Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!.. பம்பை அகற்றாமல் தார் சாலை… இரவோடு இரவாக ஒப்பந்ததாரர்கள் செய்த செயல்… பரபரப்பு…!!!!

சேலம் மாநகராட்சி பகுதிகளில் இப்போது சாலைகள் போடும் பணியானது தீவிரமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான சாலைகள் அனைத்தும் தார்சாலைகளாக மாற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாநகராட்சி 28வது கோட்டத்துக்கு உட்பட்ட அப்புசாமி தெருவில் பல்வேறு வருடங்களாக பழுதடைந்த நிலையில் இருந்த சாலையை மாநகராட்சி சார்பில் புதுப்பிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் அனைத்து பகுதிகளும் தார் சாலைகளாக மாற்றப்பட்டது. இந்நிலையில் சாலை ஓரத்தில் பல்வேறு வருடங்களாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்து நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“ரயில்களில் டிக்கெட் பரிசோதனை எளிமையாக்க”… இனி கவலை வேண்டாம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!

நாடு முழுவதும் ரயில்களில் டிக்கெட்  பரிசோதனை எளிமையாக்கி நவீனப்படுத்தும் விதமாக கையடக்க கணினி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறது. வழக்கமாக முன்பதிவு பெட்டிகளில் பயண சீட்டு பரிசோதகர்கள் பயணிகளின் பயண சீட்டுகளை தங்களிடம் உள்ள அச்சிடப்பட்ட பயணிகள் பட்டியலை பார்த்து சோதனை செய்வார்கள். தற்போது இந்த பயணிகள் பட்டியல் கணினி மயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக தெற்கு ரயில்வேயில் பயண சீட்டு பரிசோதனைகளுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பயண சீட்டுகளை எளிதாக சரிபார்க்க முடியும். மேலும் பரிசோதனைகளின் செயல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பகீர்…. காவேரி -பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு…. அவதியில் மக்கள்….!!!!

தமிழகத்தில் கடந்து சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றிலும், பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றிலும் உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரி மற்றும் பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நகரமாக உள்ள பவானியில் காவிரி ஆறும், பவானி ஆறும் அங்குள்ள கூடுதுறை பகுதியில் ஒன்றாக கலக்கிறது. இதனால் இங்கு வெள்ள […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் இன்று(ஆகஸ்ட் 10)….. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், ‘சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று  10-ந்தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 3 ஆம் தேதி பணி நாளாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மேட்டூர் அணைக்கு குறைந்தது நீர்வரத்து”…. தமிழக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் ஆய்வு….!!!!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்த நிலையில் தமிழக பொதுப்பணி துறை முதன்மைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் சென்ற 16ஆம் தேதி தனது முழு கொள்ளளவை எட்டியது. அப்பொழுது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாகவே இருந்து வந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் சென்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“தேவூர் அருகே காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகள்”…. அதிகாரிகள் ஆய்வு….!!!!!

தேவூர் அருகே காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டார்கள். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு சென்ற 4-ம் தேதி வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் காவேரி கரையோர பகுதிகளில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்”…. இதோ உங்களுக்கான தகவல்….!!!!!

சேலத்தில் வருகின்ற 12ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள கோரிமேட்டில் இருக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது. இம்முகாமிற்கு உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் தங்களின் காலி பணியிடங்களுக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி”…. போலீசார் விசாரணை….!!!!!

சேலம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள டேனிஷ்பேட்டை-லோகூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாள பாதையில் 55 வயது உடைய ஒரு நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்துள்ளார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் ரயில்வே போலீசார்கள், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சங்ககிரி அருகே ஏரியை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த 5 ஏக்கர் நிலம்”….. 2 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு….!!!!!

சங்ககிரி அருகே ஏரியை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த 2 கோடி மதிப்பிலான 5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி அருகே இருக்கும் இருகாலூர் ஊராட்சியில் உள்ள புது ஏரி 27 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலையில் இந்த ஏரியை ஆக்கிரமித்து சில விவசாயிகள் வாழை, தென்னை, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவற்றை பயிரிட்டு இருந்தார்கள். இதனால் சங்ககிரி தாசில்தார் பானுமதிக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் தாசில்தார் சங்ககிரி கிழக்கு வருவாய் ஆய்வாளர் ராஜு, சங்ககிரி வட்ட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கோர்ட்டிலிருந்து தவறுதலாக அனுப்பப்பட்ட 1.50 லட்சம்”…. திரும்ப வழங்காத மூதாட்டி மீது வழக்குப்பதிவு….!!!!!

நீதிமன்றத்தில் இருந்து தவறுதலாக அனுப்பப்பட்ட 1.50 லட்சத்தை திரும்பி வழங்காத மூதாட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் தலைமை குற்றவியல் கோர்ட்டு சிராஸ்தார் செந்தில்குமார் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்ற 2016 ஆம் வருடம் தாரமங்கலம் அருகே இருக்கும் பாறைக்கல்லூர் பகுதியை சேர்ந்த சுசிலா என்பவர் ஒரு வழக்கு சம்பந்தமாக 1.50 லட்சம் அவருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த தொகையானது அவரின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இடங்கணசாலை நகராட்சியில் மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு”… நகராட்சி அலுவலகத்தில் மனு….!!!!!!

இடங்கணசாலை நகராட்சியில் மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட சின்னேரி பகுதியில் மின் மயானம் அமைக்க இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கஞ்சமலையூர், இ.காட்டூர், மெய்யனூர் மற்றும் இடங்கணசாலையைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்துக்குள் திரண்டு தலைவர் கமலக்கண்ணனிடம் மனு அளித்தார்கள். அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது, சின்னேரி பகுதியில் மின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“துப்பாக்கிகள் தயாரித்த வழக்கு”…. இரண்டாவது நாளாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை….!!!!!

துப்பாக்கிகள் தயாரித்த வழக்கில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இரண்டாவது நாளாக நேற்றும் விசாரணை செய்தார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே இருக்கும் புளியம்பட்டி பகுதியில் சென்ற மே மாதம் போலீசார் வாகன சோதனை நடத்திய பொழுது இன்ஜினியர் சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட இருவரிடம் இருந்து இரண்டு கை துப்பாக்கிகளை பறிமுதல் செய்தார்கள். மேலும் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் ஏற்காடு அடிவாரம் கருங்காலி என்ற இடத்தில் வீடு வாடகைக்கு எடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“10 லட்சம் கடன் தருவதாக கூறி 1 லட்சத்து 40 ஆயிரம் மோசடி”…. போலீசார் மீட்பு….!!!!!

10 லட்சம் கடன் தருவதாக கூறி 1 லட்சத்து 40 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட நிலையில் போலீசார் மீட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரை சேர்ந்த முருகேசன் என்பவரின் செல்போன் எண்ணுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் 10 லட்சம் கடன் தருவதாகவும் அதற்காக ஆதார் எண், பான் கார்டு, வங்கி கணக்கு புத்தக விவரம் உள்ளிட்டவற்றை கூறுமாறு தெரிவித்துள்ளார். இதை முருகேசன் நம்பியுள்ளார். இதையடுத்து 1 லட்சத்து 40 ஆயிரத்தை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் மாநகரில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்”…. கமிஷனர் உத்தரவு பிறப்பிப்பு…!!!!!

சேலம் மாவட்டத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். சேலம் மாவட்டத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேற்று இரவு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த இன்ஸ்பெக்டர் மோகன் பாபு சேலம் டவுன் காவல் நிலையத்திற்கும் இன்ஸ்பெக்டர்கள் சண்முக சுந்தரராஜன் செவ்வாய் பேட்டைக்கும் செல்வராஜ் கன்னங்குறிச்சிக்கும் சசிகலா இரும்பாலைக்கும் விக்னேஸ்வரன் கருப்பூருக்கும் விஜயேந்திரன் அழகாபுரத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் அன்னதானப்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் பிறப்பித்துள்ளார்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் புதிய வேலைவாய்ப்பை தேடி வருவோர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.இந்நிலையில் அரசு வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதாவது மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருப்பவர்களுக்கு உதவி தொகை அரசு சார்பாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்ட கைத்துப்பாக்கி தயாரித்த வழக்கு….வெளியான தகவல்….!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகில் புளியம்பட்டி பகுதியில் சென்ற மே மாதம் ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அவர்கள் வைத்திருந்த பையில் 2 கைத்துப்பாக்கிகள், கத்தி, முக மூடிகள் போன்றவை இருந்தது. இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த என்ஜினீயர் சஞ்சய் […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. ALERT-ஆ இருங்க மக்களே….!!!!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

Eps-க்கு ஷாக்…. தட்டி தூக்கிய ஓபிஎஸ்…. சேலத்தில் பெருகும் ஆதரவாளர்கள்….!!!!

அதிமுகவில் ஒற்றை தலமை விவகாரம் தலை தூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக நிற்கிறது. இதில் அதிமுகவினர் பெரும்பாலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக எடப்பாடி பழனிச்சாமி சொந்தமான சேலத்தில் இருந்து அதிமுக நிர்வாகிகள் தேனி மாவட்டம் பெரிய குளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் நிலத்திற்கு வருகை தந்து அவரை சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். அப்போது சேலம் மாநகர மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் நாமக்கல் மாவட்டம் ஒன்றிய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இதற்காக தான் மூதாட்டியை கொன்றேன்” தொழிலாளியின் பரபரப்பு வாக்குமூலம்…. போலீஸ் விசாரணை…!!!

தொழிலாளி மூதாட்டியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தெசவிளக்கு வடக்கு கிராமம் துட்டம்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னம்மாள்(70) என்ற மனைவி இறந்துள்ளார். கடந்த 30-ஆம் தேதி அப்பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்தில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த மூதாட்டியின் உறவினர் சுப்பிரமணி என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது சுப்பிரமணி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதுகுத்து விழா தொடர்பான தகராறு…. மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி கேட் திருவள்ளுவர் நகரில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மில்லில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நந்தினி(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மகனுக்கு மொட்டை அடித்து காதுகுத்து விழாவுக்கு உறவினர்களை அழைப்பது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் நந்தினி அறைக்கு சென்றுள்ளார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் அரசு நடத்தும்…. இலவச தையல் பயிற்சி வகுப்புகள்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!!

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் உள்ள இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவச தையல் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்கள் தையல் தொழில் கற்பதன் மூலம் அவர்களுக்கு நிரந்தர வருவாய் ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் இந்த பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சித்திர தையல், துணி ஓவியம் ஆகிய இலவச பயிற்சி வகுப்புகள் 30 நாட்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த தகவலை இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“படிக்கும் வயதில் இதெல்லாம் தேவையில்லை” மகளை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் ரமேஷ்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் சுகந்தி(16) என்ற மகளும், அபிஷேக்(13) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் சுகந்தி தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 6 மாதமாக சுகந்தி செல்போனில் ஒரு வாலிபருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை அறிந்த சுகந்தியின் பெற்றோர் படிக்கும் வயதில் இதெல்லாம் தேவையில்லை என […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இடி, மின்னலும் கூடிய கனமழை…. மாடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!

மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள புதூர் செல்வகணபதி நகரில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கோட்டம்மாள்(25) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். நேற்று மாலை கோட்டம்மாள் அப்பகுதியில் இருக்கும் சாலையோரம் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது கனமழை பெய்ததால் கோட்டம்மாள் மாட்டை வீட்டிற்கு ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கி கோட்டம்மாள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இது கட்டாயம்” மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை….!!

ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து அபராதம் வசூலித்தனர். சேலம் மாவட்ட போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கடந்த 1-ஆம் தேதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீசார் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்தனர். நேற்று முன்தினம் விதிமுறையை மீறி ஹெல்மெட் அணியாமல் வந்த 2,292 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ. 1, […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மினி லாரியை முந்த முயன்ற கார்…. சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து….. நொடியில் தப்பிய உயிர்கள்….. பெரும் பரபரப்பு….!!!

சேலத்தில் இருந்த புறப்பட்ட கார் ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள எலவானா சூர்க்கோட்டை புறவழிச்சாலை இருவழிப்பாதையில் கார் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற கொண்டிருந்த மினி லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது திடீரென மினிலாரியின் மீது கார் மோதியது. இதில் நிலை தடுமாறிய இரு சக்கர வாகனங்களும் சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் கார் மற்றும் மினி லாரியில் வந்தவர்கள் படுகாயம் அடைந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மரக்கடையில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

மரக்கடையில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நைனாம்பட்டி வளர்மதி கார்டன் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே மரக்கடை மற்றும் மரசாமான்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை திடீரென கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேர […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விடுமுறை தினத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. படகு சவாரி செய்து மகிழ்ச்சி….!!

சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி நீர்த்தேக்க பகுதியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்வர். விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் பூலாம்பட்டி படகு துறைக்கு சென்று படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதால் அங்குள்ள கடைக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கழுத்தை இறுக்கி மூதாட்டி கொலை…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. சேலத்தில் பரபரப்பு…!!

மர்ம நபர்கள் மூதாட்டியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள துட்டம்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னம்மாள்(70) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மாதேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சின்னம்மாள் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள பம்பு செட்டில் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 14 பவுன் தங்க நகைகளை காணவில்லை. இது குறித்து அறிந்த போலீசார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொங்கணாபுரம் அருகே ஆடு திருடிய 3 பேர்….. “ஒருவர் கைது 2 பேருக்கு வலைவீச்சு”…..!!!!!

கொங்கணாபுரம் அருகே ஆடு திருடியவரை போலீசார் கைது செய்தார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அடுத்திருக்கும் கொங்கணாபுரம் பகுதியில் நேற்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று பேர் ஆடு ஒன்றை வைத்துக் கொண்டு சென்றார்கள். அவர்கள் போலீசை கண்டதும் விரைந்து சென்றதால் போலீசார் அவர்களை துரத்திச் சென்றதில் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்ற இருவரும் தப்பிச் சென்று விட்டார்கள். இதில் பிடிப்பட்டவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர் சிவகுமார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் இளைஞரை மிரட்டி பணம், செல்போன் பறிப்பு”….. மூன்று பேர் கைது….!!!!!

சேலத்தில் இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போனை பறித்துச் சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் நேற்று முன்தினம் அம்மாபேட்டை பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மூன்று பேர் சந்தோஷ்குமாரை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 700 மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்கள். இதையடுத்து சந்தோஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஆடிப்பெருக்கு, வல்வில் ஓரி விழா”…. மேட்டூர், கொல்லிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்….!!!!!

வல்வில் ஓரி, ஆடிப்பெருக்கு உள்ளிட்ட விழாவை முன்னிட்டு மேட்டூர், கொல்லிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு மற்றும் வல்வில் ஓரி விழாவையொட்டி சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக மேட்டூரில் இருந்து கொல்லிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்த சிறப்பு பேருந்துகளானது வரும் 2 மற்றும் 3 தேதிகளில் சேலத்தில் இருந்து மேட்டூர், பவானி, கந்தாஸ்ரமம், பேளூர், காரவள்ளி, கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளுக்கும் நாமக்கல்லில் இருந்து கொல்லிமலை, அரபலீஸ்வரர் கோவில், பரமத்தி வேலூர், கொடும்முடி, […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ரூ.10 லட்சம் இருந்தால் அரசு வேலை”….. பட்டதாரிடம் ரூ.7 3/4 லட்சம் அபேஸ்…. போலீசார் அதிரடி….!!!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் தெற்கு காட்டில் ஸ்ரீ விஜய் என்பவர் வசித்து வருகிறார். பட்டதாரியான இவர் ஒரு நண்பர் மூலம் ராசிபுரத்தை சேர்ந்த ராஜ்மகேந்திரன் என்பவர் அறிமுகம் ஆனார். அப்போது ராஜ்மகேந்திரன் தனது தாய் கலைவாணி நாமக்கல் மாவட்ட அதிமுக மகளிர் அணியின் செயலாளராக இருப்பதாகவும், தந்தை சுப்பிரமணி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனை ஸ்ரீ விஜய் உண்மை என்று நம்பியுள்ளார். அதனை தொடர்ந்து தனது பெற்றோர் பலருக்கு அரசு வேலை வாங்கி […]

