Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M ஆக்கினீங்க… கேட்டதெல்லாம் செஞ்சி கொடுத்தேன்… எனர்ஜிட்டிக்காக பேசிய எடப்பாடி!!

சேலம் மாவட்டத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவின் பலர் இணைந்த விழாவில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம்,  சேலத்தை சுற்றியுள்ள பகுதிகள் 2011க்கு முன்பு எப்படி இருந்தது ? 2011 இல் இருந்து 2021 வரை எப்படி இருந்தது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்த பத்து ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பொற்கால ஆட்சியில் இந்தத் திட்டங்கள் எல்லாம் நடைபெற்றது. அதற்கு என்ன காரணம் ? […]

Categories
அரசியல் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பக்கத்துல தான் என் வீடு இருக்கு… எப்போ வேணும்னாலும் என் வீட்டுக்கு வாங்க… தொண்டர்களுக்கு இபிஎஸ் அழைப்பு!!

சேலம் மாவட்டத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவின் பலர் இணைந்த விழாவில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, 2023 ஆம் ஆண்டு பிறக்க இருக்கின்றது. இந்த ஆண்டு துவக்கமே மிக மகிழ்ச்சிகரமாக இருப்பதற்கு இது ஒரு சான்றாக இருக்கிறது. மேடையில் இருக்கின்றவர்களும் சரி, கழகத்திலே இணைகின்றவர்களும் சரி,  பார்த்த முகம். பார்த்த முகம் எல்லாம் இன்றைக்கு எங்களோடு இணைந்து பணியாற்றுகின்ற பொழுது,  இனி எதிர்காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை எவராலும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 மகள்களையும் காவிரி ஆற்றில் வீசி கொன்று தம்பதி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மான்விழி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு 7 வயது உடைய நிதிஷா, 5 வயதுடைய அக்ஷரா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்ட நிதிஷாவுக்கு தினமும் தம்பதியினர் இன்சுலின் ஊசி செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் 2-வது மகள் அக்ஷராவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முகநூலில் குடும்ப புகைப்படத்தை பதிவிட்டு…. பணம் கேட்டு மிரட்டிய வாலிபர்…. சைபர் கிரைம் போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாட்ஸப்பில் முகப்பு புகைப்படமாக தனது குடும்பத்தினரின் புகைப்படத்தை வைத்துள்ளார். இவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தனது குடும்ப புகைப்படத்தை ஒருவர் எடிட் செய்து அவதூறாக முகநூலில் பதிவிட்டார். அதனை நீக்க என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு செல்ல பாண்டியன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு…. கணவரை கைது செய்த போலீசார்…. அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டி நைனாக்காடு பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுஶ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அனுஸ்ரீக்கு கௌதம் நந்தா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கௌதம் அவரது தந்தை தங்கராஜ், தாய் அருள்மணி ஆகியோர் வரதட்சனை கேட்டு அனுஶ்ரீயை துன்புறுத்தியுள்ளனர். இதனால் அனுஸ்ரீ தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். மேலும் விவாகரத்து கேட்டு கணவருக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கணவரை இழந்து தவிக்கும் பெண்…. தகாத முறையில் நடந்த ஜவுளிக்கடை உரிமையாளர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வடக்கு தியாகனூர் பெருமாள் கோவில் தெருவில் ரமேஷ் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உமா பரமேஸ்வரி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ் பாபு இறந்து விட்டதால் உமா பரமேஸ்வரி தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக உமா தலைவாசலில் இருக்கும் தனியார் ஜவுளிக்கடையில் விற்பனையாளராக வேலைக்கு சேர்ந்தார். இதற்கிடையே ஜவுளி கடை உரிமையாளரான கலையரசன் உமாவிடம் தகாத முறையில் நடந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. வேன் கவிழ்ந்து ரோட்டில் சிதறிய முட்டைகள்…. போலீஸ் விசாரணை…!!

சேலத்தில் இருந்து முட்டை லோடு ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சரக்கு வேன் சென்று கொண்டிருக்கிறது. இந்த வேன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை காஞ்சிகோவில் பிரிவு அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் மினி வான் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறிய வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் மற்றும் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் முட்டைகள் ரோட்டில் சிதறி உடைந்தது. ஏராளமான முட்டைகள் உடைந்து ரோட்டில் ஆறாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

50 அடி ஆழமுள்ள கிணறு…. உயிருக்கு போராடிய பசுமாடு மீட்பு…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள டேனிஷ்பேட்டை உள்கொம்பை பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நடராஜனுக்கு சொந்தமான பசுமாடு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பசு கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த நடராஜன் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த பசுவை கயிறு கட்டி பத்திரமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பிறந்தநாள் விழாவிற்கு சென்ற நண்பர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர் பெருமாள் கோவில் தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன் தனது நண்பர் முஸ்தபா என்பவருடன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக கேக் வாங்கி கொண்டு மொபட்டில் மல்லசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து நைனாம்பட்டி காளியாகோவில் அருகே வளைவில் திரும்பிய போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து மொபட் மீது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மகனை திட்டிய தந்தை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை காளியம்மன் கோவில் தெருவில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் விக்னேஷ் குமார் வீட்டில் இருந்துள்ளார். மேலும் விக்னேஷ் குமார் செலவுக்கு பணம் இல்லாததால் ஒருவரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இதுகுறித்து அறிந்த ஏழுமலை தனது மகனை கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் விக்னேஷ் குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தந்தை வாங்கிய கடன்…. பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற மகன்…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இடங்கணசாலை மேட்டுக்காடு பகுதியில் அழகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் அழகுராஜை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அழகுராஜ் கூறியதாவது, கடந்த 2002-ஆம் ஆண்டு எனது தந்தை சேலம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியில் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாணவிகளை கேலி, கிண்டல் செய்த ஆய்வக உதவியாளர்…. சரமாரியாக தாக்கிய பெற்றோர்….. பரபரப்பு சம்பவம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கீரப்பாப்பம் பாடியில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு வீரவேல் என்பவர் கடந்த ஒரு ஆண்டாக ஆய்வக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீரவேல் மாணவிகளை கேலி கிண்டல் செய்வதுடன் தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் மாணவிகளின் பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் வீரவேல் குறித்து புகார் அளித்தனர். பின்னர் கோபத்தில் பெற்றோர்கள் […]

Categories
மாநில செய்திகள்

சேலம் வழி செல்லும் 4 ரயில்கள் ரத்து… தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்…!!!!!!

சென்னை சென்ட்ரல் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட வாலாஜா ரோடு காட்பாடி மார்க்கத்தில் முகுந்தராயபுரம் திருவலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ரயில்வே பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சேலம் வழியாக செல்லும் ரயில்களில்  சில ரயில்களை தெற்கு நிர்வாகம் ரத்து செய்துள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 3,4-ம் தேதிகளில் சென்னை சென்ட்ரல் – கோவை எக்ஸ்பிரஸ், கோவை- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், போன்ற ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜனவரி 4-ம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்…. வேறு பெண்ணை நியமித்து பாடம் நடத்தியதால் பரபரப்பு…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டப்பநாயக்கன் பட்டியில் இருக்கும் அரசு மேல்நிலை பள்ளியில் முரளிந்திரன் என்பவர் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளிக்கு வந்து பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல் வெளியே சென்று விடுகிறார். அதற்கு பதில் தனக்கு தெரிந்த வேறு ஒரு பெண்ணை ஆசிரியராக நியமித்து முரளிந்திரன் பாடம் நடத்த சொல்வதாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து அறிந்த மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் முருகன் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மோதுவது போல் வந்த தனியார் பேருந்து…. கோபத்தில் எட்டி உதைத்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் செம்மாண்டப்பட்டி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு ஜமுனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜமுனா தனது மகனுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற உதவி தொகை கேட்டு கோரிக்கை மனு அளித்துள்ளார். இதனை அடுத்து ஜமுனா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் அருகே இருக்கும் சாலையை கடக்க முயன்ற போது தனியார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2-வது திருமணத்திற்கு வற்புறுத்திய வாலிபர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவியரசன் என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் 20 வயது பெண்ணுடன் கவியரசனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்டதை அறிந்த கவியரசன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் அந்த பெண் ஏற்காடு காவல் நிலையத்தில் கவியரசன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“யாரிடமும் சொல்லாதீர்கள்”…. பாம்பு கடித்ததை மறைத்த சிறுவன் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கௌதமன் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அரையாண்டு தேர்வு எழுதிவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்த கௌதமன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த பாம்பு கௌதமனை கடித்ததால் மற்ற சிறுவர்கள் அச்சத்தில் அலறி ஓடினர். அப்போது வீட்டில் இருக்கும் யாரிடமும் சொல்லாதீர்கள் என கௌதமன் கேட்டு கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து இரவு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளம்பெண் தற்கொலை வழக்கு…. கடிதம் அவர் எழுதியது தானா…? போலீஸ் விசாரணை…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டரை வயதில் குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் பூஜா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் வீட்டில் சோதனை நடத்தி பூஜா எழுதிய கடிதத்தை கைப்பற்றினார். அந்த கடிதத்தில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை கட்ட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காரில் கடத்தப்பட்ட புதுப்பெண்…. காதல் கணவர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நானும் தலைவாசல் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தோம். எங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் திருமணம் செய்து கொண்டு சேலத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளோம். சேலத்தில் இருந்தால் எங்களை பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் இருவரும் ஊட்டி செல்ல […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய புள்ளி மான்…. விவசாயி அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கணவாய் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.என் புதூர் பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது கிணற்றில் மான் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை ராஜசேகர் பார்த்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த புள்ளி மானை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். அதன் பிறகு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த 14 வயது மாணவி…. வழிமறித்து சில்மிஷம் செய்த தொழிலாளி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தென்குமரை கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் கோவர்த்தனன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது கோவர்த்தனன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் கோவர்தனனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மளிகை பொருட்களை பறித்து சென்ற குரங்கு…. 2 மாத குழந்தை பலியான சம்பவம்…. பெரும் சோகம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு நாகலூர் மலை கிராமத்தில் நிஷாந்த்-மாலதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிறந்து 2 மாதமே ஆனால் ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த 15-ஆம் தேதி நிஷாந்த் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து தம்பதியினர் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த பிறகு மாலதி வீட்டை திறப்பதற்காக கணவரிடம் குழந்தையை கொடுத்துள்ளார். அப்போது ஒரு கையில் குழந்தையையும், மற்றொரு கையில் மளிகை பொருட்களையும் வைத்துக்கொண்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…! குறுந்தகவல் அனுப்பி ரூ.1 லட்சம் மோசடி…. உடனடியாக மீட்ட சைபர் கிரைம் போலீசார்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நரசோதிப்பட்டி பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி முருகேசனின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து அதில் இருக்கும் தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் முருகேசன் லிங்கை கிளிக் செய்து வங்கி விவரங்களை பதிவேற்றம் செய்த சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 99 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

5 வருட காதல்… இலங்கை அகதிகள் முகாமில் வாலிபர் தீக்குளிப்பு… காரணம் என்ன…?

சேலம் மாவட்டத்தில் உள்ள தத்தம்பட்டி அடுத்த நாகியம்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமை சேர்ந்த அர்ஜுன் என்பவர் அதே முகாமில் உள்ள ஒரு பெண்ணை கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில்  அந்த பெண்ணை திருமணம் செய்வதற்காக அர்ஜுன் குடும்பத்தினர் பெண் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அர்ஜுன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை  எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார். இதில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காப்பீடு தொகை வழங்க மறுப்பு…. ஓய்வு பெற்ற போலீஸ்காரருக்கு ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரியில் ஓய்வு பெற்ற போலீஸ்காரரான பேச்சியண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி உள்ளார். இவர் கடந்த 2010- ஆம்ஆண்டு ஆறு மாதத்திற்கு ஒருமுறை 2545 விதம் 15 ஆண்டுகளுக்கு செலுத்தும் வகையில் 1 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு செய்து தனது கணவர் பேச்சியண்ணன் வாரிசுதாரராக இணைத்துள்ளார். இந்நிலையில் ஆயுள் காப்பீடு நிறுவனம் மல்லசமுத்திரம் கிளையில் ஆயுள் காப்பீடு செய்திருந்ததால் அதற்கான இன்சூரன்ஸ் பாலிசி வழங்கப்பட்டது. கடந்த 2012-ஆம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றது… மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு..!!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. சென்ற சில வாரங்களாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது காவேரி நீர் பிடிப்பு தகவல்களை நின்று விட்டது இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு சென்ற சில நாட்களாக நீர்வரத்து குறைந்து கொண்டே வருகின்றது. சென்ற 14ஆம் தேதி அணைக்கு வினாடிக்கு 24 ஆயிரத்து 500 கன அடி வீதம் நீர்வரத்து இருந்த நிலையில் நேற்று முன்தினம் வினாடிக்கு 14,600 கனஅடியாக குறைந்துள்ளது. மேலும் நேற்று 9 ஆயிரத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கடித்து குதறிய மர்ம விலங்கு… இறந்து கிடந்த 13 ஆடுகள்…. அச்சத்தில் கிராம மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புது வேலுமங்கலம் கிராமத்தில் விவசாயியான கருப்பு செட்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நிலத்தில் பட்டி போட்டு செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 13 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து குதறிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு கருப்பு செட்டி அதிர்ச்சியடைந்தார். 6 ஆடுகள் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதுகுறித்து கால்நடை மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய சப்- இன்ஸ்பெக்டர்…. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிபாளையம் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு ஒரு அடிதடி வழக்கில் ராஜேந்திரன் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது பிரகாஷ் ஜாமீனில் விட ராஜேந்திரன் 4000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரகாஷ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து பிரகாஷ் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராஜேந்திரனிடம் கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே… பள்ளி மாணவன் செய்யும் காரியமா இது…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

பள்ளி மாணவர் ஒருவர் மது அருந்திவிட்டு சாலையில் தள்ளாடிவரும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள வாழைப்பாடி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 1,000-ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில்  நேற்று முன்தினம் பள்ளி மாணவர் ஒருவர் பள்ளி சீருடை அணிந்து மது அருந்திவிட்டு போதையில் சாலையில் தள்ளாடி விழுகின்றார். இதனையடுத்து அந்த மாணவரை சக மாணவர் ஒருவர் பாதுகாப்பாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“தி.மு.க அரசு மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை”… சேலம் மாநகரில் 4 இடங்களில் அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம்…!!!!!!

மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு போன்றவற்றை கண்டித்து சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பழைய சூரமங்கலம் பகுதியில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி  உயர்வு, விலைவாசி உயர்வு, பால் விலை உயர்வு போன்றவற்றை கண்டித்தும், சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்பபெற வலியுறுத்தியும் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சௌந்தர பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கனகராஜ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி…. இந்திய அணியில் இடம்பிடிப்பேன்…. நம்பிக்கையுடன் நடராஜன்..!!

ஐபிஎல் தொடரில் நான் நன்றாக விளையாடி இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்று கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் மன வலிமையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் மாரத்தான் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமானது கிடையாது. அனைவருமே மாரத்தான் ஓடலாம், அனைத்து விளையாட்டுக்குமே ரன்னிங் என்பது தேவைப்படுகிறது என்றார். மேலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நான் நன்றாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விவசாயி வீட்டின் கதவை உடைத்து…. 1 கோடி ரூபாய் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சாமியார் கிணறு பகுதியில் விவசாயியான லோகநாதன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்கள் தங்களது தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த 7-ம் தேதி இரவு கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு அப்பகுதியில் இருக்கும் புற்று மாரியம்மன் கோவிலுக்கு லோகநாதன் குடும்பத்தினருடன் சாமி கும்பிடுவதற்காக சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்ட […]

Categories
சேலம் நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல், சேலம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!!

நாமக்கல், சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலால் சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். அதேபோல மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக நாமக்கல் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் விடுமுறை அறிவித்துள்ளார். ஏற்கனவே மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், சேலம், நாமக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் நாளை (09ஆம் தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலால் சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், சேலம் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை  ஆகிய மாவட்டங்களில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பெரியார் பல்கலைக்கழக அளவிலான போட்டிகள்”…. சேலம் அரசு கல்லூரி மாணவிகள் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!!

நாமக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் பெரியார் பல்கலைக்கழக அளவில் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இலையில் சேலம் அரசு பெண்கள் கலை கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். அதாவது மாணவி மீனாட்சி, 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும், தொடர் ஓட்டத்தில் வெண்கல பதக்கமும், மனோன்மணி 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், சரண்யா 100 மற்றும் 200 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த நபர்…. சாக்லேட் வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி டி.வி.எஸ் காலனியில் பொன் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்தபோது கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஒருவர் தெருவில் நின்ற நபர்களுக்கு சாக்லேட் கொடுத்துக் கொண்டே வந்தார். இந்நிலையில் வீட்டு வாசலில் நின்றபடியே பொன்ராணியும் கிறிஸ்துமஸ் தாத்தாவை பார்த்துக் கொண்டிருந்தார். இதனையடுத்து அவர் பொன்ராணிக்கு சாக்லேட்டை கொடுத்தார். அதனை வாங்கியவுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் பொன்ராணியின் கழுத்தில் கிடந்த 6 1/2 பவுன் தங்க […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் வருமான வரி செலுத்துவோர்… 12 சதவீதம் அதிகரிப்பு… முதன்மை தலைமை ஆணையர் தகவல்..!!!

தமிழகத்தில் வருடம் தோறும் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்து இருப்பதாக வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள காந்தி ரோட்டில் இருக்கும் வருமானவரித்துறை அலுவலகத்தில் வருமான வரி செலுத்துவோர் மற்றும் பட்டய கணக்காளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் பங்கேற்றார். அப்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித்துறையில் 1 லட்சத்து 8000 கோடி வரை வசூல் செய்ய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மீண்டும் ரயில்களில் கட்டண சலுகை கிடைக்குமா…?” எதிர்பார்ப்பில் வீரர், வீராங்கனைகள்..!!!!

ரயில்களில் கட்டணச் சலுகை மீண்டும் கிடைக்குமா என விளையாட்டு வீரர், வீராங்கனைகள் எதிர்பார்க்கின்றார்கள். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நலனை கருதி ரயில்வே வாரியம் சார்பாக டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில் சென்ற 2020 ஆம் வருடம் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது மூன்று மாதங்கள் ரயில் சேவை முடங்கியது. இதனால் வருவாய் இழப்பை சமாளிப்பதற்கு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு கட்டண சலுகை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கைதிகளுடன் உறவினர்கள் பேச… சேலம் மத்திய சிறையில் இன்டர்காம் வசதி… பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்..!!!!

கைதிகளுடன் உறவினர்கள் பேசுவதற்கு சேலம் மத்திய சிறையில் இன்டர்காம் தொலைபேசி வசதி செய்யப்பட்டு இருக்கின்றது. சேலம் மத்திய சிறைச்சாலையில் 800க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள். சிறையில் இருக்கும் கைதிகளை சந்திப்பதற்காக அவர்களின் உறவினர்கள் கொடுக்கும் மனுக்களின் அடிப்படையில் ஏராளமானோர் அனுமதிக்கப்படுகின்றார்கள். அப்போது கைதிகள் ஒருபுறமும் உறவினர்கள், வக்கீல்கள் மற்றொருபுறமும் நின்று பேசுகின்றார்கள். இடைப்பட்ட தூரம் அதிகமாக இருப்பதால் இருதரப்பினரும் கத்தி பேசுகின்றனர். இந்நிலையில் கம்பி வலையில் உள்ளே இருக்கும் கைதி தன்னுடைய உறவினரின் முகத்தை பார்த்து பேசும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மக்களே…. பேருந்துகளில் சேவை குறைபாடு இருந்தால்…. இந்த நம்பரில் புகார் செய்யலாம்….!!!!

தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு போக்குவரத்து துறை சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்ட வருகின்றன. அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் பயணிகளின் குறைகளையும் அரசு நிவர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் சேலம் கோட்டை அரசு பேருந்துகளில் சேவை குறைபாடுகளை 9489203900 என்ற whatsapp எண்ணில் பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படிக்கட்டில் பயணம், பயணிகளிடம் டிக்கெட் கட்டணத்திற்கு மீதி சில்லரை வழங்காமல் இழுத்தடிக்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதலிக்க மறுத்த மாணவி…. கடத்தி சென்று துன்புறுத்திய தொழிலாளி…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மோரூர் விநாயகர் கோவில் தெருவில் கட்டிட தொழிலாளியான மணிகண்டன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு 12-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்துள்ளார். மேலும் காதலை ஏற்க மறுத்த மாணவியை மணிகண்டன் கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். இந்த வழக்கினை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சர்வீஸுக்கு விட்ட போது விபத்தில் சிக்கி சேதமான கார்…. உரிமையாளருக்கு ரூ.8 1/4 லட்சம் இழப்பீடு…. நீதிமன்றம் அதிரடி…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தம்பநாயக்கன்பட்டி பகுதியில் சௌந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 லட்ச ரூபாய்க்கு ஒரு காரை வாங்கியுள்ளார். இந்நிலையில் ஒரு ஆண்டு கழித்து சம்பந்தப்பட்ட கம்பெனியில் சௌந்தர்ராஜன் காரை சர்வீஸ் செய்ய விட்டிருந்த போது ஊழியர் காரை சோதனை ஓட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார். அப்போது விபத்தில் சிக்கி கார் சேதமானதால் சௌந்தர்ராஜன் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் சேவை குறைபாட்டால் சேதமடைந்த காரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சர்க்கரை வியாபாரியிடம் ரூ.9 லட்சம் மோசடி…. துரிதமாக செயல்பட்ட போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காமலாபுரம் பகுதியில் சர்க்கரை வியாபாரியான மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு மராட்டிய மாநிலத்தை சேர்ந்த கௌரவ் என்பவரிடம் மோகன் குமார் 30 டன் சர்க்கரை வாங்குவதற்காக அவர் கூறிய வங்கி கணக்கில் 9 லட்சத்து 38 ஆயிரத்து 175 ரூபாயை செலுத்தியுள்ளார். ஆனால் பணத்தை திரும்ப கொடுக்காமலும், சர்க்கரை அனுப்பாமலும் கௌரவ் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் மோகன்குமார் புகார் அளித்தார். அந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாழ்க்கையை சீரழித்த தொழிலாளி…. உடல் நலக்குறைவால் இறந்த சிறுமி…. நீதிபதியின் உத்தரவு…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி கிழக்கு வட்டம் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி பழுது பார்க்கும் பட்டறையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு 15 வயதுடைய 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பிரபு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அதன் பிறகும் மாணவியை மிரட்டி பிரபு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தாய் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மக்களே…. மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் முகாம்…. மேற்பார்வை பொறியாளரின் முக்கிய அறிவிப்பு…!!!

சேலம் மாவட்ட மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணி சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த 28-ஆம் தேதி முதல் வீடு, விசைத்தறி, கைத்தறி குடிசை, விவசாய மின் இணைப்புதாரர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் முகாம் மின்வாரிய அலுவலகங்களில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த சிறப்பு முகாம் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து தினங்களிலும் காலை 10:30 மணியிலிருந்து மாலை 5:15 மணி வரை நடைபெறும். எனவே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வருகிற 31-ஆம் தேதி வரை…. சேலம்-கோவை பாசஞ்சர் ரயில் ரத்து…. வெளியான முக்கிய தகவல்….!!!

கோவை மார்க்கம் வாஞ்சிபாளையம், சோமனூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் நேற்று முதல் வருகிற 31-ஆம் தேதி வரை சேலம்-கோவை பாசஞ்சர் ரயில்(06803), கோவை-சேலம் பாசஞ்சர் (06802) ஆகிய அனைத்து ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வாஞ்சிபாளையம், திருப்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேலம் வழியாக இயக்கப்படும் ரயிலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆலப்புழா ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அட!… இது என்னப்பா புதுசா இருக்கு…. திருடிய பணம், நகையை திருப்பி கொடுத்த திருடர்கள்….. சேலத்தில் நடந்த ஷாக் சம்பவம்….!!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் ஆளில்லாத நேரம் பார்த்து மர்ம நபர்கள் சிலர் 13 பவுன் தங்க நகைகள் மற்றும் 1,40,000 ரொக்கம் ஆகியவற்றை திருடி விட்டு சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகுமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சசிகுமார் வீட்டில் இருந்து திருடிய 13 சவரன் தங்க நகை […]

Categories
சேலம் நாமக்கல் மாவட்ட செய்திகள்

மதுரை வீரன் கோவிலை அகற்ற எதிர்ப்பு… ஆட்டையாம்பட்டி பிரிவு – மசக்காளிப்பட்டி இடையே திரண்ட மக்கள்… போக்குவரத்து பாதிப்பு..!!!!

மதுரை வீரன் கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆட்டையாம்பட்டி பிரிவு அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 2008 ஆம் வருடம் நில அளவீடு செய்த போது சாலையின் இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை மரங்கள் நடவில்லை. இதனால் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு இருக்கின்றது. இதனிடையே ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் இருந்து மசக்காளிபட்டி பேருந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

118 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து…? அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

சேலம் மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனால் சேலம் மாநகரில் இருக்கும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனைகள் ஈடுபட்டு, போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கின்றனர். இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது, விதிமுறைகளை மீறி செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 118 பேரின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

போலியான தங்கநகை…. ரூ.25 லட்சம் மோசடி செய்த டிப்-டாப் வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பேளூர் பகுதியில் ஜெயினுலாதீன்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜெயினுலாதீனின் கடைக்கு டிப்-டாப் உடையணிந்த வாலிபர்கள் சென்று குறைந்த விலைக்கு தங்கமணி மாலை இருக்கிறது எனவும், 60 லட்ச ரூபாய் கொடுத்து அதனை வாங்கிக் கொள்ளுமாறும் கூறியுள்ளனர். அதனை பார்த்த ஜெயினுலாதீன் பணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் குரங்குசாவடி பகுதியில் நாங்கள் தங்கி இருக்கிறோம், பணத்தை ஏற்பாடு செய்துவிட்டு […]

Categories

Tech |