செவ்வாய் கிரகத்தில் மனிதனின் கண் வடிவம் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஆராய்ச்சி நிறுவனமானது, செவ்வாய் கிரகத்தில் எடுத்த ஒரு புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் செவ்வாயின் நிலப்பரப்பில் மனிதர்களின் கண் போன்ற வடிவம் தெரிகிறது. இதற்கு முன்பே நம் பூமியில் இருக்கும் சகாரா பாலைவனத்தில் கடந்த 1965 ஆம் வருடத்தில் இதேபோன்று கண் வடிவம் கண்டறியப்பட்டது. அது பற்றிய மர்மம் தற்போது வரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில் செவ்வாய் கிரகத்திலும் கண் போன்ற வடிவம் தெரிந்துள்ளது. எனினும், […]
Tag: செவ்வாய்
செவ்வாய், சந்திரனுக்கு மிக அருகில் வரும் அரிய நிகழ்வு இன்னும் சில நொடிகளில் நிகழப்போகிறது. இன்று இரவு 8:34 மணியளவில் சந்திரன் மற்றும் செவ்வாய் மிக நெருக்கமாக வரக்கூடிய நிகழ்வு உச்சக் கட்டத்தை அடைகிறது. எனவே பூமியிலிருந்து செவ்வாயை காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகமானது, சந்திரனை சுமார் இரண்டு டிகிரிக்கும் குறைந்த தூரத்தில் கடந்து செல்கிறது. இதனை வெற்றுக் கண்களால் நாம் காணமுடியும் என்று கூறப்பட்டிருக்கிறது.
செவ்வாய் கிரகத்தில் இருந்து மாதிரிகளை சேகரிக்க நாசா அனுப்பிட பெர்சவர்ன்ஸ் தரையிரங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டுள்ள நாசா தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருகிறது. முன்னதாக சில ரோவர்கள் அனுப்பப்பட்டு செவ்வாய் கிரகத்தை படங்கள் எடுத்த நிலையில் அங்குள்ள மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து வர நாசா திட்டமிட்டது. இதற்காக உருவாக்கப்பட்ட பெர்சவரன்ஸ் விண்கலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் ஏவப்பட்டது கடந்த 8 மாத […]