காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரானா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஏற்கனவே பிரியங்கா காந்திக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டு நிலையில் சோனியாவுக்கும் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
Tag: சோனியாகாந்தி
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி டெல்லியில் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி லேசான காய்ச்சல் மற்றும் சில அறிகுறிகள் இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளது, சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருப்பார் என கட்சி செய்தி தொடர்பாளர் […]
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிடம் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு நடைபெற்றுவருகிறது. மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளும் நாளையுடன் நிறைவு அடையும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் முடித்துக் கொள்ளப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரு அவைகளும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சியின் மூத்த முலாயம் சிங் […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசின் அணுகுமுறை உணர்வற்றதாக இருப்பதாக சோனியாகாந்தி கூறியுள்ளார். டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். பால்கோட் தாக்குதல் […]
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்துள்ளார். மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்த்தியுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெயின் விலை குறைவாக உள்ள நிலையில் பெட்ரோல்,டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விமர்சனம் செய்துள்ளார். அதில், மத்திய அரசு லாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு இப்படி விலை உயர்வை ஏற்றிக்கொண்டே போகிறது. ஐக்கிய முற்போக்கு […]
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக தொடர விரும்பவில்லை என சோனியா காந்தி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கட்சியின் இடைக்கால தலைவராக நீடிக்கும் சோனியா காந்தி தொடர்ந்து அந்த பொறுப்பை தானே ஏற்று வழி நடத்த முன் வருவாரா ? அல்லது ஏற்கனவே பலமுறை சொல்லி இருந்தது போலவே மீண்டும் புதிதாக முழுநேர தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்துவாரா ? என்பது மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்டது. காங்கிரஸ் தலைவராக […]