சென்னை மேயர் பிரியா தலைமையில் இன்று ரிப்பன் கட்டட மாமன்ற கூட்டரங்கில், சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், நிதி குழு தலைவர்கள், முதன்மை செயலாளர் சுகன்சிங் பேடி, மண்டல குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கு 2023 -ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி […]
Tag: சொத்து வரி
சொத்து வரி உயர்வு செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்து வரி உயர்வை எதிர்த்து 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் நிராகரிக்கபட்டுள்ளது. மாநகராட்சிகளின் தீர்மானங்கள் செல்லும் என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சொத்து வரி உயர்வை எதிர்த்து வழக்கு தொடுத்த மனுதாரர்களுக்கு 2023 ஏப்ரல் முதல் சொத்துவரி உயர்வை அமல்படுத்தவும் உத்தரவு பிரபிக்கபட்டுள்ளது. மேலும் சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் பெறுவதற்கு வசதியாக மாநகராட்சி இணையதளங்களை மேம்படுத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சொத்துவரி உயர்த்தப்பட்ட நிலையில் நிலுவை சொத்து வரி குறித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது குடியிருப்பு தாரர்கள் மற்றும் சொத்து வரி செலுத்தாத சிறு நிறுவனங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நிலுவையில் இருக்கும் சொத்து வரியை வசூலிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கோவை மாநகராட்சியில் வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புதாரர்கள் தங்களின் […]
சென்னையில் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்துவதற்கான கால அவகாசம் டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் இரண்டாம் அரையாண்டு காண சொத்துவரி சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் சொத்துவரி செலுத்தப்பட்டு வருகின்றது. சொத்து வரியை சொத்து உரிமையாளர்கள் தனி வட்டி இல்லாமல் செலுத்துவதற்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் சொத்து உரிமையாளர்களின் நலனை கருதி உயர்த்தப்பட்ட […]
திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கு நவம்பர் 17ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் நான்கு மண்டலங்களிலும் சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி,திடக்கழிவு மேலாண்மை கட்டணம் மற்றும் குத்தகை இனங்கள் உள்ளிட்டவை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த வரியை கணினி வரி வசூல் மையங்களில் பணமாக அல்லது காசோலை மூலமாக செலுத்தலாம். அது மட்டுமல்லாமல் எளிதில் இணையதளம் மூலமாக செலுத்துவதற்கு https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். இந்நிலையில் திடக்கழிவு […]
சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மாநகராட்சி விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்திலும் சொத்து வரி செலுத்தப்பட வேண்டும். இதில் முதல் 15 நாட்களுக்குள் வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி அல்லது 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். நடப்பு அரையாண்டில் கடந்த 1-ம் தேதி முதல் சொத்து வரியானது செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 18-ஆம் தேதி வரை 5.17 லட்சம் பேர் நிலுவை இல்லாமல் செத்து […]
அக்டோபர் 15ஆம் தேதிக்குள் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்துபவர்களுக்கு சொத்து வரியில் 5 சதவீதம் தொகை தள்ளுபடி செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. உரிய காலத்திற்குள் சொத்துவரி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பல வாய்ப்புகளை மக்களுக்கு அறிவித்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் 2022 -2023 ஆம் வருடத்திற்கான முதல் அரையாண்டுக்கான சொத்து வரியில் உயர்த்தப்பட்ட தொகையை இதுவரை செலுத்தாதவர்களுக்கு விதிக்கப்படும். இரண்டு சதவீத அபராத தொகையும் தள்ளுபடி செய்வதாக […]
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் குடியிருப்புகளுக்கு சொத்துவரி கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்டது. இதற்கு மாநகராட்சி ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை நகரின் பழைய பகுதிக்கு சொத்து வரி அதிகமாகவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குறைவாகவும் உயர்த்தப்பட்டது. ஆண்டு மதிப்பு மற்றும் சொத்து அமைந்துள்ள தெருவின் மதிப்பு அடிப்படையில் சொத்துவரி உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டது. ஏப்ரல் செப்டம்பர் மாதத்திற்கான சொத்துவரி இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். சொத்து வரியை தொடர்ந்து மின் கட்டணம் […]
சென்னையில் சொத்து வரி பொது சீர் ஆய்வு அறிவிப்புகள் தபால் துறை மூலமாக சொத்து உரிமையாளர்களின் முகவரி சரிபார்க்கப்பட்டு வருகின்றது. சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி சீராய்வின் நிர்ணயிக்கப்பட்ட வரியை கணக்கிட்டு அறிய ஏதுவாக ஏற்கனவே மாநகராட்சியின் https://erp.chennaicorporation.gov.in/ptis/citizen/revisionNoticeOne!generateReport.action என்ற இணையதள இணைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதில் சொத்து வரி எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் ஆகிய விவரங்களை பதிவு செய்து கணக்கீட்டு விவரத்தை எளிதில் அறிந்து கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து தற்போது குறிப்பிட்ட தெருவுக்கு […]
