Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“இலுப்பூர் அருகே சேற்றில் சிக்கிக் கொண்ட பசுமாடு”…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!!!

சேற்றில் சிக்கிக் கொண்ட பசுமாட்டை உயிருடன் தீயணைப்பு வீரர்கள் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் அருகே இருக்கும் பையூரை சேர்ந்த கருப்பையா என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று அந்தப் பகுதியில் இருக்கும் வயலில் சேற்றில் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான வீரர்கள் பசுமாட்டை உயிருடன் மீட்டார்கள். பின் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Categories

Tech |