திருச்சியில் ஆன்லைன் பணமோசடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி, அமுல்நகரை சேர்ந்தவர் சதீஷ். இவா் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வந்த நகை விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள வங்கி கணக்கிற்கு ரூ.80,000-க்கு நகையை ஆர்டர் செய்து, அந்த பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பொருள் வந்து சேரவில்லை. இதையடுத்து, திருச்சி தென்னூர் ராமச்சந்திரபுரத்தை சேர்ந்த நேஷா என்பவர் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து நகை வாங்குவதற்காக ரூ.3,000 பணத்தை கட்டியுள்ளார். ஆனால் அவர்க்கும் பொருள் […]
Tag: சைபர் கிரைம் போலீசார்
கர்நாடகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜனவரி 1 முதல் பிப்ரவரி 28 வரை சுமார் ரூ. 221 கோடி மதிப்பிலான இணையவழி மோசடி நடந்துள்ளது. ஆனால் ரூ. 40 கோடி மட்டுமே இணையவழி மோசடியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது பொதுமக்கள் ரூ. 104 கோடியை சைபர் மோசடி மூலம் இழந்துள்ளனர். அதிலிருந்து ரூ.24 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.68 கோடி ஓ.டி.பி. (ஒன் டைம் பாஸ்வேர்ட்) எண் மூலம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து ரூ. […]
பஜ்ரங்தள அமைப்பு பிரமுகர் கொலை வழக்கில் 8 பேர் கைதான நிலையில் மேலும் 2 இளம் பெண்களுக்கு தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சிவமொக்கா டவுன் பகுதியில் உள்ள சீகேஹட்டியில் கடந்த 20 ஆம் தேதி அன்று பஜ்ரங்தள அமைப்பு பிரமுகர் ஹர்ஷா (வயது 24) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காசிப், சையது நதீம், அசிபுல்லா கான், ரிஹான் கான், அப்துல் அர்பான், நெகால் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். […]
வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை நூதன முறையில் திருடியுள்ள ஏமாற்று கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடும் கும்பல் ஏராளமாக பெருகி வருகிறது. அந்தவகையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 2 ஏமாற்றுக்காரர்கள், வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர் போல பேசி பலருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 82 லட்சம் வரை நூதன முறையில் திருடிவருவது தெரியவந்துள்ளது. கடந்த மாதம் ஜனவரி 7 ஆம் தேதியன்று ஏமாற்றுக்காரர்களால் பாதிக்கப்பட்ட […]
சைபர் கிரைம் போலீசார் வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்களின் பணம் மோசடி செய்வதை மீட்டுத்தர புதிய ஹெல்ப்லைன் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு ஏற்படும் பணம் மோசடியைத் தடுப்பதற்காக வங்கிகள் சார்பாக […]
கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தி கொண்டவர்களுக்கு மூன்றாவது தவணையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதில் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பூஸ்டர் டோஸ் போடுவதற்கு விருப்பம் தெரிவிப்பவர்கள் செல்போன் எண்ணிற்கு லிங்க் ஒன்றை அனுப்பி அதில் விவரங்களை பதிவிடுமாறு கோரி செல்போன் எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணை கேட்டு நூதன முறையில் புதிய மோசடி செய்வதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். லிங்க் ஓடிபி மூலம் செல்போனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து […]
வேலை வாங்கி தருவதாகக்கூறி பணத்தை மோசடி செய்த இளைஞனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் என்மனங்கொண்டான் பகுதியில் வெங்கட்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி ஊரிலேயே வேலை தேடியுள்ளார். ஆனால் ஊரிலேயே வேலை கிடைக்காததால் வெங்கட்குமார் இணையத்தில் வேலைவாய்ப்புகளை தேடியுள்ளார். அப்போது வெளிநாட்டில் பிரபல இணைய வியாபார நிறுவனத்தில் வேலை இருப்பதற்க்கான அறிவிப்பை பார்த்த வெங்கட் உடனடியாக அதில் […]
OTP மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கபட்டுவிட்டதா? பதட்டம் வேண்டாம். உடனே 155260 என்ற எண்ணிற்கு அழையுங்கள். தங்கள் வங்கி கணக்கிலிருந்து மோசடி நபர்களின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் வெளியே எடுக்காதவாறு Freeze செய்து தரப்படும். வேறு ஏதேனும் சைபர் குற்றங்கள் குறித்து www cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்திலும் பயனர்கள் தங்கள் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதில் பெண்களுக்கு பல விதமான பிரச்சினை ஏற்படுகிறது. இந்நிலையில் பெண்கள் […]