இந்திய பிரதமரான நரேந்திர மோடியின் தாயார் மரணத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயான ஹீராபென்னிற்கு 99 வயதான நிலையில், இன்று அதிகாலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார். தாயாரின் இறப்பு செய்தியை அறிந்தவுடன் பிரதமர் மோடி உடனடியாக குஜராத் மாநிலத்திற்கு சென்றார். அங்கு தன் தாயின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதன் பிறகு, இறுதி சடங்குகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து காந்திநகரில் இருக்கும் மயானத்தில் அவரின் உடலை […]
Tag: ஜனாதிபதி
ஜனவரி 1 முதல் பிரான்ஸ் நாட்டு மருந்தகங்களில் 18 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கப்படுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். இது கருத்தடையில் ஒரு சிறிய புரட்சி என தெரிவித்துள்ளார். ஏனென்றால் இளம்பெண்கள் எதிர்பாராமல் கர்ப்பமாவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிரெஞ்சு துறை அதிகாரிகள் கூறியதாவது, கடந்த சில வருடங்களாக பாலுறவு மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து வருகிறது. அதனால் தேவையற்ற கர்ப்பங்களை தவிர்ப்பதற்காகவும் […]
ஜனாதிபதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக திரவபதி முர்மு கடந்த ஜூலை மாதம் 25-ஆம் தேதி பதவியேற்றார். இவருக்கு தற்போது 64 வயது ஆகிறது. இவர் கடந்த மாதம் 16-ஆம் தேதி தனது இடது கண்ணில் கண் புரை அறுவகை சிகிச்சை செய்து கொண்டார். அதேபோல் தற்போது தனது வலது கண்ணிலும் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிடப்படுள்ளது. அதில் இந்திய ஜனாதிபதி இன்று புதுடெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தனது […]
ராணி எலிசபத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக உலக தலைவர்கள் இங்கிலாந்துக்கு படையெடுத்து இருக்கின்றனர். லண்டனில் பெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல் ராஜ மரியாதையுடன் கிரீடத்துடன் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் கூட்டமாக திரண்டு வருகின்றார்கள். இரவையும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் ராணியின் மீது இருக்கின்ற அன்பை வழிகாட்டுவதற்காக அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் காத்திருக்கின்றார்கள். கடந்த வருடம் மறைந்த ராணியின் கணவர் […]
அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியரான அருண் சுப்பிரமணியன் ஜனாதிபதி ஜோபேடன் பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பான நீதித்துறை நியமனங்கள் வெள்ளை மாளிகையால் செனட் சபைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும் இந்த நியமனம் செனட் சபையால் உறுதி செய்யப்பட்டால் நியூயார்க் தெற்கு மாவட்ட கோர்ட்டில் பணியாற்றும் முதல் தெற்காசிய நீதிபதி அருள் சுப்பிரமணியன் எனும் சிறப்பை இவர் பெறுகின்றார். இந்த நிலையில் 2006 முதல் 2007 ஆம் வருடம் வரை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் […]
துருக்கி தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தின் கீழ் மேலும் 3 கப்பல்கள் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து வெளியேறியதாக துருக்கி தேசிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி 185 நாட்கள் முடிவுற்றுள்ளது. பொருளாதார ரீதியாக கடும் பின்னடைவை இரு நாடுகளும் எதிர் கொண்டு வருகின்றது. இந்த சூழலில் தானிய ஏற்றுமதியை மட்டுமே நம்பி இருந்த உக்ரைனுக்கு பேரு உதவியாக துருக்கியும் ஐக்கிய நாடுகள் களமிறங்கிய நிலையில் இதுவரை ஒரு மில்லியன் டன் தானியங்கள் உக்ரைன் […]
செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை உலகச் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. அதில் பெரும்பாலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புகைப்படம் தான் இடம்பெற்றுள்ளது. அதனால் பாஜகவினர் பிரதமர் மோடி புகைப்படத்தை ஸ்டிக்கர் விளம்பர பலகையில் ஒட்டப்பட்டது. இந்நிலையில் செஸ் விளம்பரத்தில் மோடியின் புகைப்படம் இடம்பெறாதது தொடர்பாக சிவகங்கை சேர்ந்த ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் […]
நாட்டின் 14வது ஜனாதிபதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையவுள்ளது. நாட்டின் 14 வது ஜனாதிபதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவரின் பதவி காலம் இன்றுடன் முடிவடைய உள்ளது. இதற்கிடையே புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. பாஜக சார்பில் திரவுபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினர். வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த 21ஆம் தேதி […]
டெல்லி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இந்த விழாவில் ராம்நாத் கோவின் பேசியதாவது: ” 5 ஆண்டுகளுக்கு முன்பு பார்லிமென்ட் மைய மண்டபத்தில் ஜனாதிபதியாக பதவியேற்றேன். அனைத்து எம்.பி.,க்களுக்கும் எனது இதயத்தில் சிறப்பான இடம் உண்டு. எனது பணிக்காலம் முழுவதும் நினைவில் இருக்கும். ஜனாதிபதியாக பணியாற்ற வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எம்.பி.,க்களுடன் பணியாற்றியது மறக்க முடியாதது. […]
நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முர்மு . பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பெண்குடியரசுத் தலைவராக பதவியேற்க உள்ளார். வரும் 25ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ள வண்ணமிகு விழாவில் அவர் பதவியேற்கிறார்.
ஒரு நாட்டின் மக்கள் பொதுவாழ்வில் பதவிகளை நிர்வகிப்பதற்காக ஒரு தனிநபரை தேர்ந்தெடுப்பது தேர்தல் ஆகும். இந்நிலையில் தேர்தல் மூலம் தலைவர்கள் தேர்ந்தெடுக்கும் போது பல மோசடி வேலைகளில் நடைபெறுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்நிலையில் தேர்தலில் மோசடி வேலைகள் செய்ததற்காகவே ஒருவருக்கு கின்னஸ் சாதனை கிடைத்துள்ளது. கடந்த 1927-ம் ஆண்டு லைபீரியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பால்கர் என்பவரை தோற்கடித்து 3-வது முறை ஜனாதிபதியாக சார்லஸ் டி.பி கிங் என்பவர் வெற்றி பெற்றார். அந்த நாட்டின் […]
இஸ்ரேல் நாட்டின் அதிபர் ஐசக் ஹெர்சாக், இன்று தன் அதிகாரபூர்வ இல்லத்தில் வருடாந்திர சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இராணுவ அதிகாரிகளுக்கு வருடாந்திர மேற்கோள்களை வழங்கியுள்ளார். இஸ்ரேல் நாட்டின் ஜனாதிபதி இல்லத்தில் நடக்கும் வருடாந்த நிகழ்ச்சியில், அந்நாட்டு, தலைவர்கள், படை வீரர்களுக்கு சிறப்பு பாராட்டுகள் வழங்கப்பட்டது. சுதந்திர தின நிகழ்ச்சி காலை சுமார் 9:30 மணியளவில் ஆரம்பமானது. இதில், IDF தலைமை அதிகாரியான அவிவ் கோஹாவி, தற்போதுள்ள மற்றும் முன்னாள் மூத்த இராணுவ பிரமுகர்கள் போன்றோர் பங்கேற்றனர். […]
நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அனுப்பி வைக்க கவர்னர் ஆர்.என். ரவி முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கவில்லை என கூறி, கவர்னர் ஆர்.என். ரவியின் தேநீர் விருந்தை தமிழக அரசு, தி.மு.க .கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் புறக்கத்துள்ளன. இந்த நிலையில் நேற்று நீட் தேர்வு மசோதாவை, […]
ஜெர்மன் ஜனாதிபதி உக்ரைனுக்கு வருகை தரவேண்டும் என்று கீவ் மேயரின் சகோதரர் Vladmir Klitschko அழைப்பு விடுத்துள்ளார். போலந்து ஜனாதிபதியுடன் ஜெர்மன் ஜனாதிபதி Frank-Walter Steinmeier உக்ரைனின் கீவ் நகருக்கு பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால் அவர் கடந்த காலங்களில் ரஷ்யாவுடன் தொடர்பிலிருந்த காரணத்தால் Frank-Walter Steinmeier வருகையை உக்ரைனியர்கள் விரும்பவில்லை. இதன் காரணமாக ஜெர்மன்ஜனாதிபதி Frank-Walter Steinmeier உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் ஜெர்மன் ஜனாதிபதி Frank-Walter Steinmeier-ஐ உக்ரைனுக்கு வரவேற்பதாக கீவ் நகர […]
இந்திய ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் ஐரோப்பிய நாட்டின் துர்க்மேனிஸ்தான் மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இதையடுத்து துர்க்மேனிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்ட அவர் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் வந்தடைந்தார். அப்போது அவருக்கு நெதர்லாந்தின் மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா போன்றோர் அரச முறைப்படி வரவேற்பு அளித்தனர். சென்ற 1988ஆம் வருடம் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் பயணம் மேற்கொண்ட பின் 34 வருடங்களுக்கு பின் இப்போதுதான் இந்திய ஜனாதிபதி மீண்டும் நெதர்லாந்து சென்று உள்ளார்.
கஜகஸ்தான் ஜனாதிபதி மற்றும் சில உயர்மட்ட அதிகாரிகளை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக ஒரு உளவாளியை கஜகஸ்தான் பாதுகாப்பு சேவைகள் அமைப்பு கைது செய்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “ஒரு வெளிநாட்டு உளவாளியான அந்த நபர் கஜகஸ்தானில் குடிமகன் ஆவார். குறிப்பிட்ட அந்த நபர் நூர் சுல்தானின் உள்ள உளவு அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ளார்.!” என கூறியுள்ளது. அந்த உளவாளியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் போதைபொருள், வெளிநாட்டு துப்பாக்கி, பெரிய அளவிலான பணம் […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நான்காம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 50 வயதுக்கு அதிகமானோர் முன்னெச்சரிக்கைக்காக பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நான்கு வாரங்களில் இரண்டாவது தவணை பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது. அந்த வகையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நான்காம் தவணை( இரண்டாவது பூஸ்டர் தவணை) தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது.
ரஷ்ய நாட்டின் ஜனாதிபதி புடினின் ஆலோசகர் அன்டோலி சுபைஸ் உக்ரைன் மீதான போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து தன் பதவியிலிருந்து விலகி, நாட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார். ரஷ்ய ஜனாதிபதியின் ஆலோசகர் கடந்த 1990 காலகட்டங்களில் ரஷ்ய நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களை கட்டமைத்த நபர்களில் முக்கியமானவர். அதிபர் விளாடிமிர் புடினின் வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தவர். மேலும், சமீபத்தில் மரணமடைந்த, பொருளாதார நிபுணர் யெகோர் கைடார் குறித்து தன் முகநூல் பக்கத்தில் அவர், தெரிவித்திருந்ததாவது, என்னை விட ரஷ்யா சந்திக்கும் ஆபத்துக்களை சரியாக […]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் முதல் தடவையாக கருப்பின பெண் நீதிபதியாக பதவியேற்கவிருக்கிறார். அமெரிக்காவிலுள்ள உச்சநீதிமன்றத்தில் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் என்ற கருப்பின பெண் முதல் தடவையாக நீதிபதியாக பதவியேற்க இருக்கிறார். அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினர்களின் வாக்கெடுப்பிற்கு பிறகு அவர் நீதிபதியாக நியமிக்கப்படுவார். இதற்கான வாக்கெடுப்பு இன்று தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஜோ பைடன் தேர்தல் வாக்குறுதியில், கறுப்பின ஆப்பிரிக்க அமெரிக்கரை நீதிபதியாக தேர்ந்தெடுக்கலாம் என்று தெரிவித்ததற்கு […]
சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோயம்புத்தூர் வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “இந்தியா கொரோனா இல்லாத நாடாக மாறியுள்ளது இதற்கு 180 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டது தான் காரணம். இதில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. மக்கள் தொடர்ந்து முக கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும். தெலுங்கானாவில் ஆளுநரின் உரை இல்லாமல் சட்டமன்றம் தொடங்கியுள்ளது. அதையெல்லாம் நான் மக்களுக்காக பெரிதுபடுத்தவில்லை. […]
வியட்நாம் போரிலிருந்து அமெரிக்கா பாடம் கற்று கொண்டிருக்கும் மற்றொரு வலையில் விழாது என்று நான் தவறாக நம்பிவிட்டேன் என பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தற்போது நடந்து வருகிறது. இப்போது இரண்டாவது நாளாக தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் குறித்து பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கருத்து தெரிவித்துள்ளார். அதில் “அமெரிக்கா கடந்த காலங்களில் இருந்து எந்த பாடமும் கற்றுக் கொள்ளவில்லை. மேலும் இன்னொரு […]
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜனாதிபதியும், வெளியுறவு மந்திரியுமான இக்னேஷியா கேஸ்சிஸ் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் நடக்கும் முனீச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கவிருந்தார். இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும், அவருக்கு கொரோனாவிற்கான அறிகுறிகள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அவர் தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாகவும், ஞாயிற்று கிழமை வரை வீட்டில் இருந்தவாறு பணிகளை மேற்கொள்வார் என்றும் அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதியான அலெக்சாண்டர் லுகாஷென்கோ, தங்கள் நாடு அல்லது ரஷ்யா மீது போர் தொடுத்தால் தான் உக்ரைன் மீது போர் தொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதி நேற்று முன்தினம் தெரிவித்ததாவது, எங்களுக்கு போரில் விருப்பம் இல்லை. எங்கள் நாடு அல்லது எங்களது நட்பு நாடான ரஷ்யாவுடன் நேரடியாக போர் தொடுத்தால் தான் மோதல் ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த போரில் யாரும் வெற்றி பெற மாட்டார்கள். அனைத்தும் இழக்கப்பட்டு விடும் என்று […]
இலங்கையில் நீதிமன்ற காவலில் உள்ள பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த தமிழீழ விடுதலை புலிகளுக்கு இலங்கையின் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். இலங்கையில் தமிழர்களுக்காக போராடி வந்த விடுதலை புலிகள் நீண்டகாலமாக நீதிமன்ற காவலில் உள்ளனர்.இதனால் இலங்கையின் ஜனாதிபதி பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த தமிழீழ விடுதலை புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கினார். அதன் அடிப்படையில் நீண்டகாலமாக நீதிமன்ற காவலில் உள்ள கைதிகளை பயங்கரவாத சட்டத்தின் கீழான குற்றச்சாட்டின் கீழ் விடுதலை […]
மெக்ஸிகோ நாட்டின் ஜனாதிபதிக்கு இரண்டாம் முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டின் ஜனாதிபதியான, ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோ தன் இணையதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “எனக்கு இரண்டாவது தடவையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. லேசான அறிகுறிகள் தான் இருந்தது. எனினும், என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். எனக்கு குணமாகும் வரை இணையதளம் வழியே பணியில் ஈடுபடுவேன். உள்துறை செயலாளரான, அடன் அகஸ்டோ லோபஸ் ஹெர்னாண்டஸ், எனது மற்ற பணிகளை செய்வார்” என்று தெரிவித்திருக்கிறார். இவருக்கு இதற்கு […]
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உரு மாற்றமடைந்த ஓமிக்ரான் தொற்று தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை தான் அதிகமாக தாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியான ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வைத்து கொரோனா குறித்து ஆய்வு செய்யும் குழுவினர்களுடன் ஆலோசனை செய்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ஓமிக்ரான் பெருந்தொற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை தான் அதிகமாக தாக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்தியவர்களை ஓமிக்ரான் தொற்று தாக்கினாலும் கூட அது உடலில் […]
பிரான்சில் கொரோனா தொடர்பான தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளாதவர்கள் வருகின்ற 15ஆம் தேதியிலிருந்து உணவகம் உட்பட எந்த வித பொது இடங்களுக்கு செல்லக்கூடாது என்று அந்நாட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பிரான்ஸின் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான் அந்நாட்டிலுள்ள அனைவரும் கொரோனா தொடர்பான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது வருகின்ற 15 ஆம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசியினை செலுத்தி கொள்ளாத எவரும் உணவகம் உட்பட எந்தவித பொது இடங்களுக்கோ ரயில் போக்குவரத்து […]
வங்காளதேசத்தின் 50 ஆவது சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக 3 நாள் சுற்றுப்பயணம் சென்ற இந்திய நாட்டின் ஜனாதிபதி அங்கிருந்து புறப்படும் போது புதிதாக புதுப்பித்து கட்டப்பட்ட காளியம்மன் கோவிலை திறந்து வைத்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தினர்கள் கடந்த 1971ஆம் ஆண்டு மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீரம்னா காளியம்மன் கோவிலை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்கள். அப்போது அந்த கோவிலில் தஞ்சம் புகுந்திருந்த சுமார் 1,000 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து வங்காளதேசம் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரமடைந்த பிறகு அந்நாடும், […]
வங்காள தேசத்தின் விடுதலை பொன்விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் விடுதலை பெற்ற ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவை ஒட்டி நடக்கவிருக்கும் விழாவில் கலந்துகொள்ள அம்மாநில முதல்வர் அப்துல் ஹமீதின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் அரசு முறை பயணமாக வங்காளதேசம் சென்றுள்ளார். தனி விமானம் மூலம் வங்காளதேசம் சென்ற ஜனாதிபதிக்கு 21 குண்டுகள் முழங்க சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முப்படை வீரர்களின் மரியாதை […]
வங்காள தேசத்தின் சுதந்திர பொன்விழாவிற்காக அங்கு 3 நாள் பயணம் சென்ற இந்திய ஜனாதிபதி இன்று அந்நாட்டின் பிரதமரை சந்தித்துப் பேசியுள்ளார். இந்திய நாட்டின் ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் என்பவர் உள்ளார். இவர் வங்காள தேசத்தின் சுதந்திர பொன் விழாவில் பங்கேற்பதற்காக அந்நாட்டிற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று இந்தியாவின் ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் வங்காள தேசத்தின் பிரதமரான ஷேக் ஹசீனாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் வங்காளதேசம் மற்றும் இந்தியாவிற்கு […]
ரஜினி பிரதமர் மற்றும் ஜனாதிபதியை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றார். இந்த விருதைப் பெற்ற ரஜினி, இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு இந்த விருதை சமர்ப்பிப்பதாக கூறியிருந்தார். இதனையடுத்து, இவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், ரஜினி மற்றும் அவரின் மனைவி லதா, ஜனாதிபதி […]
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக இன்று ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த தசரா பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாட உள்ளார். இதற்காக அவர் 2 நாள் பயணமாக இன்று ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். இதனைத் தொடர்ந்து லடாக் பகுதிக்கு செல்லும் அவர் லே, மற்றும் சிந்துப் படித்துறையில் சிந்து தர்ஷன் பூஜை செய்வதாக கூறப்படுகிறது. பின்னர் மாலை உதம்பூரில் ராணுவ வீரர்களுடன் உரையாற்றுகிறார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அக்டோபர் […]
இலங்கையின் ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்சே மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இலங்கையின், இராணுவம் 72-ஆம் ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. இதற்கான நிகழ்ச்சி, அநுராதபுரம் கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நாட்டின் ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்சே பங்கேற்றார். அப்போது, கிரிக்கெட் மைதானத்தை அவர் திறந்து வைத்தார். அதன்பின்பு, அந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். அப்போது, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான, திஸாரா பெரேரா வீசிய பந்தை ஜனாதிபதி புன்னகையுடன் […]
அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அமெரிக்க நாட்டிற்கு சென்ற இந்திய பிரதமர் அங்கு நடைபெற்ற பல நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னர் இன்று அவர் நாடு திரும்பியுள்ளார். அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி நாற்கர கூட்டமைப்பான குவாட்டின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை ஏற்ற இந்திய பிரதமர் அமெரிக்க நாட்டிற்கு 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் மாநாடு உட்பட பல நிகழ்வுகளில் […]
புது டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு நேற்று கண் அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நேற்று கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் அதன்பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி ஏற்கனவே ஒரு கண்ணில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் நாட்டு மக்களிடம், ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், மதிப்பு குறைந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான், உலகில் பிரபலமான தலைவர்களில் ஒருவர். இந்நிலையில் மக்கள் மத்தியில், நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், கடந்த ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிட்டால் ஜனாதிபதிக்கு மூன்று புள்ளிகள் மற்றும் பிரதமருக்கு 4 புள்ளிகள் குறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது. தற்போது ஜனாதிபதி இம்மானுவேலின் செல்வாக்கு, 38 புள்ளிகள் இருக்கிறது. பிரதமர் ஜீன் கேஸ்டக்ஸ் மக்களிடம் 36 புள்ளியில் பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது. இதில், மக்களுக்கு ஜனாதிபதியின் […]
துருக்கியில் ஜனாதிபதி வெட்டவிருந்த சுரங்கப்பாதை திறப்பு விழாவின் ரிப்பனை அங்கிருந்து சிறுவன் ஒருவன் வெட்டிய சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. துருக்கியில் புதிதாக கட்டப்பட்ட நெடுஞ்சாலை சுரங்கப்பாதைக்கான திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனை திறந்து வைப்பதற்காக அந்நாட்டின் ஜனாதிபதி சுரங்கப்பாதை கட்டப்பட்ட இடத்திற்கு வந்துள்ளார். இதனையடுத்து விழாவில் கலந்து கொண்ட சிறுவன் ஒருவன் ஜனாதிபதி வெட்ட விருந்த ரிப்பனை அவசரப்பட்டு வெட்டியுள்ளார். அதன்பின்பு அந்த சிறுவன் வெட்டிய ரிப்பனை இழுத்துப் பிடித்து மீண்டும் […]
முக்கிய பிரமுகர்களின் வருகைக்காக போக்குவரத்தை நீண்ட நேரம் நிறுத்தி வைக்க கூடாது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள மனோஜ் பாண்டே என்ற பள்ளியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஜனாதிபதி என்பதை தவிர்த்து நான் ஒரு உணர்வுபூர்வமான மனிதன். தான் பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் நான் வருவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்பே போக்குவரத்து நிறுத்தப்படுவதை கவனித்து வருகிறேன். இதனால் […]
ஆப்கானிஸ்தானின் அடுத்த ஜனாதிபதியாக தலிபான்களின் தலைவர் முல்லா அப்துல் கனி பரதார் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து, அமெரிக்க படைகள் வெளியேறியதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தலிபான்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் கைப்பற்றினர். கிட்டதட்ட ஒரு வாரத்தில் ஆப்கானிஸ்தானின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றிவிட்டார்கள். தலிபான்களுக்கு பயந்து காபூல் நகரில் பல்வேறு மக்கள் தஞ்சம் அடைந்தார்கள். தற்போது, அங்கிருந்து மக்கள் தப்பி வருகிறார்கள். மேலும் நாட்டின் ஜனாதிபதி அஸ்ரப் கனியும் நாட்டிலிருந்து வெளியேறிவிட்டார். எனவே தலிபான்கள், […]
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
ஆப்கானிஸ்தானின் தலைநகரம் காபூல் நகரின் எல்லையை தலிபான் தீவிரவாதிகள் சூழ்ந்து கொண்டதால் மக்கள் அந்நகரில் இருந்து தப்பிச்செல்வதாக தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள். இந்நிலையில் தலைநகரான காபூலின் எல்லையில் சூழ்ந்து கொண்டுள்ளனர். மேலும் காபூல் நகரத்தை போர் மற்றும் மோதலின்றி கைப்பற்றப் போவதாக தலிபான்கள் அறிக்கை விட்டுள்ளார்கள். https://twitter.com/newsistaan/status/1426845523948892175 மேலும் போராளிகள் கலவரத்தை ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்காகவும், நகரில் இருந்து வெளியேற விரும்பாத மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் காபூலிலிருந்து மக்கள் வாகனங்களில் […]
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் முக்கிய தகவலை வெளியிட்டிருக்கிறார். உலக நாடுகள் முழுவதிலும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சில நாடுகள் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த தீர்மானித்துள்ளது. அதன்படி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளார். இது தொடர்பில், அவர் கூறியுள்ளதாவது, வருகின்ற கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்து மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும். எனினும் அனைத்து […]
ரஷ்யாவின் ஜனாதிபதியான விளாடிமிர் புடின் பிரிட்டனுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின் உலக நாடுகளை எச்சரித்திருக்கிறார். ரஷ்ய அரசு, கடந்த ஜூன் மாதத்தில் தங்கள் கடல் பகுதிக்குள் சட்டத்திற்கு புறம்பாக பிரிட்டன் போர்க்கப்பல் புகுந்ததாக தெரிவித்தது. மேலும் எச்சரிப்பதற்காக அதன்மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி, விரட்டி அடித்ததாகவும் தெரிவித்திருந்தது. எனினும் ரஷ்யாவின் இந்த அறிக்கையை பிரிட்டன் அரசு மறுத்திருந்தது. மேலும் தங்கள் போர்க்கப்பல்களை யாரும் தாக்கவில்லை என்றும் கூறியது. ஆனாலும் சில தினங்கள் கழித்து ரஷ்ய அரசு, தாங்கள் […]
பிரான்ஸ் நாட்டில் புதிதாக கொரோனா சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியுள்ளது. பிரான்சின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன், மருத்துவமனை பணியாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் செலுத்தப்பட வேண்டும். உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு செல்லும் மக்கள் தடுப்பூசி செலுத்திய பாஸ்போர்ட் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அதாவது ஜனாதிபதி, கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டு மக்களைப் பிரிப்பதற்காக தடுப்பூசி பாஸ்போர்ட்கள் பயன்படுத்தப்படாது என்று உறுதி கூறியிருந்தார். எனினும் ஜூலை மாதத்தில் விருந்தோம்பல், இசை நிகழ்ச்சிகள் […]
மெக்ஸிகோவின் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 19 நபர்கள் பலியானதால் தீவிர விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கிறார். மெக்சிகோவில் உள்ள ரெய்னோசா என்ற நகரத்தில் ஒரு கும்பல் காரில் வந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 15 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, எல்லைப் பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் அந்த பயங்கரவாத கும்பலை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கடந்த 2 வருடங்களாக அதிகமான […]
ஈரானில் அடுத்த அதிபராக பதவியேற்கவுள்ள Ebrahim Raisi குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஈரானில் அதிபர் Hassan Rouhani-யின் ஆட்சிக்காலம் முடிவடையவுள்ளது. எனவே அடுத்த அதிபர் போட்டியில் 7 பேர் இருக்கும் நிலையில் Ebrahim Raisi (60) பதவியேற்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரைப் பற்றிய சில தகவல்கள் ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 1980 ஆம் வருடங்களில் எதிர்க்கட்சியை சேர்ந்த பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதில் இவருக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Ebrahim Raisi கடந்த […]
பிரேசில் நாட்டின் ஜனாதிபதி முகக்கவசமின்றி சைக்கிள் பேரணியை துவங்கி வைத்ததால் அந்நாட்டு அரசாங்கம் அவருக்கு அபராதம் விதித்துள்ளது. பிரேசில் நாட்டின் ஜனாதிபதியான ஜெய்ர் போல்சனாரோ தலைமையில் சாவ் பாலோ என்னும் நகரத்தில் “Accelerate For Chirst” என்னும் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றுள்ளது. இந்தப் பேரணியில் பலரும் தங்களுடைய மோட்டார் சைக்கிளுடன் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த வேளையில் பிரேசில் நாட்டு ஜனாதிபதி முககவசமின்றி, ஒரு ஹெல்மெட்டை மட்டும் அணிந்து கொண்டு இதனை துவக்கி […]
அறிவியல் ஆலோசகர்களின் அறிவுரைகளை கேட்பதில்லை என்று பிரான்ஸ் ஜனாதிபதி மீது குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரோன் கடந்த வசந்த காலத்திலிருந்து அறிவியல் ஆலோசகர்களின் கருத்துகளை மறுத்து பள்ளிகளை திறந்துள்ளதாக வலது சாரியினரரான மரின் லே பென் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கொரோனா தொற்றுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று அறிவியல் ஆலோசகர்கள் கூறிய கருத்துகளை மேக்ரான் எதிர்த்துள்ளார். அதனால் மேக்ரோனின் சகாக்களே ஜனாதிபதி தொற்று நோய் நிபுணராகிவிட்டார் என்று கூறி விமர்சித்துள்ளனர்.
அமெரிக்க அதிபரான ஜோ பைடன் கமலா ஹரிஷை பார்த்து “ஜனாதிபதி” என்று அழைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதியாக பொறுப்பேற்றவர் ஜோ பைடன். இவர் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவி ஏற்பதற்கு முன்பு அவரை பார்த்து ‘ஜனாதிபதி தேர்வு’ என்று வாய் தவறி அழைத்துள்ளார். இதனையடுத்து தற்போது மீண்டும் இவர் கமலா ஹாரிஷை பார்த்து ‘ஜனாதிபதி’ என்று அழைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் […]
சிரியா ஜனாதிபதி பஷர் அசாத்திற்கும் அவரது மனைவி அஸ்மாவிற்கும் கொரோனா தொற்று உறுதியானதால் இருவரும் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியா ஜனாதிபதி பஷார் அசாத்திற்கும் அவரது மனைவி அஸ்மாவிற்கும் கொரோனா அறிகுறிகள் இருந்ததால் PCR என்று அழைக்கப்படும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் தம்பதியருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது. தற்போது சிரியா ஜனாதிபதி அலுவலகம் இதுகுறித்து தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், ” ஜனாதிபதியும் அவரது மனைவியும் தற்போது நல்ல உடல்நலத்துடன் […]