வணிகர்களுக்கு ரவுடிகளால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கும் வகையில் காவல் செயலியில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார். கடைகளில் வியாபாரிகளை கத்திமுனையில் மிரட்டி பணம் பறிப்பது, பொருள்களை சேதப் படுத்துவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. இந்நிலையில் வணிகர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாக காவல் துறைக்கு தெரிவிப்பதற்காக புதிய வசதி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாக பெறும் வகையில் 60க்கும் மேற்பட்ட சிறப்பு அம்சங்களுடன் காவல் உதவி […]
Tag: சைலேந்திரபாபு
கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் மோதிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அரசு பள்ளி மாணவர்களின் நடவடிக்கை மோசமாக இருப்பதாக பல இடங்களில் ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மீது இருந்த மதிப்பும், அச்சமும் சிறிதும் இல்லாத அளவுக்கு மாணவர்களின் நிலை உள்ளது என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றன. அதன்தொடர்ச்சியாக சமீபகாலமாக தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. […]
மாணவர்கள் தினம்தோறும் ஆபத்தான பயணம் மேற்கொள்வதால் பள்ளி, கல்லூரி நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அவர் அறிவித்துள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பள்ளி ,கல்லூரி செல்லும் மாணவர்கள் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இவ்வாறு பயணிப்பது உயிரிழப்பு மற்றும் பெருங்காயத்தை ஏற்படத்தக்கூடியது. எனவே இத்தகைய ஆபத்தான பயணங்களை தடுக்க வேண்டும் என்பதற்காக பள்ளி, கல்லூரி நிர்வாகத்திடம் […]
தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்த உத்தரவால் மாவட்ட போலீசார் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். காஞ்சிபுரத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட காவல்துறையின் ஆய்வுக்கூட்டம் காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபுவை வடக்கு மண்டல ஐஜி டிஐஜி சத்யப்ரியா, மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற காஞ்சிபுரம் சரக காவல் துறையினருக்கான […]
பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், சமூக வலைதளம் மூலமாகவும் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தேர்தலை ஒட்டி நடந்த சில நிகழ்வுகள் குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஆனால் தேர்தலையொட்டி சில இடங்களில் சாலை மறியல், வாக்குவாதம் போன்ற பிரச்சினைகள் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் அந்த பகுதிகளில் அமைதியை நிலைநாட்டியுள்ளார்கள். […]
குழந்தைப்பருவ புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு மிக முக்கியத்துவம் வாய்ந்த செயல் ஒன்றை செய்துள்ளார். இதற்கு அனைவரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன. குழந்தைப்பருவ புற்றுநோய்க்கான சிகிச்சை மீது விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கு ஆதரவாக நிதி திரட்டுவதற்காக உருவாக்கப்பட்டது அப்போலோ டி2டி. இது பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டி வருகிறது.இந்த நிதியானது அப்போலோ புற்றுநோய் மருத்துவர்கள் குழுவால் உரிய முறையில் பயன்படுத்தப்படுகிறது. இளம் புற்றுநோயாளிகள் உயிர் வாழ வழி செய்கிறது. இந்நிலையில் அப்போலோ […]
மறைந்த சிறப்பு எஸ்ஐ பூமிநாதனின் படத்திற்கு டிஜிபி சைலேந்திரபாபு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “ஆடு திருடர்களை 15 கிலோமீட்டர் தனியாளாக துரத்தி சென்றுள்ளார். மறைந்த சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் விவேகமான முறையில் பணியாற்றக் கூடியவர். ஏற்கனவே தீவிரவாத தடுப்பு பயிற்சியில் ஈடுபட்ட பூமிநாதன் முதலமைச்சர் பதக்கத்தையும் வென்றுள்ளார் .அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பூமிநாதன் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி அறிவிக்கப்பட்டதற்கு எனது […]
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நெல்லை வந்து, தென்மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை சம்பவங்களை தடுக்க ஆலோசனை செய்கிறார்.. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாகவும், இந்த கொடூர சம்பவம் அரங்கேறி வருகிறது. இந்த சம்பவத்தால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.. இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நெல்லை வருகின்றார். நெல்லை மாநகர காவல்துறை அலுவலகம் மற்றும் மாவட்ட […]
தமிழக காவல்துறையின் 30வது சட்டம் -ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு இன்று பதவி ஏற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அவர், “இந்த அரிய வாய்ப்பைத் தந்த முதல்வர் அவர்களுக்கு நன்றி. தன்னுடைய பணி நாட்களில் சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் தரப்படும். முதல்வரிடம் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மக்களிடம் காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அதற்கான பயிற்சிகள் காவலர்களுக்கு வழங்கப்படும். காவலர்களின் குறைகள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை […]