தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, திமுக சொல்கிறார்கள் பிஜேபிக்காரர்கள் எப்ப பாத்தாலும் கோவிலே சுற்று சுற்றி வருகிறார்கள் என்று, உண்மைதான், பிஜேபி காரர்கள் எப்போதும் கோவிலை சுற்று சுற்றி தான் வருகிறோம், ஏனென்றால் நாங்கள் சுற்றி சுற்றிவரவில்லை என்றால் அங்கு இருப்பதையும் நீங்கள் ஆட்டைய போட்டுட்டு போயிருவீங்க. 70 ஆண்டுகளாக எவ்வளவு ஆட்டைய போட முடியுமோ போட்டுடீங்க. இப்போது தங்கத்தை வேற உருக்குகின்றேன் என்று ஒரு குரூப் கிளம்பி இருக்கிறது. […]
Tag: சேகர்பாபு
செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்த ஆண்டு நடைபெற்ற திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா சூரசம்காரத்தில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் லட்சோப லட்சம் மக்கள் கூடினாலும்… அரோகரா கோஷம் தான் எங்கும் எதிரொலித்ததே தவிர… ஐயோ அம்மா என்கின்ற கோஷம் எங்கும் எதிரொலிக்காத வகையில் அந்த நிகழ்வு நடந்தேறியது. அதேபோல் திருவண்ணாமலையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு… 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடினாலும்…. சிறு அசம்பாவிதம் இல்லாமல் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் […]
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, மாண்புமிகு தமிழக முதல்வருடைய அறிவுரை என்னவென்றால், சிறப்பு தரிசனம் – சிறப்பு கட்டண தரிசனத்தை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பது அவருடைய நோக்கம். இருந்தாலும் திருக்கோவிலின் உடைய பொருளாதார நிலை, சூழ்நிலையை கருதி, சிறப்பு கட்டணங்களை படிப்படியாக குறைத்து வருகிறோம். ஒரு சில திருக்கோவில்களில் நல்ல நிலையில் அந்த திருக்கோவிலின் பொருளாதாரம் இருக்கின்ற நிலையில் முழுமையாக அந்த கட்டணத்தை ரத்து செய்கின்றோம். அருள்மிகு ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவிலில் 200 ரூபாய் […]
சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பாஜக அரசு, தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டே இருக்கின்றது. அதிமுக அவுங்க கட்சி இருக்கா ? இல்லையான்னே தெரியாத அளவுக்கு போயிடுச்சு. ஏன்னா பாஜக கையில தான் அதிமுகவோட குடுமி இருக்கு. அதுவும் சொல்லணும்னா… குறிப்பிட்டு சொல்லணும்னா… கடந்த ஓராண்டுல கிட்டத்தட்ட மாதத்துக்கு ஒருமுறை இந்த துறைமுகம் […]
திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, நம்முடைய முதல்வர் தன்னுடைய உழைப்பால், கிட்டதட்ட 55-56 காண்டு கால உழைப்பு, தலைவர் என்று அவரை சும்மா எல்லாம் உட்கார வைக்கலை, 50 வருடம் ஆகிவிட்டது. அவரை பார்த்து முத்தமிழறிஞர் கலைஞர்… எனக்கு ஸ்டாலினிடம் பிடித்தது உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று அந்த மூன்று வார்த்தையை வாங்குவதற்கு 50 வருடம் […]
திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, சும்மா எல்லாம் முதலமைச்சர் நம்முடைய இயக்கத்தில் வந்து செயல் பாபு என்ற சாதாரணமாக சொல்லிட்டு போகவில்லை. அந்த வார்த்தைக்கு 100% அந்த வார்த்தையை உண்மை என்பதை நிரூபிக்கின்ற ஒரு கூட்டம் தான், யாரால் இந்த மாதிரி முற்போக்கு தலைவர்கள் எல்லாம் ஒரே மேடையில் உட்கார வைத்து உரையாற்றுவதற்கான அந்த திறமை […]
தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் வழிகாட்டுதலின் பெயரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 12 கோவில்களுக்கு இந்த மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் உள்ள புராதனமான தொன்மையான கோவில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து புனரமைப்பு ஒப்புதல் பரிந்துரை செய்வதற்கு மாநில அளவில் மற்றும் மண்டல அளவில் வாரமிருமுறை ஆணையர் அலுவலகத்தில் கூட்டம் அமைக்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் செய்வதற்கு […]
தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு கட்டண சீட்டு வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டசபையில் இன்று இந்து சமய அறநிலை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதை அடுத்து அந்தத் துறை சார்ந்த 165 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: “திருக்கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு கட்டண சீட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். இதில் அர்ச்சகர்களுக்கு 60 சதவீதம் […]
தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலுக்கு இரண்டு மினி பேருந்துகளை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “கோயில் சொத்துக்களை அபகரித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே 2,450 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. பாஜக தலைவர் முடிந்தால் என்னை கைது செய்யப் பாருங்கள் என்று சவால் விடுத்து இருக்கிறார். ஒரு படத்தில் வடிவேலு நானும் […]
எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையின் போது சட்டமன்றத்தை முடக்க வாய்ப்புள்ளதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் அந்த பேட்டியில் மேற்கு வங்காளத்தை போல தமிழகத்திலும் சட்டமன்றத்தை முடக்கும் நிலை வரலாம் எனக் கூறியுள்ளார். நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதால் தமிழக அரசு முடக்க படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் சேகர்பாபு […]
செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கவேண்டியகும்பாபிஷேகங்கள், 12 ஆண்டுகள் கழித்து நடைபெறாமல் இருக்கின்ற கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்துவதற்கும், நெடுங்காலமாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருக்கின்ற திருகோவில்களையும் நேரடியாக சென்று ஆய்வு செய்து, காலதாமதத்தை போக்கி விரைவுபடுத்தவும், 12 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்க கோவில்களுக்குத் திருப்பணிகள் மேற்கொள்ளவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி செய்கின்றோம். நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் நோக்கம் ஆஞ்சநேயர் […]
செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுடைய வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத் துறை சார்பில்…. ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கவேண்டியகும்பாபிஷேகங்கள், 12 ஆண்டுகள் கழித்து நடைபெறாமல் இருக்கின்ற கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்துவதற்கும், நெடுங்காலமாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருக்கின்ற திருகோவில்களையும் நேரடியாக சென்று ஆய்வு செய்து, காலதாமதத்தை போக்கி விரைவுபடுத்தவும், 12 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்க கோவில்களுக்குத் திருப்பணிகள் மேற்கொள்ளவும் மாண்புமிகு தமிழக […]
செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இது ஆன்மீக பூமி என்பார்கள், ஒருபுறம் திராவிட மண் என்பார்கள், எது எப்படி இருந்தாலும் இரண்டும் ஒன்றுசேர மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பிளவு இல்லாமல், எந்த விதமான சச்சரவு இல்லாமல் அரவணைத்து அழைத்துச் செல்ல முற்படுகின்றார். அவருடைய இந்த சீரிய நோக்கத்திற்கு அனைத்துக் கட்சியினரும்…. அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். நம்மைப்பொருத்த வரையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது மாண்புமிகு மறைந்தும், […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நூறு ஆண்டுகள் கடந்த ஒரு பொருள் இருந்தால், அந்தப் பொருளுக்கு விலை மதிப்பு இல்லை. ஆகவே புராதானத்தை காப்பாற்றப்பட வேண்டுமென்றால் இதுபோன்ற ஏ.எஸ்.ஐ இருக்கின்ற அந்த திருக்கோவில்களில் முறையான அனுமதி பெற்று அந்த கோவிலினுடைய புனரமைப்பு பணிகளுக்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். அந்த வகையிலே அதற்குண்டான பணிகளுக்கு என்று ஒரு குழுவை நியமித்து தொடர் வாடிக்கையாக… திருப்பணிகளை மேற்கொள்வதற்கான அனைத்து பணிகளும் நடைபெறுகின்றது. எங்கேயாவது அந்த […]
செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எந்த திட்டங்களாக இருந்தாலும் தமிழகத்தில் இருந்து செலுத்தப்படுகின்ற வரிகளின் பங்கு தான் மீண்டும் தமிழகத்திற்கு வந்து கிடைத்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் “உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்” என்பது நம் முத்தமிழ் முதல்வர் உடைய தாரகமந்திரம். அந்த வகையிலே நல்லவைகளுக்கு நிச்சயம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கைகொடுப்பார்கள், அல்லவை என்றால் அதை எதிர்ப்பதற்கு துணிவார், பயப்பட மாட்டார். பாஜகவின் மாநில தலைவரை தமிழகத்தினுடைய வளர்ச்சிக்கு […]
வடிகால் வசதி தொடர்பாக விசாரணை கமிஷன் அமைப்பது எதிர்க்கட்சியை மிரட்டுவதற்காக அல்ல என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனை சார்பில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம் தனியார் மருத்துவமனை சார்பில் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “சபரிமலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உதவி […]
அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு துறைரீதியான ஞானம் இல்லை என்று ஹச். ராஜா விமர்சனம் செய்துள்ளார். சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசு பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 10 ரூபாய் குறைந்துள்ளது. மேலும் மத்திய அரசு தனது காலால் வரியை குறைத்துள்ளது. ஆனால் தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று கூறி […]
அனைத்து நாட்களிலும் கோவில்களில் வழிபாடு செய்யலாம் என்ற அறிவிப்பை வெளிவந்ததை தொடர்ந்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது குடும்பத்தினர் மற்றும் பாஜக தொண்டர்களுடன் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டிலுள்ள கொப்புடை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம்பேசிய அவர் , “கோவில்கள் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிலையில் சென்னையில் உள்ள காளிகாம்பாள் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 2011 க்கு பிறகு உண்டியலில் வருகின்ற காணிக்கைகளை முறையாக அந்த திருக்கோவில் பதிவேட்டிலே பதியப்படவில்லை. அதற்கு முன்பு திருக்கோயில் வருகின்ற காணிக்கைகளை தெய்வத்திற்கு ஏற்ற நகைகளை வைத்து விட்டு, மற்ற நகைகளை உருக்கி திருக்கோவில் பயன்பாட்டிற்கும் அல்லது gold bar schemeக்கும் எடுத்து சென்றிருந்தார்கள். 10 ஆண்டுகளில் அந்த பணி நடைபெறவில்லை என்பதால் தான் தற்போது மூட்டை மூட்டையாக பல திருக்கோவில்களில் இருக்கின்ற தங்கத்தை திருக்கோவில் உடைய வளர்ச்சிக்கு […]
போராட்டம் செய்வோம் என்று அச்சுறுத்தலுக்கு எல்லாம் நிச்சயம் இந்த அரசு அடிபணியாது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஒரு போராளியாக இருந்து பல ஆண்டுகாலம் உழைத்ததன் விளைவாக தான் இன்றைக்கு முதலமைச்சர். போராட்டங்கள் நடத்துவோம், போராட்டம் செய்வோம் என்று அச்சுறுத்தலுக்கு எல்லாம் நிச்சயம் இந்த அரசு அடிபணியாது. நியாயமாக எந்த செயலாக இருந்தாலும் அந்த செயலுக்கு தலைவணங்க காத்திருக்கின்றோம். எச்.ராஜாவுக்கு […]
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கோயில்களின் வரவு செலவு கணக்கு வரும் ஜூலை 1ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, இந்து சமய அறநிலை துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்பிறகு, சட்டவிரோதமாக கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கோவில்களின் வரவும் செலவுகள் அனைத்தும், மக்கள் […]
இந்து சமய அறநிலையத் துறையின் ஆவணங்கள் மற்றும் கோப்புகளை பாதுகாக்கும் வகையில் டிஜிட்டல் ஸ்கேனிங் செய்யும் பணியை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் திறந்து வைத்தார். தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு பல நலத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார். நேற்று திமுக கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்தார். இதைத்தொடர்ந்து தற்போது மு க ஸ்டாலின் வழிகாட்டுதலில் இந்து சமய அறநிலையத் […]
சென்னையில் அடுத்த ஒரு வாரத்திற்குள் 100 படுக்கைகள் வசதிகொண்ட துணை மருத்துவமனைகள் அமைக்கப்படும் என இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டு வருகின்றது. அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி நிரம்பி விட்ட காரணத்தினால் மக்கள் பலர் […]
தமிழகத்தில் 14 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் பலன் அடுத்த ஒரு வாரத்தில் தெரியவரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியில் […]