஆத்திரத்தில் கணவனின் இதை வெட்டிய மனைவி”… பரபரப்பு சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் செல்போனுக்காக கணவனின் உதட்டை மனைவி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், பண்டாராவில் உள்ள மசால் என்ற இடத்தில் மேக்ராஜ் பாபுராவ் முல் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். மேக்ராஜின் செல்போன் உடைந்து போன காரணத்தினால் அவர் தனது மனைவி செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இரண்டு நாட்கள் ஆகியும் செல்போனை அவர் திரும்பி தராத காரணத்தினால் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி அரிவாளால் […]

Categories
உலக செய்திகள்

நாங்களும் காப்பாத்துவோம்ல…. செல்போனில் பட்ட குண்டு…. பிரபல நாட்டில் ருசிகர சம்பவம்….!!

பிரேசிலில் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய செல்போனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.  பிரேசிலில் பெட்ரோலினா  நகரில் நடந்த கொள்ளையின் போது, திருடன் ஒருவன் பெட்ரோ என்பவரை சுட்டுவிட்டு தப்பி ஓடினான். அப்பொழுது பெட்ரோ தனது பாக்கெட்டில் வைத்திருந்த 5 வருட  பழமையான மோட்டரோலா G5 செல்போன் அவர் மீது பாய்ந்த தோட்டாவை தடுத்து நிறுத்தியது. இதனையடுத்து இடுப்பில் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெட்ரோ சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

செல்போனை வாங்கிய தந்தை…. மாணவரின் விபரீத முடிவு…. ஈரோட்டில் சோகம்….!!

செல்போனை பார்ப்பதற்கு பெற்றோர் அனுமதிக்காததால் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் ராஜாஜிபுரம் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கு மோகன்ராஜ் என்ற மகன் இருந்தார். இதில் மோகன்ராஜ் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 பயின்று வந்தார். இதனையடுத்து கொரோனா பரவல் காரணமாக மோகன்ராஜ் கடந்த 2 வருடங்களாக பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் மாணவர்களின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

செல்போனால் வந்த தகராறு…. நண்பரின் வெறிச்செயல்…. கைது செய்த போலீஸ்….!!

செல்போன் தகராறில் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள தோப்பூர் பாறையூர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக இருந்தார். இவருடைய நண்பர் குமாரும் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வசித்து வருகிறார். இந்நிலையில் குமாரின் செல்போனை முருகேசன் பேசுவதற்காக வாங்கியுள்ளார். இதனையடுத்து குமாரிடம், முருகேசன் செல்போனை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் கடந்த 24-ஆம் தேதி குமார் முருகேசனிடம் தனது செல்போனை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“செல்போனில் ரொம்ப நேரம் பேசாத” மாணவியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள மோளையானூர் பகுதியில் பொன்முடி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு தாரகை என்ற மகள் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். இதில் மாணவி தாரகை இரவில் நீண்ட நேரம் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதனால் தாரகையே அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த தாரகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும்படி நின்ற மாணவர்…. வெளிவந்த பரபரப்பு தகவல்…. போலீஸ் நடவடிக்கை….!!

செல்போன் கடையின் மேற்கூரையை உடைத்து பொருட்களை திருடிச் சென்ற மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் கோட்டைக்காடு பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலம்பட்டி பகுதியில் சொந்தமாக செல்போன் கடை ஒன்று நடத்தி வருகிறார். கடந்த 20-ம் தேதி வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு மோகன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மோகன் மறுநாள் காலை மீண்டும் வந்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் மோகன் உள்ளே சென்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

செல்போனில் சிரித்து பேசிய இலக்கியா…. கத்தியால் குத்துப்பட்ட கணவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

செல்போனில் பேசியதை கண்டித்த கணவரை மனைவி கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பா டியை அடுத்த மசையன் தெரு காட்டூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். கிருஷ்ணகிரியில் இலக்கியா என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவில் திருவிழாக்களில் நடனமாடும் பெண்களுக்கு அலங்காரம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த பணிக்காக இலக்கியா எடப்பாடி பகுதிக்கு வந்தபோது பாலமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டு இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. ஆனால் காதலர்கள் வேறு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பேருந்தில் சத்தமிட்ட பெண்…. மடக்கி பிடித்த பயணிகள்…. கைது செய்த போலீஸ்….!!

பேருந்தில் பெண்ணிடம் செல்போனை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் கடையம் வடக்குத் தெருவில் கணேசன் மகள் முத்துலட்சுமி வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டிக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் முத்துலட்சுமி கையில் வைத்திருந்த செல்போனை திருடிச் சென்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி சத்தமிட்டுள்ளார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அந்த நபரை மடக்கிப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர வழக்குபதிவு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நம்பர் கேட்ட வாலிபர்…. தகராறில் நடந்த விபரீதம்…. போலீஸ் வலைவீச்சு….!!

வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழக்குறிச்சி வடக்கு தெருவில் அருண்குமார்-சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இதில் அருண்குமார் வெளிநாட்டில் பணி செய்து வந்துள்ளார். இவர்களது வீட்டிற்கு அருகில் கூலித் தொழிலாளியான ராஜாங்கம் மகன் விஜய் வசித்து வந்தார். இவர் அருண்குமாரின் மனைவி சத்யாவிடம் செல்போன் நம்பர் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனை அறிந்த சத்யாவின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஏரியில் மணல் அள்ளிவிட்டு…. அத்துமீறி செய்யல்பட்ட டிரைவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கி செல்போன் மற்றும் மோட்டார்சைக்கிளை டிரைவர் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பெரியாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவரும், திமுக ஒன்றிய பிரதிநிதியுமான சங்கர் பூலாம்பட்டி ஏரி வழியாக சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அப்பகுதியில் ஏரியில் மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியை சங்கர் நிறுத்தி டிரைவரிடம் விசாரித்துள்ளார். அப்போது லாரி டிரைவர் குண்டுகல்லூரைச் சேர்ந்த பெரிச்சி என்பவர் ஊராட்சி மன்றத் தலைவரை தகாத வார்த்தையால் திட்டியதோடு, அவரிடம் இருந்த செல்போன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஏதோ சத்தம் கேட்கு…. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

இரவில் வீட்டிற்குள் நுழைந்து செல்போன் திருடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மாங்குடி பகுதியில் நீலகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் வழக்கம்போல் நீலகண்டன் வீட்டில் உறங்கி கொண்டிருந்தார். இதனையடுத்து மாங்குடி பகுதியில் வசித்து வரும் ஜெய ஆனந்த் என்பவர் நீலகண்டன் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த செல்போனை திருடியுள்ளார். அப்போது எதோ சத்தம் கேட்டு விழித்த நீலகண்டன் வெளியே வந்து பார்த்தபோது அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன், அந்தோனி ஆகியோர் வீட்டின் முன்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருடிய 2 – பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர சோதனை மேற்கொண்டனர். அதன்பிறகு துரைசாமிபுரம் பகுதியில் வசிக்கும் அருண்குமார் மற்றும் சுந்தர்ராஜ் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து விசாரணையின் போது சுந்தர்ராஜ் மற்றும் அருண்குமார் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொடுக்கப்பட்ட புகார்…. 101 செல்போன்கள் மீட்பு…. அதிரடி காட்டிய போலீஸ்….!!

திருட்டுப்போன 101 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார். திருவாரூர் மாவட்டத்தில் பொது மக்களின் செல்போன் திருட்டு மற்றும் காணாமல் போனது குறித்து கடந்த 2020-21-ஆம் ஆண்டில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்படி செல்போன் திருட்டு தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் காவல்துறையினர் திருட்டுபோன செல்போனை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதில் திருட்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசி கொண்டிருக்கும்போது…. நிதி நிறுவன அதிபருக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

செல்போன் பேசி கொண்டிருக்கும்போது மாடியிலிருந்து தவறி விழுந்த நிதி நிறுவன அதிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நியூ தமிழ் நகர் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கரூரில் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வருகின்றார். இதனால் ராமலிங்கம் ஈரோடு மாவட்டம் திருவிக நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு அறை எடுத்து வாரத்தில் 2 நாட்கள் தங்கியிருந்து பணம் வசூல் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராமலிங்கம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

செல்போனால் வந்த தகராறு…. சிக்கி கொண்ட 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பிளஸ்-2 மாணவரை தாக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மட்டத்திலுள்ள வெண்டிபாளையத்தில் பிளஸ்-2 மாணவர் வசித்து வருகின்றார். இவர் கொல்லம்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றார். இவர் பள்ளிக்கூடம் முடிந்து கொல்லம்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 ஸ்கூட்டர்களில் வந்த 4 பேர் மாணவனிடம் செல்போன் கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனையடுத்து செல்போனை கொடுக்க மறுத்த மாணவனை அவர்கள் சோடா பாட்டிலால் தாக்கினார்கள். இதனால் படுகாயமடைந்த மாணவர் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. செல்போனை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து… கடும் எச்சரிக்கை….!!!!

அன்றைய காலத்தில் அம்மாக்கள் பிள்ளைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போது நிலாவை காட்டி தான் ஊட்டினார்கள். ஆனால் இன்று நடப்பது என்னவோ வேறு. செல்போனை கொடுத்து சாப்பாடு ஊட்டுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் பல்வேறு விளையாட்டுகள் ஓடியாடி விளையாடி மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். ஆனால் இன்று என்னவோ உட்கார்ந்த இடத்தில் இருந்தே அனைத்து விளையாட்டுகளையும் செல்போன் மூலமாக விளையாடுகிறார்கள். அதுமட்டுமன்றி குழந்தை பிறந்த சில நாட்களிலேயே செல்போனை பெற்றோர்கள் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் அதனால் பின்னரே ஏற்படும் ஆபத்துக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ப்ளூடூத் ஹெட்போன் பயன்படுத்துபவர்களுக்கு… அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்… கவனமா இருங்க…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ப்ளூடூத் ஹெட் போன் வெடித்து 28 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் சோமு நகரம் உதைப்புரியா என்ற கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ராகேஷ் குமார். இவர் போட்டித்தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதனால் செல்போனை பயன்படுத்தும் போது ப்ளூடூத் ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டு செல்போனில் பாடம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பாடம் படித்துக் கொண்டிருந்த போது ப்ளூடூதில் மின்சாரம் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.6 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை… ஓசூர் அருகே மர்ம கும்பல் கைவரிசை….!!!

ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் லாரியில் கொண்டு செல்லப்பட்டு இருந்த ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை ஏற்றிச்சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை கர்நாடக எல்லையான தேவ சமுத்திரம் என்ற இடத்தில் மடக்கிப் பிடித்த மர்ம கும்பல் ஓட்டுநரையும் உதவியாளரையும் தாக்கிவிட்டு செல்போனை கொள்ளையடித்து சென்று விட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காஞ்சிபுரத்திலிருந்து […]

Categories
பல்சுவை

பெற்றோர்களே உஷார்… குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க பேராபத்து… எப்படி தடுப்பது?…!!!

அன்றைய  காலத்தில் அம்மாக்கள் பிள்ளைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போது நிலாவை காட்டி தான் ஊட்டினார்கள். ஆனால் இன்று நடப்பது என்னவோ வேறு. செல்போனை கொடுத்து சாப்பாடு ஊட்டுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் பல்வேறு விளையாட்டுகள் ஓடியாடி விளையாடி மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். ஆனால் இன்று என்னவோ உட்கார்ந்த இடத்தில் இருந்தே அனைத்து விளையாட்டுகளையும் செல்போன் மூலமாக விளையாடுகிறார்கள். அதுமட்டுமன்றி குழந்தை பிறந்த சில நாட்களிலேயே செல்போனை பெற்றோர்கள் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் அதனால் பின்னரே ஏற்படும் ஆபத்துக்கள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

உங்கள் செல்போன்களில் ஸ்பீக்கர் சரியாக வேலை செய்யவில்லையா…? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க… நல்லா சத்தம் கேட்கும்…!!!

உங்கள் ஸ்மார்ட்போனில் பேசுவது சரியாக கேட்கவில்லை என்றால் இந்த டிப்ஸ்களை ட்ரை செய்தால் போது, நல்ல பலன் கிடைக்கும். சில சமயம் நமது போன்களில் பேசும்போது குரல் தெளிவாக கேட்காது. இந்தப் பிரச்சினை பலருக்கும் உள்ளது. இதை சரி செய்ய நாம் கடைகளுக்கு கொண்டுபோய் கொடுப்போம். இனி இந்த முறையை பயன்படுத்துங்கள். ஸ்மார்ட்போன்களின் குரல் தரத்தை மேம்படுத்த உங்கள் தொலைபேசியில் மைக்ரோபோன், போன்கள் மற்றும் ஸ்பீக்கர்களை சரிபார்க்க வேண்டியது அவசியம். அவை அழுக்காக இருப்பதால்தான் குரல் சரியாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“உங்க செல்போன்ல இன்டர்நெட் வேகமா தீந்து போகின்றதா”…? அதற்கு இதுதான் காரணம்… அப்ப உடனே இத செய்யுங்க…!!!

ஓப்போ, ரியல் மீ மற்றும் சாம்சங் போன்ற ஆண்ட்ராய்டு தொலைபேசியை பயன் படுத்துகிறீர்களா? உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் விரைவாக இயங்குவதற்காக அடிக்கடி புகார் வருகிறது. அதற்கு காரணம் உண்மையில் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இயங்கும் செயலிகள் இணையத்தை பயன்படுத்துகின்றனர். சுமார் 40 சதவீத மொபைல் டேட்டாவை நமக்கு தெரியாமல் பயன்படுத்துகின்றனர். நாம் ஸ்மார்ட்போன்களில் செயலியை பயன்படுத்தும் போது அல்லது பேக் பட்டனை அழுத்தும் போது திரையில் இருந்து வெளியேறுகிறோம். ஆனால் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அந்த செயலிகள் மூடப்படாமல் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… இந்த போன்ல இந்த அறிகுறி இருக்கா…? உடனே செக் பண்ணுங்க… ஹேக்கர்கள் வேலையாக இருக்கும்…!!!

இன்றைய சூழலில் மொபைல் போன் ஹேக் செய்வது என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. நமது செல்போனை ஹேக் செய்வதால் நமது செல்போனில் உள்ள முக்கிய ஆவணங்கள், நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு விடும். இப்படி நமது செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை நாம் சில விஷயங்களை வைத்து கண்டுபிடித்துக் கொள்ளலாம். உங்களின் செல்போன் ஹேக் செய்யப்பட்டிருந்தால் அல்லது வேவு பார்க்கப் பட்டிருந்தாலும் சில அறிகுறிகள் அதை காட்டிக்கொடுக்கும். அது என்ன என்பதை பற்றி இதில் […]

Categories
பல்சுவை

உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா… எப்படி கண்டுபிடிப்பது… வாங்க பார்க்கலாம்…!!!

இன்றைய சூழலில் மொபைல் போன் ஹேக் செய்வது என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. நமது செல்போனை ஹேக் செய்வதால் நமது செல்போனில் உள்ள முக்கிய ஆவணங்கள், நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு விடும். இதனால் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திரட்டுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. இப்படி நமது செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை நாம் சில விஷயங்களை வைத்து கண்டுபிடித்துக் கொள்ளலாம். அது எப்படி என்றால், நீங்கள் பயன்படுத்தாத போது செல்போன் அதிக […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரித் தாக்கல்.. மொபைலிலேயே ஈசியா செய்யலாம்… எப்படி தெரியுமா…? வாங்க பாக்கலாம்….!!

நம்முடைய செல்போனிலேயே ஈசியாக வருமான வரி தாக்கல் செய்து கொள்ள முடியும். அது எப்படி என்பதை பற்றி இதில் பார்ப்போம். கொரோனா நெருக்கடிக் காலகட்டத்தில், நிவாரணம் அளிக்கும் வகையில் 2021-22 ஆம் ஆண்டு வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி இரண்டு மாதங்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவு வழங்கியுள்ளது. இதன்படி வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நம்மால் வீட்டில் இருந்தபடியே […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எவ்வளவு துணிச்சல்…. மாட்டி கொண்ட வாலிபர்கள்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறையினர்….!!

வாலிபரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி-கச்சேரி ரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு சின்னாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்பவர் தனது பாட்டியை அழைத்து வந்தார். அப்போது பாட்டியை வங்கிக்குள் விட்டு அஜய் செல்போனில் பேசியபடி வாசலில் நின்று கொண்டிருந்தார். அந்த வேளையில் திடீரென அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் 2 பேர் அஜய்யிடம் செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். […]

Categories
மாநில செய்திகள்

கோவை இராமகிருட்டிணன் செல்போனும்… பெகாசஸ் மூலம் வேவு… வெளியான தகவல்…!!!

இந்தியா முழுவதும் பெகாசஸ் சாப்ட்வேர் மூலம் பலர் வேவு பார்க்கப்பட்டது புகார் அளிக்கப்பட்டது. இந்த பிரச்சனையை நாடு முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இதன்மூலம் வேவு பார்க்க படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தியை தொடர்ந்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கோவை இராமகிருட்டிணன் பெகாசஸ் மூலம் வேவு பார்க்கப்பட்டதாக திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

செல்போனில் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

செல்போனில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள துத்திப்பட்டு கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாசுதேவன் என்ற மகன் இருக்கின்றார். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மகன் சுகுமார் நண்பராக இருந்துள்ளார். இந்நிலையில் சுகுமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாசுதேவனின் செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்துச் சென்றுவிட்டார். இதனை அறிந்த வாசுதேவன் செல்போனை கேட்டபோது 100 ரூபாய் கொடுத்தால் தான் தருவேன் என்று சுகுமார் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கத்தியை காட்டி மிரட்டல்…. வசமா சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

செல்போன் பறித்துச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காங்குப்பத்தான் பட்டியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஜானகிராமன் என்ற மகன் இருக்கின்றார். இவர் பெருமாங்குப்பம் கூட்டு ரோடு சாலையில் கடந்த 7-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற போது 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 2 செல்போன்களை பறித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து ஜானகிராமன் கொடுத்த புகாரின் படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்…. கத்தியை காட்டி மிரட்டல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் கவரத்தெருவில் திவாகர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த 13- ஆம் தேதி எசையனூர் கிராமத்திற்கு நண்பரைப் பார்ப்பதற்காக பாலாறு வழியாக சென்றுள்ளார். அப்போது பாலாற்றில் இருந்த வாலிபர் ஒருவர் திவாகரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாய் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து திவாகர் கொடுத்த புகாரின்படி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆண்ட்ராய்டு போன் பயனாளர்களே..? சார்ஜ் போடும் போது இதையெல்லாம் கவனிங்க… செல்போன் ரொம்ப நாள் நிலைக்கும்…!!

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மேம்பாடுகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இதில் தங்களுடைய கவனக்குறைவு காரணமாக நாம் பயன்படுத்தும் மின் சாதனங்களை முறையாக நாம் பயன்படுத்துவதில்லை. மொபைல் போன் சார்ஜ் போடும் போது பலர் நிறைய விஷயங்களை மறந்து விடுவதுண்டு. சிலவற்றை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு மொபைல் சார்ஜர் போடுவது நல்லது. மொபைல் என்பது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான பொருள். அது இல்லை என்றால் அனைவருக்கும் கை உடைந்தது போல் இருக்கும். […]

Categories
பல்சுவை

உங்க போனில் இத மட்டும் வச்சுக்காதீங்க… இருந்தா ரொம்ப ஆபத்து…!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக உரையாடலுக்கு செல்போன் மிகவும் பயன்படுகிறது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு ப்ளே ஸ்டோரில் இருந்து பலவிதமான ஆப்களை டவுன்லோட் செய்கிறார்கள். அதிலும் சிலர் மூன்றாம் தரப்பு ஆப்களை பயன்படுத்துகிறோம். அதிலும் குறிப்பாக முன்பின் தெரியாத யாரோ வடிவமைத்த ஸ்கேனர் […]

Categories
மாநில செய்திகள்

6 சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாசப்படத்தை காண்பித்து…. பாலியல் அத்துமீறல்…. பா.ஜ.க நிர்வாகி போக்சோவில் கைது…!!!

ஆறு சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாச படத்தை காண்பித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது வெறும் வாய் வார்த்தையாக மட்டுமே இருந்து வருகின்றது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. கடுமையான சட்டங்கள் தண்டனைகள் உருவாக்கப்பட்ட போதிலும் இதுபோன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது, உறவினர்கள் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற சம்பவங்கள் தினமும் நடந்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

யாரும் இப்படி பண்ணாதீங்க…. செல்போன் வெடிசுட்டு…. நாசமடைந்த பொருட்கள்….!!

செல்போனில் சார்ஜ் ஏற்றிய போது அதிலிருந்து ஏற்பட்ட தீ விபத்தில் மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமானது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வடக்குரெட்டி தெருவில் சதாசிவம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருக்கின்றார். இவர் தனது செல்போனை வீட்டிலுள்ள சோபாவின் மீது வைத்து சார்ஜ் போட்டு விட்டு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் இருந்து அதிக புகை வெளிப்பட்டதால் தீயணைப்பு நிலையத்திற்கும், மின்சார […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செல்போன் வாங்கி தராததால் மனைவி தற்கொலை… மதுரையில் அரங்கேறிய கொடூரம்…!!!

கணவன் மனைவிக்கு செல்போன் வாங்கி தராததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது உள்ள இளம் தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்லாமல் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்கின்றனர். சிறு சிறு விஷயங்களுக்கு கூட டைவர்ஸ் என்று கூறி நீதிமன்ற வாசலில் சென்று நிற்கின்றனர். ஒரு சிலர் விஷம் குடித்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கின்றன. தற்கொலை என்பது எப்பொழுதும் பிரச்சனைக்கு தீர்வாக அமையாது. மதுரை திருப்பரங்குன்றம் கப்பலூர் என்ற பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார்-பான் மொபைல் மூலமாக…. ஈசியாக இணைக்க…. இதை மட்டும் செய்தால் போதும்…!!!

கொரோனா பரவல் காரணமாக ஆதார்-பான் கார்டு இணைப்பிற்கு கால வரம்பு வருகின்ற ஜூன்- 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு முடிய  மட்டுமே இருக்கிறது. எனவே ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காத மக்கள் உடனே விரைந்து சென்று இணைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு ஜூன்-30க்குள் இணைக்க்காவிட்டால் உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள் என்கிற கே.ஒய்.சி செல்லாது. மேலும் பான் எண்ணும் செயல்பாட்டில் இருக்காது. கே.ஒய்.சி செயலிழந்து விட்டால் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய முடியாது. மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இதற்காக பெற்றோர் கண்டித்ததால்…. மாணவிகள் எடுத்த முடிவு…. வேலூரில் பரபரப்பு….!!

பெற்றோர் கண்டித்ததால் 2 மாணவிகள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கரிகிரி பகுதியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகின்றார். இவரது வீட்டிற்கு பாகாயத்தை சேர்ந்த உறவினர் மகளான 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி வந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கடி செல்போன் உபயோகப்படுத்தி வருவதாக பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவிகள் இருவரும் சேர்ந்து வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் மாணவிகள் […]

Categories
தேசிய செய்திகள்

என்னது… ஊரடங்கில் செல்போன் பார்த்ததால்… இத்தனை பேருக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டதா…? ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!

கடந்த ஆண்டு ஊரடங்கில் இருந்து தற்போது வரை 27.5 கோடி பேருக்கு கண்பார்வையில் அதிகம் பாதிப்பு இருப்பதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு உலகிலுள்ள பல நாடுகள் போராடி வருகின்றன. அதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து பொது முடக்கம் அமலில் இருந்தது. அதன் பிறகு சற்று தளர்வுகள் இருந்தாலும் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்தது. பெரும்பாலும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலமே வகுப்புகள் பயின்று வந்தனர். அதுமட்டுமில்லாமல் ஐடி ஊழியர்கள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

உங்க செல்போன்ல இருக்க தகவலை பத்திரமாக வைக்கணுமா…? அப்ப இந்த டிப்ஸ ட்ரை பண்ணுங்க…!!

மொபைலில் ஒருவரின் தொடர்பு எண்ணை சேமிக்கும்போது இந்த முறையை இனி பின்பற்றுங்கள். தற்போதைய காலகட்டத்தில் செல்போன் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.  நண்பர்கள் உறவினர்களை நேரில் பார்க்கும் தருணம் குறைந்து தற்போது செல்போனில் அதிகநேரம் பேசும் நேரம் உருவாகிவிட்டது. நாம் நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரையும் எண்ணையும் நமது போனில் பதிந்து வைத்துக் கொள்வோம். ஆனால் நாம் முறையாக பயன்படுத்துகிறோமா என்றால் இல்லை. ஏனெனில் தொடர்பு எண்ணை நமது போனில் அல்லது சிம் கார்டில் பதிந்து […]

Categories

Tech |