ஊட்டியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருக்கும் ஒய்.எம்.சி.ஏ., சார்பாக மாவட்ட அளவிலான 12 வது செஸ் போட்டி இரண்டு நாட்களாக ஊட்டியில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொது பிரிவினர் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள். ஆறு பிரிவுகளாக நடத்தப்பட்டு பொதுப்பிரிவில் யோகேஷ், நபீலா, ரேவந்த், குயின் ஆப் ஷீபா, சால்மன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றார்கள். இதை தொடர்ந்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி […]
Tag: செஸ் போட்டி
செஸ் ஒலிம்பியாட் போட்டியானது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சர்வதேச செஸ் உலகின் கண்கள் மாமல்லபுரத்தில் குவிந்துக்கிடக்கிறது. இதனிடையில் போட்டிக்கான விழிப்புணர்வுகளை அரசு ஒருபக்கம் செய்து வந்தாலும், தன்னார்வலர் ஒருவர் செய்த விழிப்புணர்வு அனைவரின் கவனத்தையும் அதிகரித்துள்ளது. அதாவது தண்ணீருக்கு அடியில் செஸ்விளையாடி அசத்தி இருக்கிறார் சென்னை காரப்பாக்கத்தில் வசித்து வரும் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த். ஆழ்கடல் இவருக்கு நல்ல சிநேகிதம் ஆகும். மேலும் இவர் Scuba Diving என கூறப்படும் ஆழ்கடல் நீச்சல்பயிற்சியில் வித்தகர். அத்துடன் […]
சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியின் தொடக்க விழா நேற்று சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் இன்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் நார்வே வீரரும் உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரபல இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் ஆன 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நடைபெறுகிறது. இந்த செஸ் போட்டியின் தொடக்க விழா நேற்று சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த போட்டி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில், 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்- விராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். […]
44வது செஸ் ஒலிம்பிக் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக சேலம் மாவட்ட அளவிலான செஸ் போட்டி சேலம் அழகாபுரம் புனித ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுள்ளது. இதனை கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்எல்ஏ போன்ற தொடங்கி வைத்துள்ளனர். இது பற்றி கலெக்டர் கார்மேகம் பேசியபோது, சர்வதேச அளவிலான 44வது ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தில் முதல்முறையாக நடைபெறுகிறது. இதில் 187 நாடுகளை […]
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் வரும் 28ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுதும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சென்ற சில நாட்களாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட விளையாட்டு அரங்கிலுள்ள நீச்சல் குளத்தில் மிதக்கும் விதமாக செஸ் போர்டுகள் வைக்கப்பட்டது. அதாவது 16 குழுக்கள் […]
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தற்போது வேலூர் மாவட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடிப்படையில் சாய்நாதபுரத்திலுள்ள டி.கே.எம். மகளிர் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடைபெற்றது. இவற்றில் டி.கே.எம். மகளிர் கல்லூரி, ஊரீசு கல்லூரி, அக்சீலியம் கல்லூரி, குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி உட்பட பல கல்லூரி மாணவர்கள் பங்கேற்று தங்களது […]
சென்னை அருகில் உள்ள மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 180 க்கு மேற்பட்ட நாடுகளில் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் ஏற்கனவே இரண்டு ஆண்கள் அணி, இரண்டு மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது சகோதரி வைஷாலி, முகேஷ், சசி கிரண் உள்ளிட்ட 20 […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி செஸ் போட்டி நடத்துவதற்கு ஜூலை 2ல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான போட்டிகள் ஜூலை 11-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்கள் சென்னையில் நடைபெறும் ஒலிம்பியாட் பார்க்கவும், சர்வதேச செஸ் வீரர்களுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதி அழிக்கப்படுவார்கள். இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க….
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 5 வரை செஸ் போட்டி நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்களை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பிக் போட்டிகளை காண அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் செஸ் வீரர்களுடன் மாணவர்கள் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநில அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் ஞானசம்பந்தம் பள்ளியில் திருமால் செஸ் அகாடமி சார்பாக மாநில அளவிலான செஸ் போட்டி இரண்டு தினங்கள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் சேகர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் ரமேஷ் சந்த், அரிமா சங்கம் சபாநாதன், பள்ளி தாளாளர் […]
ஸ்பெயின் நாட்டியில் நடைபெற்ற 48-வது லா ரோடா என்ற சர்வதேச ஓபன் செஸ் போட்டி நடைபெற்றுள்ளது. அப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் குகேஷ் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். மேலும் இந்த போட்டியில் சென்னையைச் சேர்ந்த பிரபல இளம் வீரர் பிரக்ஞானந்தா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். அந்த வகையில் செஸ் வரலாற்றில் மிகக் குறைந்த வயதான, 15 வயது நிரம்பிய குகேஷ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற மூன்றாவது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் 250 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கொங்கு கல்வி நிலைய பள்ளிக்கூட வளாகத்தில் சதுரங்க சர்க்கிளின் சார்பாக மாநில அளவில் செஸ் போட்டியானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சதுரங்க சரக்கிள் செயலாளரான ரமேஷ் தலைமை தாங்கினார். அப்போது கொங்கு கல்வி நிலைய பள்ளிக்கூட தாளாளர் செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் 9, 13, 17 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் […]
ரஷ்யாவில் ஃபைடு செஸ் உலக கோப்பை போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போட்டியில் உலக நாடுகளில் இருந்து பலர் பங்கேற்றுள்ளனர். அதே 37 வயதான கிராண்ட் மாஸ்டரை தமிழகத்தை சேர்ந்த சிறுவன் வீழ்த்தியுள்ளார். செஸ் போட்டியின் 2-வது சுற்றில் முதல் ஆட்டத்தில் ஆர்மீனியா நாட்டை சேர்ந்த காப்ரியல் சர்கிசியன் உடன் மோதிய 15 வயது சிறுவன் பிரக்னானந்தா வெற்றி பெற்றுள்ளார். இந்த சிறுவனுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஆன்லைன் மூலமாக செஸ் போட்டிகள் நடைபெற உள்ளது . கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக அகில இந்திய செஸ் சம்மேளனம் சார்பாக, ஆன்லைன் மூலம் செஸ் போட்டிகளை நடத்தி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்தப் போட்டியானது நாளை(வியாழக்கிழமை ) நடத்தப்படுகிறது. இந்த ஆன்லைன் போட்டியில் 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் கலந்து கொள்கிறார். அவரோடு இந்த போட்டியில் , கிராண்ட்மாஸ்டர்களான கோனேரு ஹம்பி, ஹரிகா, நிஹல் […]