தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவியில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது. இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து குவித்ததாக கே.பி.அன்பழகன் குடும்பத்தினர் மீது சொத்து […]
Tag: #சொத்துகுவிப்பு
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 2011 -2021 ஆம் ஆண்டுவரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.76.65 கோடி மதிப்புக்குச் சொத்து குவித்துள்ளதாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலிஸிடம் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. அவர் 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை எம்எல்ஏவாக இருந்த காலகட்டத்தில் அவரின் சொந்த நிறுவனத்திற்கு ஓசூரில் 4,300 சதுர அடி நிலம் வருடத்திற்கு வெறும் 1 ரூபாய் லீசுக்காக 99 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த 99 வருடத்திற்கான பணம் 100 […]
கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் தனது வீட்டில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து கரூரில் உள்ள அவருடைய வீடு, அவருக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் முக்கிய ஆவணங்கள், சொத்துக்களின் ஆவணங்கள் சிக்கின. இந்நிலையில் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது 55 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 இல் ரூபாய் 2.5 கோடி, 2021 இல் ரூபாய் […]
சசிகலாவின் கோடிக்கணக்கான சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.66கோடியே 64 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி சுதாகரன் ஆகியோர் மீது பெங்களூரு தனி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவர்கள் 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் மேற்கண்ட தீர்ப்பை எதிர்த்து தாக்கல் […]