நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ஆம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. இதில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநருமான திரவுபதி முர்மு களமிறக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், திரிணாமுல் காங்கிரசை […]
Tag: ஜனாதிபதி தேர்தல்
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி அடுத்த ஜனாதிபதி ஆக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. அவ்வாறு அவர் வெற்றி பெற்றால் நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி என்ற சிறப்பை அவர் பெறுவார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்று வெளியானதும், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி வெற்றியை அவரது சொந்த ஊரில் பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதாவது தேர்வு முடிவுகள் வெளியானதும் அவரது சொந்த ஊரான ஒடிசாவின் ராயரங்பூரில் விநியோகிக்க […]
நாமக்கலை சேர்ந்த காந்தியவாதி ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் நிற்க போவதாகவும், அதற்கு செலவுக்கு 4809 கோடி கடன் வேண்டும் என்று சென்னை ரிசர்வ் வங்கியில் மனு கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லை சேர்ந்த காந்தியவாதி ஜனாதிபதி தேர்தல் செலவுக்கு 4,809 கோடி கடன் கேட்டு சென்னை ரிசர்வ் வங்கியில் மனு அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் காந்தியவாதி ரமேஷ் என்னும் இந்திய குடிமகனான நான் கடந்த 15.06.2022 அன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் […]
அமெரிக்காவில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவேன் என்று தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் ஜோ பைடன் இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பட்சத்தில் அவருக்கு வயது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதை சுட்டிக்காட்டி பிரபல அமெரிக்க ஊடகம் கட்டுரை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதனால் ஜோ […]
வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் இம்மானுவேல் மக்ரோன் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை என்று பிரான்ஸ் பிரதமர் Jean Castex தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி நடந்த பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதல்சுற்றில் இம்மானுவேல் மக்ரோன் 27.42 % வாக்குகளையும், மரைன் லு பென் 24.92 % வாக்குகளையும் பெற்று முதல் 2 இடங்களை பிடித்தனர். இதையடுத்து தீவிர இடதுசாரி தலைவரான Jean Luc Melenchon 22 % வாக்குகளை பெற்று […]
பிரான்சில் நாளை ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் அண்மையில் வெளியாகியுள்ள கருத்து கணிப்பு ஒன்றின் முடிவுகள் அந்நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இமானுவேல் மேக்ரான் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டுவதை விட உக்ரைன் விவகாரத்தில் அதிக ஆர்வம் காட்டி வருவதால் அவருடைய போட்டியாளரான Marine Le Pen என்ற பெண்மணிக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 6ஆம் தேதி அன்று […]
பிரான்ஸ் ஜனாதிபதிக்கான தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் முதல் சுற்றுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிரான்சில் வரும் 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் இமானுவேல் மேக்ரான் , Eric Zemmour மற்றும் Marine Le Pen ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தவிர இன்னும் சிலர் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக தற்போது பிரான்சில் இதற்கான வேட்பாளர் அறிவிப்பு, […]
ஈரான் நாட்டில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் இப்ராஹிம் ரைசி அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது . ஈரான் நாட்டில் கடந்த 18ஆம் தேதி ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது . இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் குறித்து ஈரான் தேர்தல் தலைமையகத்தின் செய்தித்தொடர்பாளர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அவர் கூறும்போது 90 சதவீதம் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் இந்தப் பதவிக்கு போட்டியிட்ட […]
2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது என்ற பைடனின் கருத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் ABC நியூஸ் நேர்காணலின் போது ரஷ்ய அதிபர் புதின் ஒரு கொலையாளி என்பதை நீங்கள் நம்புகிறீர்களா ? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினார். மேலும் அந்த நேர்காணலில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீட்டிற்கு […]
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மிகப்பெரிய திட்டம் தீட்டி இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கின்றது. அந்தத் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மிகப்பெரிய திட்டம் தீட்டியிருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போதே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் இது குறித்து […]
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் இங்கிலாந்து இளவரசர் ஹரியின் மனைவி ஈடுபட உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகின்ற நவம்பர் மாதத்தில் நடக்க உள்ளது. அதற்கான தேர்தல் பிரசாரங்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவியும் முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகன் மெர்க்கல் தேர்தல் பரப்புரையில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் அனைத்துப் பெண்களும் தங்கள் வாக்குகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு […]
சிறப்பாக செயல்படும் ஜனாதிபதியை தேர்வு செய்வதில் மக்கள் தவறு செய்துவிடக் கூடாது என்று துணை ஜனாதிபதி வேட்பாளர் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பாக துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றார். ஜனநாயக கட்சி சார்பாக தான் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை கமலா ஹாரிஸ் முறைப்படி ஏற்றுக்கொண்டுள்ளார். அதன் மூலமாக அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுகின்ற முதல் தெற்காசிய, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஆப்பிரிக்க அமெரிக்கப் […]
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பிடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடக்க உள்ளது. அதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகின்றார். ஜோ பிடன் டிரம்பை எதிர்த்து போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டு இருந்தாலும் கொரோனா காரணமாக அவரை அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பது காலதாமதம் ஏற்பட்டு […]
நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய அன்னிய நாடுகளின் தலையீடு உள்ளதாக ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா நாட்டில் 2016 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி அடைந்தது. வெற்றிக்கு ரஷ்யா உதவிகரமாக இருந்ததாக குற்றங்கள் எழுந்திருக்கின்றன. இதுகுறித்து அமெரிக்க புலனாய்வுத்துறை விசாரணை மேற்கொண்டது.குற்றச்சாட்டினை டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் மறுத்தார்கள். இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தல் ஆனது வருகின்ற நவம்பர் 3-ல் […]
செனட் சபையின் முன்னாள் பெண் ஊழியர் ஜோ பிடென் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்த காலத்தில் துணை ஜனாதிபதியாக இருந்தவர் ஜோ பிடேன். வருகிற நவம்பர் மாதம் 3ஆம் தேதி ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்குவது ஜோ பிடேன் என கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. முன்னதாக கடந்த வருடம் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் ஜோ பிடேன் களம் இறங்கிய பொழுது அவருக்கு எதிராக […]