ஜனாதிபதியின் கௌரவ கொடி தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இதன் நினைவாக டிஜிபி முதல் காவலர் வரை என அனைத்து காவல்துறையினருக்கும் தமிழக அரசின் பேட்ஜ் வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் கௌரவ கொடி கிடைத்திருப்பதால் அனைத்து போலீசாரும், சீருடைகளும் இனி ஜனாதிபதியின் கொடியான நிஸான் என்ற சின்னம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக லோகா இடம் பெற்ற பேட்ஜ் திருப்பூரில் தயாரிக்கப்படுகிறது. திருப்பூரில் உள்ள எடர்நல் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் சயின்ட் […]
Tag: ஜனாதிபதி கொடி
தமிழக போலீசாருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டது. இதுபோன்ற சிறப்பு கொடி இந்தியாவின் இதுவரை 10 மாநில போலீசாருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் இந்த சிறப்பை பெரும் முதல் மாநிலம் தமிழகம் தான். தமிழக போலீஸ் துறைக்கு கௌரவம் மிக்க ஜனாதிபதியின் கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். […]
தமிழக போலீசாருக்கு ஜனாதிபதியின் சிறப்பு கொடியை இன்று துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு வழங்குகிறார். மிகவும் கவரமிக்க ஜனாதிபதியின் சிறப்பு கோடி இதுவரை இந்தியாவில் 10 மாநில போலீசாருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் தமிழ்நாடு தான் இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம் ஆகும். ஜனாதிபதியின் கோடி வழங்கும் விழா இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறயுள்ளது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது