தமிழகத்தில் அரசு கேபிள் டிவி சேவைகள் முடக்கப்பட்டு இருப்பதற்கு காரணம் தமிழக முதல்வர் ஸ்டாலினும் திமுக அரசின் நிர்வாக திறமையும் தான் என்று ஓபிஎஸ் கடுமையாக விளாசியுள்ளார். இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து மக்கள் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு, அவர்களின் குடும்ப நலன்கள் மட்டும் தான் மேம்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் அரசு கேபிள் டிவி சேனல்கள் முடக்கப்பட்டதற்கு காரணம் திமுக அரசின் சுயநலம் மட்டும் தான். கடந்த 2011-ம் ஆண்டு […]
Tag: சேவை நிறுத்தம்
இலங்கையில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மருத்துவம், பாதுகாப்பு போன்ற அவசர தேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதால் 90 சதவீத தனியார் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் உள்ளூர் பேருந்து மற்றும் ரயில் சேவை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் விமான எரிபொருளும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நாட்டின் முக்கிய விமான சேவைகளும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் திடீரென்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதே சமயம் இந்திய பெருங்கடல் மற்றும் அரவிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளில் கடல் சீற்றம் கொந்தளித்தபடி இருந்தது. இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து வெகு நேரமாகியும் தொடங்காமல் இருந்து வந்தது. இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக […]
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் தினந்தோறும் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலை கோவில் சென்று முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் வசதிக்காக மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான மக்கள் ரோப் கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர. இந்த ரோப்கார் நிலையத்திலிருந்து மலை கோவிலுக்கு செல்லும்போது இயற்கை […]
ரஷிய படைகள் உக்ரைன் மீது போரின் தாக்கம் காரணமாக ரஷியாவில் இருந்து பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் சேவையை நிறுத்தி வருகின்றன. ரஷ்ய சந்தையில் இருந்து, பிரபல தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் 5ஜி தொழில்நுட்ப விநியோக நிறுவனமுமான நோக்கியா வெளியேறுவதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து அதன் காரணமாக பல முன்னணி நிறுவனங்கள், ரஷ்யாவிலிருந்து தங்கள் சேவையை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் பல உற்பத்தி நிறுவனங்களும் ரஷியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து வருகின்ற […]
உக்ரைன் போர் காரணமாக இன்டெல் நிறுவனம் தனது சேவையை ரஷ்யாவில் நிறுத்தி உள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது 42 நாளாவதாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகரங்களில் ரஷ்ய படைகள் வான், ஏவுகணை, பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனும் ரஷ்யாவிற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே ரஷ்யாவில் உக்ரைன் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில் நெட்பிளிக்ஸ், ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும், பெப்சி, கொக்கோ கோலா போன்ற குளிர் சாதன நிறுவனங்களும் தங்களது […]
இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கிகளின் இன்டர்நெட் பேங்கிங், ATM, UPI சேவைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. […]
இந்தியாவில் எச்டிஎஃப்சி வங்கி வாட்ஸ்அப் சேவையை திடீரென நிறுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக வாட்ஸ் அப் செயலியை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் பயனாளர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு அப்டேட்களை செய்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனிநபர் பாதுகாப்பு தொடர்பாக வாட்ஸ்அப் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. […]