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் கட்டடங்களுக்கு சொத்துவரி விதிக்கப்படுகின்றது. அதில் ஒரு கட்டிடத்திற்கு சொத்துவரி மதிப்பீடு செய்ய வேண்டும் என்றால் அதற்கான வழிமுறைகளை அதிகாரிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.தற்போது பல்வேறு இடங்களில் விதிமீறல் கட்டிடங்கள் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் அதிகாரிகள் முறையான வரைபடத்தில் உள்ள பாகங்களுக்கு மட்டுமே சொத்து வரி விதிக்கின்றனர். மேலும் விதிகளை மீறி கட்டப்பட்ட கூடுதல் பரப்புகளுக்கு சொத்து வரி விதிப்பதில்லை. இந்நிலையில் ஒரு கட்டிடத்தில் விதிகளை மீறி […]
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் அவரவர் சொத்து மதிப்பின் அடிப்படையில் அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது கட்டாயமாகும். அதன்படி ஆண்டுதோறும் அரசு சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் இணைப்பு வரி உள்ளிட்ட வரிகளை வசூல் செய்து வருகிறது. இதனை செலுத்த தவறுபவர்களுக்கு அபராத கட்டணங்களும் வசூலிக்கப்படும். இந்நிலையில் தமிழகத்தில் சொத்துவரி மற்றும் தொழில் வரி உயர்வு குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அவ்வகையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்பு கட்டிடங்களுக்கு […]
சென்னையில் சொத்து வரியை வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சீரமைக்கப்பட்ட சொத்து வரி பற்றி வீட்டில் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர்களே வீட்டை அளந்து வரிவிதிப்பு பற்றி தெரிவிக்கலாம். இது ராஜ்ஜியம் காட்டினால் வீடு சீல் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் சென்னையில் உள்ளனர். அவர்களில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சொத்துவரி குறித்து அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக வரி நிலுவையில் […]
ஆன்லைன் மூலம் சொத்துவரி செலுத்தினால் குறிப்பிட்ட வங்கிகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கேஷ் பேக், சினிமா டிக்கெட் போன்ற சலுகைகளை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.புதிய சொத்து வரி வசூலிக்கும் பணியை தற்போது சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அதன்படி சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் அறிவிப்புகள் தபால் துறை மூலமாக சொத்து உரிமையாளர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.கடந்த ஜூன் 27ஆம் தேதி வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு பொது சீராய்வு அறிவிப்புகள் தபால் மூலமாக வழங்கப்பட்டு […]
சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2022-23 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் சொத்து வரியை நாளைக்குள் செலுத்துவோருக்கு 5% விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள் இணையதளம் மற்றும் நம்ம சென்னை செயலி , கிரெடிட் அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றின் மூலமாக செலுத்தமுடியும். 2022 23 ஆம் ஆண்டு முதல் அரையாண்டு சொத்து வரியிணை ஏற்கனவே மாநகராட்சிக்கு செலுத்திவந்த கட்டண […]
சென்னை மாநகராட்சி, வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரே நேரத்தில் 2 அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை மண்டல அலுவலகங்கள் மற்றும் வார்டு அலுவலகங்களில் உள்ள இ சேவை மையங்கள் அல்லது இணைய தளம் வாயிலாக செலுத்தி வருகின்றனர். மேலும் அதைபோல் நம்ம சென்னை செயலி, பேடிஎம், கிரெடிட் கார்டு அல்லது ஏடிஎம் கார்டு ஆகிய வசதிகள் மூலமாகவும், மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள், மற்றும் […]
சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டுக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மற்றும் பாஜக சார்பில் பல போராட்டங்களும் நடத்தப்பட்டது. இந்நிலையில் சொத்து வரி உயர்வு உடனடியாக அமல்படுத்தப்படாது என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் முதல் அரையாண்டுக்குள் பழைய […]
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில் சொத்துவரி உயர்வுக்கான அவசர கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. மன்ற கூட்ட அரங்கில் சுய நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் சொத்து வரி உயர்வு தொடர்பான தமிழக அரசின் புதிய கண்டனம் குறித்து விவாதிப்பதாக கூறப்பட்டது. ஆனால் 18 கவுன்சிலர்கள் உள்ள நகராட்சியில் 13 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். சொத்து வரி உயர்வை விவாதிப்பதற்கு முன் தூய்மை பணியாளர் பற்றாக்குறை, பணியாளர் வருகைக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு, […]
சொத்து வரி அதிகரித்துள்ளதால் மக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதன் மூலமாக சொத்து வரி 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சொத்து வரி உயர்வை திருப்பூர் மாவட்டத்திலும் நடப்பாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். இந்த மாநகராட்சியில் வீட்டு வரி 1.60 லட்சமாகவும், வர்த்தக வரி 60,000 ஆகவும், தொழிற்சாலை வரிவிதிப்புகள் 40 ஆயிரம் ஆகவும் […]
சென்னையில் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியில் சொத்துவரி மற்றும் கேளிக்கை வரி 6 மாதத்திற்கு ஒருமுறை செலுத்த வேண்டும். ஆனால் பல நிறுவனங்கள் வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது. இந்த 2021-22 ஆம் நிதியாண்டில் சொத்து வரி, தொழில் வரி மற்றும் இதர வரி என மொத்தம் 1,297 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டை விட 338 கோடி அதிகம் என கூறப்படுகிறது. இந்நிலையில் […]
தமிழகத்தில் சொத்துவரி 25 சதவிகிதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு கொடுத்துள்ள நிர்பந்தம் காரணமாகவே இந்த வரி உயர்வு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சொத்து வரி உயர்வை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திருச்சி மாவட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு […]
மத்திய அரசை காரணமாக வைத்து சொத்து வரியை தமிழக அரசு உயர்த்துவதா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “திமுக அரசு சொத்து வரியை உயர்த்தியுள்ளது பெரும் கண்டனத்துக்குரியது. முந்தைய அரசு 100% விழுக்காடு வரை சொத்து வரி உயர்த்தியதை கண்டித்து போராட்டம் நடத்தி விட்டு தற்போது 150 விழுக்காடு வரை சொத்து வரியை உயர்த்தி உள்ளது எவ்வகையில் ஏற்புடையது. தற்போதைய சொத்து வரி […]
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டு முதல் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை உள்ளிட்ட 21 நகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 21 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. 600 சதுர அடிக்கு குறைவான பரப்புள்ள கட்டடங்களுக்கு […]
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் குறித்து அனைத்து மண்டல இணை, துணை மற்றும் உதவி ஆணையாளர் களுடன் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களில் அதிக வாடகை வசூலிப்பது தொடர்பாக சீராய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சட்டத்திற்கு உட்பட்டு […]
தமிழக அரசு 150% சொத்துவரி என்ற சம்மட்டியால் அடித்து மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. ஓய்வூதியம் பெறுவோர் தனக்கென கட்டிய சின்னஞ்சிறு வீடுகளுக்கு சொத்து வரி கட்ட முடியாமல் அல்லல் படும் நிலையையும், வாடகைக்கு குடி இருப்பவர்கள் மீது வீட்டு உரிமையாளர்கள் சொத்து வரியை சேர்த்து உயர்த்துவதும், மேலும் வணிக நிறுவனங்கள் சொத்து வரி உயர்வை பொருட்களின் மீது வைத்து விலையை உயர்த்தும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, […]
மத்திய அரசின் நிபந்தனையால் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது என்று அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு சொத்து வரியை உயர்த்தியது. இதனால் பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அமைச்சர் கே என் நேரு இதுதொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் மத்திய அரசு விதித்த நிபந்தனை காரணமாகவே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. வரியை உயர்த்த விட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி கிடைக்காது என்று மத்திய […]
சொத்து வரி உயர்த்தியது தொடர்பாக தமிழக அரசுக்கு அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகம் முழுவதும் சொத்து வரியை நூறு சதவீதம் வரை திமுக அரசு உயர்த்தியுள்ளது கண்டனத்திற்குரியது. இதுதான் நீங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு தரப்போவதாக சொன்ன விடியலா? கொரோனா பாதிப்புக்கு பிறகு முழுமையான இயல்புநிலை இப்போதுதான் ஏற்பட தொடங்கியிருக்கும் நிலையில், இப்படி ஒவ்வொன்றாக மக்கள் தலையில் இடி விழுவது […]
சென்னை குடிநீர் வாரியமானது செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் இருப்பதாவது குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை (இன்று) மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு வரி செலுத்த வசதியாக இன்று 200 வார்டில் உள்ள பணிமனை வசூல் மையங்கள், இரவு 8:00 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நுார்வோர் வரி மற்றும் கட்டணத்தை செலுத்தவேண்டி கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் […]
சென்னை மாநகராட்சிக்கு ஒவ்வொரு குறிப்பிட்ட அரையாண்டில் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகையாக சொத்து வரியிலிருந்து ஐந்து சதவீதம் அதிகபட்சமாக 5 ஆயிரம் வரை சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை இரண்டாம் ஆண்டு தொடங்கிய 15 ஆம் தேதிக்குள் செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு அவர்கள் செலுத்திய சொத்து வரியில் 5% ஊக்கத்தொகையாக ரூ.5.94 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு இரண்டாம் ஆண்டிற்குரிய சொத்து வரியை 5 சதவீதம் […]
2021 -2022ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் செலுத்துபவர்கள் சலுகை பெறலாம் என சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 15ல் செலுத்துபவர்கள் சொத்து வரியில் ஊக்கத்தொகையாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக 5,000 வரை பயன் பெற்று பயனடையலாம் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது