40 வயதுக்கு மேல் பார்வை மங்கலாகும் நபர்களுக்கு அமெரிக்காவில் ‘vuity’ என்ற சொட்டு மருந்து சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சொட்டு மருந்தை எழுத்துக்கள் மங்கலாக தெரிந்தால் கண்ணாடி அணிவதற்கு பதிலாக போட்டுக் கொண்டால் அடுத்த 15 நிமிடத்தில் கண் பார்வை தெளிவாகும் என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சொட்டு மருந்தை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tag: சொட்டு மருந்து
தமிழகத்தில் வருகின்ற 31ஆம் தேதி முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் கடந்த 17ஆம் தேதியே நடைபெறவேண்டியது. ஆனால் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி காரணத்தால் இதன் தேதி மாற்றிவைக்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் வருகிற 31-ந் தேதி, 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் போலியோ தடுப்பு மருந்து வரும் 31ஆம் தேதி போடப்படும் என ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். நாடு முழுவதும் ஐந்து வயதுள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவது வழக்கம். தற்போது கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் போலியோ தடுப்பு மருந்து அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு […]