கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என அரசு அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா காலத்தில் மாதம் ரூ. 14,000 ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பணிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பனி நீட்டிப்பு வழங்கப்படாது என தெரிவித்துள்ளது. இதனால் தமிழக அரசுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 6,000 செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணையை உடனடியாக வழங்க வேண்டும் என்று […]
Tag: செவிலியர்கள்
கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என அரசு அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா காலத்தில் மாதம் ரூ. 14,000 ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பணிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பனி நீட்டிப்பு வழங்கப்படாது (இன்று முதல் வேலைக்கு வர வேண்டாம்) என தெரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் 14 செவிலியர்கள் கர்ப்பமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறந்ததை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதைவிட ஒரே பிரசவத்துக்கு ஒரு டஜன் செவிலியர்கள் பிரசவம் பார்த்தது கூட கேள்வி பட்டிருப்போம். ஆனால் ஒரு மருத்துவமனையில் செவிலியர்கள் ஒரே நேரத்தில் பிள்ளை போவதை யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதுவரை இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் அமெரிக்காவில் உள்ள மிசௌரியில் உள்ள கென்சஸ் மாகாணத்தின் neonatal intensive care unit at Saint […]
அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் தங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பணி நிரந்தரம் கோரி போராடிய 16,000 செவிலியர்களில் 5 ஆயிரம் பேர் அடுத்த ஆறு மாதத்திற்குள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அவர் […]
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது சுமார் 3200 செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். இவர்களில் 2400 பேர் நிரந்தர ஒப்பந்த செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். மீதமுள்ள 800 பேர் எதிர்கால காலி பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமனம் செய்யப்படுவார்கள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக இந்த 800 செவிலியர்களும் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதனை கண்டித்து சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டம் […]
அமெரிக்க நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலுக்கு இடையில் செவிலியர்களுக்குகடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வெளிநாடுகளிலிருந்து செவிலியர்களை வரவழைத்து பணியமர்த்துகின்றனர். கொரோனா நோய் தொற்றால் உலகின் எல்லா நாடுகளை விடவும் அமெரிக்கா கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் அங்கு சுகாதார கட்டமைப்புகளுக்கு நெருக்கடி ஏற்பட்டு மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் பல செவிலியர்கள் தாங்களாகவே விருப்ப ஓய்வு பெற்றும், பலர் விடுமுறையிலும் சென்றுவிட்டனர். அதனால் செவிலியர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. கலிபோர்னியாவில் தேவையைவிட 40 ஆயிரம் செவிலியர்கள் குறைவாகவே […]
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அளித்த தகவலால் ஒட்டுமொத்த செவிலியர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகரில் மத்திய அரசு 60 சதவீதம் பங்களிப்பு, மாநில அரசு 40% பங்களிப்புடன் 390 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரியை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் புதிய […]
தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே கொரோனா நெருக்கடியான காலகட்டத்தில் தற்காலிகமாக செவிலியர்களை தமிழக அரசு நியமித்த நிலையில் தற்போது தேவையான […]
வீட்டிற்கு சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கைவிடக்கோரி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகில் அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் வீடுதேடி சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் உள்ள சிரமங்களை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்திற்கு சங்க மாநில தலைவர் […]
கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு இளம் பெண்கள், பிரிட்டனில் பிரபல மருத்துவமனையில் செவிலியர்களாக பணியில் சேர்ந்திருக்கிறார்கள். கேரளாவைச் சேர்ந்த Joby என்ற செவிலியர், தன் கணவர் Shibu Mathew-உடன் கடந்த 2007 ஆம் வருடத்தில் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்துள்ளார். இத்தம்பதி, ஒரே பிரசவத்தில் பிறந்த தங்கள் நான்கு குழந்தைகளையும் உறவினரிடம் விட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள். அதன்பின்பு, ஒரு வருடம் கழித்து நான்கு குழந்தைகளும் பிரிட்டனுக்கு பெற்றோரிடம் வந்து சேர்ந்துள்ளார்கள். Joby செவிலியர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, இந்தியா மற்றும் ஓமன் […]
சென்னையில் தனியார் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கொரோனா காரணமாக தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் தற்பொழுது தங்களது பணிகளை நிரந்தரமாக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆகவே 3 பேர் கொண்ட குழுவினை அமைத்து செவிலியர்களுடன் 15 நாட்களில் கலந்து பேசி இப்பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வர உள்ளதாக வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் செவிலியர்கள் […]
செவிலியர்கள் தங்கள் பணியை நிரந்தரமாக்க கோரி போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை குறித்து முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “செவிலியர்கள் தங்களது தனியார் வேலையை விட்டுவிட்டு கொரோனா காலத்தில் அரசு பணியில் பணியாற்ற வந்துள்ளனர். மேலும் இவர்கள் தொற்று உச்சத்தில் இருந்த பொழுது தங்களது உயிரையும் கருத்தில் கொள்ளாமல் சேவை மனப்பான்மையுடன் செயலாற்றினார்கள். இதனால் இவர்களுக்கு பணி பாதுகாப்பும், பணிநிரந்தரமும் அளிக்க வேண்டும். தற்பொழுது நோயானது தீவிரமடைந்து வருகின்ற […]
கொரோனாவால் இறந்த 53 ஊழியர்களின் குடும்பத்திற்கு அரசு பணி வழங்க மருத்துவத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் உட்பட 53 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பணி வழங்க வேண்டியவர்களின் விவரங்களை சேகரித்து அனுப்ப மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள் தேவை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தற்காலிக அடிப்படையில் 11 மாதங்களுக்கு பணியாற்ற தகுதி உடையவர்கள் chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 7ஆம் தேதி கடைசிநாள் எனவும் தெரிவித்துள்ளது. எனவே பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
செவிலியர்கள் தங்களது பணியை நிரந்தரமாக்க கோரி நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு கமல் தனது ஆதரவை தெரிவித்தார். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் வைத்து கொரோனா நேரத்தில் தற்காலிகமாக பணியில் அமர்த்த பட்டவர்களை நிரந்தமாக்கவும், அடிப்படை வசதிகளை செய்து தருதல் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தினர். இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நேரில் சென்று தனது ஆதரவை கூறினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “எங்களது பங்களிப்பானது செவிலியர்களின் போராட்டத்தில் இருக்க வேண்டும் […]
நிலுவையில் இருக்கின்ற ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று செவிலியர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் செவிலியர்கள் தங்களுக்கு 3 மாதமாக நிலுவையில் இருக்கின்ற ஊதியத்தை உடனடியாக வழங்குவதற்கு கலெக்டர் உத்தரவுவிட கோரி மனு கொடுத்துள்ளனர். மேலும் செவிலியர்கள் பணி நீட்டிப்பு செய்து தருமாறும் மனுவில் தெரிவித்துள்ளனர்.
வேலையில் இருந்து திடீரென நீக்கப்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனை, தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரி, கொரோனா சிகிச்சை மையம் போன்றவற்றில் பணிபுரிவதற்காக மருத்துவ உதவியாளர்கள் மற்றும் செவிலியர்கள் என 106 நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். எனவே செவிலியர்கள் கடந்த 2 மாதங்களாக பணியிலிருந்த நிலையில் திடீரென அவர்களுக்கு வேலை இல்லை எனக் கூறி […]
அரசு மருத்துவமனையில் பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் மீண்டும் பணி வழங்ககோரி கலெக்டர் அலுவலகத்தில்திரண்டனர் . கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த மே மாதம் முதல் தற்காலிக செவிலியர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வந்தனர். இதனையடுத்து திடீரென்று எந்தவித அறிவிப்பும் இன்றி செவிலியர்கள் பணி நீக்கம் செய்ததால் பணிபுரிந்த அவர்களுக்கு ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை எதுவும் வழங்கப்படவில்லை என்று கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். இந்நிலையில் செவிலியர்கள் தங்களுக்கு […]
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஊக்கத் தொகையை அறிவித்த முதல்வருக்கு நன்றி என அதிமுக தலைவர் ஓ பன்னீர்செல்வம் ட்விட் செய்துள்ளார். வருடம்தோறும் மே மாதம் 12 ஆம் தேதி செவிலியர் தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகிலுள்ள அனைத்து செவிலியர்களுக்கும் இணையத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இன்று செவிலியர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அதிமுக கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
பிரான்ஸில் செவிலியர்கள் தங்களின் நிபந்தனைகள் மறுக்கப்பட்டுள்ளது எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரான்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர்கள் கொரோனா காலக்கட்டத்தில் சமூக சிந்தனை மற்றும் பொறுப்புடன் செயல்பட்ட தங்களுக்கு சரியான ஊதியம் மற்றும் நிபந்தனைகள் மறுக்கப்பட்டுள்ளது எனக் கூறி பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேசிய சிஜிடி தொழிற்சங்கம் சார்பில் செவிலியர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கொரோனா நோயாளிகளின் படுக்கைகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செவிலியர்கள் மக்களின் […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]
சென்னைக்கு அடுத்து கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 800 செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதாக புகார்கள் வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு கட்ட ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் அதிக அளவு கொரோனா தொற்று உள்ளது. இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இந் நிலையில் செங்கல்பட்டு […]
மதுரையில் செவிலியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் பரவி கொண்டிருக்கும் தொற்றினை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் ஆங்காங்கே தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளையும் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறது. இத்தொற்றின் பரவலை தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் மருத்துவத் துறையின் பங்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதிலும் குறிப்பாக செவிலியர்கள் ஆற்றும் பணி பாராட்டத்தக்கது. இவ்வாறு இருக்கும் நிலையில் மதுரை […]
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை செவிலியர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், கொரோனா காலகட்டத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் நிரந்தரமாக பணியமர்த்தப்பட வேண்டும் என்றும், கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை […]
கொரோனா பாதிக்கப்பட்ட செவிலியர்களை வைத்து பணி செய்வதற்கு பல எதிர்ப்பு எழுந்துள்ளது ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் ஜெனிவா மாகாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செவிலியர்கள் பணி செய்வதற்கு அனுமதிப்பதற்கான விதிமுறைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அறிகுறிகள் தெரியத் தொடங்கிய பிறகு ஏழு நாட்கள் வேலைக்கு செல்ல முடியாது.ஆனால் மற்றவர்களுக்கு அவர்களிடமிருந்து தொற்று பரவுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என கூறும் ஜெனிவா சுகாதாரத்துறை அதிகாரிகள் போதுமான செவிலியர்கள் இல்லாததே தற்போது இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் இருக்கின்ற கொரோனா நோயாளிகளுக்கு ராக்கி கட்டி சகோதர பந்தத்தை வெளிப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினம் இந்துக்களின் பண்டிகை என்பதையும் தாண்டி சகோதர பாசத்தை வெளிக்காட்டும் ஒரு சமூக விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. ரக்ஷா பந்தன் என்றாலே பாதுகாப்பு பிணைப்பும், பாதுகாப்பு பந்தமும் என்று பொருள்படும். அந்த நாளில் ஒரு ஆண் தனது கையில் ராக்கி கயிறை கட்டிக்கொள்வது, அவருக்கு கயிறு கட்டிய அந்தப் பெண்ணை […]
