கனமழையால் மின்னல் தாக்கி பசுமாடு உயிரிழந்தது. சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நேற்று பிற்பகல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை சுமார் 35 நிமிடங்கள் வரை பெய்தது.மணக்காடு, ராஜ கணபதி நகர், பச்சப்பட்டி, களரம்பட்டி, அழகாபுரம் பெரிய புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் வீடுகளின் உள்ளே தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அழகாபுரம் புதூர் பகுதியில் சாக்கடை கழிவு […]
Tag: #சேலம்
சேலம் மாவட்டத்தில் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு அஸ்தம்பட்டி,சூரமங்கலம், அழகாபுரம், மணக்காடு, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், குகை, அம்மாபேட்டை, பெரமனூர், அன்னதானபட்டி உள்ளிட்ட இடங்களில் சிறிது நேரம் கனமழை பெய்தது. இந்த கனமழையால் தேவியாக்குறிச்சியில் வசித்து வந்த விவசாயி ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவு வாழை தோப்பில் இருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. […]
சூறைக்காற்றுடன் பலத்த கனமழை பெய்ததால் வாழை மரங்கள் சாய்ந்தன. சேலத்தில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சில இடங்களில் மழை பெய்தது. இதை தொடர்ந்து நேற்று காலையில் வெயில் தாக்கம் சற்று இருந்தது. அதன் பின்னர் பிற்பகல் திடீரென சேலம் மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது. இதை போன்று தலைவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மணிவிழுந்தான் சார்வாய் சார்வாய் புதூர் தேவியாக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று […]
கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக மேட்டூர் அணையில் நீர்வரத்து ஆயிரம் கன அடிக்கு கீழ் குறைந்துள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் வினாடிக்கு 1,500 கன அடி முதல் 2 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அணையில் வினாடிக்கு 1,098 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இந்த நீர் வரத்து கோடைகாலம் என்பதால் வினாடிக்கு 785 கன அடி தண்ணீர் குறைவாக வருகிறது. இந்த அணையில் 1500 கன […]
ரயிலில் கஞ்சா கடத்திய குடும்பத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சேலம் வழியாக செல்கின்ற ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதை தடுப்பதற்காக சேலம் ரயில்வே காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் தனிப்படை அமைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் ரயில்வே காவல்துறையினர் மற்றும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரின் சிறப்பு தனிப்படையினர் இணைந்து வண்டி எண் 17230 கொண்ட ஹைதராபாத் – திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது எஸ் 5 பெட்டியில் சந்தேகப்படும்படி […]
தொழிலதிபரின் வங்கி கணக்கில் ரூ 2 1/2 லட்சத்தை அபேஸ் செய்தது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், அம்மாபேட்டையில் வசித்து வருபவர் தொழிலதிபர் கதிரேசன்(53). இவருடைய செல்போன் எண்ணிற்கு கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜில் உங்களது வங்கி கணக்கு என்னுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் இல்லாவிட்டால் உங்கள் வங்கிக் கணக்கை முடக்கிவிடுவோம் என்றும், அதற்கு கீழே உள்ள லிங்கை பதிவிறக்கம் செய்து […]
இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் என சிறுபான்மையினர் ஆணையம் மாநில தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசியுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள சோனா கல்லூரியில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பாக மாவட்ட அளவிலான மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆணையத்தின் மாநில தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை தாங்கிய நிலையில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி, வக்கீல் ராஜேந்திரன், எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இந்த பேச்சுப் போட்டிக்கு “தமிழர்களாக எழுவோம் தலை நிமிர்ந்து […]
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக மக்கள் நீதி மையம் கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சேலம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றம் மற்றும் சொத்து வரி உயர்வை எதிர்த்து மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் சரத்பவார் தலைமை தாங்கிய நிலையில் மாட்டுவண்டியில் மொபட் மற்றும் சிலிண்டர் வைத்து அதற்கு மாலையிட்டு […]
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான மல்யுத்தப் போட்டி 2-வைது நாளாக நடைபெற்று வருகின்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள காந்தி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான மல்யுத்தப் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் ராசி சரவணன் போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, கடலூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 246 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள். 10 […]
மேட்டூர் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் இருக்கும் மேட்டூர் அருகே உள்ள கருமலைகூடல் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் கருமலைக்கூடலில் கோவில் திருவிழாவையொட்டி நடந்த கலை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக உறவினரின் 4 வயது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று பார்த்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியபோது மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர். வீட்டின் அருகே […]
செல்போனில் தொடர்பு கொண்டு வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ₹2 1/4 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு அடிவாரத்திற்கு அருகே இருக்கும் கோரிமேட்டை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது தொலைபேசி எண்ணிற்கு வங்கியில் இருந்து பேசுவதாக கூறி உங்களின் ஏடிஎம் கார்டு காலாவதியாகி விட்டது. அதனால் அதை புதுப்பிக்க சில ஆவணங்கள் வேண்டுமென விவரங்களை போனிலேயே கூறும்படி தெரிவித்துள்ளார் அந்த நபர். புருஷோத்தமனும் அதை நம்பி தனது வங்கிக் கணக்கு பற்றிய தகவல்களை அவரிடம் […]
வேலைவாய்ப்பு முகாமானது 10-04-2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை கும்பகோணம் அருகில் (திருமங்கலக்குடி) உள்ள AS SALAM பொறியியல் கல்லூரியில் நடைபெற இருக்கிறது. கலந்துகொள்ள விருப்பமுள்ள தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup என்ற இணையதளத்தில் பதிவு செய்வதோடு இவ்வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக கலந்துகொண்டு பணிவாய்ப்பை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் நிறுவனத்தில் காலிப்பணியிடம் உள்ள தனியார்துறை நிறுவனங்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தகுதியுடைய வேலைநாடுநர்களை தேர்ந்தெடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். சேலம் மாவட்டம், வாழப்பாடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலிண்டர் மற்றும் பைக்கிற்கு மாலை அணிவித்து, விறகு அடுப்பில் சமைத்து காங்கிரஸ் கட்சி சார்பாக நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் ராம. சுகந்தன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் கிழக்கு மாவட்ட துணை தலைவர் முனுசாமி, பெத்தநாயக்கன்பாளையம் வட்டார தலைவர் தாண்டானூர் பழனி, முன்னாள் வட்டார […]
எலெக்ட்ரிக் கடை உரிமையாளரை காரில் கடத்த முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம், எடப்பாடி பயணிகள் மாளிகை முன் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 35 வயதுடைய கோபிலால், 27 வயதுடைய பிரவீன் ஆகியோர் சேர்ந்து எலெக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்த கோபிலாலை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென்று அவரை தாக்கி காரில் கடத்த முயன்றுள்ளனர். இதை பார்த்த பொதுமக்கள் […]
முத்துமலை முருகன் கோவில் திருக்கல்யாண உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சேலம் மாவட்டம், புத்திர கவுண்டன்பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான முத்துமலை முருகன் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையின் உயரம் 146 அடி. இந்த முருகன் சிலைக்கு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவின்போது ஹெலிகாப்டர் மூலம் முருகன் சிலைக்கு மலர் தூவப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முருகனுக்கு வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த திருக்கல்யாண […]
தமிழகத்தில் 5 நகரங்களில் வியாழக்கிழமை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் பர மத்தியில் 104 டிகிரிக்கும், ஈரோட்டில் 102 டிகிரியும், சேலத்தில் 101 டிகிரியும், தர்மபுரி, மதுரை விமான நிலையத்தில் 100 டிகிரியும் பதிவாகியுள்ளது. சென்னை, மீனம்பாக்கத்தில் 95 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 94 டிகிரியும் பதிவாகியுள்ளது.
உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம் பாளையத்தில் உள்ள முத்துமலை முருகன் சிலைக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே ஏத்தாப்பூர் அடுத்த புத்திரகவுண்டன்பாளையம் சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்து மலை அடிவாரத்தில் உலகத்திலே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைந்துள்ளது. இந்த முருகன் சிலை வடிவமைக்கும் பணி கடந்த 2016-ஆம் வருடம் தொடங்கப்பட்டு ஆறு வருடங்களாக […]
ரயிலில் 14 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த ஒடிசா மாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வண்டி எண்-13351 கொண்ட தான்பாத் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது ரயில்வே போலீஸ் ஏட்டு ராமன் தலைமையில் காவல்துறையினர் கண்ணன், சென்னகேசவன், சதீஷ்குமார், கவியரசு, சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டார்கள். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்து பார்த்து வந்த போது ரயில் […]
கொண்டாலம்பட்டியில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் கொண்டலம்பட்டி ரவுண்டானா பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படித்து வரும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் நேற்று காலை கல்லூரி வாசல் முன்பு நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் இந்திய மாணவர் சங்கத்தினர், மாநகர செயலாளர் அருள் குமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த போராட்டம் குறித்து கொண்டலம்பட்டி போலீசாருக்கு தகவல் […]
மேச்சேரியில் தம்பியே அண்ணனைக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி அருகே வெள்ளாளர் பகுதியைச் சேர்ந்த குமார்-பசுவதி தம்பதியருக்கு ஆஞ்சி குமார், குமரேசன், செல்வகுமார் என மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் ஆஞ்சி குமார் மற்றும் குமரேசன் இருவரும் கட்டட தொழிலாளர்களாக இருந்து வருகின்ற நிலையில் இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருக்கின்றது. இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பு குமரேசன் தனது தாயார் உண்டியலில் சேமித்து வைத்த பணத்தை […]
உதவி பேராசிரியர் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக பெரியார் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் வரலாற்றுத்துறை மாணவ-மாணவிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று தங்களின் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் மீது மாணவி ஒருவர் பொய்யான புகாரை கொடுத்துள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்மேகத்திடம் மனு கொடுத்துள்ளனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது, பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகாரை சூரமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள […]
அயோத்தியாபட்டணத்தில் கல்லூரி மாணவி தந்தையின் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணத்தை அடுத்திருக்கும் மின்னாம்பள்ளி ராஜவீதி பகுதியைச் சேர்ந்த 60 வயது உடைய நாகராஜன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரின் மகள் 22 வயதுடைய தனுஸ்ரீ அரசு கலை அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்.சி மைக்ரோபயாலஜி இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் தந்தை மகள் இருவரும் அயோத்தியா பட்டணத்திலிருந்து மின்னாம்பள்ளி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் எதிர்பாராத நிலையில் […]
கொளத்தூர் அருகே விவசாய கிணற்றில் யானை மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தமிழக கர்நாடக எல்லையான சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் அடுத்த லக்கம்பட்டி வனப்பகுதியில் உள்ள கிராமத்தில் திறந்தவெளிக் கிணறுகள் தோண்டப்பட்ட விவசாய பணிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு 15 வயதுடைய ஆண் யானை ஒன்று உணவு தேடி வந்து கொண்டிருக்கும் பொழுது கிணற்றின் அருகில் சென்றுள்ளது. எதிர்பாராத விதமாக திடீரென அந்த யானை கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் தத்தளித்த நிலையில் மூழ்கி உயிரிழந்துள்ளது. […]
சேலத்தில் ஜவுளி தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் நூல்கள் விலை 90% அதிகமானதால் அதன் உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்படைந்து வருகின்றார்கள். சேலம் மாவட்டத்தில் முக்கியமான தொழிலாக ஜவுளி உற்பத்தி கருதப்படுகிறத . இந்த ஜவுளித் தொழிலை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி பலனடைந்து வருகின்றார்கள். இந்நிலையில் ஜவுளி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலதனமான நூலின் விலை தற்போது உயர்ந்து கொண்டே வருகிறது . இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றார்கள். மேலும் வேட்டி, சேலை, துண்டு ஆகிய பல்வேறு துணி ரகங்களை […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கல்லாங்குத்து பகுதியில் தொழிலாளியான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி ராஜாவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜா லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் […]
மலை மாதேஸ்வரன் கோவிலில் யுகாதி பண்டிகையை ஒட்டி பெரிய தேரோட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட எல்லையின் அருகே கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் , கொள்ளேகால் தாலுகாவில், மாதேஸ்வரன் மலையில் மலை மாதேஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று யுகாதி பண்டிகையை ஒட்டி பெரிய தேரோட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக பெரிய தேர் கோவில் வெளி பிரகாரத்தில் வலம் வந்த போது பக்தர்கள் […]
கந்து வட்டி கேட்டு மிரட்டியதால் காய்கறி வியாபாரி குடும்பத்துடன் சேலம் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தீக்குளிக்க முயற்சித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் வசித்து வருபவர் காய்கறி வியாபாரி நாகராஜன்(35). இவருடைய மனைவி 25 வயதுடைய திரிஷா, மாமியார் 40 வயதுடைய மாரியம்மாள். இவர்கள் 3 பேரும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு முன் திடீரென்று மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். அப்போது இதை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை […]
ஆன்லைன் மூலமாக இரண்டு பேரிடம் ரூ 1 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி குழந்தைவேல்(54). இவருடைய செல்போனிற்கு தங்களுடைய நிலத்தில் செல்போன் டவர் வைக்க இடம் கொடுத்தால் அதிக பணம் கொடுக்கப்படும் என்றும், அதற்கு முன்பணமாக ரூ 51,000 கொடுக்க வேண்டும் என்று மெசேஜ் வந்துள்ளது. இதை உண்மை என்று நம்பி குழந்தைவேல் ஆன்லைன் […]
இளம்பிள்ளையில் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகில் சந்தைப்பேட்டையில் காளியம்மன், மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த ஒரு வாரமாக திருவிழா நடைபெற்று வருகின்றது. இவ்விழாவை ஒட்டி நேற்று அதிகாலை உருளு தண்டம் போடும் நிகழ்ச்சி மற்றும் படைவெட்டி அம்மன் கோவிலில் சக்தி அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டு வந்தனர். இதையடுத்து விழாவின் சிகர நிகழ்ச்சியான […]
சேலத்தில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவில் வசித்து வருபவர்கள் 48 வயதான ரமேஷ், 28 வயதான நந்தகுமார், 30 வயதான சீனிவாசன். இவர்கள் 3 பேரும் கூலித்தொழில் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் இவர்கள் சாப்பிட்டு விட்டு வீட்டில் முன் அமர்ந்து குடும்பத்துடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென நந்தகுமாரின் வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. இதை அடுத்து […]
டியூஷனுக்கு படிக்க வந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை காவல்த்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டதிலுள்ள, சின்னகொல்லப்பட்டியில் 35 வயதுடையஎம்.பில் பட்டதாரியான விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் டியூசன் சென்டர் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் டியூசனுக்கு வந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் […]
இரண்டு மாணவிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த டியூசன் ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் கெங்கவல்லி தெடாவூர் பகுதியில் வசித்து வந்த மணிமாறன்(40) என்பவர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் ஒழுங்கின நடவடிக்கையின் காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் ஏ டூ இசட் என்ற நிதி நிறுவனத்தை தொடங்கி அதில் பொதுமக்களிடம் பணம் மோசடி செய்து வந்துள்ளார். இது குறித்து […]
சேலம் மாவட்டம் உடையாப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் வைத்தியலிங்கம்-சித்ரா தம்பதியினர். இவர்களது மகன் கிருத்திக்பாபு. அம்மாபேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருத்திக்பாபு நண்பன் கார்த்திகேயன். கிருத்திக்பாபுவிடம் கார்த்திகேயன் ரூ 500 கூகுள் பே செய்யுமாறு கூறியுள்ளார். அதோடு அந்த பணத்தை கூகுள் பே மூலம் வேறு ஒரு எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். அதன்படி அந்த எண்ணுக்கு கிருத்திக்பாபு பணத்தை அனுப்பினார். ஆனால் அவர் அனுப்பிய பணம் ஒரு பெண்ணின் அலைப்பேசி எண்ணுக்கு சென்று விட்டதாகவும், அந்த […]
பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாக்கு உட்பட்ட வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் உள்ள மஞ்சுளாம்பள்ளத்தை சேர்ந்த ரத்தினம் என்பவர் சேலம் அழகாபுரத்தில் டீ கடை வைத்து நடத்தி வருகின்றார். இவருக்கு 15 வயதான சஞ்சய் என்ற மகன் உள்ளார். சஞ்சய் சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு […]
கணவருடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகிலுள்ள பெரியபுத்தூர் ஏரிகாடு பகுதியில் 32 வயதான தியாகராஜன் மற்றும் இவரது மனைவி 29 வயதான ரேவதி ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர் . மேலும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான தியாகராஜன் வெள்ளி பட்டறையில் வேலை பார்த்து வருகிறார் . இவர்களுக்கு 12 வயதான ஜனனி ஸ்ரீ மற்றும் […]
சங்ககிரி வழியே சென்று கொண்டிருந்த பேருந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்திலிருந்து சங்ககிரி வழியாக ஈரோடுக்கு நேற்று மதியம் 1.30அளவில் தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த அந்த பேருந்தை வெற்றிவேல் என்பவர் ஓட்டினார். அப்பேருந்து சங்ககிரி அக்கமாபேட்டை பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையின் இடது புறம் சிறிய பாலம் அருகே நின்ற தென்னை மரம் மீது மோதி […]
மாற்றுத்திறனாளி பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பகுதியில் 38 வயதான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மஞ்சகுட்டை அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் சமையளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் அப்பகுதியிலுள்ள வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். அப்போது அந்தப் பெண் சத்தம் போடவே மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் . இந்த சம்பவம் குறித்து […]
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக வாட்ஸ்அப் மூலம் 2 பேரிடம் ரூபாய் 31/4 லட்சம் மோசடி செய்தவர்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஜீவா நகரில் வசித்து வருபவர் 24 வயதான சாகுல் ஹமீது. இவரது செல்போன் வாட்ஸ் அப்பிற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிநாட்டில் வேலை இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலை தொடர்ந்து அந்த லிங்கில் சென்று விவரங்களை அவர் பதிவு செய்துள்ளார். பின்னர் சாகுல் ஹமீதை தொடர்பு […]
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் வெங்கட்டன். இவர் தன்னுடைய பழைய வீட்டை இடித்து புதிதாக கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார். இதற்காக மலையன் நகரை சேர்ந்த செல்வம் என்னும் தொழிலாளி வீட்டின் சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் . செல்வம் சுவரை தகர்க்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து அவர் மேல் விழுந்தது. இதில் படுகாயமடைந்த செல்வத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு […]
பள்ளிக்கு சரியான நேரத்தில் வராத ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஒரு நாள் மட்டும் பணி நீக்கம் செய்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகில் செட்டிமாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் பள்ளிக்கு நேரமாகி வருவதாக சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு புகார் வந்துள்ளது. இப்புகாரின் பேரில் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் நேற்று பள்ளியில் சோதனை மேற்கொண்டபோது உதவி தலைமையாசிரியர் மலர்விழி உட்பட 7 ஆசிரியர்கள் பள்ளிக்கு நேரம் […]
சேலத்தில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் பதவி உயர்வு வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். சேலம் மாவட்டம், சீரங்கன்பாளையத்தில் அமைந்துள்ள பொது மேலாளர் அலுவலகம் முன்பாக பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினார்கள். இப்போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் கோபால் தலைமை வகித்து ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர். இப்போராட்டத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படி வழங்க வேண்டும் என்றும், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி […]
தலைவாசல் அருகில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியரை கொன்ற வழக்கில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் காவல்துறையில் சரண் அடைந்து வாக்குமூலம் அளித்துள்ளார். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகில் உள்ள தென்குமரை கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான வெங்கடாசலம் (57). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி என்பவருக்கும் நிலப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி இரவு வெங்கடாசலம் தலைமையில் 10 பேர்கள் சேர்ந்து ராமசாமி வீட்டிற்கு […]
சேலம் மாவட்டம் அன்னதானப் பட்டியில் கார் டிரைவரை கடத்தி சென்ற கும்பலிடமிருந்து ரூ 1.45 லட்சம் பணமும், மோட்டார் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள அன்னதானப்பட்டி பொடாரங்காடு பகுதியில் வசித்து வரும் விஜயகுமார் என்பவருடைய மகன் கார் டிரைவரான பிரகாஷ்(25) என்பவரை 4 பேர் சேர்ந்து கடத்தி சென்று 3 லட்சம் ரூபாய் பணத்தை அபேஸ் செய்துள்ளார்கள்.இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் பிரகாஷ் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது ஏற்கனவே வழிப்பறி […]
மாணவியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள செட்டிசாவடி பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஓமலூர் பகுதியில் வசிக்கும் கௌதம் என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பாப்பம்பாடி கிராமத்தில் வேடப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வேடப்பன் மது வாங்கி அருந்திவிட்டு நடந்து சென்றுள்ளார். அப்போது வேடப்பன் அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் இது குறித்து ஓமலூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
வேலைக்கு சென்ற வாலிபர் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பணத்தான்காட்டை பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னபொண்ணு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு செல்வகுமார் என்ற மகன் உள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு நீண்ட நாட்களாகியும் செல்வகுமார் வீடு திரும்பவில்லை. இதனால் செல்வகுமாரை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை […]
கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் தெங்கம்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், அருமநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், முகிலன் விளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சரக்கல்விளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் ஆகிய சங்கத்திற்குட்பட்டநகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நகைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கியுள்ளார். மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை […]
கொடிவேரி அணைக்கு சுற்றுலா வந்த வாலிபர் பவானி ஆற்றில் குளித்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி பகுதியில் சிங்காரவேலு என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகன் யோகேஷ்(33) கோவையில் உள்ள ஒரு செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் யோகேஷ் அவர் நண்பர்கள் 19 பேருடன் ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடிவேரி அணைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பின் கொடிவேரி அணையை சுற்றி பார்த்துவிட்டு அருகில் […]
கன்னங்குறிச்சி பகுதியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி அருகில் சின்ன கொல்லப்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் டி.ராஜேந்திரன். இவர் மனைவி சந்தியா. ராஜேந்திரன் கடந்த ஆண்டு உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் சந்தியா கட்டிட வேலை பார்த்து தனது குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தியா வீட்டில் உள்ள சுவற்றில் சாமி படங்கள் மற்றும் கணவரின் புகைப் படங்களுக்கு அலங்கார மின் விளக்குகள் மாட்டி வணங்கி […]
காட்டெருமை தாக்கி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள செந்திட்டு பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கிருபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கிருபாகரன் தனது தந்தை கோவிந்தனுடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது குப்பனூர்-சேலம் மலைப்பாதையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் […]