Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஜனாதிபதி மாளிகை பொதுமக்கள் பார்வைக்காக…. உடனே கிளம்புங்க… வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

பொதுமக்கள் பார்வையிடுவதற்காக டிசம்பர் 1ஆம் தேதி முதல் குடியரசு தலைவர் மாளிகை திறந்து விடப்படுகிறது. திங்கட்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து பிற நாட்களுக்கு முன்பதிவு செய்து கொண்டு பொதுமக்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம். காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மாலை 2 மணி முதல் 4 மணி வரையும் தலா ஒரு மணி நேரத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். சனிக்கிழமை நடைபெறும் ஜனாதிபதியின் மெய் காவலர்கள் மாறும் நிகழ்ச்சியையும் […]

Categories
தேசிய செய்திகள்

“நாடாளுமன்ற கட்டிடத்துடன் இணைத்து சுரங்கப்பாதை”… மத்திய அரசு திட்டம்… டெண்டர் வெளியீடு…!!!!

தலை நகர் டெல்லியில் நாட்டின் அதிகார மைய கட்டிடங்களை புதிதாக அமைக்கும் சென்ட்ரல் விசா திட்டம் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இதன்படி புதிய நாடாளுமன்ற கட்டிடம், பிரதமர் இல்லம், பிரதமர் அலுவலகம் புதிய துணை ஜனாதிபதி மாளிகை பொது தலைமைச் செயலகம் போன்றவை கட்டப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ராஜபாதை மறுசீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு அது திறக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள கட்டிடங்களின் பணிகளும் விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில்  ஜனாதிபதி மாளிகையில் சுரங்கப்பாதை […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மதுபோதையில் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயன்ற ஜோடி… கைது செய்த போலீசார்….!!

மதுபோதையில் ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். தலைநகர் புதுடெல்லியில் ராஜவீதி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைந்துள்ளது ஜனாதிபதி மாளிகை. இது ஜனாதிபதி இல்லமாகவும்  மற்றும் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது. இத்தனை பாதுகாப்புகளையும் மீறி கடந்த திங்கட்கிழமை இரவு 9.30  மணி அளவில் ஜனாதிபதி மாளிகைக்குள் மது போதையுடன் ஒரு ஜோடி நுழைந்துள்ளது. இதனை கண்ட பாதுகாவலர்கள் அந்த ஜோடியை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த ஆண் […]

Categories
உலக செய்திகள்

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் வாகன வெடிகுண்டு தாக்குதல்.. இராணுவ வீரர் உட்பட 8 பேர் உயிரிழப்பு..!!

சோமாலிய நாட்டில் வாகன வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் எட்டு நபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சோமாலிய நாட்டின் தலைநகரான Mogadishu-ல் இருக்கும் ஜனாதிபதி மாளிகையின் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியே சென்ற ஒரு வாகனத்தை, காவல் துறையினர் சோதனை செய்தபோது, அந்த வாகன ஓட்டுனர் திடீரென்று வெடிகுண்டை வெடிக்க வைத்தார். இதில், ஒரு ராணுவ வீரர் அவருடைய தாய் மற்றும் குழந்தைகள் இருவர் உட்பட எட்டு நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மீண்டும்… மக்களுக்கு அறிவிப்பு….!!!

இந்தியாவில் ஆவலுடன் பார்த்து ரசிக்கும் இடங்களில் ஒன்று குடியரசுத் தலைவரின் மாளிகை. இந்த மாளிகை அலுவலகத்தில் அருங்காட்சியகங்கள், மொகல் தோட்டம் என மக்கள் பார்த்து ரசிக்க ஏராளம் உள்ளன. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் குடியரசுத் தலைவர் மாளிகையை சுற்றிப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கொரோனா குறைந்த பிறகு குடியரசுத் தலைவர் மாளிகையை சுற்றிப் பார்க்க பார்வையாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் குடியரசு தலைவர் மாளிகையும், குடியரசு […]

Categories
உலக செய்திகள்

பக்ரீத் சிறப்பு தொழுகையில் பதற்றம்.. ஜனாதிபதி மாளிகை அருகில் ராக்கெட் தாக்குதல்..!!

ஆப்கானிஸ்தானில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்த சமயத்தில் ஜனாதிபதி மாளிகையின் அருகில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள காபூல் நகரத்தில் பக்ரீத் பண்டிகைக்கான சிறப்பு தொழுகை நடைபெற்றது. அப்போது ஜனாதிபதி மாளிகையின் அருகில் திடீரென்று மூன்று ராக்கெட்டுகள் வீசப்பட்டது. இதனால் ஏற்பட்ட விளைவுகள் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனினும் திடீரென்று நடத்தப்பட்ட தாக்குதலால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் காபூல் நகரத்திலுள்ள பல பகுதிகளிலும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நாட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்த் சந்திப்பு …!!

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந் அவர்களை    சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது தேசிய சர்வதேச விவகாரங்கள் பற்றி இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளதாக  கூறப்படுகிறது. இப்போது நடைமுறையில் இருக்கும் லடாக்  விவகாரம், கொரோனா தொற்றின் பாதிப்பு போன்ற  பல்வேறு  பிரச்சினைகளுக்கு இடையில் , பிரதமர் மோடி ஜனாதிபதியை சந்தித்து ஆலோசனை நடத்தியது முக்கியத்துவ வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Categories

Tech |