சென்னையில் ஊதியம் தரவில்லை என்று கூறி டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருக்கின்ற அரசு மருத்துவமனைகளில் பணி புரிகின்ற செவிலியர்கள் 52 பேர். 15 மண்டலங்களிலும் கொரோனா தடுப்பு சிகிச்சை பணிக்காக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய நிலையில், சுகாதார அலுவலர்கள் உறுதி கூறியபடி, தங்களை பணி நிரந்தரம் செய்யாத காரணத்தால் 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் டிஎம்எஸ் வளாகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இதனைத் […]
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு நிலுவையில்லாமல் ஊதியம் வழங்க வேண்டும் என மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. ஊதியம் வழங்கப்படுவதை மாநில சுகாதார செயலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் என முன் களப்பணியாளர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் வசதிகள் செய்து தர வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று மத்திய […]
நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகர்கோயில், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சுமார் 3,000 செவிலியர்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா பிரிவில் பணியாற்ற சென்னையில் அரசு மருத்துவமனைகளில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 48,019த்தை தாண்டியுள்ளது. மேலும் அதிகபட்சமாக சென்னை மாநகரம் தான் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. […]
சென்னையில் கடந்த 2 மாதங்களில், கொரோனா பாதித்த அரசு மருத்துவமனை செவிலியர்கள் எண்ணிக்கை 155 ஆக அதிகரித்துள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 50 பேர், ஓமந்தூரார் மருத்துவமனையில் 45 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 30 செவிலியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுவரை கொரோனா பாதித்த அரசு மருத்துவமனை செவிலியர்கள் 135 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவக்கூடிய நிலையில், முன்களப்பணியாளர்களாக செயல்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் […]
மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கும் செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், முதுநிலை மருத்துவ மாணவர்கள் 574 பேர் கொரோனா சிகிச்சைக்காக பணி அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னையில் மட்டும் கொரோனா சிகிச்சை அளிக்க 1,536 சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னைக்கு 80 ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் தேவைக்கேற்ப சென்னைக்கு அதிக அளவில் மருத்துவர்கள், சுகாதாரத்துறை […]
சென்னையில் 8 டாக்டர்கள் உட்பட 12 மருத்துவ பணியாளர்களுக்கு இன்று ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 2 பேர் மற்றும் அரசு பல் மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 4 செவிலியர்கள், இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர் ஒருவருக்கும், சூளைமேடு, அயனாவரம், எழும்பூர் உள்ளிட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பு களப்பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ […]
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் எதிரொலியாக நாளை கொண்டாட இருக்கும் செவிலியர் தினம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகின்றது. மருத்துவத் துறையில் பணியாற்றும் செவிலியர்களின் சேவையை பாராட்டும் வகையில் உலக செவிலியர் அமைப்பு 1965ஆம் ஆண்டிலிருந்து மே 12ம் தேதியை உலக செவிலியர் தினமாக கொண்டாடி வருகின்றது. இந்த வருடம் உலக சுகாதார செவிலியர் தினத்தில் “செவிலிய பணி மூலமாக உலக ஆரோக்கியம்” எனும் மையக் கருத்தை உலக செவிலியர் அமைப்பு முன்னிறுத்தி உள்ளது. தற்போது […]
செவிலியர்களுக்கான நடத்தை விதிகள் நோயாளிகளிடம் சமூக-பொருளாதார பேதமின்றி நோயின் தன்மையை மனதில் நிறுத்தாமல் ஒரு மனிதனுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையோடு சேவை செய்வது அவசியம். செவிலியரின் அடிப்படைக் கடமை என்பது மக்களின் உயிரைக் காப்பது, நோயாளிகளின் உடல் நலத்தை முன்னேற்றம் அடைய செய்வது, அவர்களின் வேதனையை குறைப்பது. செவிலியர்கள் எப்பொழுதும் மேம்பட்ட செவிலியர் பணியை கொடுக்க வேண்டும். அதேபோன்று நன்னடத்தை கொண்டவராகவும் இருத்தல் அவசியம். செவிலியர்கள் பயிற்சி மட்டுமல்லாது சரியான அறிவும் திறமையும் கொண்டு பணியாற்ற வேண்டும். செவிலியர்கள் […]
தனி மனிதனின் தேவைகளை தெரிந்து தனது திறமையின் மூலம் சேவை செய்பவரும், செய்யும் தொழிலை பெருமையாகவும், அறிவை வளர்த்துக்கொள்ள கூடியதாகவும், வேலையில் ஒழுக்கத்துடனும், கலை உணர்வுடனும் பணியை செய்பவர்கள் செவிலியர்கள். செவிலியர் பணியில் வெற்றிக்கான அன்பு இரக்கம் மேன்மை பொறுமை அதோடு புரிந்துகொள்ளும் தன்மை இருப்பவராக இருத்தல் அவசியம் இந்த குணங்கள் நோயாளிகளுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் சேவை செய்ய பெரிதும் உதவுகின்றது. விருப்பமும் தியாக மனப்பான்மையும் இந்த இரண்டு குணங்களும் ஒன்றுக்கொன்று ஈடானது எந்த சூழ்நிலையிலும் சேவை செய்ய […]
உலக நாடுகள் முழுவதிலும் மே மாதம் 12 ஆம் தேதி அன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. சமூகத்திற்கு செவிலியர்கள் ஆற்றும் பங்களிப்பை நினைவுகூர இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாள் செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஜனவரி மாதம் 1974ல் நவீன தாதியியல் முறையை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்பவரது பிறந்த நாளான மே மாதம் 12 ஆம் தேதியை அவரை கவுரவிக்கும் விதமாகவும் நினைவுகூர […]
கடலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 5 மருத்துவர்கள், 5 செவிலியர்கள் மற்றும் 9 சுகாதார ஊழியர்கள் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்தம் 390 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், இதுவரை 26 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த வாரம் வரை 27 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 26 பேர் குணமடைந்து […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்கள் பணி நியமனம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஒப்பந்தம் அடிப்படையில் 2,570 செவிலியர்கள் அடுத்த 6 மாத காலம் பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நியமன ஆணை பெற்ற செவிலியர்கள் 3 நாட்களுக்குள் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆவர். இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு […]
நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் என 548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 43வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்னெப்போதும் இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 2958 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 126 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். […]
கொரோனாவால் பலியான ஒருவரின் உடலுக்கு செவிலியர்கள் நடனமாடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது டிக்டாக்கில் ஒரு வீடியோ வெளியாகி செமையாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என 4 செவிலியர்கள் ஒரு பிளாஸ்டிக் பையில் சடலம் போன்ற காட்சியளிக்கும் ஒரு பொருளை தங்களது தோளின் மேல் வைத்து கொண்டு நடனமாடி செல்கின்றனர். ஆனால் அது உண்மையான சடலமாக என்று தெரியவில்லை. இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. […]
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். நமது பாரம்பரிய மருத்துவமுறைகளை கைவிடுவது துரதிர்ஷ்டவசமானது, சொந்த பலத்தையே நாம் நம்புவதில்லை என பிரதமர் மோடி கூடியுள்ளார். மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நெருப்பை மிச்சம் வைக்கக் கூடாது, அதை முற்றிலுமாக அணைக்க வேண்டும் என கொரோனா தடுப்பு குறித்து தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு தங்களுடைய பங்களிப்பை அளித்து வருகின்றனர் என்றும் […]
ஏப்ரல் 30ம் தேதியுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு மேலும் 2 மாத பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. ஒப்பந்த முறையில் தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 1,323 செவிலியர்களை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக பணியில் சேருமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு பொற்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. […]
கலிபோர்னியாவில் மருத்துவமனை ஒன்றில் N95 மாஸ்க் தராமல் வேலை செய்ய மாட்டோம் எனக் கூறிய நர்சுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் அமெரிக்காவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் மருத்துவர்களின் முக்கிய பாதுகாப்பு கவசமான N95 […]
கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்த அறைகளை முன்பதிவு செய்துள்ளனர் டெல்லி மற்றும் உ.பி அரசு. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவர்களும் செவிலியர்களும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு பகல் என்று பாராமல் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கும் இந்த தொற்று பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதால் மருத்துவர்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொள்கின்றனர். அப்படி தனிமைப்படுத்திக் கொள்ளும் […]