வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டார்.. கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகிய இருவரின் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த அதிமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இருவரும் குற்றம் செய்ததற்கான எந்த வித முகாந்திரமும் இல்லை என […]
Tag: சொத்துகுவிப்பு வழக்கு
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டார். அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வழக்கில் எந்தவிதமான முகாமிரமும் இல்லை என விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கிரிஸ்டோபர் உத்தரவிட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கில் இருந்து […]
தமிழகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா மீது மத்திய புலனாய்வுத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.ஏழு வருடங்கள் பழமையான இந்த வழக்கில் விசாரணை முடிந்ததும் சமீபத்தில் சென்னையில் உள்ள சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் ராஜா மற்றும் ஐந்து பேருக்கு எதிராக குற்ற பத்திரிக்கையை ஏஜென்சி தாக்கல் செய்தது. இந்நிலையில் இறுதி விசாரணை அறிக்கையில் ராசா 5.53 கோடி அளவிற்கு சொத்துக்களை […]
சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரிடம் 8 மணிநேரமாக நடந்த விசாரணை நடத்தினர். சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக. முன்னாள் அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவர் இன்றும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு உள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு சென்னை, ஆதம்பாக்கத்தில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு எம்ஆர். விஜயபாஸ்கர் ஆஜரானார். அவரிடம் லஞ்ச […]
அதிமுக முன்னாள் அமைச்சர் நரேந்திர பாலாஜியின் சொத்து குவிப்பு வழக்கில் விசாரணைக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராஜேந்திர பாலாஜி தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக 7 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் வந்தது. அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கோரி மதுரை சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த சத்யநாராயணன், ஹேமலதா அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால் மூன்றாவது நீதிபதி நிர்மல்குமார் அமர்வுக்கு […]
தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் விரைவில் […]
கே.சி வீரமணி கடந்த 5 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக 654 சதவீதம் சொத்து குவித்துள்ளார் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் தெரிவித்துள்ளது. அதிமுக அரசில் 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 28 கோடியே 78 லட்சத்து 13 ஆயிரத்து 753 ரூபாய் சொத்து சேர்த்ததாக கே சி வீரமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கத்தின் சார்பாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் […]
சசிகலாவின் ஆட்சேபனையை மீறி அவரை சந்திப்பதற்கு யாரெல்லாம் வந்தார்கள் என்ற விவரங்களை கர்நாடகா பொது தகவல் துறை வெளியிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் சசிகலா, ஆர்டிஐ சட்டத்தின் கீழ், தன்னைப் பற்றி எந்த ஒரு தகவலையும் மூன்றாவது நபருக்கு வழங்கக்கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய குடிமகனாக தனக்கு ஒரு சிறைக் கைதியின் விடுதலை, அவரை சந்திக்க யாரெல்லாம் வருகிறார்கள் என்ற விபரங்களை தெரிந்து கொள்வதற்கு உரிமை உள்ளது என்றும் தான் கேட்ட […]
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா விடுதலை ஆகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவின் சிறை தண்டனை காலம் முடிவுக்கு வர இருப்பதால் ஏற்கனவே அவர் நீதிபதி குன்ஹா தீர்ப்பு படி விசாரணை நீதிமன்றத்தின் முடிவு காரணமாக சிறையில் இருந்தார். அதன் பிறகுதான் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, பின்னர் அவருக்கு பிணை கிடைத்து வெளியே வந்திருந்தார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு படி தற்போது அவர் சிறையில் இருக்கும் போது ஏற்கனவே அவர் விசாரணை நீதிமன்றத்தில் […]