Categories
மாவட்ட செய்திகள்

மக்களே!… மோசடி லிங்குகளை யாரும் நம்ப வேண்டாம்…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

சேலம் அய்யந்திருமாளிகையில் வசித்து வருபவர் ராஜகணேஷ் (53). இவர் பூ வியாபாரி ஆவார். சென்ற வருடம் டிசம்பர் மாதம் இவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அவற்றில், உங்களின் வங்கிகணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதை புதுப்பிக்க கீழே கொடுத்துள்ள லிங்கில் தகவல்களை பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை உண்மை என நம்பி அந்த லிங்கில் ராஜகணேஷ் வங்கிகணக்கு விபரங்களை பதிவுசெய்தார். இதையடுத்து சிறிது நேரத்திலேயே அவரின் வங்கிகணக்கிலிருந்து ரூபாய் 2 லட்சத்து 64 ஆயிரத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இலவச வீட்டுமனை பட்டா தாங்க…. போராட்டத்தில் இறங்கிய மக்கள்…. பெரும் பரபரப்பு….!!!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் சோளிகவுண்டனூர் அருந்ததியர் காலனியில் சென்ற 50 வருடங்களுக்கும் மேலாக 20க்கும் அதிகான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நீர் நிலை புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் கணக்கெடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே அந்த 20 குடும்பத்தினருக்கும் மாற்று இடமாக 1 ஏக்கர் 30 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டதாகவும், அந்த நிலத்தை வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்துவதும், அப்போது விரைவில் இடம் தருவதாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு….. மின் உற்பத்தி அதிகரிப்பு….. வெளியான தகவல்….!!!!!

சேலம் மாவட்டம் சேக்கானுர், நெருஞ்சிப்பேட்டை, கோகனேரிப்பட்டி, ஊராட்சிகோட்டை பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே நீர்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தலா 30 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றனர். மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவை பொறுத்து மின் உற்பத்தியின் அளவும் மாறுபடும். தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனல் மேல் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை, மின் அளவுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பேரனுடன் தகராறு: 14 பிள்ளைகளை விட்டு பிரிந்த தாய்…. பெரும் சோக சம்பவம்….!!!!

சேலம் சின்ன திருப்பதி பெருமாள் கோயில் அருகேயுள்ள விவசாய கிணற்றில் பெண் ஒருவரது உடல்மிதந்தது. இதுகுறித்து தகவலறிந்த கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதையடுத்து செவ்வாய்பேட்டை தீயணைப்புநிலைய வீரர்கள் விரைந்து வந்து அப்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் கிணற்றில் பிணமாக மிதந்த பெண் யார்..? என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ஜான்சன்பேட்டையை சேர்ந்த வேலாயுதம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இங்கு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றணும்…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கார் மேகம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பாலய்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வமணி போன்றோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் பங்கேற்று பல பிரச்சினைகளை பற்றியும், அதற்கு தீர்வு காண்பது குறித்தும் பேசினர். இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியிருப்பதாவது “ஆத்தூர் தலைவாசல், கெங்கவல்லி உள்ளிட்ட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆகஸ்ட் 1 ம் தேதி முதல்…. மோட்டார் சைக்கிளில் செல்வதற்கு ஹெல்மெட் கட்டாயம்…. மாநகர போலீசார் அதிரடி அறிவிப்பு…!!!!!!!!

சேலம் மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து  வருகின்றனர். அதிலும் குறிப்பாக மோட்டார் சைக்கிள் மற்றும் மொபெட்டில்  ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை செய்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றார்கள். ஆனால் மாநகரில் ஹெல்மெட் அணியாமல் ஏராளமான வாகன ஓட்டிகள் செல்வதை பார்க்க முடிகிறது. இந்த சூழலில் சேலம் மாநகரில் வருகின்ற 1ஆம் தேதி முதல் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“திருமணத்திற்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்தோம்”…. கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்….!!!!!!!!!

ஆத்தூர் அருகே கடம்பூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். லாரி டிரைவர் ஆன இவர் கடந்த 24ஆம் தேதி பைத்தூர் பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சீனிவாசனின் அத்தை மகன் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய மகன்கள் மணிகண்டன், விஜய் இருவரும் ஆத்தூர் கோட்டில் சரணடைந்துள்ளனர். இதற்கிடையே கைதான ரவிச்சந்திரனிடம் போலீசார்  விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது போலீசில் அளித்த வாக்கு மூலத்தில் கூறப்பட்டிருப்பதாவது, சீனிவாசனுக்கும் எங்களுக்கும் நிலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர்…. குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார்….!!!!!!!!!

சேலம் கன்னங்குறிச்சி பெரிய கொல்லப்பட்டி சேர்ந்த கோகுல்நாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல வழிப்பறி வழக்குகள் இருக்கிறது. இது பற்றி புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கோகுலத்தை கைது செய்துள்ளனர். இதே  போன்று முள்ளுவாடி கேட் மக்கான்  தெருவை சேர்ந்த ஜாபர் அலி என்பவர் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் மிரட்டி பணம், செல் போன் பறித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதேபோல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கழிவுகளால் நுரையாய் பொங்கிய திருமணி முத்தாறு….அதிர்ச்சியில் மக்கள்….!!!!

சேலம் மாவட்ட திருமணிமுத்தாறில் அடிக்கடி சாயப்பட்டறை கழிவுநீர் கலந்து செல்கிறது. இதனை தடுப்பதற்காக விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுவே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி சேலத்தில் கன மழை பெய்தது. இதனை பயன்படுத்தி ஒரு சில சாயப்பட்டறையில் இருந்து சாயக் கழிவுகள் திருமணிமுத்தாறில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் உத்தமசோழபுரம் அருகே திருமணிமுத்தாறில் சாயக்கழிவு நீருடன் கலந்து நுங்கும், நுரையுமாக காணப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறியது, மழைக்காலங்களில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணையிலிருந்து… திடீரென 16 மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்….. வெளியான தகவல்….!!!!

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் கடந்த 16ஆம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. அன்று காலை முதல் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதலில் வினாடிக்கு 25,000 கன அடி திறந்துவிடப்பட்ட தண்ணீர் அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 1,10,000 கன அடி வரை தண்ணீர் 16 கண் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டூர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

லாரி டிரைவர் கொலை…. திடீரென அண்ணன், தம்பி கோர்ட்டில் சரண்…. அதிரடி உத்தரவு….!!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள கடம்பூர் வடக்கு தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சீனிவாசன். இவர் லாரி டிரைவர் ஆவார். இவர் கடந்த 24ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் ஆத்தூருக்கு சென்றபோது பைத்தூர்புதூர் என்ற இடத்தில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், லாரி டிரைவர் சீனிவாசன் உறவினர்கள் ரவிக்குமார், மணிகண்டன் மற்றும் விஜய ஆகிய மூன்று பேரும் நிலத்தகராறில் அவரை கொன்றது தெரியவந்தது. இது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான செஸ் போட்டி….. தொடங்கி வைத்த அதிகாரிகள்…. கலந்து கொண்ட மாணவர்கள்….!!!!!!!!!

44வது செஸ் ஒலிம்பிக் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த போட்டியை பிரபலப்படுத்தும்  விதமாக சேலம் மாவட்ட அளவிலான செஸ் போட்டி சேலம் அழகாபுரம் புனித ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுள்ளது. இதனை கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்எல்ஏ போன்ற தொடங்கி வைத்துள்ளனர். இது பற்றி கலெக்டர் கார்மேகம் பேசியபோது, சர்வதேச அளவிலான 44வது ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தில் முதல்முறையாக நடைபெறுகிறது. இதில் 187 நாடுகளை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெண்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள திருகாளிப்பட்டி பகுதியில் மாதவராஜ்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாதவராஜ் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாதவராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாதவராஜின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாங்கிய பணத்தை தராததால்…. வியாபாரியை கடத்திய போலீஸ் ஏட்டு…. பணியிடை நீக்கம் செய்து உத்தரவு….!!

கூலிப்படையை ஏவி வியாபாரியை காரில் கடத்திய போலீஸ் ஏட்டுவை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள நரசிங்கபுரம் தில்லை நகர் பகுதியில் அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டைகோவில் பகுதியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏட்டாக பணிபுரியும் சின்னதிருப்பதி பகுதியில் வசிக்கும் ராம்மோகன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பழ வியாபாரி அன்பரசன் போலீஸ் ஏட்டு […]

Categories
சேலம் மாநில செய்திகள்

“மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு…. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்…. மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை…..!!!!!!!

சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூல் கரடுபட்டி கிராமம் அமைந்துள்ளது. தமிழக கர்நாடக வனப்பகுதி அருகே அமைந்துள்ள இந்த கிராமத்தில் வாழை, பருத்தி போன்ற பயிர் சாகுபடி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானை உணவு தேடி கிராம எல்லைக்குள்  வந்துள்ளது. அப்போது அங்கிருந்து மின் வேலியில் யானை சிக்கி உள்ளது இதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் சேலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நில தகராறு…. லாரி டிரைவரை குத்திக் கொன்ற அண்ணன், தம்பி…. பெரும் பரபரப்பு…..!!!!!!!!!

நில தகராறில் லாரி டிரைவரை குத்திக்கொண்ற  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கடம்பூர் கிராமம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சீனிவாசன் (வயது 40) லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ராஜேந்திரனின் அக்காள் பங்காரு என்பவரது மகன் ரவிச்சந்திரன். இந்த சூழலில் ராஜேந்திரனுக்கும், ரவிச்சந்திரனுக்கும் இடையே நில தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக முன் விரோதம் ஏற்பட்டு இரண்டு குடும்பத்தினருக்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உணவு தேடி வந்த யானை…. மின்வேலியில் சிக்கி பலி…. வனத்துறையினர் எச்சரிக்கை….!!

மின்வேலியில் சிக்கி காட்டுயானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கூல் கரடுபட்டி என்ற கிராமம் தமிழக-கர்நாடக எல்லை வனப்பகுதி அருகே அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வாழை, பருத்தி போன்ற பணப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து உணவு தேடி கிராம எல்லைக்குள் வந்தது. அப்போது அந்த யானை விவசாய தோட்டத்துக்குள் உணவு தேடிய போது அங்கிருந்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை!… வீடுகளுக்குள் புகுந்த நீர்…. சாலை மறியலில் ஈடுப்பட்ட மக்கள்…. பரபரப்பு….!!!!

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு திடிரென்று மழைபெய்ய துவங்கியது. இரவு 8:30 மணியளவில் லேசான தூறலுடன் பெய்ய துவங்கிய மழை விடியவிடிய கொட்டி தீர்த்தது. அதுவும் மாவட்டம் முழுதும் பரவலாக பலத்த மழை பெய்தது. எடப்பாடி பகுதியில் சென்ற 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு 146 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. விடியவிடிய பெய்த மழையால் எடப்பாடி பகுதியில் ஏராளமான இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. அதுவும் மோட்டூர்காட்டுவளவு குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புகுந்தது. […]

Categories

Tech |