புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி சற்று முன் காலமானார். 60 வயதான இவர் அழகர்சாமியின் குதிரை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி மருத்துவ உதவி கோரிய நிலையில் திரைப் பிரபலங்கள் பலரும் பொருளாதார உதவி செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக செய்தி வந்துள்ளது. தமிழ் திரையுலகில் உள்ள ரசிகர்களையும், நடிகர்களையும் தவசியின் […]
Tag: சோகம்
புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி (60) சிகிச்சை பலனின்றி காலமானார். உணவு குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் தவசி. ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவால் காலமானார் நடிகர் தவசி. தவசி சிகிச்சைக்காக நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நிதி உதவி அளித்தனர். வருத்தப்படாத வாலிபர் சங்கம், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் தவசி. தவசின் மரணம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியடைய […]
திண்டுக்கல் மாவட்டம் தாண்டியகுடிமலை குப்பம்மாள் பட்டி அருகே வண பள்ளத்தில் கவிழ்ந்ததில் 35 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த காப்பி தோட்ட தொழிலாளர்கள் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், முகநூலில் பழகிய நண்பர் தன்னுடன் தொலைபேசியில் பேசவில்லை எனக் கூறி, பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பொள்ளாச்சி தொழில்பேட்டை பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர், கணவன் உயிரிழந்த நிலையில், தமது 13வயது மகனுடன் வசித்து வந்தார். புவனேஸ்வரிக்கு, முகநூல் வழியாக பொள்ளாச்சியைச் சேர்ந்த காஜாமைதீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், காஜாமைதீன் புவனேஸ்வரியுடன் […]
சிவகாசியில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 40 பவுன் நகை மற்றும் 1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், திருவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ளது அண்ணாமலையார் காலனி. இங்கு சிவகாசியில் அச்சகம் நடத்தும் நந்தகுமார், இவரது மனைவி சித்ராதேவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இன்று காலை நந்தகுமாரின் வீட்டின் முன் கதவை உடைத்துக் கொண்டு, மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்தது. அங்கு தூங்கிக் கொண்டிருந்த நந்தகுமார், அவரது […]
அரசியல் பிரமுகர் குடும்பத்தினரிடையே ஏற்ப்பட்ட முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் குடும்பத்தினரிடையே முன்பகை காரணமாக பழிக்குபழியாக இதுவரையில் 15 க்கும் மேற்பட்ட கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டாலும் அடுத்தடுத்து நபர்கள் கொலையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஒருவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததற்கு பழிவாங்கும் நோக்கிலும், தங்களின் எதிரிகளுக்கு அச்சம் […]
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அருள் கேட்க வந்த பெண் உடல் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தலூர் கிராமத்தில் இருக்கும் பத்ரகாளியம்மன் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முருகம்மாள் என்பவர் அருள்வாக்கு கூறி வந்தார். இந்நிலையில் பேய் பிடித்திருப்பதாக கூறி சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த தங்கம் என்ற பெண்ணை அருள்வாக்கு கேட்பதற்காக கணவரின் உதவியால் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவரை 15 நாட்களுக்கு கோவிலில் தங்கி இருக்க […]
பீகாரில் பாகல்பூரின் நாவூகாச்சியாவில் பகுதியில் வியாழக்கிழமை காலை படகு கவிழ்ந்ததில் பலர் காணாமல் போயுள்ளனர். மோசமான நிலையில் இருந்த படகில் 100 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாகவும் சொல்லப்படுகின்றது. படகு கங்கா நதியைக் கடக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. படகு விபத்தில் ஒருவர் இறந்துவிட்டதாகவும், மீதம் உள்ள மக்கள் தங்களைக் காப்பாற்ற மீட்புப்பணிகள் நடந்து வருகின்றது. மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் ஆற்றின் கரையோரம் ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. […]
திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரும், சிறந்த களப்பணியாளருமான விராலி மலை கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த சகோதரர் எம். பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். அவரின் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலை தெரிவித்துதந்துள்ளேன் என ட்வீட் செய்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருகின்றது. இன்னும் ஆறு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட இருக்கிறது. இந்த நிலையில்தான் அனைத்து அரசியல் […]
கேரள மாநிலத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இம்மாதம் 15ம் தேதி பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமாக 28ஆம் தேதி தொடங்குவதாகவும், பத்தினம்திட்டா, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் கனமழை பெய்யத் தொடங்கும் என கூறியுள்ளது. கடந்த ஆண்டாக இருந்தாலும், சரி அதற்கு முந்தைய ஆண்டாக இருந்தாலும் சரி கேரளா கனமழையால் படாத பாடுபட்டது. ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கின. கடந்த சில மாதங்களுக்கு முன்பு […]
பீகார் மாநில துணை முதல்வர் சுனில் குமார் மோடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வருவது கொரோனா வைரஸ் சாமானிய மக்கள் தொடங்கி அதிபர் வரை யாரையும் விட்டுவைக்காமல் பாரபட்சமாக தாக்கி வருகிறது. கோடிக்கணக்கான மக்களை தாக்கிய கொரோனாவைரஸ், லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கியுள்ளது. இந்தியாவிலும் கூட அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தான் பீகார் தேர்தல் பிரச்சாரம் […]
சுஜாதா பயோடெக் நிறுவனரும், மேலாண் இயக்குநரும், நிவாரன் 90 உரிமையாளருமான சி.கே. ராஜ்குமார் உடல் நலக்குறைவு காரணமாக (அக்.7) சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 68. உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்த சுஜாதா பயோடெக் நிறுவனர் சி.கே.ராஜ்குமாருக்கு மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அவரின் இறுதிச்சடங்கு வியாழக்கிழமை (அக். 8) காலை 9 மணிக்கு நடைபெற்றது. நிவாரன் 90, வெல்வெட் ஷாம்பூ ஆகியவற்றைத் தயாரிக்கும் சுஜாதா பயோடெக் நிறுவனத்தை நிறுவிய சி.கே.ராஜ்குமார், பிரபல […]
மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பேரணாம் பட்டை அருகே ராஜக்கள் சங்கராபுரம் கொல்லைமேடு என்ற பகுதியில் வசித்து வருபவர் பூபாலன். லாரி டிரைவரான இவருக்கு வளர்மதி என்ற மகள் உள்ளார். அவர் அழிஞ்சிக்குப்பம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். வளர்மதிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று வீட்டில் வளர்மதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த […]
திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகாசி அடுத்துள்ள விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் அச்சக தொழிலாளி ரெங்கராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி. இருவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது. இந் நிலையில் புதுப்பெண் ராஜலட்சுமி அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சிவகாசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் மேல் […]
செல்போன் பேசியபடியே நடந்து சென்ற பெண்மணி கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி குட்டக் கிந்தூர் கிராமத்தில் வசிப்பவர் திருமூர்த்தி. இவர் மனைவி லக்சனா. இவர் வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் செல்போனில் பேசியபடியே சென்றார். அப்போது அங்கிருந்த கிணற்றில் கால் தவறி விழுந்தார். அதைக்கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் காப்பாற்ற முயற்சி செய்தனர். அதற்குள் அவர் நீரில் மூழ்கி […]
தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது தொண்டர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. சமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு லேசான கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனாலும் அவர் நலமுடன் இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி இருக்கிறது. மியாட் மருத்துவமனையில் பிரேமலதா விஜயகாந் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தேமுதிக பொருளாளராக இருக்கக்கூடிய பிரேமலதாவுக்கு கடந்த சில தினங்களாக இருந்த லேசான அறிகுறிகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து பிசிஆர் டெஸ்ட் எடுத்துள்ளார். அப்போது […]
தீ விபத்தில் விசைத்தறி தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சி பகுதியில் வசிப்பவர் கந்தசாமி. 65 வயதான இவர் விசைத்தறி தொழிலாளி. கடந்த 23 ஆம் தேதி டீ வைப்பதற்காக சிலிண்டர் அடுப்பை பற்ற வைக்க முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. அதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் […]
மதுரை மாவட்டம் மேலவாசல் பகுதில் வசித்துவருபவர் தமிழ்செல்வி. இரண்டு குழந்தையுடன் கணவருடன் வாழந்து வந்த இவரின் வீட்டில் நேற்று தகராறு நடந்ததாக தெரிகின்றது. கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து போன தாய் தமிழ்செல்வி தனது 2 குழந்தைகளை தீ வைத்து எரித்துக் கொன்றார்.இந்த கொடூர சம்பவத்தில் குழந்தைகள் வாரணி ஜி, வர்ணிகா ஜி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தற்கொலைக்கு முயன்ற தாய் தமிழ்செல்வி மிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. கணவருடன் ஏற்பட்ட தகராறில் […]
இன்று அதிகாலையில் அறிவிப்பு பலகையின் மீது மோதிய விபத்தில் புதுமண தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வீரமலை பகுதியில் வசிப்பவர் சந்தோஷ். 26 வயதாகும் அவர் அலங்காநல்லூரில் பேக்கரி கடை வைத்து நடத்திவருகிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் ஆனது. மனைவியின் பெயர் மகாலட்சுமி(வயது 21) . இருவரும் அலங்காநல்லூரில் வசித்து வந்தானர். போச்சம்பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கணவன் மனைவி இருவரும் நேற்று இரவு காரில் புறப்பட்டனர் […]
சொத்துக்காக தாயை மகனே கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோட்டையை அடுத்த தோக்கவாடி ஊராட்சியில் அமைந்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் பங்கஜம். 60 வயதான இவர் திருமண தரகராக இருந்து வந்தார். 25 வருட களாக பிரிந்து வாழ்ந்து வரும் பங்கஜத்திற்கு பிரகாஷ், சக்தி என்ற 2 மகன்கள் உள்ளனர் பிரகாஷுக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும் 5,3 மற்றும் ஒன்னரை என்ற வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் […]
மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டதால் அவசர சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தின் மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர் அனுராதா. 45 வயதான அவர் டீ கடை வைத்து தொழில் நடத்தி வந்தார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவரை உறவினர்கள் கடந்த 16ஆம் தேதி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமாகவே இருந்தது. அதனால் 21ஆம் தேதி […]
சாதம் வடித்த தண்ணீரில் விழுந்த ஒன்றை மாத வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் கனகம் பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மனைவி யுவராணி இத்தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இதில் ஒன்றரை வயது ஆன இளையமகன் மணீஸ்வரன் கடந்த 12ஆம் தேதி வீட்டில் விளையாடியபோது சாதம் வடித்த தண்ணீரில் தவறி விழுந்தான். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சென்னை அரசு […]
சேலம் மாவட்ட ம் ஆத்தூரில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த தர்மபுரி போலீஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரியில் அண்ணா நகரை சேர்ந்த அருணின் மகன் வெங்கடேஷ். 28 வயதாகும் அவர் கடந்த 2006ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்து பட்டாலியன் போலீஸ்காரராக பணிபுரிந்தார். கடந்த சில வாரங்களாக தலைவாசல் பகுதியில் பணியில் ஈடுபட்டார்.அங்கிருந்த அரசு பள்ளிகளில் 7 போலீஸ்காரர்களுடன் தங்கியிருந்த பொழுது நேற்று இரவு வெங்கடேசன் தான் தங்கியிருந்த அறையிலேயே தூக்கிட்டு பிணமாக […]
காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் பெயிண்டர் பலியான விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாமல் முசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். 40 வயதான அவர் பெயிண்டர் வேலை செய்கின்றார். அவர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது பாலுசெட்டிச்சத்திரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு கீழம்பி சுகாதார […]
மகாராஷ்டிராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு 10 ஆக உயர்ந்தது. மராட்டிய மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டி பகுதியில் அமைந்துள்ளது படேல் காம்பவுண்ட். இதில் அமைத்த 3 மாடி கட்டிடம் அதிகாலை 3:30 மணியளவில் இடித்து விபத்துக்குள்ளானது. மக்கள் அயர்த்து தூங்கிக் கொண்டிருந்ததால் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.இந்த விபத்து குறித்து அறிந்தவுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினரும்,போலீசாரும் விரைத்து சென்று மீட்பு பணிகளை வேகப்படுத்தினர் . அதில் 20 பேர் காயங்களுடனும், 8 […]
மத்தியப் பிரதேசத்தில் இரண்டு மகன்களை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மத்தியப் பிரதேம் மாநிலத்தைச் சேர்ந்த பூரா பூசாம்(27) என்பவரின் மனைவி அவரது தாயாரின் வீட்டில் மூன்று குழந்தைகளுடன் சில நாட்களாக தங்கி இருந்துள்ளார்.பின்னர் பூசாம் மனைவியை அழைத்தார். ஆனால் மனைவி வர மறுத்ததால் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார். அதன்பின் அருகே இருந்த ஒரு காட்டுப் பகுதியில் தனது குழந்தைகளில் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு […]
கள்ளக்குறிச்சி அருகே குழந்தை இட்லி சாப்பிட மறுத்ததால் ஆத்திரத்தில் பெரியம்மாவே குழந்தையை அடித்து கொலை செய்தது கேட்போரை பதைபதைக்க வைக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள மேல்வெளி கிராமத்தை சேர்ந்தவர் ரோசாரியோ – ஜெயராணி தம்பதி. இவர்களுக்கு ரென்சி மேரி என்ற 5 வயது குழந்தை இருந்தது. குழந்தையின் தாய் ஜெயராணி இறந்து விட குழந்தை ரென்சி மேரியை ஜெயராணியின் தாய் பச்சையம்மாள் வளர்த்து வந்தாள். அதே வீட்டில் தான் இறந்த ஜெயராமின் அக்கா ஆரோக்கிய […]
விருதுநகரில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கீழ ஒட்டம்பட்டி தெற்கு தெருவில் வசித்து வருபவர் அய்யனார். 63 வயதான இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சிவகாசி-சாத்தூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானார். எதிரே வந்த தனியார் பஸ் ஒன்று, அய்யனார் மீது இந்த விபத்து ஏற்பட்டது. இதில் அய்யனருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட அருகில் […]
மகன் இறந்தது கூட தெரியாமல் சடலத்துடன் 3 நாட்களாக ஒரே வீட்டில் தாய் வசித்து வந்த சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள திருநின்றவூர் சி.டி.எச் சாலையில் வசித்து வரும் 35 வயதாகிய சரஸ்வதி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் காணத்தினால் சரஸ்வதியின் கணவர் ஜீவானந்தம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னராகவே தனது மனைவியை பிரிந்து சென்று பெங்களூருவில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது சரஸ்வதி தனது மகனுடன் தனியாக வசித்து வந்ததாகவும் தெரியவந்தது. சரஸ்வதியின் மகன் சாமுவேல், சென்னையிலுள்ள திருநின்றவூர் […]
இந்திய நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 10-ஆம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84. நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை இருந்தார் பிரணாப் முகர்ஜி. டெல்லி ராணுவ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் பிரணாப் முகர்ஜி. மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியது. மூளை அறுவை […]
அமெரிக்காவிலிருந்து மனைவி, குழந்தைகளை பார்க்க வீடு திரும்பிய கணவரை கொரோனா காரணமாக வீட்டிற்குள் விடாமல் தடுத்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. தமிழகத்தின் மதுரையை சேர்ந்த பாஸ்கரன் என்பவருக்கு கேரள மாநிலம் வெள்ளிமலை வாழ்வினை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு தற்போது குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் பாஸ்கரன் குடும்பத்தினரை கேரளாவில் விட்டுவிட்டு, அமெரிக்காவிற்கு வேலை பார்க்க சென்றுள்ளார். அதன் பின்னர் சிறிது நாட்கள் கழித்து, மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றுள்ளார். […]
கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இது மிகப் பெரிய அதிர்ச்சிகர சம்பவமாக பார்க்கப்படுகின்றது. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 32 குடியிருப்புகள் இருந்தன. மலையடிவாரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பாறைகள் உருண்டு வந்து வீடுகளை எல்லாம் முழுவதுமாக மூழ்க செய்தன. கடந்த 4 நாட்களாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் […]
கேரளா விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்து நடந்த இடத்தை மத்திய வான்வழிபோக்குவரத்து அமைச்சர் ஹர்திப்சிங் புரி பார்வையிட்டார். அதற்குப் பிறகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்பது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 12 வயது குறைந்தவர்களாக இருந்தால் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் […]
கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இது மிகப் பெரிய அதிர்ச்சிகர சம்பவமாக பார்க்கப்படுகின்றது. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 32 குடியிருப்புகள் இருந்தன. மலையடிவாரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பாறைகள் உருண்டு வந்து வீடுகளை எல்லாம் முழுவதுமாக மூழ்க செய்தன. தற்போது தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணிகளை […]
கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் 22பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இது மிகப் பெரிய அதிர்ச்சிகர சம்பவமாக பார்க்கப்படுகின்றது. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 32 குடியிருப்புகள் இருந்தன. மலையடிவாரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பாறைகள் உருண்டு வந்து வீடுகளை எல்லாம் முழுவதுமாக மூழ்க செய்தன. தற்போது தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணிகளை […]
கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தின் கிழக்கு பகுதிகளான கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் மலப்புரம் சாலியர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஆற்றின் கரையோர மக்கள் மீட்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், நரியமங்கல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, காட்டு யானை ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வனத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் […]
கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 80 பேர் சிக்கி காணாமல் போனதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 4 நாட்களாக கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பல்வேறு சின்ன அணையில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக கேரளாவில் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கொடுமுடி பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் […]
கொரோனா ஊரடங்கினால் நாடு முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மது பிரியர்கள் மிகுந்த வேதனையில் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலை உண்டாக்கியது. போதையை கட்டுப்படுத்த முடியாத கொடூர போதை வாசிகள் கிடைப்பதையெல்லாம் போதைப் பொருளாகவே பார்த்தனர். பலரும் உயிரை கொள்ளக்கூடிய பலவற்றை போதைக்கு பயன்படுத்தி மரணமடைந்த நிகழ்வும் அரங்கேறி வருகின்றது. அந்த வகையில் தற்போது அரியானாவில் ஒரு மிகப் பெரிய கொடூரம் நடந்துள்ளது. போதைக்கு அடிமையான நபர் போதை கிடைக்காத விரக்தியில் கத்தி ஒன்றை விழுங்கியுள்ளார். […]
வாய்த்தகராறு காரணமாக மருமகனுக்காக பேசிய விவசாயி ஒருவரை கீழே தள்ளிவிட்டு கொன்ற சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பூந்தோட்டம், ஆற்றங்கரைத் தெருவில் வசித்து வந்தவர் ராஜகோபால் 60வயதான இவர் ஒரு விவசாயி. இவருடைய மருமகன் ராஜீவ்காந்திக்கும், இவரது தந்தை பொன்னுசாமிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதால் கோபமாக பேசிக்கொண்டு இருந்தனர். இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த குமார், பிரவீன், சுந்தரேசன், குமரேசன், பன்னீர்செல்வம் ஆகிய 5 பேரும் சேர்ந்து […]
பென்னிக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இருந்த பேரவையில் ரத்தக்கறை இருப்பது தற்போது வழக்கில் ஒரு சாட்சியாக பார்க்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் காவல்துறையில் சித்ரவதை செய்து மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் வெளியாகியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் பாரதிதாசன் பல்வேறு விஷயங்களை தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த வழக்கில் அங்கு வேலை பார்த்த பெண் காவலர் […]
சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை, மகன் மரணம் குறித்து மாஜிஸ்திரேட்டு நீதி விசாரணை நடத்தி வருகின்றார். சாத்தான்குளத்த்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் பொதுமுடக்க காலத்தில் அதிக நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்த நிலையில் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். இருவரின் உயிரிழப்புக்கு காரணம் காவலர்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து தற்போது இருவரின் உடல் பாளையங்கோட்டை […]
புதுக்கோட்டையில் சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை கிராமத்தில் உள்ள 13 வயது சிறுமி கடந்த மாதம் 18 ஆம் தேதி அந்த கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அப்போது அந்த சிறுமி அங்குள்ள தைலமரக்காட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தார். உடனடியாக அவர் தந்தை, உறவினர்கள் உள்ளிட்டோர் சிறுமியை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு […]
புதுக்கோட்டை மாணவி கொல்லப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் தந்தை சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை கிராமத்தில் உள்ள 13 வயது சிறுமி கடந்த மாதம் 18 ஆம் தேதி அந்த கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அப்போது அந்த சிறுமி அங்குள்ள தைலமரக்காட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தார். உடனடியாக அவர் தந்தை உள்ளிட்டோர் சிறுமியை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை […]
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என் லட்சுமணன் மரணமடைந்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் பொறுப்பு வகித்த கே.என் லட்சுமணன் (92) உயிரிழந்திருக்கிறார். தமிழக பாஜகவுக்கு இரண்டு முறை தலைவராகவும் அந்த பொறுப்பில் இருந்த கே. என் லட்சுமணன் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்வாகி இருந்தார். சேலத்தில் உள்ள செவ்வாய் பேட்டையில் இல்லத்தில் அவரின் உயிர் […]
மும்பையில் தூங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி விபத்துக்குள்ளானதில் 17பேர் உயிரிழந்துள்ளார் . மும்பையில் அவுரங்காபாத் அருகே தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர் மீது ரயில் ஏறியதில் 17 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியையும், சோகத்திலும் ஏற்படுத்தியுள்ளது.கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பான உயிரிழப்புகள் ஒரு புறம் சென்று கொண்டிருக்க இதுபோன்ற ஒரு துரதிஷ்டவசமான சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறும் வருகின்றது. முன்னதாக நேற்றைய தினம் ஆந்திராவில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டு […]
மதுவை அருந்தி விட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் குற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கின் 44 ஆவது நாள் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்தியஅரசு கொடுத்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக […]
தந்தை மது அருந்தி வீட்டுக்கு வந்ததால் மகள் தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கின் 44 ஆவது நாள் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்தியஅரசு கொடுத்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுக […]
பிரபல பாலிவுட் நடிகை ரிஷி கபூர் காலமானதாக அமிதாப் பச்சன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் பாபி, லவ் ஆஜ் கல் என பல படங்களில் நடித்து ரசிகர்களை மத்தியில் பிரபலம் ஆன நடிகர் ரிஷி கபூர். இவரின் தம்பி பிரபல நடிகர் ரந்தீர் கபூர், இவரின் மகன் ரன்பீர் கபூர் தற்போது பாலிவுட் உலகில் முன்னணி ஹீரோவாக இருந்து ரசிகர்களிடம் கொடிகட்டி பறக்கிறார். 67 வயதான ரிஷி கபூரின் […]
கொரோனாவின் கோரத்தாண்டவம் பச்சிளம் குழந்தையும் விட்டு வைக்கவில்லை, பிறந்து 42 நாட்கள் ஆன குழந்தை இந்த தொற்றினால் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் மேலும் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உருவெடுத்த கோரோனோ வைரஸ் இப்பொழுது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவி நிலைகுலைய செய்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 35 ஆயிரத்து 581 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஸ்பெயினில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 546 பேர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் […]