நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தல், கடன் அட்டை செயலாக்கம் செய்ய லிங்கை பயன்படுத்துவதன் மூலம் மோசடி, ஜிபே போன்ற யுபிஐ பரிவர்த்தனைகளில் மோசடி உள்ளிட்ட பல்வேறு விதமாக மோசடிகளில் பாதிக்கப்பட்டு இதுவரை 41 பேர் பணத்தை இழந்துள்ளனர். இது தொடர்பாக அந்த 41 பேரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் […]
Tag: சைபர் கிரைம்
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் ஐந்து பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபி சிஐடி ஏடிஜிபியாக அபய் குமார் சிங் மாற்றப்பட்டுள்ளார். இதனை அடுத்து சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாக சஞ்சய் குமார் ஆயுதப்படை ஐஜியாக ராதிகா போன்றோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஏபிஜிபி வெங்கட்ராமன் காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவை கூடுதலாக […]
சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி இருக்கின்றார்கள். வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும். முகம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் குறுஞ்செய்திகள் இணையத்தில் அறிமுகமாகும் நபர்கள் கேட்கும் விவரங்களையும் வாங்கி விவரங்களையும் பகிரக்கூடாது. பெரும்பாலும் மோசடி நபர்கள் தான் போலியான அடையாளங்களுடன் இணையதளம் வாயிலாக பொதுமக்களை […]
சேலம் ஏ வி ஆர் ரவுண்டானா பகுதியில் தனியார் கட்டிடத்தில் இயங்கிய சினிமா கம்பெனியில் இளம்பெண்களை நடிகையாக்குவதாக கூறி ஆபாசமாக படங்கள் வீடியோக்கள் எடுத்ததாக சேலம் மாவட்ட இடைப்பாடி சேர்ந்த இயக்குனர் வேல் சத்ரியன் அவரது பெண் உதவியாளர் ஜெயஜோதி போன்றோரை சூரமங்கலம் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். அந்த சினிமா கம்பெனியில் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் அதிர்ச்சி தரும் விதமாக 30 ற்கும் மேற்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள், கணினி, லேப்டாப், கேமரா, பென் ட்ரைவ் போன்றவை சிக்கியுள்ளது. […]
இணையவழி குற்றம் மூலம் இழந்த 1 லட்சத்து 51 ஆயிரத்து 447 ருபாய் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் தனக்கு வந்த குறுந்தகவலை கிளிக் செய்து வங்கி விவரங்களை கொடுத்த பிறகு தனது வங்கி கணக்கில் இருந்து 74 ஆயிரத்தை எடுத்து விட்டதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்திருந்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கடைசியாக 74,000 மீட்கப்பட்டு சுரேஷ்குமாரிடம் […]
கடந்த சில நாட்களாக சைபர்கிரைம் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. சைபர் கிரைம் சம்பவங்கள் நடந்த 72 மணி நேரத்தில் தகவல் கொடுத்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். பண மோசடி நடந்த 24 மணி நேரத்திற்குள் 1930என்ற எண்ணில் புகார் அளித்தால் அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி நபர்களின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்காதவாறு முடக்கலாம். மேலும் […]
ஜெர்மன் நாட்டில் மொத்தமாக குற்ற விகிதம் குறைந்து வரும் நிலையில் சிறுவர் ஆபாச படங்களும் சைபர் கிரைம் விநியோகமும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டில் சிறுவர் ஆபாச பட விநியோகம் கடந்த வருடத்தில் இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. கடந்த 2020ம் வருடத்தை விட 2021 ஆம் வருடத்தில் 108.8% சிறுவர் ஆபாச பட விநியோகம் அதிகரித்திருக்கிறது. இது ஜெர்மனியின் வருடாந்திர குற்ற புள்ளி விபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுபற்றி ஜெர்மன் நாட்டின் உள்துறை அமைச்சரான நான்சி ஃபேசர் […]
வாட்ஸ்அப் செயலி மூலம் சிவப்பு நிற இதய குறியீட்டைக் குறிக்கும் எமோஜியை அனுப்பினால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கு நாடான சவுதியில் வாட்ஸ்அப் செயலி மூலம் சிவப்பு நிற இதய குறியீட்டைக் குறிக்கும் எமோஜியை அனுப்பியதாக புகார் வந்தால் 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. இதன்படி இத்தகைய ஆட்சேபனைக்குரிய குறியீடுகள் வாட்ஸ் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணைய நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்த செல்போன் அழைப்பு, […]
Google Pay மூலம் பண மோசடி செய்யப்பட்டதில் 24,00,000 ரூபாயை இழந்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில். விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சில ரகசிய தகவலின் படி வடமாநில கும்பலை சேர்ந்த ரோகன், ராகேஷ் குமார் சிங், சுயந்தன் முகர்ஜி, ராகுல் ஆகிய 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு போலீசார் மேற்கு வங்காளத்திலிருந்து கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இந்த விவகாரம் […]
கோவையில் குனியமுத்தூர் மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் நியாஸ். 23 வயதுடைய இவர் தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் போல போலியான புகைப்படத்தை பதிவிட்டு பல்வேறு பெண்களிடம் நட்பு ஏற்படுத்தியுள்ளார். இதையடுத்து இவருடன் பழகிய திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பெண் குரலில் பேசி நட்புடன் பழகி உள்ளார். அந்தப் பழக்கத்தில் கல்லூரி மாணவியுடன் அவரது புகைப்படங்களை பெற்றுள்ளார். இதையடுத்து அந்த படங்களை மார்பிங் செய்து ஆபாச படமாக உருவாக்கி அதனை மீண்டும் கல்லூரி மாணவிக்கு அனுப்பி, […]
2021 ஆம் ஆண்டிற்கான காவல்துறையின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து இந்திய காவல்துறை அறக்கட்டளை தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சிறப்பாக தங்களுடைய சேவையை செய்ததன் அடிப்படையில் ஆந்திரா காவல்துறை முதலிடத்தைப் பிடித்துள்ளது. தெலுங்கானா 2-வது இடத்தையும், கேரளா 4_வது இடத்தையும் கர்நாடகா 11-வது இடத்தையும் பிடித்துள்ளன. சிறப்பான முறையில் தங்களுடைய பணிகளை செய்யும் கர்நாடக காவல்துறைக்கு 11வது இடம் கிடைத்துள்ளது. மேலும் கலவரம் நடக்கும்போது கர்நாடகா காவல்துறை சிறப்பான முறையில் அதை கையாளுவதாக இந்திய காவல்துறை அறக்கட்டளை […]
பள்ளி ஆசிரியரிடம் பணமோசடி செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பலவாணபுரம் பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தியின் செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் தன்னை வங்கி மேலாளராக அறிமுகப்படுத்தி கொண்டார். இதனை அடுத்து அந்த மர்மநபர் சாந்தியின் வங்கி கணக்கின் விவரங்களையும் ஏ.டி.எம் கார்டின் ரகசிய […]
தமிழகத்தில் கொரோனா தொற்று ஊரடங்கின்போது 55% சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப்பதிவேடு அமைப்பு தெரிவித்துள்ளது. இவற்றில் பணம் திருட்டு, ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டுதல் ஆகியவை முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா தொற்று ஊரடங்கின் போது அதிகமானோர் வீட்டிலிருந்து பணிபுரிந்தனர். மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டன. இவற்றின் காரணமாக தொழில் நுட்பங்கள் தெரியாதவர்கள் கூட அதைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவையே சைபர் குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணமாகிவிட்டது. வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஓடிபி எண் கேட்பது […]
தற்போது சைபர் குற்றங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கிறது. ஆன்லைன் மோசடிகள் தினமும் புதிது புதிதாக நடக்கின்றன. அதனால் போலீசார் தரப்பில் விழிப்புணர்வு தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அது தொடர்பாக போலீஸ் ஸ்டேஷனில் சைபர் கிரைம் சார்பாக அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. அதில், மக்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, ஆன்லைன் வாயிலாக முன்பணம் செலுத்த வேண்டும் என்று யாராவது கூறினால் அதை யாரும் நம்ப வேண்டாம். உங்களுடைய செல்போன் எண்ணுக்கு வரும் தவறான லிங்க்குகள் எதையும் […]
இணைய திருடர்கள் புதிய வகையில் மோசடி சம்பவங்களில் ஈடுபடுவதால் வங்கி வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. இணைய மோசடியில் ஈடுபடுவோர் தற்போது புதிய முறையை கையாண்டு மோசடி சம்பவங்களை செய்துவருவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மொபைல்போனில், எஸ்எம்எஸ் எனப்படும் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அதன் மூலம் வங்கி கணக்கு மூடப்படுகின்றது. இதை தவிர்ப்பதற்கு எஸ்எம்எஸ் இல் உள்ள இணைய இணைப்பின் மூலம் சரி பார்க்க செல்பவர்கள், அந்த இணைப்பில் […]
திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாயை நடிகர் ஆர்யா மோசடி செய்ததாக ஜெர்மன் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று ஆர்யா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெர்மனியை சேர்ந்த ஈழத்தமிழ் பெண் வித்ஜா என்பவரை நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரிடம் இருந்து 71 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டதாகவும், அதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டு நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டதாக அந்தப் பெண் […]
இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு ஏற்படும் பணம் மோசடியைத் தடுப்பதற்காக வங்கிகள் சார்பாக அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஓடிபி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக உங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து […]
அரசு வேலை வாங்கி தருவதாக, 76 பேருக்கு, போலி பணி ஆணை வழங்கி, லட்சக்கணக்கில் மோசடி செய்த வாலிபரை, சைபர் கிரைம் போலீசார் 24 மணிநேரத்தில் கைது செய்துள்ளனர். திருத்தணி அடுத்த அம்மையார்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த இவர் பேஸ்புக் ஐடி மூலமாக அரசு வேலை காலியிடம் இருப்பதாக அறிந்தார். இதையடுத்து, அந்த பேஸ்புக் உரிமையாளரின், தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து அவரிடம் பேசியுள்ளார். அப்போது அவர், உங்களுக்கு சென்னை கேகே […]
கொரோனா காரணமாக தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்ததால் தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு மட்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக மக்கள் பெரும்பாலும் ஆன்லைனிலேயே தங்களது நேரங்களை செலவிட்டு வருகின்றனர். இதை சிலர் தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அதனை வைத்து மிரட்டி பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். […]
ஓய்வு பெற்ற ஆசிரியரின் வங்கி கணக்கிலிருந்து 10 லட்சத்து 42 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கருமலைக்கூடல் பகுதியில் உதவித்தொடக்ககல்வி ஆசிரியராக இருந்த செல்லம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், தான் வங்கியிலிருந்து பேசுவதாகவும் உங்களது வங்கிக் கணக்கிற்கு புதிய ஏ.டி.எம் கார்டு மற்றும் கணக்குப்படிவ புத்தகம் வந்துள்ளதாகவும் செல்லம்மாள் இடம் […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தொடங்கிய கணக்குகள் ஏதேனும் பல நாட்களாக பயன்படுத்தாத நிலையில் இருப்பின் அவற்றின் password முதலியவற்றை மாற்றிக் கொள்ளவும். […]
தமிழகத்தில் சமீபகாலமாக சைபர் கிரைம் அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் நவீனமான வாழ்க்கைக்கு மாறி கொண்டிருக்கின்றனர். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்களின் தேவைகள் அனைத்தையும் செல் போன் மூலமாகவே பூர்த்தி செய்து கொள்கிறார்கள். ஆனால் அதில் சில ஆபத்துகளும் நிறைந்துள்ளன. தமிழகத்தில் சமீபகாலமாக சைபர் கிரைம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எந்த ஒரு பரிசுப் பொருட்கள் […]
நவீன தொழிநுட்ப பயன்பாடுகள் அதிகரித்துள்ள அதேநேரம் சைபர் கிரைம் தொடர்பான வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நாட்டில் ஐந்தில் ஒருவர் சைபர் கிரைம் தொடர்பான மோசடிகளில் சிக்குகிறார்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சாப்ட்வேர் இன்ஜினியர் தொடங்கி படிக்காத விவசாயி வரை அனைத்து தர்ப்பினரும் இதுபோன்ற மோசடிகளில் சிக்குகின்றனர். வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இந்த சைபர் குற்றவாளிகள் திருட எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு சில வினாடிகளே. இதற்கென மோசடி செய்பவர்களும் பல புதிய முறை […]
அரசு ஊழியர்கள் தங்கள் துறை சார்ந்த புகார்களை வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் எச்சரித்துள்ளது. அரசு கல்லூரிகளில் பணிபுரியும் நபர்கள் தங்கள் துறை சார்ந்த புகார்களை வாட்ஸ்அப் குழுக்களில் பகிரக்கூடாது. மீறினால் அவர்கள் மீது சைபர் கிரைம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி கல்வி இணை இயக்குநர் ராமலட்சுமி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், துறை சார்ந்த புகார்களை மேல் அதிகாரியிடம் […]
பரிசுத் தொகை என கூறி இணையத்தில் 11 லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் ஒரு மருந்து விற்பனையாளர். அடிக்கடி தனது வீட்டு உபயோகப் பொருட்களை இணையதள நிறுவனம் மூலம் வாங்கி வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இணையதளத்தில் உள்ள நிறுவனத்தில் இருந்து ஒரு கடிதம் இவருக்கு வந்தது. அதாவது அவரது பத்தாம் திருமண நாளுக்காக குழுக்களில் அவர் பெயரில் ஒரு பெரும் […]
பிரதமரின் கொரோனா நிவாரணமாக 4500 ரூபாய் வழங்குவதாக கூறி வங்கி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் நிகழ்ந்து வருகின்றது. வங்கியில் இருந்து பேசுகிறேன் என்று கூறி பிரதமர் மோடி கொரோனா நிவாரணமாக ஒவ்வொரு நபருக்கும் 15 லட்சம் கொடுக்கப் போகிறார். இதில் முதல் கட்டமாக ரூபாய் 25 ஆயிரம் உங்கள் வங்கிக் கணக்கில் அனுப்பப்படும். அதனால் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை கூறுங்கள் என்று பேசுகின்றனர். அதை நம்பி மக்கள் கூறும் வங்கி கணக்கு விவரங்களைப் […]
ஆன்லைன் ஆர்டரில் ஆடையை வாங்கும் முயன்ற போது இளம்பெண் வங்கி கணக்கிலுருந்து 4 1/4 லட்ச ரூபாய் மோசடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூரில் உள்ள தலகட்டபுராவில் ரிங்கி டாகோர் என்ற 25 வயது இளம்பெண் தனக்குப் பிடித்த புதிய ஆடைகளை வாங்குவதற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்து பணத்தை செலுத்தினார். இவர் ஆர்டர் செய்ததில் குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் ஆடைகள் வரவில்லை என்று கஸ்டமர்கேர் நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவரிடம் பேசியவர் தாங்கள் பணம் […]