மெக்சிகோ நாட்டில் மைக்கோவா பகுதியில் நடைபெற்ற சேவல் சண்டையில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் அங்கிருந்த சிலர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் 20 பேர் உயிரிழந்து நான்கு பேர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் 3 பேர் பெண்கள் என்று தெரியவந்துள்ளது. இது போதைப்பொருள், கிரிமினல், மற்றும் கடத்தல் தொழிலில் ஈடுபடுபவர்கள் நடத்திய சண்டை என மத்திய பொது பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளது. இதை அறிந்து சம்பவ இடத்திற்கு மத்திய குழுவினர்கள் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். […]
Tag: சேவல் சண்டை
சேவல் சண்டை என்பது தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஒரு விளையாட்டாகும். இது ஜல்லிக்கட்டு போல தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிபி 5-ஆம் நூற்றாண்டில் சேவல் சண்டை நடைபெற்றதற்கான சான்றாக சேவல் நடுகல் கிடைத்துள்ளது. பட்டினப்பாலை, திருமுருகாற்றுப்படை போன்ற பழந்தமிழ் நூல்களில் சேவல் சண்டை குறிப்பிடப்பட்டுள்ளன. ஜனவரி 25-ஆம் தேதிக்கு பிறகு நீதிமன்ற வழிகாட்டுதலுடன் வெற்றுகால் சேவல் சண்டை நடத்த அனுமதி தருமாறு சண்டை சேவல்களை வளர்ப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேவல் சண்டைக்கு தடை விதித்து சென்னை […]
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போலவே தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டு பட்டியலில் கிடா முட்டு மற்றும் சேவல் சண்டை ஆகியவை இடம் பெறுகின்றன. தற்போது வரை கிராமங்களில் சேவல் சண்டையை பார்த்து ரசிப்பவர்கள் அதிகமாக உள்ளனர். அதன்படி தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் காலம் காலமாக சேவல் சண்டை நடந்து வருகிறது. இந்த ஆண்டு சேவல் சண்டை நடப்பதற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து இந்த ஊரை சேர்ந்த தங்கமுத்து என்பவர் அனுமதி வழங்கக் கோரி ஐகோர்ட் மதுரை […]
சேவல் சண்டையின் போது சேவலின் உரிமையாளர் தான் வளர்த்து சேவலின் மூலம் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்தவாரம் தெலுங்கானாவில் லொதுனூர் எனும் கிராமத்தில் சேவல் சண்டை நடந்து வந்தது. அப்போது சேவலின் உரிமையாளர் தப்பி சென்ற சேவலை பிடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அதன் காலில் 7 சென்டிமீட்டர் நீளத்தில் கத்தி ஒன்று கட்டப்பட்டிருந்தது. அது உரிமையாளரின் கவட்டைப் பகுதியில் ஆழமாக குத்தி கிழித்து விட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை அழைத்து […]
சட்டத்தை மீறி நடந்த சேவல் சண்டையை தடுக்க சென்ற காவலர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது பிலிப்பைன்ஸ் நாட்டில் தடையை மீறி சேவல் சண்டை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததால் காவலர் ஒருவர் விசாரிக்க சென்றுள்ளார். கிறிஸ்டின் என்ற காவலர் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த ஒரு சேவலை பிடித்ததோடு சண்டை நடந்ததற்கான ஆதாரங்களை தேடிக் கொண்டிருந்தார். அப்போது சேவல் காலில் கட்டப்பட்ட கத்தி கிறிஸ்டின் தொடையில் வெட்டி உள்ளது. அப்போது முக்கிய ரத்தக்குழாய் வெட்டப்பட்டதால் அதிக அளவு ரத்தம் […]
அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் களைகட்டிய சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை, மயானக்கரை அருகே 20க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று சேவல் சண்டை மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்ட கும்பலை நோக்கி விரட்டிசென்றபோது போலீசார் வருவதை அறிந்த சுதாகரித்துக்கொண்டு சூதாட்ட கும்பல் சேவல்களை தூக்கிக் […]