வேலூர் அருகில் பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை சைல்டுலைன் அலுவலகத்தினர் தடுத்து நிறுத்தினர். வேலூர் மாவட்டம், பாகாயம் மேட்டுஇடையம்பட்டியில் பள்ளி மாணவிக்கு திருமணம் செய்து வைப்பதாக மாவட்ட சைல்டு லைன் அலுவலகத்துக்கு புகார் வந்துள்ளது. இப்புகாரின்பேரில் சைல்டு லைன் அணி உறுப்பினர்கள் நாகப்பன், சத்யா, சமூகநலத்துறை ஊழியர்கள், பரிமளா, கல்யாணி மற்றும் காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது லத்தேரி பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவிக்கும், […]
Tag: சைல்டுலைன்
சட்டவிரோதமாக 18 வயது பூர்த்தியாகாத 2 மாணவிகளுக்கு நடைபெற இருந்த திருமணத்தை சைல்டுலைன் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வசந்தபுரத்தில் 18 வயது பூர்த்தியாகாத பெண்ணிற்கு திருமணம் நடைபெற இருப்பதாக மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சமூகநலத்துறை அலுவலர் வில்லி, சைல்டுலைன் ஊழியர் சங்கர் மற்றும் வேலூர் வடக்கு காவல்துறையினர் அந்தப் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வசந்தபுரத்தை சேர்ந்த 15வயது மாணவிக்கும், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கேளூர் பகுதியில் […]
வேலூரில் தொடர்ச்சியாக நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை சைல்டுலைன் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். வேலூர் மற்றும் சில மாவட்டங்களில் நடக்கும் குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் சைல்டுலைன் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சைல்டுலைன் அமைப்பு அலுவலர்கள் குழந்தை திருமணம் செய்வதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு நடத்திவருகின்றனர். ஆனாலும் சில இடங்களில் 18 வயது பூர்த்தியாகாத சிறுமிக்கு திருமணம் செய்யும் சம்பவம் இன்னும் நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து மாவட்ட சைல்டுலைன் எண் 1098 என்ற எண்ணிற்கு […]