சொத்துப் பிரச்சினை காரணமாக வாலிபரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர் ஓசூர் அருகே எழுவபள்ளி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப் வயது (25). பெயிண்டர் தொழில் செய்து வந்த இவருக்கு சந்திரிகா என்ற மனைவியும், 3 வயது பெண் குழந்தையும், நான்கு மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளது. அவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார்.இந்நிலையில் பிரசவத்திற்க்காக கர்நாடகாவில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் நேற்று இரவு பிரதீப்பை […]
Tag: சொத்து பிரச்சனை
சொத்து பிரச்சனை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் உள்ள 7-வது வார்டில் சின்னகருப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி அமிர்தசெல்வி. இந்நிலையில் அமிர்தசெல்விவின் தந்தையான சுடலை முத்துவிற்கு பூர்விக சொத்து உள்ளது. இந்த சொத்தை முழுவதுமாக சுடலை முத்து அவரது மகனுக்கு எழுதி கொடுத்துள்ளார். இதனால் எனக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என அமிர்தசெல்வி கேட்டுள்ளார். ஆனாலும் சொத்தில் பங்கு […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்பகை காரணமாக வீட்டிற்குள் நுழைந்தது கொலை மிரட்டல் விடுத்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் உள்ள அரண்மனை தெருவில் தங்கராஜ் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் பெருநாழி பகுதியில் வசிக்கும் சுந்தரபாண்டியன் மற்றும் செந்தில் ஆகியோருக்கும் இடையில் சொத்து பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சுந்தரபாண்டியன் மற்றும் செந்தில் அவர்களது கூட்டாளிகள் 4 பேருடன் தங்கபாண்டியனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சென்று வீட்டில் […]
மதுரை பெருங்குடி அருகே பூர்வீக சொத்து தொடர்பு பிரச்சனை காரணமாக பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, பெருங்குடி சிவசக்தி நகரை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரின் மனைவி காத்தூன் பிவி(55). தனது பூர்வீக இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தார். இது தொடர்பாக அவரது சகோதரர் மற்றும் சகோதரிகள் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை உறவினர்கள் அவரை அரிவாள் மற்றும் கம்புகளை கொண்டு தாக்கியதில் அவர் படுகாயம் […]
சொத்துப் பிரச்சனையில் போலீஸ் தலையிடுவதாக கூறி மயிலாடுதுறை காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தியவர்களை நள்ளிரவில் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை கச்சேரி சாலையில் ஜெயக்குமார் குடும்பத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிங்காரவேலு தலையிட்டு பஞ்சாயத்து பேசியதோடு, மற்றொரு தரப்புக்கு ஆதரவாக மிரட்டல் விடுததால் ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினர் 21 பேர், […]
இலங்கைப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நபர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தஞ்சாவூர் விளார் சாலையில் இருக்கும் காயிதேமில்லத் நகரை சேர்ந்தவர் யூசப். இவர் இலங்கையை சேர்ந்த அசிலா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று யூசப் தனது காரில் சென்று கொண்டிருந்த சமயம் அவரை வழி மறித்த மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். உயிரை காப்பாற்றிக்கொள்ள காரிலிருந்து […]