ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் உள்ள ஜெயதேவ் நகரில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் ஜனாதிபதி முர்மு பேசினார். அவர் பேசியதாவது, கல்வி என்பது அதிகாரம் அளிக்கும் கருவி என்பதால், நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் பாரபட்சம் இன்றி கல்வி […]
Tag: ஜனாதிபதி திரௌபதி முர்மு
இந்தியா முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் என்னுடைய அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள். ஒளி மற்றும் மகிழ்ச்சிக்கான திருவிழாவில் அறிவு மற்றும் சக்தியின் விளக்கை ஏற்றி ஆதரவில்லாதவர்களுக்கு உதவிகளை செய்வோம். அவர்களின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொண்டு […]
ஜனாதிபதி திரௌபதி முர்மு, வங்க தேசத்தின் பிரதமரை லண்டனில் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியாரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு, மூன்று நாட்கள் பயணமாக லண்டனுக்கு சென்றிருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மகாராணியார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதனைத்தொடர்ந்து நேற்று, இறுதி ஊர்வலம் தொடங்கப்படுவதற்கு முன்பாக வங்காள தேசத்தினுடைய பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்திருக்கிறார். அதற்கு முன்பு, பக்கிங்ஹாம் அரண்மனையில், அரசர் சார்லஸ் வரவேற்பு வழங்கினார். அதில் ஜனாதிபதி திரௌபதி முர்மு […]
இந்திய ஜனாதிபதிக்கு சீனா அதிபர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பல தரப்பிலிருந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில் சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய நாட்டின் 15-வது ஜனாதிபதியாக பதவியேற்றுக் […]